திமுகவுக்கும், பாமகவுக்கும் ஏற்பட்ட மோதல் முற்றியுள்ளது. முதலமைச்சரின் அறைக்குள் பதாகைகளோடு பாமக எம்எல்ஏக்கள் வந்ததற்கு கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். திமுகவுடன் ஏற்பட்ட மோதல் மண்பானையில் ஏற்பட்ட விரிசல் என்று பாமக மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அண்மைகாலமாக திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாமக எம்எல்ஏக்கள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை எதிர்த்து போர்க்கொடி தூக்கினார்கள். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரினார்கள். இதற்கிடையே திமுக நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான வெற்றிகொண்டான், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை கடுமையாக விமர்சித்து வார பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். பாமகவினரிடையே இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நேற்று சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் அறைக்கு சென்றார்கள். ஒரு மனு கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் முதல்வர் வேறு அலுவலில் இருப்பதாக கூறியதை தொடர்ந்து முதல்வர் அறை அருகிலேயே பாமக எம்எல்ஏக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெற்றி கொண்டான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதப்பட்ட பதாகைகளையும் அவர்கள் எடுத்து சென்றிருந்தனர். அதன் பின்னர் முதலமைச்சர் கருணாநிதி, அவர்களை அழைத்து பேசினார். டாக்டர் ராமதாசை தரக்குறைவாக விமர்சித்த திமுக பேச்சாளர் வெற்றி கொண்டான் மீது கடும் நடவடிக்கை எடுக்க என்று அவர்கள் அப்போது வலியுறுத்தினார்கள். உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்தாக பின்னர் ஜி.கே. மணி நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட் டுள்ளார். பதாகைகளுடன் முதல்வர் அறைக்கு பாமக எம்எல்ஏக்கள் வந்ததை அவர் குறைகூறியுள்ளார். இது விரும்பத்தகாத ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். முதலமைச்சர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த சில மாதங்களாகவே நம்மு டைய தோழமைக் கட்சி அணியிலே உள்ள பாமகவிற்கும், திமுகவிற்கும் இடையில் தேவையற்ற சில கசப்புணர்வுகளுக்கு வித்திடப்பட்டு விட்டது என்பதை பத்திரிகைகளில் வந்துள்ள பழைய செய்திகளைப் படித்துப் பார்த்தாலே தெளிவாகப் புரியும். இந்தத் தோழமைக் கட்சிகளின் அணியின் தலைவர் என்ற முறையில் திமுகவைப் பற்றியும், ஆட்சியைப் பற்றியும் விமர்சனங்களை வெளி யிட்ட எந்தக் கட்சிகள் மீதும் குறை காணுகிற மோதுதல் போக்கைக் கடைப்பிடிக்காமல், தோழமையைக் கட்டிக் காக்கும் தூய எண்ணத்தோடு அமைதியாகவே இருந்து வந்திருக்கிறேன்.
இதற்கிடையே கழகத்தின் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவரான வெற்றிகொண்டான், பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் திமுக ஆட்சியைப் பற்றி செய்துள்ள விமர்சனங்களுக்குப் பதில் என்ற பெயரால், ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் திமுக கடைப்பிடித்து வருகிற கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு மாறான வார்த்தை களைப் பயன்படுத்தியிருப்பது கண்டு நான் மிகவும் வேதனைப்படுகிறேன்.
இதுபற்றி, கோ.க.மணி தலைமையில் என்னிடம் புகார் செய்ய வந்த பாமக சட்டமன்ற உறுப்பினர்களிடமும் விளக்கம் அளித்து வருத்தமும் தெரிவித்திருக்கிறேன். ஆனால் எனக்குள்ள ஒரேயொரு சங்கடம், கோட்டைத் தலைமைச் செயலகத் தின் உள்ளேயே முதலமைச்சர் அறைக்குள் கண்டன வாசகங்கள் எழுதியுள்ள பதாகைகளோடு அவர்கள் வந்தது தான். இதைச் சட்டமன்ற உறுப்பினர்கள் பின்பற்றினால் விரும்பத் தகாத ஒரு முன்னுதாரணம் ஆகி விடும் என்பதை பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் உணர வேண்டும். இதை நான் சொல்வதால் வெற்றிகொண்டான் பேட்டியின் வாசகங்களை நியாயப்படுத்துவதாக அர்த்தம் இல்லை.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார். முதல்வரின் இந்த அறிக்கை குறித்து பாமக தலைவர்கள் சிலரிடம் தொடர்பு கொண்டு கருத்து கேட்ட போது, இந்த அறிக்கை பற்றிய விவரம் டாக்டர் ராமதாசுக்கு தெரியும். அவர் தான் பதிலளிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். திமுகவில் கருணாநிதியும், அன்பழகனும்தான் நல்லவர்கள் என்று முன்பு ஒருமுறை டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார். இப்போது அவர்களுடனேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதால்இனி நிலைமை சீரடையாது என்று மூத்த பாமக தலைவர் ஒருவர் கூறினார்.
இப்போது ஏற்பட்டுள்ள விரிசல் தங்க தாம்பாளத்தில் அல்ல; மண்பானையில்தான் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விரிசலை சரி செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். திமுகவின் நட்சத்திர பேச்சாளர் ஒருவர் எங்கள் கட்சியின் நிறுவனரை பற்றி தரந்தாழ்ந்து விமர்சித்திருக்கிறார். இது திமுக தலைவரின் ஒப்புதல் இல்லாமல் நடைபெற்றிருக்காது. எனவே திமுக தலைவரே, எங்கள் தலைவரை அவமானப்படுத்திய தாகத்தான் கருத வேண்டியிருக்கிறது என்றும் பாமக தலைவர்கள் குறிப்பிட்டனர். இதனால் திமுக, பாமக இடையேயான மோதல் மேலும் மோசமாகியுள்ளது என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
* * *
இன்று பாமக நிறுவனர் ராமதாûஸ விமர்சித்த திமுக பேச்சாளர் வெற்றிக்கொண்டானைக் கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய பாமகவினர் 65 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
* * *
தமிழக பட்ஜெட்டில் எதிர்பார்த்த திட்டங்கள் இல்லை என பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, March 24, 2007
திமுக x பமாக மோதல் முற்றுகிறது
Posted by IdlyVadai at 3/24/2007 05:59:00 PM
Labels: அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










1 Comment:
வெற்றிகொண்டான், மாறனைப்போல கருனாநிதியின் மற்றொரு மனச்சாட்சி.
Post a Comment