வெற்றிகொண்டான் அறிக்கை அறிவாலயத்தில் தயாரிக்கப் பட்டு கலைஞரின் பார்வைக்கு கொடுக்கப்பட்டு வெளியிடப்பட்டதே - மருத்துவர் ராமதாஸ்
பண்ருட்டி பேச்சை கேட்டு உளறுகிறார் விஜயகாந்த் - கலைஞர்
எப்படியோ டல்லாக இருந்த தமிழக அரசியல் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
மேலும் விரிவாக... கீழே
மருத்துவர் ராமதாஸ் அறிக்கை
வணக்கம், பேட்டி அளிப்பவர் "அறிவு ஆலய'த்தில் ராமதாஸ் ஒரு மோசடி தலைவர் என்று கவுரவப் பட்டம் கொடுக்கப்பட்ட ராமதாஸ் பேசுகிறேன். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இரண்டு செய்திகளை மக்களுக்கு சொல்லியாக வேண்டும் என் பதற்காகத்தான் கூட்டியிருக்கிறேன்.
ஒன்று, கருணாநிதியுடைய தம்பி களில் ஒருவரான தலைமை நிலைய பேச்சாளர் ஒரு வாரப்பத்திரிகையில் அளித்ததாக வந்திருக்கும் அந்த பேட்டி வெற்றிகொண்டான் கொடுத்தது அல்ல. தலைமையின் அறிவு ஆலயத்தில் தயாரிக்கப்பட்டு கருணாநிதி பார்வையிட்டு கொடுக்கப்பட்ட பேட்டி என்று மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இரண்டாவது, மக்களுக்கு நாங்கள் சொல்ல வந்த செய்தி கருணாநிதி அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தருவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. வெற்றிகொண்டான் பேட்டி 21ந் தேதி வெளியானது. 22ந் தேதி இதற்கு கருணாநிதி பதில் கொடுக்கிறார். பின் 24ந் தேதி கருணாநிதி கொடுத்த பதிலில், கடந்த சில மாதங்களாகவே நம்முடைய தோழமைக் கட்சி அணியில் உள்ள பாமகவுக்கும், திமுகவுக்கும் இடையே தேவையற்ற சில கசப்புணர்வுகளுக்கு வித்திடப் பட்டுள்ளது என்பதை பத்திரிகை களில் வந்துள்ள பழைய செய்திகளை படித்து பார்த்தாலே தெளிவாக புரியும் என்று கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.
அதில் என் பெயருக்கு முன்னாள் "ஐயா' என்று எழுதியிருக்கிறார். இனிமேல் என்னை ஐயா என்று குறிப்பிட வேண்டாம். ராமதாஸ் என்று குறிப்பிடுங்கள் என கட்சித் தலைவர் ஜி.கே.மணி மூலம் கடிதம் எழுத சொல்லியிருக்கிறேன்.
நான் கருணாநிதியை பற்றியோ, அவரது குடும்பங்களை பற்றியோ அல்லது கழகத்தை பற்றியோ எங்காவது வரம்பு மீறி பேட்டி அளித்ததுண்டா? துணைநகரம், விமான நிலைய விரிவாக்கப் பணி, சிறப்பு பொருளாதார மண்டலம், மணல் திருட்டு, டாஸ்மாக் மதுவிற்பனை, காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு விவகாரம், பாலாற்று பிரச்சனை, சில்லறை வணிகத்திற்கு வந்துள்ள ஆபத்து என தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நலன் குறித்த பிரச்சனைகள் மாநில மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் ஆகியவற்றிற்காக பாமக குரல் எழுப்பி வந்தது எப்படி கசப்புணர்ச்சிக்கு வித்திட்டது என முதல்வர் கருதுகிறார் என்பது எங்களுக்கு விளங்காத புதிராக இருக்கிறது.
நான் சொன்ன விஷயங்கள் எல்லாம் மக்களை சார்ந்தது. மக்களை பற்றி தான். இந்த பிரச்சனைகள் எல்லாம் மக்கள் பிரச்சனைகள்தான். தமிழகத்தின் உரிமையையும், மக்கள் பிரச்சனையையும், மொழியையும் சார்ந்தது. இதையெல்லாம் சொன்னால் நான் மோசடி தலைவரா? எதையுமே நான் கேட்காமல் எல்லாவற்றிற்கும் சரி என்றால் நல்ல தலைவரா?
விலைவாசி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட், பிஜேபி போராட்டம் நடத்துகிறது. இது தப்பு என்று சொன்னால் மகிழ்ச்சி அடைவார்களா? அதுதான் கூட்டணி தர்மமாக இருந்திருக்குமா? இதில் நான் எந்த இடத்தில் வரம்பு மீறியிருக்கிறேன்.
அமைச்சர் வீரபாண்டிய ஆறுமுகம் பேசிய விஷயத்தில் எங்கள் எம்எல்ஏக்கள் கொதித்தெழுந்து பேசினார்கள். பின் நான் அவர்களிடம் போதும் என்றவுடன் அமைதியாகி விட்டார்கள். திருக்கோவிலூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் திமுக அமைச்சர் முன்னிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் சோனியா வாழ்க; திமுக ஒழிக என்று கூறியிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி வரதராஜன் 25 சதவீதம் கமிஷன் வாங்குகிறார்கள் என்று கூறியிருக்கிறார். இவர்கள் எல்லாம் மோசடி தலைவர்களா?
வெற்றி கொண்டான் மகன் ஜெயங்கொண்டத்தில் உதவி நகராட்சி தலைவராக இருக்கிறார். அவர் சொன்னது எங்கப்பாவை கையெழுத்து மட்டும் தான் போட சொன்னார்கள் என்று அவரே சொன்னதாக கூறினார். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:
கே: இவ்வளவு கசப்பு இருக்கும் போது இந்த கூட்டணியில் எவ்வளவு காலம் செயல்பட முடியும்?
ப: இந்த ஆட்சிக்கு ஆதரவு தொடர்ந்து கொடுப்போம். அதே நேரத்தில் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுவோம்.
கே: தலைவர்களுக்குள் இருக்கும் இந்த கசப்புணர்வு தொண்டர்களுக்கும் வராதா?
ப: இதுகுறித்து ஜனவரி 3ந் தேதி அன்று கருணாநிதியை சந்தித்து பேசும்போது திமுக, பாமக தொண்டர்கள் இடையே இணக்கம் ஏற்படுத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசுங்கள் என்றேன். அப்போதுதான் வரும் எம்பி தேர்தலில் சிறப்பாக செயல்படும் முடியும் என்றேன். ஆனால் அவர் பேசவில்லை. எங்களது எம்எல்ஏக்களால் ஒரு ஆயா வேலைக்கு கூட பரிந்துரை செய்ய முடியாது.
கே: 2 பேரும் நேரில் பேசினால் இதற்கு தீர்வு வராதா?
ப: நான் மட்டும் எப்படி பேச வேண்டும். அவரிடம் பேச வேண்டும் என்றால் தொலைபேசியில் பேசுங்கள் என்கிறார். ரிலையன்ஸ் பற்றிய பிரச்சனைகளை எல்லாம் தொலைபேசியில் பேச முடியுமா?
கே: இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும் தொடர்ந்து ஆதரவு தருவதில் அர்த்தம் இருக்கிறதா?
ப: நாங்கள் கொடுத்த வாக்குறுதி படி நடந்து வருகிறோம். தோழமை என்பது ஒருவழிப்பாதையாக இருக்கக்கூடாது.
கே:மத்தியில் கூட்டணி இருப்பதால் தமிழகத்தில் அனுசரித்து போகிறீர்களா?
ப: அதனால் இல்லை. மக்கள் பிரச்சனை களை தான் சுட்டிக்காட்டுகிறோம்.
கே: அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்? இதற்கு என்ன தீர்வு?
ப: நாங்கள் எங்களுக்கு எதுவும் வேண்டும் என்று கேட்கவில்லை. தமிழ்நாடுதான் எங்களுக்கு முக்கியம்.
கே:கேள்வி திமுக அணுகுமுறை மாற வேண்டும் என்கிறீர்களா?
ப: நான் எதுவும் மாற வேண்டும் என்று நினைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றிகொண்டான் வருத்தம்
திமுக x பாமக மோதல் முற்றுகிறது
ராமதாஸ் ஒரு மோசடி தலைவர் - வெற்றிகொண்டான்
கலைஞர் அறிக்கை
அனைத்து பிரிவு மக்களும் ஆறுதல் பெறக்கூடிய ஒரு நிதிநிலை அறிக்கையை இந்த அரசு வழங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்ற ஒரு சில எதிர்க்கட்சி பத்திரிகை யாளர்கள் நிதி நிலை அறிக்கை யில் அச்சியற்றப் பட்டு நிதி அமைச்சர் பேராசிரியரால் பேரவையில் எடுத்து வைக் கப்பட்டு வானொலி, தொலைக்காட்சிகள் வாயி லாக நேரடியாகவே ஒலி, ஒளிபரப்பப்பட்ட உண்மை களை கூட மறைத்து விடுகிற மாய்மாலத்தை எப்ப டியோ கற்றுக்கொண்டு கதையளக் கின்றனர்.
ஓர் உதாரணம் சொல்கி றேன் கேள்: "கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை மேற்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றி ருந்த முக்கிய பிரச்சினை குறித்து இந்த பட்ஜெட்டில் குறிப்பு ஏதும் இல்லை. இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கிய போது அதனை அப்போதைய அ.தி.மு.க. அரசு ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்ததாக தி.மு.க. குற்றம் சாட்டியது. தற் போது மத்திய கூட்டணி ஆட்சியில் தி.மு.க. பங்கு பெற்றிருந்தும் இந்த திட்டம் குறித்து எவ்வித தகவலும் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது'' என்று அந்த பத்திரிகை எழுதியிருக்கிறது. பத்திரிகையின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. "காற்றில் பறக்கும் தி.மு.க. வாக் குறுதிகள்'' என்று தலைப்பிட்டு எழுதியிருக்கிறதே; அந்த பத்திரிகை தான்! திராவிட இயக்கத்தை ஜென்ம விரோதியாக கருதும் அந்த ஏட்டில் இப்படி ஒரு பொய்யை எழுதியிருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. எதிர்பார்த்தது தான்.
பொய்யிலும் பொய் கடைந் தெடுத்த பொய்-கண்ணை மூடிக்கொண்டு மக்களையும் கண்ணற்ற கபோதிகள் என்று கருதிக்கொண்டு புளுகி யிருக்கிறது அந்த ஏடு!
உடன்பிறப்பே, இதோ நன்றாகப்பார்- நான் உன் கையில் அளித்திருப்பது இந்த அரசின் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை! இந்த அறிக்கையில் தான் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை பற்றி குறிப்பு ஏதும் இல்லையாம்-பாவம். அந்த பத்திரிகையாளருக்கு நாம் குறிப்பாக மட்டும் உணர்த்தவில்லை. குண்டு குண்டான தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களால் அச்சியற்றி எடுப்பான வாங்கி யங்களாகவே உணர்த்தி
இருக்கிறோம்.சென்னை மாநகரின் நீண்ட காலக்குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாள் ஒன்றுக்கு 100 மில்லி யன் லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கான பணிகள் 25.2.2007 அன்று தொடங்கப்பட்டுள்ளன. மேலும் நாள் ஒன்றுக்கு 100மில்லியன் லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டத்தை மைய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்து வதற்கு சென்னை மாமல்ல புரம் சாலையில் நிலம் கண்ட றியப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பக்கத்தை புரட்டா மலே, புரட்டு வேலையில் ஈடுபட்டு பட்ஜெட்டில் அந்தத் திட்டத்தையே காணோம் என்று புளுகு மூட்டையை அவிழ்ப் பது எப்படியிருக்கிறதென்றால் மறைந்த தோழர் கழகத்தின் படைக்கலன் எனப்படும் டி.எம். பார்த்த சாரதி எழுதிய தி.மு.க.வரலாறு ஏட்டில் அண்ணா தொடங்கிய தி.மு.க.வில் -கருணாநிதியே அப்போது இடம்பெறவில்லை என்று பண்ருட்டி பேச்சைக் கேட்டு உளறுகிற பைத்திய காரத்தனம் போல இருக் கிறது.
தோழர் டிஎம்.பார்த்தசாரதி எழுதிய தி.மு.க. வரலாறு ஏட்டில், கழகம் தொடங்கிய நிகழ்ச்சியை பற்றி எழுதும்போது 17.9.1949 அன்று காலை 7 மணிக்கு சென்னை, பவழக்காரதெரு, 7ம் எண் இல்லத்தில் கூடிய அமைப்புக்குழுவின் கூட்டத்தில் கழகத்தின் பெயர், கொடி, பற்றிய அறி விப்புகளும் செய்யப்பட்டு கழகப்பொதுக்குழுவும் அறிவிக்கப்பட்டது.
அந்தப் புத்தகத்தில் பக்கம் 109ல் பொதுக்குழு உறுப்பினர்கள் பெயர்கள் எல்லாம் வெளி யிடப்பட் டுள்ளது. அந்தப் பொதுக் குழுவில் சி.என்.அண்ணா துரை, இரா. நெடுஞ்செழி யன், கே.ஏ.மதியழகன், மு.கருணாநிதி, என்.வி.நட ராசன், ஈவெ.கி.சம்பத், டி.எம். பார்த்தசாரதி என்று பட்டியல் தொடருகிறது.
இது மாத்திரமல்ல வாழ் வில் நான் கண்டதும் கேட்டதும் என்ற தலைப்பில் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழி யன் எழுதிய புத்தகத்தின் பக்கம் 177வருமாறு
அறிஞர் அண்ணாவின் அழைப்பை ஏற்று150க்கு மேற்பட்ட முக்கிய முன்ன ணியினர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் அமைப்புக் கூட்டத்தில் பங்கு கொண்ட மிக முக்கி யமானவர்கள் மட்டும் வருமாறு, என்.வி.நடராசன் என்று நாவலர் பட்டிய லிட்டிருக்கிறார்.
இந்த வரலாறெல்லாம் அப்போது இளைஞனாக மின்வாரியத்தில் பொறியாள ராக இருந்தவருக்கு தெரி யாது.
சிலை திறப்பு விழா
அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கு மற்றொரு உதாரணம் சொல்ல வேண்டு மானால், 1969-ம் ஆண்டு கலைவாணர் சிலை திறப்பு விழா சென்னையில் என் தலைமையில் தியாக ராயநகரில் நடைபெற்ற போது, அந்த விழாவில் பேரறிஞர் அண்ணா, அருமை நண்பர் எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.வாசன், ஏ.வி.எம்., நடிகர் திலிப்குமார் போன்றவர்கள் எல்லாம் கலந்து கொண்டோம்.
அந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படமும் அப்போது எல்லா ஏடுகளிலும் வெளிவந்தது. ஆனால் அதன் பின்னர் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் ஒரு விழா மலர் வெளியீட்டு விழா நடைபெற்ற போது கலைவாணர் சிலை திறப்பு விழாவின் புகைப் படம் அந்த மலரில் இடம் பெற்றது.
அந்த மலரில் வெளியிடப் பட்ட புகைப்படத்தில் இடை யிலே இருந்த விழாத் தலைவராகிய என்னுடைய புகைப்படத்தை மட்டும் அதிலேயிருந்து நீக்கிவிட்டு வெளியிட்டவர் தான் அந்த நபர்.
அப்படிப்பட்ட வரலாற்றுப் பிழைகளின் `வல்லுனராக' திகழும் ஒருவரை `வாத்தியா ராகக்'கொண்டு வாய் நீளம் காட்டி வம்பிலே சிக்கிக் கொள்வது நல்லதல்ல என்பதற்காகவே.
அவசரப்படும் பத்திரிகை ஆசிரியருக்கு சொல்லும் சரித்திரக் குறிப்பை ஆவேசப் படும் நண்பருக்கும் சொல்ல வேண்டியவர்களாக இருக்கி
றோம்.உண்மைகள் மறைக்கப்படுகின்றன உடன் பிறப்பே,பபஎவ்வாறு நமது கழகத்தைப்பபபற்றிய உண்மைகள் மறைக்கப்படு கின்றன. எவ்வாறு அனைவரும் போற்றுகின்ற அற்புதமான நிதி நிலை அறிக்கையை வேண்டுமென்றே திருத்தியும் மறைத்தும் இல்லாதது பொல்லாததுகளைக் கூறி ஏச்சுப் பேச்சுக்களால் இந்த இயக்கத்தையே அழித்துவிடப் படைத்திரட்டுகிறார்கள்.
பதுங்கிப் பாய்கிறார்கள், பச்சை பொய்களை தங்கள் போர்க்கணைகளாக ஆக்கு கிறார்கள் என்பதை எல்லாம் நிதி நிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்களில் நீ மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
அதற்கு பயன்படக்கூடிய ஆதாரப்பூர்வமான எடுத்துக் காட்டாகத் தான் ``கடல் நீரைக் குடிநீர் ஆக்குவது பற்றி'' இந்த வரவு செலவுத் திட்டத்தில் எதுவுமேபகுறிப் பிடப்படவில்லை என்று ஒரு பத்திரிகையில் வெளி யிட்டுள்ள செய்தி பயங்கரப் பொய் என்பதை தோல் உரித்துக் காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த இரு செய்திகளையும் உன் கவனத்துக் கொண்டு வந்துள்ளேன்.
சபாஷ் விஜயகாந்த்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, March 26, 2007
சூப்பர் சூடான அரசியல் ஆரம்பம்
Posted by IdlyVadai at 3/26/2007 03:54:00 PM
Labels: அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)











2 Comments:
எப்படியாவது தன்னைத் தி.மு.க. துவக்கத்துடன் திணித்துக்கொள்ள விழையும் ஒரு அரசியல்வாதியின் அர்த்தமற்ற புலம்பலாகவே கலைஞரின் அறிக்கை எனக்குப் படுகிறது.
இதெல்லாம் அவருக்குத் தேவையே இல்லை.
அவர்தான் "இப்போதைய தி.மு.க." என்பதை அவரே மறந்து இப்படி ஓலமிடுவது பரிதாபமாக இருக்கிறது.
ராம்தாஸுக்கும்[அவர்தன் ஐயா என இனி அழைக்க வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறாரே!] எனது பாராட்டுகள்.... தெளிவான ஒரு அறிக்கைக்காக!
Karunanidhi seems to be resorting to Goebbelsian tactics
Post a Comment