சென்னை சங்கமம் பற்றி ஜூவியில் ஞாநி
சில சந்தேகங்கள்...
அரசு நிதி உதவியுடன் தனியார் அமைப்பான தமிழ் மையம், ‘சுற்றுலாவையும் தமிழ் பாரம்பரியத்தையும் ஊக்குவிப்பதற்காக’ என்று சொல்லி நடத்திய சென்னை சங்கமத்தின் அசல் நோக்கம் என்ன?
வரையறுத்திருக்கும் உச்ச வரம்புக்கு மேல் கூடுதலாக செலவிடுவதற்காக விதியை தளர்த்தி சிறப்பாக பிறப்பிக்கப்பட்ட சுற்றுலா- பண்பாட்டுத்துறையின் ‘அரசாணை (நிலை) எண் 20’ சொல்லும் நோக்கம்தான் என்ன?
‘தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ்ப் பண்பாட்டையும் இலக்கியத்தையும் பெரிதும் கண்டுகளிக்க விரும்பு வதால், அவர்கள் பேராவலைத் தணிக்கும் பொருட்டு சென்னையில் தனியார் ஒத்துழைப்புடன் பண்பாட்டுப் பெருவிழா நடத்தப் போவதாக, ஏற்கெனவே மானியக் கோரிக்கை விவாதத்தின்போது சுற்றுலா அமைச்சர் அறிவித்திருந்தாராம்! அதன்படிதான், ‘‘தனியார் அமைப்பான தமிழ் மையத்தால் நடத்தப்படவுள்ள சென்னை சங்கமம், பாரம்பரியமிக்க தமிழகப் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகளைத் தக்க வைக்கவும், புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழகம் வரும்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கவும், அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதத்திலும் அமையும்’’ என்று அரசாணை சொல்லியிருக்கிறது.
சுற்றுலா ஊக்குவிப்பு, புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆர்வம் என்பதெல்லாம் நிதி வரையறையை தளர்த்துவதற்காக அரசாணையில் காட்டப்படும் காரணங்கள் மட்டும்தானா என்ற கேள்வி எழுகிறது.
ஏனென்றால், பிப்ரவரி 21 முதல் 26 வரை சென்னை நகரப் பூங்காக்களிலும், திறந்தவெளி அரங்கங்களிலும் திரளாகக் கூடியவர்களில் நூற்றுக்குப் பத்து பேர்கூட புலம் பெயர்ந்த தமிழர்களோ, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளோ அல்ல. இது அந்த நிகழ்ச்சிகளின் வீடியோ பதிவுகளைப் பார்த்தாலே தெளிவாகத் தெரிகிறது. கலையார்வமுடைய புலம் பெயர்ந்த தமிழர்களும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளும் டிசம்பர் சீசனுக்கு வந்து விட்டுப் பொங்கல் முடியும்போது திரும்பிப் போய்விடுவார்கள் என்பது, இது போன்ற கலை நிகழ்ச்சித் துறைகளில் ஈடுபட்டுள்ள எல்லோரும் அறிந்த உண்மை.
அப்படி இருக்க எதற்காக பிப்ரவரி 21-26 இதை தனியாக இத்தனை செலவழித்து நடத்த வேண்டும்?
‘பொங்கல் சமயத்திலேயே நடத்த திட்டமிட்டோம். அப்போது அது முடியாமல் போய்விட்டது’ என்று அமைப்பாளர்கள் சொல் கிறார்கள். அப்படியானால், அடுத்தப் பொங்கலின்போது நடத்த வேண்டியதுதானே? இப்போது என்ன அவசரம்?
இந்த வருட பட்ஜெட் ஒதுக்கீடு முடியும் முன்பாக எஞ்சியிருக்கும் நிதியை எடுத்து செலவு செய்யும் அவசரமா?
‘இதில் அவசரமாக எதுவும் நடக்கவில்லை’ என்று பதில் கூற வாய்ப்பில்லை. ஏனென்றால், அரசாணையில் உள்ளபடி, ‘தமிழ் மைய ஒருங்கிணைப்பாளர் கனிமொழி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு’ மடல்கள் அனுப்பிய நாட்கள் - 25-1-2007, 6-2-2007. உடனே, கடிதம் அனுப்பப்பட்ட அதே 6-2-2007 அன்றே சுற்றுலாத் துறை செயலாளர் நேர்முகக் கடிதம் எழுதி சென்னை சங்கமத்துக்கு விளம்பரம் செய்ய நிதி வழங்குவதற்கான உச்ச வரம்பை தளர்த்திடக் கோருகிறார். அரசாணை பிறப்பிக்கப்படுவது ஒரே வாரத்தில் -அதாவது 13-2-2007 அன்று. அதே நாளில் நிதித் துறையும் இசைவு கொடுத்து ஆணை பிறப்பித்துவிடுகிறது.
புலம் பெயர்ந்த தமிழர் கலிஃபோர்னியாவிலிருந்து கணியான் கூத்துப் பார்க்க விமானத்தில் சென்னைக்குப் பறந்து வரும் வேகத்தைவிட அதி வேகத்தில் தலைமைச் செயலகத்தில் இந்தக் கோப்புகள் பறந்திருக்கின்றன.
ஆட்சியாளர் மனநிலைக்கு ஏற்ற மாதிரி கோப்பெழுதும் ஆற்றல் தானே மி.கி.ஷி. (In Ayya’s Service அல்லது In Amma’s Service)!
இன்னும் சில அடிப்படையான கேள்விகளும் உண்டு... ஏன் இந்த நிகழ்ச்சியை ஒரு தனியார் அமைப்பிடம் அரசு தரவேண்டும்? அரசிடம் இத்தகைய நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஆற்றலோ அமைப்போ இல்லையா?
மத்திய அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படும் இரு அரசு சார்ந்த கலாசார அமைப்புகள் இருக்கின்றனவே! ஒன்று தஞ்சையில் இயங்கும் தென் மண்டல கலாசார மையம். கிராமியக் கலைஞர்களை அனுப்பி வைக்கும் தரகர் வேலை மட்டும் இதனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இந்த அமைப்பு ஆண்டுதோறும் முழுமையான கலை விழாக்களை தானே நடத்தி வரும் அனுபவம் உடைய அமைப்பு. இதேபோன்ற இன்னொரு அமைப்பு சென்னையில் இயங்கி வரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்.
ஏன் இந்த இரு அமைப்புகளிடமும் விழாப் பொறுப்பு தரப் படாமல், தனியார் அமைப்பான தமிழ் மையத்தின் ஏவல்படி செயல் படும் நிலைக்கு அவை கீழிறக்கப்பட்டன?
முதலில் இந்த தமிழ் மையம் என்பது என்ன? இந்த தனியார் அமைப்பில் நேற்று வரை கனிமொழி ஒருங்கிணைப்பாளராக இல்லை. துல்லியமாக சொல்வதானால், தி.மு.க ஆட்சி அமையும்வரை இல்லை. ஜகத் கஸ்பர் ராஜ் என்பவர்தான் தமிழ் மையத்தின் முகம்.
அவர் மீதான முந்தைய சர்ச்சைகள் எதுவுமே அரசுக்குத் தெரியாதா?
இப்படிப்பட்ட விழாக்கள் கலையின், கலைஞர்களின் அசல் பிரச்னைகளை கவனிக்க விடாமல் மறைக்கின்றன. சென்னைப் போன்ற பெரு நகரம் தொடங்கி சிற்றூர்கள் வரை கலைகளுக்கு ஏற்ற சூழல் அரசால் உருவாக்கப்படவும் இல்லை. நசுக்கப்படுவதே அதிகம். சென்னையில் அரசு வசம் இருக்கும் அரங்கங்களில் விதித்துள்ள கட்டணத்தை செலுத்தி நிகழ்ச்சி நடத்துவதானால், எந்த நாடகக்குழுவும் கலைக் குழுவும் பார்வையாளர்களிடம் நூறு ரூபாய் டிக்கெட் போடாமல் நிகழ்ச்சி நடத்த முடியாது. இல்லாவிட்டால், தனியார் ஸ்பான்சர்களிடம் கெளரவப் பிச்சை எடுக்க வேண்டும். நாடக, கலைப் பயிற்சிகளுக்கு எளிய கட்டணத்தில் அரசு ஹால்களை ஏற்படுத்தித் தரவேண்டுமென்ற கோரிக்கை 30 வருடங்களாகப் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
பூங்காக்களில் வீதி நாடகக் குழுக்கள் நாடகம் போட அனுமதி இல்லை. கடுமையான காவல்துறை முன் தணிக்கையும் கெடுபிடிகளும் இருக்கின்றன. சென்னை சங்கமம் திருவிழாவில் ஒப்புக்கு சப்பாணியாக மூன்றே இடங்களில் முப்பது நிமிடம் மட்டுமே பாட அழைக்கப்பட்ட சென்னை இளைஞர் சேர்ந்திசைக் குழு மறைந்த இசை மேதை எம்.பி.சீனிவாசனால் உருவாக்கப்பட்டது. சேர்ந்திசை என்ற அருமையான வடிவத்தை பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகளுக்கு கற்றுத் தருவதற்கான திட்டத்தை எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அன்றைய அமைச்சர் அரங்கநாயகம் செயல்படுத்தினார். நூற்றுக்கணக்கான குழந்தைகள் தமிழகம் முழுவதும் சில ஆண்டுகள் பயிற்சி பெற்றார்கள்.
அந்தத் திட்டத்தைப் பின்னர் நிறுத்தியது யார் என்பது இப்போது அரசுப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு நினைவிருக்கிறதா?
சென்னை சங்கமத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து, முதல்வர் கருணாநிதி அந்த விழாத் துவக்கத்தில் பேசியதிலிருந்தே வெளிப்பட்டு விட்டது.
கனிமொழியை தன் வழித் தோன்றலாக அங்கே வர்ணித்தார். எந்தத் துறைக்கு? உலகம் முழுவதும் தமிழைப் பரப்புவதில் தன் வாரிசு கனிமொழி என்று அறிவித்தார்.
ஆக, சென்னை சங்கமத்தில் சங்கமித்தது மக்களும் கலையும்தானா? அல்லது அரசியலும் ஆதாயமுமா?புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் கருத்துடைய இரு நாடகங்களை, சென்னை சங்கம விழாவில் மாநில நூலகத் துறை நிகழ்த்தச் செய்தது. அதே சமயம், ஒவ்வொரு வருடமும் அக்டோபரிலேயே நடந்து முடியவேண்டிய நூலகங்களுக்கான புத்தகங்கள் தேர்வு ஐந்து மாதமாகியும் இன்னும் நடக்கவில்லை!
அதுசரி... வேகமாக பறப்பதற்கு, கோப்புகளுக்கு சில சமயம் சிறகுகளுக்குப் பதிலாக கிரீடம் அல்லவா வேண்டியிருக்கிறது..?
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, March 14, 2007
சில சந்தேகங்கள்...
Posted by IdlyVadai at 3/14/2007 08:36:00 PM
Labels: பத்திரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










3 Comments:
Such abuse of office and wastage of public money is quite common in thamiznadu !
njani should know this ;-)
This is called Social-justice. In tamilnadu social justice means promoting a dynasty for everything..son is for cheif minister, daughter for tamil evangelist as there is no one qualified in tamilnadu to promote tamil except for his daughter...nonsense....nephew union minister...is tehre any one in the family left for any other post.(Sorry i dont have tamil fonts)
pongada dupukungalla /Poparra panadaigala....
Post a Comment