சிவாஜி' பட பாடல் திருட்டுத்தனமாக இணைய தளத்தில் வெளியிடப்பட்டதால் படத்தின் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ரஜினி நடித்த, "சிவாஜி' படத்தை தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது. பாடல் கேசட் மற்றும் "சிடி'யை ஏப்ரல் 4ம்தேதி ஏவி.எம்., மியூசிக் நிறுவனம் வெளியிட உள்ளது. பாடல் கேசட் மற்றும் "சிடி'க்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதால் வெளியான முதல் நாளே பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.
"சிவாஜி' படத்தின் பணிகள் அனைத்தும் ரகசியமாக நடந்து வந்த போதும், முதலில் போட்டோக்கள் திருட்டுத்தனமாக இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து வெளிநாட்டில் நடந்த படப்பிடிப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன. இது எப்படி நடந்தது என்பதை தயாரிப்பு நிறுவனத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக, "சிவாஜி' படப் பாடல்கள் திருட்டுத்தனமாக இணைய தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வாலி, வைரமுத்து எழுதிய மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் ஒரு பாடல் படத்தின் டைட்டில் பாடலாகும். இந்தப் பாடல் வெளியானதும் ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் இணைய தளத்திலிருந்து மொபைல் போனுக்கு பதிவு செய்து கொண்டுள்ளனர்.
பாடல் இணையதளத்தில் வெளியானது குறித்து தாமதமாக தெரிந்து கொண்ட படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது. மேலும், அந்த இணைய தளத்தை முடக்கவும் ஏற்பாடு செய்துள்ளது. இந்த தவறுக்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற விசாரணை நடந்து வருகிறது. போலீசில் புகார் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
( நன்றி: தினமலர் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, March 23, 2007
இணையத்தில் சிவாஜி பட பாடல் - போலீஸ் புகார்
Posted by IdlyVadai at 3/23/2007 10:13:00 PM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










9 Comments:
http://prabhukrish.net/2007/03/23/sivaji-songs-leaked/
Joke maathaliyaa?
hear sivaji songs by clicking here
http://ignitedminds.net/index.php?option=com_content&task=view&id=13&Itemid=59
//வாகனப் புகையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க வலியுறுத்தி, பாமக உறுப்பினர்கள் சட்டசபைக்கு சைக்கிளில் வந்தனர். ஆனால் அவர்கள் அத்தனை பேரின் கார்களும், சைக்கிள்களை பின்தொடர்ந்து வந்தது அவர்களின் நோக்கத்திற்கு நேர் மாறாக இருந்தது //
ஹஹஹஹா:)
வெளியிட்டவுங்களுக்கு நன்றி சொல்லனும். பாட்டெல்லாம் மயிறு மாதிரி இருக்கு. காசு குடுத்து சிடி வாங்க நெனச்சவுங்க எல்லாம் மனச மாத்திக்கலாம்.
நான் பாடல்களை கேட்டேன். வஜ்ஜி வாஜி பாட்டு பிரமாதமா வந்திருக்கு.
Was the leak delibarate to keep attention on the flim alive and
to create publicity.
அப்படியே படத்தையும் இணையத்தில் வெளியிட்டால் சந்தோஷம் ..
வாஜி.. சிவாஜி.. பாடலை கேட்கும்போது பாபா பாபா பாட்டு மாதிரி இருக்குது.. அப்படியே படமும் படத்தோட ரிசல்ட்டும் பாபா மாதிரியே இருந்தா , இமயமலை போய் பாபாவுக்கு 1008 தேங்காய் உடைப்பதாய் வேண்டிக்கொள்கிறேன்
நல்ல வேளை நான் ஏற்கனவே தறவிரக்கம் செய்துவிட்டேன்.
Post a Comment