பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 30, 2007

ஏன் விஜயகாந்த்

பலர் நான் விஜயகாந்தை சப்போர்ட் செய்வது பிடிப்பதில்லை. தேர்தல் முடிவுகள் போது, பலர் விஜயகாந்த் என்ன ஆனார் என்று தான் என்னை கேட்டார்கள். அவர் விருதாசலத்தில் ஜெயித்த போது பலர் சந்தோஷப்பட்டார்கள்.

ஜெயலலிதா, கலைஞருக்கு தற்போது சிம்மசொப்பனமாகா இருக்கிறார். கலைஞர், ஜெயின் கீழ்தரமான அறிக்கை ஃபுள்டாஸ் பந்துகளை சிக்ஸர் அடிக்கிறார். எம்.ஜி.ஆர்க்கு பிறகு அரசியலில் குதித்து இவ்வளவு சீக்கிரம் யாரும் பாப்புலர் ஆகவில்லை. ராமதாஸ் விஜயகாந்த் பற்றி எதுவும் சொல்ல மறுக்கிறார். ( ரஜினி என்றால் மருத்துவர் புகுந்து விளையாடுவார் என்பது வேறு விஷயம் ).

சிவாஜிகணேசன் கட்சி ஆரம்பித்தார். சினிமாவில் சம்பாதித்த புகழையும், செல் வத்தையும் பறிகொடுத்தது தான் மிச்சம்.

சிப்பா, குப்பா, கும்மா என்று அடுக்கு மொழி வசனம் பேசி இன்று வீராச்சாமி, மற்றும் அரட்டை அரங்கம் வரை வந்து நிற்க்கிறார். விஜய டி.ராஜேந்தர்.

குட்டிகதை சொல்லி கட்சி ஆரம்பித்தார் பாக்கியராஜ். அவர் அரசியல் வாழ்வும் ஒரு குட்டி கதையாக ஆகிவிட்டது.

புலி வருகிறது புலி வருகிறது என்று எல்லா தமிழ் மக்களும் இவர் அரசியலுக்கு வருவார் என்று எதிர் பார்க்க வைத்தார் ரஜினி. எல்லோருக்கும் அல்வா கொடுத்து பயந்துகொண்டு ஷிரேயாவுடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார்.

ஆனால் நம்ம கேப்டன் விஜயகாந்த் துணிந்து கட்சி ஆரம்பித்து திமுகவை மைனாரிட்டி அரசாக்கினார். அதிமுகவை எதிர்கட்சி ஆக்கினார். பாமகாவை ஓரங்கட்டினார். இவர் இன்று எல்லா தமிழக அரசியல் தலைவர்களைவிட ஒரு படி மேலே இருக்கிறார். பல கழகங்கள் இவரை பாத்து கழிந்துகொண்டு இருக்கிறது என்பது தான் உண்மை.

16 Comments:

kaveri said...

mutrilum onmai,, in madurai central assembly he has scored equal votes what admk gets with allaince , viji got with out allaince.

but viji workings and his views about developments towards tamilnadu will be doubtful.

but we can welcome one competive leader we have.

kaveri said...

i think good understanding between dmk and admk , they decided, wants not to come up viji further more in politics.

ie why they are criticising viji, but viji will come up and will gets more votes.

but one questions arises in my mind, suppose vijaykant come up in politics can he be a good leader , big doubt.

why cant we say vijaykanth will make more his party as family party like dmk.

so ellama arasial viyaparam thanga.

Anonymous said...

//// இவரை பாத்து கழிந்துகொண்டு இருக்கிறது ////

இங்கிருக்கும் சபைக்கொப்பாத வார்த்தையை தவிர்த்து விடுங்கள்.

மற்றபடி தங்கள் கருத்துக்களை விவரித்திருக்கிறீர்கள். எல்லாம் புதுப்பொண்டாட்டிமோகம். கொஞ்ச நாள் அவர் கொள்கையை பார்த்ததும் இந்த பித்தமும் தெளியும்....

Anonymous said...

Cartoon ultimate.

//பல கழகங்கள் இவரை பாத்து கழிந்துகொண்டு இருக்கிறது என்பது தான் உண்மை//

உண்மை! உண்மை!! உண்மை!!!

Samudra said...

கோவை மாவட்டத்தில் தி.மு.கவின் வரலாறுகானாத பெரும் அவமானகரமான் தோல்விக்கு விஜய்காந்தின் புதிய கட்சி வோட்டுகளை கனிசமாக பிரித்தது தான் காரனம்.

இந்த கடுப்பு தான் கருனாநிதியை ஆரசியல் நாகரீகத்தை மறந்து விமர்சிக்க வைக்கிறதோ ?

தனிமனித வாழ்விலும் ஒழுக்கும், நாகரீகம் என்று எதையும் பார்த்து அறியாத கருனாநிதியும் ஜெயலலிதாவும் அரசியலிலும் அதே போல இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

ஜோ / Joe said...

//சிவாஜிகணேசன் கட்சி ஆரம்பித்தார். சினிமாவில் சம்பாதித்த புகழையும், செல் வத்தையும் பறிகொடுத்தது தான் மிச்சம்.//
செல்வத்தை பறிகொடுத்தார் .சரி .புகழை பறி கொடுத்தாரா? சிவாஜிக்கு நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாது .என் போன்ற அவருடைய ரசிகர்களே அவரை தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை .அதற்காக அவர் புகழ் ஒன்றும் மறைந்து விடவில்லை .சும்மா உளற வேண்டாம் .விட்டால் நடிகர் திலகத்தை விட விஜயகாந்த் புகழ்பெற்றவர் -ன்னு சொல்லுவீர் போலிருக்கு.

IdlyVadai said...

ஜோ புகழை அழித்துவிட்டேன். திருத்தியதற்கு நன்றி.

-L-L-D-a-s-u said...

Ethivittu ethivittuthaan vedikkai paakuringa

ஜாலிஜம்பர் said...

விஜய்காந்துக்கே இவ்வளவு மவுசு என்றால் ரஜினிகாந்த் எல்லாம் களத்துக்கு வந்தால் திமுக,மற்றும் அதிமுக துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட வேண்டியது தான்.

ஜோ / Joe said...

இட்லி வடை,
திருத்தியமைக்கு (முழுதும் அழிக்க மனமில்லா விடினும்) நன்றி.

சிவாஜி கணேசன் தேர்தலில் தோற்று ,விஜயகாந்த் ஜெயித்தவுடன் ,விஜயகாந்த் சிவாஜியை விட புகழ் பெற்றவர் என்று சொல்லுவது அபத்தம் .ராமராஜனும் ,ராதாரவியும் தான் வெற்றி பெற்றார்கள் .அதனால் அவர்கள் சிவாஜியை விட மேலாகிவிட மாட்டார்கள் .

கேட்பாரிருக்க மாட்டாரென நினைத்து மாபெரும் கலைஞனை நக்கல் செய்வதை நிறுத்தவும்.

kavreri said...

joe,,

but u must accept guts of viji at virudhachalam. he entered the kottai of pmk in to virudhachalam.

athuvum 12000 votes leading in that pmk kottai.

hats off vijaykanth sir

nanu madurai karanga

IdlyVadai said...

இட்லிவடையில் பந்தை முன்னிட்டு இன்று மாலை 8 மணி முதல் ஞாயிறு காலை 8 மணி வரை ( பின்னூட்டம், பதிவு ) எதுவும் இருக்காது :-)

இலவசக்கொத்தனார் said...

நீங்க எப்படி பந்த்? உங்க டெல்லி நண்பரின் இடியை நீங்கள் இப்படித் திருடிக் கொள்ளலாமா? :))

VSK said...

கடந்த தேர்தல் முதலே நான் சொல்லி வரும் கருத்தையே இப்போது நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள்!

கேப்டன் தான் இப்போதைய அரசியல் நிலைக்கு சரியான தீர்வு என்பது என் திடமான கருத்து.

மற்றபடி, சந்தடி சாக்கில் நடிகர் திலகத்தைக் குறைத்துக் கூறி, 'அடித்ததை' நீக்காத உங்கள் செயலுக்கு ஜோவுடன் சேர்ந்து நானும் கண்டனம் தெரிவிக்கிறேன்.

Anonymous said...

Hi Guys!
Dont fall for another stupid sensationalist.He may be honest or brave .But a country needs able leaders.It's a shame that we are not learning from our mistakes.We can only get the leaders we deserve. We may need to improve our thinking and expectations to deserve better and visionary leaders. It is mediocre reasoning to support someone like vijayakanth or Karunanithi or any current leaders of Tamil nadu just because you don't like his opponents.By saying this,I may not seem practical. But I do vote for the best among the available but I don't openly endorse these substandard/ pseudo leaders.
BTW I must say I am frequent visitor to your blog and I am a true fan of yours but I dont agree with you here.
humbly ,
Tamil

Anonymous said...

சிவாஜி மாபெரும் கலைஞர் என்று இங்கு ஜோ குறிப்பிட்டிருப்பது நகைப்புக்குறியது.
எனக்கு தெரிந்து சிவாஜி இயல்பாக நடித்த ஒரே படம் "தேவர் மகன்" தான், அதுவும்
ஒரு மலையாள டைரக்டரின் மேற்பார்வையில். இந்த படம் தவிர்த்து மற்ற அணைத்துபடங்களிலும்
நடித்துள்ளாரே தவிர வாழவில்லை (உதாரணமாக புதிய கலைஞன் சிவக்குமாரின் மகன் கார்த்தி
தன் முதல் படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தது போல).

எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு செண்டிமெண்டால் வீணாகிப்போகும் தமிழர்களைப் பயன்படுத்திய கலைஞர்கள் தான் சிவாஜியும், எம்ஜியாரும். உலகம் சுருங்கிய நிலையில் நாம் சிறிது சிறிதாக அந்த மாயையிலிருந்து விடுபட்டு நல்ல சினிமாவையும் கலைஞர்களையும் ரசிக்கும் நிலையில், மீண்டும் சிவாஜி மாபெரும் கலைஞர் என்பது போன்று மீண்டும் பழைய பல்லவியை பாடுவது தேவையற்றது.