
ஜூவிக்கு அளித்த பேட்டி:
ஆளும் கூட்டணியில் திமுக வுக்கும், பாமகவுக்கும் இடையே ஏற்பட்ட லேசான உரசல் மோதலாக உருவெடுத்துள்ளது. இந்த மோதல் எந்த கட்டத்திலும் வெடிக்கக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் ஒருமாத கெடு விதித்திருக்கிறார்.
ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டி:
96 உறுப்பினர்களை கொண்ட கருணாநிதி தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சி போல செயல்பட்டு வருகிறார். காவிரிபிரச்னை, விலைவாசி உயர்வு , வேலையின்மை குறித்து கருணாநிதி அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவில்லை. கருணாநிதி ஆட்சியின் புகழ்பாட பா.ம.க., ஒன்றும் தி.மு.க.வின் கிளைஅலுவலகம் இல்லை. இந்தபோக்கு நீடிக்குமானால் எதிர்த்து போராட களமிறங்க வேண்டிய நிலை ஏற்படும் என கூறியுள்ளார்.
மேலும் விரிவாக ...
கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றது. திமுகவுக்கு தனித்து பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி கட்சி களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. பாமக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகின்றன.
இந்த நிலையில் திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டன. துணை நகரம் அமைக்கப் போவதாக அரசு அறிவித்தபோது அதற்கு டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, துணை நகரத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதுடன் சட்டசபையில் இது தொடர்பாக தங்கள் கட்சியின் கருத்தை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து துணை நகர திட்டத்தை மாநில அரசு கைவிட்டது.
2வதாக உள்ளாட்சித் தேர்தலின் போது உரசல் அதிகமானது. உள்ளாட்சித் தேர்தலில் திமுக தங்களுக்கு பச்சைத் துரோகம் செய்து விட்டதாக டாக்டர் ராமதாஸ் குமுறினார். அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் அன்புமணி ராமதாசுக்கு திமுக ஆதரவு தரவில்லை என்ற ஆதங்கம் மேலும் பிரச்சனையை பெரிதாக்கியது.
ஜனசக்தி தினசரி பத்திரிகை வெளியிட்டு விழாவில் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராஜாவை தவிர வேறு யாரும் தங்களுக்கு உதவ வில்லை என்று கருணாநிதி முன்னிலையிலேயே ராமதாஸ் குற்றம் சுமத்தினார்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்டபோது தீர்ப்பின் முழு விவரங்களை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆளும் கட்சி சிறிது தயக்கத்திற்கு பிறகு அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்ட போதிலும் டாக்டர் ராமதாஸ் அக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
காவிரி பிரச்சனையில் முதல்வர் எடுத்த நிலையை அவர் கடுமையாக குறை கூறினார். பந்த் போராட்டம் நடத்த வேண்டும் என்ற அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இடஒதுக்கீடு பிரச்சனையிலும் திமுக அக்கறை காட்டவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இரு தலைவர்களுக்கு இடையே கடிதங்கள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. இருந்தாலும் கருத்து வேறுபாடுகள் அகலவில்லை. டாக்டர் ராமதாஸ் வெளியூர்களில் பொது கூட்டங்களிலும், கட்சி நிர்வாகிகள் கூட்டங்களிலும் பேசும் போதும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசியது திமுக வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் கருணாநிதியை தவிர மற்றவர்கள் பாமகவின் விமர்சனத்தால் கொதிப்படைந்திருப்பதாக கூறப் படுகிறது. இதற்கிடையே மருத்துவக் கல்லூரி இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் எழுதிய கடிதம் ராமதாசுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
டாக்டர் ராமதாசின் அணுகுமுறை குறித்து கூட்டணி கட்சித் தலைவர் களின் கருத்துக்களை கேட்டு ஒரு வார பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் நேற்று "அரிசியை காப்போம்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் டாக்டர் ராமதாஸ் பேசிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுவ தாக அவர் கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. திமுகவுக்கும், பாமகவுக்கும் நிலவி வந்த சுமூக சூழ்நிலை பாதிக்கக் கூடிய நிலைமை உருவாகியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப் படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். முக்கிய பிரச்சனைகளில் கூட்டணி கட்சிகளை முதலமைச்சர் கலந்தாலோசிப்பது இல்லை என்று அதில் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
""விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு போன்ற முக்கிய பிரச்சனைகளில் கூட்டணி கட்சி களை கலந்தாலோசிக்காதபோது இந்த அரசாங்கத்தை கண்ணை மூடிக் கொண்டு நாங்கள் ஆதரிக்க முடியாது'' என்று அவர் கூறியுள்ளார்.
நாங்கள் எல்லாவற்றையும் பார்க்காமல் கண்ணை மூடிக் கொள்ள வேண்டும். இவர்களை பாராட்ட மட்டும்தான் வாயை திறக்க வேண்டும் என்று அவர்கள் எதிர் பார்க்கிறார்கள் போலும், பாமக என்பது என்ன திமுகவின் கிளை அலுவலகமா? என்றும் அவர் ஆவேசமாக கேட்டுள்ளார்.
234 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபையில் திமுகவுக்கு 96 உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள். ஆனால் பெரும் பான்மை ஆதரவு தங்களுக்கு இருப்பது போல அவர்கள் நடந்து கொள் கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில முதலமைச்சர்களுக்கு அண்மை யில் பிரதமர் கட்டளையிட்டார். இது தொடர்பாக நமது முதலமைச்சர், அமைச்சரவை கூட்டத்தையோ அல்லது அனைத்துக் கட்சி கூட்டத்தையோ கூட்டினாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு நகல்களை கர்நாடக அரசு அனைத்துக் கட்சிகளுக்கும் மட்டுமின்றி பத்திரிகை அலுவலகங்களுக்கும் உடனடியாக வழங்கியது. ஆனால் திமுக அரசோ நாங்கள் கடுமையாக வற்புறுத்திய பிறகே நள்ளிரவில் அதனை வழங்கியது என்றும் கூறியுள்ளார்.
மேலும் மத்திய அமைச்சவையில் திமுக அமைச்சர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் என்பது போல நடந்து கொள்கிறார்கள். பாமக அமைச்சர்கள் செய்த நல்ல காரியத்தை கூட திமுக தலைவர்கள் தாங்கள் செய்ததாக ஹைஜாக் செய்து விடுகிறார்கள்.
உதாரணமாக சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மேம் படுத்த டாக்டர் அன்புமணி ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தார். இது ஏதோ தன்னுடைய முயற்சியால் வந்தது போல மாநில அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கருத்து தெரிவித்தார்.
அண்மையில் திமுக எம்பிக்கள் தமிழகத்திற்கான ரெயில்வே திட்டங்கள் குறித்து ரெயில்வே அமைச்சர் லாலுவை சந்தித்து மனு கொடுத்தார்கள். தமிழகத்தை சேர்ந்த ரெயில்வே இணையமைச்சர் வேலுவுக்கு அவர்கள் இது பற்றி தகவல் கூட தெரிவிக்கவில்லை. இதே போல திமுக இணை யமைச்சர்களுக்கு தெரியாமல் மத்திய கேபினட் அமைச்சர்களை நாங்கள் சந்தித்து மனு கொடுத்தால் அவர்கள் பொறுத்துக் கொள்வார்களா என்றும் அவர் வினவினார்.
ஒரு மாத கெடு
ஜுனியர் விகடனுக்கு அளித்து வந்த சிறப்பு பேட்டியிலும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சில்லரை வர்த்தக பிரச்சனையில் அரசுக்கும், சில நிறுவனங்களுக்கும் ஒருமாத கெடு கொடுத்து போராட்டத்தை அறிவிக்கப் போவதாக கூறியிருந்தது பற்றி ராமதாஸ் குறிப்பிட்டார்.
அதற்கு பிறகு முதலமைச்சர் என்னுடன் பேசவில்லை. ஆனால் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். இது அரசாங்கத்தையே உலுக்கிப் பார்க்கின்ற அளவுக்கு வலுமை வாய்ந்தது. இந்த விஷயத்தில் முதலமைச்சர் அனைவரையும் அழைத்துப் பேசி கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம்.
இந்த பிரச்சனை பொறுத்தவரை இதுதான் முதல்வருக்கு நாங்கள் வைக்கும் கடைசி கெடுவாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை என்று ராமதாஸ் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் பாமக மட்டும்தான் அரசுக்கு பெரும் தலைவலியாக இருப்பதாக கூறப்படுவது குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது.
அண்மையில் அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் மிகவும் சிறப்பான மாநில அரசாக நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசு விளங்குகிறது. தமிழகமும், நமது முதல்வரும் நான்காவது இடத்தில்தான் இருக்கிறார்கள்.
நம் முதல்வர் முதலாவது இடத்திற்கு வர நாங்கள் ஆசைப்படுகிறோம். அப்படி முதல் இடத்திற்கு வர வேண்டுமானால் அவரது கட்சியினர், அமைச்சர்கள், குறிப்பாக அதிகாரிகள், ஊழலற்ற நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை கொடுக்க வேண்டும். இந்த எண்ணத்தில்தான் பாமக தனது கருத்துக்களை தொடர்ந்து சொல்லி வருகிறது என்றும் டாக்டர் ராமதாஸ் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, March 03, 2007
பாமக x திமுக - உரசல் மோதலாகிறது
Posted by IdlyVadai at 3/03/2007 05:28:00 PM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)











10 Comments:
இட்லிவடை அய்யா,
கூடிய சீக்கிரமே,மஞ்ச துண்டு அய்யா,"மரம்வெட்டி அய்யா,திராவிடத் தமிழர் அல்லர்" என்ற திடுக்கிடும் உண்மையை வெளியிடுவார் என்று நம்பலாம்.
பாலா
//பாமக x திமுக - உரசல் மோதலாகிறது //
உச்சி குளிர்ந்து போய் இருப்பீங்களே! ஹி..ஹி
bala,
என்ன நடிகர் திலகம் படத்தை போட்டிருக்கீங்க .ஏதாவது உள்குத்தா?
இன்று கலைஞர் கேள்வி பதில் அறிக்கை:
க: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தங்களின் ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி யிருக்கிறாரே?
ப: நீங்கள் குறிப்பிடும் அந்தப் பேட்டியில் எதற்காக அத்தகைய குற்றச்சாட்டுகளை அவர் கூறுகிறார் என்பதையும் அவரே தெரிவித்திருக் கிறாரே, அதாவது அவர் சாட்டுகின்ற குற்றச்சாட்டுகளும் கருத்துக்களும், அகில இந்திய அளவில் தற்போது நான்காவது இடத்தில் உள்ள என்னை முதல் இடத்திற்குக்கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் என்று அவரே சொல்லியிருக்கிறார். அந்த அளவில்தான் நான் அவருடைய குற்றச்சாட்டுகளை எல்லாம் எடுத்துக் கொள்கிறேன். வீணையின் வளைவு நாதம் எழுப்புவதற்கே.
நான் எதற்கு உச்சிகுளிர்ந்து போகணும். நான் என்ன ஜெயலலிதாவா ?
intha ramadoss thollai nalaukku naal adikamayitte irukke.
தமிழக அரசியலுக்கு ராமதாஸ் ஒரு சாபக்கேடு. எதிலும் திருப்தியடையாத ஒரு சுயநலமிக்க அரசியல்வாதி.
தி.மு.க. அரசு நன்கு இணைந்து செயல்படவேண்டும்,தமிழகத்தை இன்னும் முன்னேற்ற வேண்டும் என்று
கூறியுள்ளார்.இதில் மஞசளையும் மரத்தையும் சொல்லிக் குளிர் காயும் கும்பலுக்கு நாக்கில் எச்சி ஊர்வதை கண்டு சிரிப்போம்.தமிழின் ஒற்றுமைக்கு உங்கள் நரித்தனம் உதவி செய்யும்.நன்றி.
கலைஞர் ஆட்சிக்கு மீண்டும் ஏதாவது ஆபத்து ஏற்படுத்த ஜெவின் கைப்பாவையாக இவர் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் வலுக்கிறது. அப்படி ஏதாவது நிகழ்ந்தால் பாமக என்ற கட்சியே அப்புறம் இருக்காது.
இவனுங்க எப்பவுமே இப்படிதான்.. குத்துங்க எஜமான் குத்துங்க...!!! :P
Post a Comment