பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 10, 2007

27%, பந்த் பற்றி - ஞாநி

27%, பந்த் பற்றி ஞாநியின் அருமையான கட்டுரை. நன்றி ஆனந்த விகடன், ஓ-பக்கங்கள்

யாரை எதிர்க்க இந்த பந்த்?

‘முழு அடைப்பு முழு வெற்றி!’, ‘தமிழகம் ஒரே குரலில் எதிர்ப்பைக் காட்டியது!’, ‘வரலாறு காணாத வெற்றி!’ என்றெல்லாம் அரசியல் தலைவர்கள் அறிக்கைவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

வரலாறு என்பது உண்மைகள் மட்டுமல்ல; பல பொய்களும் அசட்டுத்தனங்களும் நிரம்பியது என்பதற்கு இவையெல்லாம் இன்னொரு சாட்சியம். தாமிரபரணி, யாழ்ப்பாணம், நந்திகிராமம் போன்றவை எப்படி அரசு பயங்கரவாதங்களோ, அது போல அரசு அராஜகங்கள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியது இந்த பந்த்!

இது மக்கள் மீது நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு விடுமுறை தினம்... அவ்வளவுதான்! அன்றைய தினம் தமிழக மக்கள் எல்லாரும் தத்தம் வீடுகளில் உட்கார்ந்து குடும்பம் குடும்பமாக இட ஒதுக்கீடு பிரச்னையின் நுட்பமான சிக்கல்கள் பற்றித் தீவிரமாக விவாதித்து, இதற்கான தீர்வுகள் பற்றி ஆலோசனைகள் நடத்தினார்களா என்றால், அதற்கான சூழலே இங்கு கிடையாது. அழுக்குத் துணிகளைத் துவைக்கவும், வீட்டை ஒட்டடை அடிக்கவும், பெரும் பாலான நேரம் டி.வி. ஒளிபரப்பிய மசாலா சினிமா குப்பைகளைக் கண்டுகளிக்கவும் மட்டுமே இந்த பந்த் பயன்படுத்தப்பட்டது. மறுபக்கம், இன்னொரு பெருங்கூட்டம் ரயிலடியிலும், பஸ் நிலையத்திலும் அகால நேரத்தில் தத்தளித்தது. மார்ச் 31 வருடக் கணக்கு முடிக்கும் நாள் என்பதால், பொருளாதாரத் துறையினர் பெரும் பாதிப்புக்கு ஆளாயினர்.

இட ஒதுக்கீடு பிரச்னை மட்டுமல்ல, இலங்கைத் தமிழர் பிரச்னையிலும் சரி... ஆட்சியில் இருந்தால் பந்த்களை அறிவித்து தங்கள் கருத்துத் தீவிரத்தைக் காட்டிக் கொள்வது நமது தமிழக ஆட்சி யாளர்களின் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், பெருவாரியான மக்களுக்கு பந்த் என்பது விடுமுறை மட்டுமே!

எந்தப் பிரச்னைக்காக பந்த் அறிவிக்கப்படுகிறதோ, அது தொடர்பாகப் பெருவாரியான மக்களின் பங்கேற்பை உருவாக்கும் முயற்சியைச் செய்வது தான் நியாயமானது. ஆனால், நமது அரசியல்வாதிகளால் அது முடியாது.

பந்த் என்ற எதிர்ப்பு வடிவமே, ஆட்சியில் இருக்கும் அதிகார சக்தியால் செய்யப்படும்போது அர்த்த மற்றதாகிவிடுகிறது. ஏனென்றால், பந்த் என்பது காந்தி உருவாக்கிய ‘சிவில் டிஸ் ஒபீடியன்ஸ்’ எனப்படும் ஒத்துழையாமைக் கோட்பாட்டில் உருவானது. யாரை எதிர்க்கிறோமோ அவருடன் ஒத்துழைக்க மறுப்பதுதான் இந்தக் கோட்பாடு. அந்த அதிகார சக்தி விதிக்கும் வரிகள் முதல், அதன் உத்தரவுகள் எதற்கும் உடன்பட மறுப்பதன் ஓர் அம்சம்தான் முழு அடைப்பும்!

இப்போது பந்த் அறிவிக்கும் கருணாநிதியும் ராமதாஸும் யாரை எதிர்த்து ஒத்துழையாமைப் போராட்டம் செய்கிறார்கள்?

இப்போதைய பிரச்னை உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு தொடர்பானது. அப்படியானால் எதிர்க்கப்பட வேண்டிய சக்தி உச்ச நீதிமன்றம்தானே? அத்துடன் ஒத்துழைக்க மாட்டோம் என்றுதானே போராட முடியும்? இட ஒதுக்கீடு தொடர்பாக நிறைவேற்றும் எந்தச் சட்டத்தையும் விசாரிக்கும் அதிகாரமே நீதிமன்றங்களுக்கு இருக்கக் கூடாது என்று கருதினால், அப்படி ஒரு சூப்பர் சட்டத்தை உருவாக்க வேண்டியது யார்? கருணா நிதியும் ராமதாஸும் அவர்களுடைய கூட்டணிக் கட்சிகளும் செல்வாக் குடன் திகழும் தற்போதைய நாடாளுமன்றமும் அரசாங்கமும் தானே? இப்போது ஆட்சியில் இருப்பதே அவர்கள்தானே? அப்படி யானால், தங்களைத் தாங்களே எதிர்க்கிறார்களா?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் கர்நாடக, கேரள அரசுகள் மதிப்பதில்லை என்று விமர்சிக்கும் தமிழக அரசு மட்டும் எப்படி இப்போது அதே மன்றத்தின் இன்னொரு தீர்ப்பை மதிக்காமல் பேச முடியும்?

உச்ச நீதிமன்றம் செய்திருப்பது என்ன? ஒரேயடியாக இடஒதுக்கீட்டைத் தூக்கி எறிந்துவிட்டதா? இல்லை. ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு செய்யப் பட்டதற்கு மட்டும் இடைக் காலத் தடை விதித்திருக்கிறது. அதுவும் என்ன அடிப்படையில்?

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு 27 சதவிகிதம் என்று கணக்கிடுவதற்கு அடிப்படை என்ன? மக்கள் தொகையில் அவர்களுடைய அளவு என்ன? அரசு சொல்வதுபோல 60 சதவிகிதத்துக்கும் மேல் என்றால், அதற்கான கணக்கு என்ன?

இந்தக் கேள்விகளுக்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் இதுவரை உச்சநீதிமன்றத்துக்குச் சரியாகப் பதில் சொல்லவில்லை என்பதுதான் சிக்கலுக்கு அடிப்படைக் காரணம். விவரம் கேட்டும் பல மாநில அரசுகள் பதிலே தரவில்லை என்று மத்திய அரசே நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறது.

மிக மிக அடிப்படையான காரணம், இந்திய மக்கள் தொகையில் எந்தெந்தச் சாதியில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற கணக்கே சுதந்திர இந்தியாவில் எடுக்கப்படவில்லை என்பதுதான்! மண்டல் கமிஷன் உட்பட பலரும் கேட்டும் மூன்று முறை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்ய மறுத்திருக்கிறது. வல்லபபாய் பட்டேல் உள்துறை அமைச்சராக இருந்தபோதே சென்சஸ் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கு எடுக்க மறுத்துவிட்டார். அதுவே மத்திய அரசின் கொள்கையாக இதுவரை இருந்து வருகிறது.

அப்படியானால் இட ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் அடிப்படைக் கணக்கு எது? 1931-ம் வருட சென்சஸ் கணக்குதான்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில்தான் இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பதே விரிவாகச் செய்யப்பட்டது. அதற்கு முன்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்த குப்த சாம்ராஜ்யம் முதல் மொகலாய சாம்ராஜ்யங்கள் வரை எந்த ஆட்சிக் காலத்திலும் விரிவான சென்சஸ் செய்யப் பட்டதே இல்லை.

இங்கிலாந்தில் 1801-ல்தான் முதல் சென்சஸ் எடுக்கப்பட்டது. அதன் பிறகு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது. இந்தியாவில் முதல் சென்சஸ் எடுத்த தேதி 17-2-1881. எதற்காக ஆங்கிலேயர்கள் இந்தியாவில் சென்சஸ் எடுத்தார்கள் என்று ஆராய்ந்தால், சென்சஸ் என்பதே ஒரு அரசியல்தான் என்பது புரியும். ஆட்சி செலுத்தும் நாட்டின் வளங்கள் என்னென்ன என்று தெரிந்துகொண்டு கொள்ளையடிக்க சர்வே; அடிமை மக்களின் வாழ்க்கை முறையைத் தெரிந்துகொண்டு, அவர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் தொடர்ந்து அடிமைகளாகவே வைத்திருக்கலாம் என்று திட்டம் வகுக்க சென்சஸ்!

இந்தியாவின் சாதி அமைப்பு முறையைப் புரிந்துகொள்வதில் ஆங்கிலேயர்களுக்குப் பெரும் குழப்பம் இருந்தது. அவர்கள் சாதியை இனத்துடன் (race) அடிக்கடி குழப்பிக் கொண்டார்கள். இங்கிலாந்தில் பின்பற்றிய இரு கோட்பாடுகளை அவர்கள் இங்கேயும் பின்பற்றினார்கள். ஒன்று, இனத் தூய்மை போன்றதே சாதித் தூய்மையும்! இரண்டாவது, உடற்கூறுதான் இனத்துக்கும் சாதிக்கும் அடிப்படை.

உடற்கூறு ரீதியில் தங்கள் வெள்ளை இனம்தான் உயர்வானது என்று கருதிய அவர்கள், இந்தியா போன்ற நாடுகளில் இருந்த எல்லா சாதி/இன மக்களும் தங்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்று காட்ட, இவர்களின் உடற்கூறையே ஆதாரமாகக் கொண்டார்கள். வெள்ளையர்களின் நிறவெறிக் கொள்கைதான் அவர்களுடைய phrenology, anthropology ஆகிய இரு சமூக விஞ்ஞானங்களையுமே வழிநடத்தியது. மண்டை ஓட்டை வைத்துக்கொண்டு உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்று phrenology தீர்மானித்தது. மூக்கு, தலை அளவுகள், உயரம் மூன்றையும் கொண்டு இந்தியாவில் 51 இனக் குழுக்கள் இனத் தூய்மையைக் காப்பாற்றி வந்திருப்பதாக 1937--ல் ஹாட்சன் என்ற ஆங்கிலேயர் கணக்கிட்டிருக்கிறார்.

ஆங்கிலேயர்கள் பின்பற்றிய இந்தக் குழப்பமும் சூழ்ச்சியும் மிகுந்த முறையின் உச்சகட்ட அராஜகம், 1871-ல் மனுதர்மத்தையும் மிஞ்சிச் சென்றது. இந்த வருடம்தான் முதல் விரிவான முழுமையான இந்திய அளவிலான சென்சஸ் நடத்தப் பட்டது. அதையொட்டி குற்றப் பரம் பரைச் சட்டம் என்ற பெயரில் ஒரு சாதி முழுமையுமே பரம்பரையாகக் கிரிமினல்கள் என்ற கொடும் சட்டத்தை ஆங்கிலேயர்கள் போட் டார்கள். ‘நினைவு தெரிந்த காலம் முதல் இந்தச் சாதியின் மூதாதையர்களே கிரிமினல்கள்! அவர்களின் வழித்தோன்றல்களும் கிரிமினல் களாகத்தான் இருக்கமுடியும். ஆகவே, முழுச் சாதியையே அழித்தொழிக்க வேன்டும்; அல்லது இந்தச் சட்டத்தின் கீழ் கண்காணிப்புக்குக் கொண்டு வர வேண்டும்’ என்று சட்டத்தின் அறிமுக உரையில் சொல்லப்பட்டது.

ஆங்கிலேயர்கள் சென்சஸ் கணக்கெடுப்பையே உள்நோக்கத்துடன் செய்கிறார்கள் என்ற எதிர்ப்புக் குரல்கள் அப்போதே வந்தன. 1931 சென்சஸின்போது மக்கள் எப்படிப் பதில் தர வேண்டும் என்று ஆரிய சமாஜம் அப்போது ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டிருக்கிறது. (அன்றைய ஆர்ய சமாஜம் மத வரம்புக்குட்பட்ட சமூக சீர்திருத்த இயக்கம். இன்றைய ஆர்ய சமாஜம் போல மதவாத, சாதிய அமைப்பு அல்ல!) அதில் எந்தக் கேள்விக்கு என்ன பதில் தர வேண்டும் என்று மக்களிடம் பிரசாரம் செய்திருக்கிறது. ‘மதம்: வேத தர்மம். பிரிவு: ஆர்ய சமாஜி. இனம்: ஆரியர். மொழி: ஆரிய பாஷை. சாதி: இல்லை என்று பதில் சொல்லுங்கள்’ என்கிறது பிரசுரம்.

இன்னொரு பக்கம் முஸ்லிம்களும் சென்சஸ் எடுத்த ஆங்கிலேய அதிகாரிகளைக் கடுமையாக விமர்சித்தார்கள். வங்கத்தில் 1871-72-ல் சென்சஸ் அதிகரியாக இருந்த பீவர்லீ, வங்க முஸ்லிம்கள் எல்லாரும் கீழ் சாதி ஹிந்துக்களாக இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்கள் என்று சென்சஸ் அறிக்கையில் குறிப்பிட்டதை முஸ்லிம் அறிஞர் ஃபைசல்-இ-ராப் புத்தகம் எழுதிக் கண்டித்திருக்கிறார்.

கீழ் சாதியாகக் கருதப்பட்ட துப்புரவுத் தொழில் செய்துவந்த மஹ்தோன் சாதியினர் தங்களை உயர் இன ராஜபுதனர்களாகவே கருத வேண்டும் என்று 1900-த்திலேயே கோரியுள்ளனர். இதை ஆங்கிலேயர்கள் ஏற்கவில்லை. ராணுவத்தில் சேர்ந்தாலும் தாங்கள் ராஜ்புட் படைப் பிரிவில்தான் சேர்க்கப்பட வேண்டும் என்பது மஹ்தோன்களின் கோரிக்கை.

1891 முதல் 1931 வரை பல சென்சஸ் கனக்கு களைப்பார்த்தால், அவற்றில் வரும் சாதிப் பிரிவுகளின், உட்பிரிவுகளின் எண்ணிக்கை பிரமிப்பூட்டுகிறது. பஞ்சாபில் ஒரு லட்சம் உட்பிரிவுச் சாதிகள். பிராமணர்களில் மட்டுமே 2,173 உட்பிரிவுகள். சென்னை ராஜதானியில் மட்டும் 30 ஆயிரம் உட்பிரிவுகள். பறையர் சாதிக்குள் மட்டும் 350 உட்பிரிவுகள். பள்ளர் சாதிக்குள் 365 உட்பிரிவுகள் என்கிறது அன்றைய ஆங்கில ஆட்சியின் சென்சஸ் கணக்கு.

இப்படிப்பட்ட சென்சஸ் கணக்கை அடிப்படையாகக் கொண்டு இன்று பிற்படுத்தப்பட்டவர்கள் தொகையைக் கணக்கிடு வதென்றால் எவ்வளவு அபத்தம்?

இன்றைய சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மொத்தத் தொகை நிச்சயம் 60 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை தான். எனவே, அதில் இட ஒதுக்கீடு 27 சதவிகிதம் மட்டும்தான் என்பது ஒன்றும் தவறானதல்ல!

ஆனால், ஏன் இன்றைய மக்கள் தொகையில் ஒவ்வொரு சாதியின் அசல் எண்ணிக்கை என்ன என்பதை கணக்கெடுப்பதைத் தவிர்க்கிறோம்? அப்படி எடுப்பது சாதியத்தை ஊக்கு விக்கும் என்ற வாதம் சொத்தையானது. அப்படியானால், எல்லாப் பத்திரிகைகளிலும் மேட்ரிமோனியல் விளம் பரங்களைத்தான் முதலில் தடை செய்யவேண்டும்.

இட ஒதுக்கீட்டு பிரச் னையை ஆதரிப்பவர்களும் சரி, எதிர்ப்பவர்களும் சரி... அதை வெறும் உணர்ச்சிப் பிரச்னையாக்கிக் கொண்டே போவது தவறானது. அறிவு பூர்வமாக அதை அணுக வேண்டும். அப்படி அணுக விரும்பாதவர்கள்தான் இரு தரப்பிலும் ‘பந்த்’ என் பார்கள்; இல்லாவிட்டால் ஐ.ஐ.டி மாணவர்கள் ஷூ பாலீஷ் போடும் போராட்டம் என்பார்கள்.

அறிவுபூர்வமான தீர்வு தான் என்ன?

1. சாதிவாரியான சென்சஸ் எடுக்கப்பட வேண்டும். கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் உள்ள 2007-ல் இதை ஓராண்டுக்குள் செய்து முடிக்க முடியும்.

2. கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரப்பதவிகள் (அமைச்சர், ஐ.ஏ.எஸ் முதல் அர்ச்சகர் வரை), வணிகம், தொழில் முதலியவற்றில் பங்கு ஒவ்வொருசாதிக்கும் எவ்வளவு உள்ளது என்று கணக்கிட வேண்டும்.

3. எந்தெந்தத் துறைகளில் எந்தெந்தச் சாதி பின்தங்கியுள்ளது என்று மதிப் பிட்டு அந்தந்த துறையில் அந்தச் சாதிக்கான பங்கை அதிகரிக்கத் தேவையான அளவு இட ஒதுக்கீட்டை உருவாக்க வேண்டும்.

4. ஒவ்வொரு சாதியிலும் (ஓப்பன் கோட்டா உட்பட) கிரீமிலேயர் எனப்படும் வசதியானவர்களின் பங்கு இப்போது கல்வியிலும் வேலைகளிலும் எவ்வளவு என்று கணக்கிடப்பட வேண்டும். சாதிவாரியான இட ஒதுக்கீட்டுக்குள் அந்தந்தச் சாதியில் வசதி யற்றோருக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்.

5. அரசாங்க வேலைவாய்ப்புகள் குறைக்கப்பட்டு வரும் சூழலில், தனியார் துறையிலேயே வேலை வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், சாதிகளின் பங்கு எல்லாத் துறைகளிலும் கணக் கிடப்பட வேண்டும்.

5. பொது ஒதுக்கீட்டுக்கான சாதிகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள், தாழ்த்தப்பட்ட சாதிகள், பழங்குடியினர் என்ற ஐந்து பிரிவுக்குள் எல்லாச் சாதிகளும் வந்துவிடும் என்பதால், சாதி பெயரிட்ட கம்யூனிட்டி சான்றிதழ்களை ரத்து செய்து, அவற்றுக்குப் பதிலாக மேற்படி ஐந்து பிரிவுகளை மட்டுமே சான்றிதழில் குறிப்பிடும் முறையைக் கொண்டுவரவேண்டும். தொலைநோக்கில் சாதியை ஒழிக்கத் தேவையான நடவடிக்கை களில் இதுவும் ஒன்று. கலப்பு மணம் செய்து குடும்பத்துக்குள் சாதியை ஒழிப்போரை ஆறாவது பிரிவாக ஆக்கலாம். அவர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யலாம்.

6. பள்ளி இறுதி வரை எல்லா சாதியினருக்கும் (மதத்தினருக்கும்) தரமான சமமான கட்டாயக் கல்வி ஏற்படுத்தப்பட வேண்டும். குறைந்த பட்சம் 12 ஆண்டுகள் இதை நிறை வேற்றிய பிறகு, எல்லா இட ஒதுக்கீட்டு அளவுகளையும் மறு பரிசீலனை செய்யலாம்.

மேற்படி யோசனைகளில் சாதக பாதகங்களை விவாதித்து திட்டத்தைச் சீர் செய்யலாம். இதற்கு எல்லா அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் முன்வர வேண்டும்.

அதுவரை குறைந்தபட்சம், அரசாங்க பந்த் போன்ற அசட்டுத் தனங்களை ஓரங்கட்டி வைக்கலாம்!

14 Comments:

Reason said...

// 2. கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரப்பதவிகள் (அமைச்சர், ஐ.ஏ.எஸ் முதல் அர்ச்சகர் வரை), வணிகம், தொழில் முதலியவற்றில் பங்கு ஒவ்வொருசாதிக்கும் எவ்வளவு உள்ளது என்று கணக்கிட வேண்டும்.

3. எந்தெந்தத் துறைகளில் எந்தெந்தச் சாதி பின்தங்கியுள்ளது என்று மதிப் பிட்டு அந்தந்த துறையில் அந்தச் சாதிக்கான பங்கை அதிகரிக்கத் தேவையான அளவு இட ஒதுக்கீட்டை உருவாக்க வேண்டும். //

This appears like an idea for 'caste justice' than social justice.
On his point about வணிகம், தொழில் - suppose you find certain communities have a majority presence in BSE brokerages, or south tamil nadu retail stores, or ownership of coimbatore textile units - what do you do?

it is nice to note he left out sports teams from his scheme.

On the issue of reservation for SC/ST and socially and educationally backward classes, there are existing NCBC guidelines, central government guidelines on creamy layer, and supreme court judgments. There isn't a need to pretend none of these exist and invent something all anew.

ஜோ / Joe said...

//இன்றைய சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மொத்தத் தொகை நிச்சயம் 60 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை தான். எனவே, அதில் இட ஒதுக்கீடு 27 சதவிகிதம் மட்டும்தான் என்பது ஒன்றும் தவறானதல்ல!//

பந்த் கிடக்கட்டும்..மேற்குறிப்பிட்ட வரிகளை இட்லிவடையார் ஒத்துக்கொள்ளுகிறாரா?

IdlyVadai said...

//பந்த் கிடக்கட்டும்..மேற்குறிப்பிட்ட வரிகளை இட்லிவடையார் ஒத்துக்கொள்ளுகிறாரா?//

நன் ஒத்துக்கொண்டால் என்ன ஒத்துக்கொள்ளாவிட்டால் என்ன :-). எல்லோருக்கும் அவர்கள் கருத்து சொல்ல உரிமை இருக்கு. சரி இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் 3473 இருக்கு தெரியுமா ?

ஜோ / Joe said...

//சரி இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் 3473 இருக்கு தெரியுமா ?//
தெரியும்.அதனால நீங்க என்ன சொல்ல வர்றீங்கய்யா?

//எல்லோருக்கும் அவர்கள் கருத்து சொல்ல உரிமை இருக்கு. //
இப்போ யார் இல்லைண்ணது .அதான் உங்க கருத்தை கேட்டேன்.

//நன் ஒத்துக்கொண்டால் என்ன ஒத்துக்கொள்ளாவிட்டால் என்ன :-).//
ஆகா..என்ன அருமையான கருத்து.

IdlyVadai said...

ஜோ விடமாட்டேங்க போல - ஒழுங்கான கணக்கெடுப்பு எடுத்து, ஜாதி ரீதியில் இல்லாமல் ஏழையாக இருப்பவர்களுக்கு தக்க உதவி செய்ய வேண்டும். பகுத்தறிவுக்கு ஆங்கிலத்தில் Commonsense என்று சொல்லுவார்கள்.

ஜோ / Joe said...

//ஞாநியின் அருமையான கட்டுரை//

இப்படீன்னு சொன்னதே நீர் தான் .கட்டுரையிலிருக்கிற வரியை எடுத்து நீர் ஒப்புக்கொள்ளுகிறீரா என்றால் commonsense என்று உம்மிடம் இல்லாததைப் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறீர்..ஐயகோ!

IdlyVadai said...

ஜோ - அருமையான கட்டுரை என்றால் அதை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை.

Anonymous said...

Jnani is confused and is spreading his confusion.You cannot have caste as the basis for selecting students.Why not admit students
on basis of population strength of each state.It is as 'rational' as the schemes he suggests.Why not reserve 50% for women. He is obesessed with caste based
reservation just like his mentor-
Periyar.If this is level of intellectuals understanding of issues in tamil nadu may god save
us from all these intellectuals and politicians.

Anonymous said...

இன்றைய சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மொத்தத் தொகை நிச்சயம் 60 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை தான். எனவே, அதில் இட ஒதுக்கீடு 27 சதவிகிதம் மட்டும்தான் என்பது ஒன்றும் தவறானதல்ல.

Is there any logic in this.
Women constitute 50% of population,
so why not give them 22% reservation.People with height between 5 feet and 5 feet 2 inches
will be about 35% of indian population so why not give them
20% reservation.

Anonymous said...

LEADER ARTICLE: Grab This Opportunity Yogendra Yadav
The supporters and the opponents of the OBC reservations in higher education seem to be united in how they read the latest order of the Supreme Court. Both sides are reacting as if the court has given its final judgment. They of course know it is an interim order. But both sides seem to think that the questions posed by the Supreme Court are impossible to answer. Hence the premature triumphalism of those who opposed the policy and the hysteria of the political class that supports, or wishes to be seen as supporting, the quotas. I beg to disagree with this reading. The questions posed by the Supreme Court in its interim order should be seen for what they are, namely questions. The stay order does not question the foundations of the settled policy on affirmative action. It simply asks some hard questions necessary for fine-tuning the affirmative policies. I think these are fairly reasonable questions that anyone would wish to ask. Therefore, instead of trying to find out how not to respond to these questions, the government would do well to think hard about how to give straight answers. The SC order could and should be turned into an opportunity to fine-tune the reservation policy. It is a delicate moment. A hasty or knee-jerk response of the kind suggested by some champions of social justice could actually lead to a rejection of the policy itself. Take the first and simple question of the numbers. The government has argued that the OBCs are 52 per cent and that the 1931 Census is a sufficient basis to arrive at this assessment. That is not a straight answer. Mandal Commission had arrived at the mythical figure of 52 per cent on the basis of deductive reasoning that failed to take into account all the non-dwija upper castes in the country, including large caste groups such as Jat, Maratha, Patel, Reddy, Khandayat and Nair. Once you exclude these groups from OBC, the figure comes to anywhere between 40 and 44 per cent. The government should know that, if it cares to look at its own data. The latest round (61st round for 2004-05) of the most comprehensive survey available in the country, the National Sample Survey, shows that the OBCs are around 41 per cent of the country's population. This is consistent with the information available from various rounds of the National Election Study by the CSDS. Sure, this assessment is based on sample surveys, not the Census, and therefore the figure could be off by one or two points. But that does not quite matter for a scheme that seeks to reserve only 27 per cent seats for the OBCs. The second question is: Where is the evidence to show that the OBCs are under-represented in higher education? The government wishes to hide behind assertion about thousand years of discrimination and oppression. This again is not an appropriate response. We need to distinguish the OBCs from the SC. Dalits have suffered from centuries of oppression and discrimination, but this is not true of all the OBCs. Their disadvantage needs to be established with latest data. A straight response would be to say that we do not have reliable evidence for analysing caste profile of our higher educational institutions. But whatever we know about the educational profile of different caste-community groups shows a sharp difference between the OBCs and the 'upper castes'. Once again, the NSS data offers a wealth of reliable information. Professor Satish Deshpande's analysis of this data leaves no doubt that OBCs suffer from a severe disadvantage. If the court wants more solid evidence, the government could get a nationwide survey carried out for this purpose It may not be a bad idea to appoint an expert committee on the lines of the Sachar committee to establish these facts to the satisfaction of the courts. The third question is implicit in the court's order: How can we be sure that the mechanism proposed by the government is the best way of redressing this disadvantage? An honest answer is that we cannot be very sure. The fact is that the mechanism of reservation was adopted without a careful look at other available options. Deshpande and i had proposed an alternative that involves computing a deprivation index based on caste, class, gender and rural location. The Supreme Court order gives the government another opportunity to think about alternatives like this And finally, there is the 'creamy layer' question. The Supreme Court order has made it clear that giving the benefit of reservations to anyone on the sole ground of being an OBC is unacceptable, that the policy must exclude the undeserving from taking advantage of the new system. Now the government can give two kinds of answers. It can either sub-divide the castes that fall under OBC into educationally more advanced OBCs and the most backward OBCs and provide sub-quotas for both. Alternatively, it could exclude the 'creamy layer' following the existing and largely income-based definition. Instead of simple exclusion the 'creamy layer' could be made the last beneficiary of the OBC quota. This requires the government to face these questions and to admit that the answers given so far are not very convincing. Once it does so, it could appoint an expert committee on the lines of Sachar committee, or still better a standing independent commission, to come up with answers that may convince the court. Missing this opportunity could lead to irreversible damage to the cause of social justice. http://timesofindia.indiatimes.com/articleshow/msid-1881199,prtpage-1.cms

Anonymous said...

//ஜோ - அருமையான கட்டுரை என்றால் அதை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை//

அப்படி என்றால் சோவின் எல்லா வாதங்களையுமே ஏற்று கொள்ள முடியாது

Anonymous said...

There is a picture in page 6 top section of Dinakaran - Chennai edition today. Please post that picture and information.

Anonymous said...

what is commonsense- it is a manifestation brahminical ideology that thinks that what
it categorizes as common and
sense is commonsense.How can
there be commonsense in a caste
society created by brahmins.There
can be only caste sense.Commonsense
is an expression of the hegemony
of RSS/brahminical/hindutva
forces.
Well, soon you may find such arguments in blogs and of course
in Poonga.

Anonymous said...

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு மிகவும் அவசியம் தான் ஆனால் அதில் அந்த சமூகத்தின் முன்னேறிய மக்கள் போட்டி போடக்கூடாது. இன்னும் கீழ் நிலையில் உள்ள மக்களுக்கு வழிவிட்டு அவர்கள் முன்னேற வழிகானவேண்டும். இல்லாவிட்டால் இட ஒதுக்கீட்டின் முழுமையான பலன் கேள்விக்குறியாகிவிடும் என்பதே உண்மை.