பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 23, 2007

துரைமுருகனை அமைச்சராக்கியது ஆதிகேசவப் பெருமாளா ?

ஒரு நகைச்சுவை கதை உண்டு. பெருமாள் என்ற பெயரை மாத்தி வை என்றால் பெத்த பெருமாள் என்று வைத்துக்கொண்டானாம் ஒருவன் :-). அமைச்சர் துரைமுருகனின் லேட்டஸ்ட் குமரி விசிட் பற்றி.. ( நன்றி: குமுதம் ரிப்போட்டர் கட்டுரை.) அதை தொடர்ந்து
தமிழர் தலைவர் திரு கி.வீரமணி அரிக்கை ( நன்றி: விடுதலை )



அமைச்சர் துரைமுருகன் முழு ஆன்மிகவாதி ஆகிவிட்டார் போல...’ என உடன் பிறப்புகளையெல்லாம் விழிவிரியப் பேசவைத்து விட்டது, அமைச்சரின் லேட்டஸ்ட் குமரி விசிட்.

சாய்பாபாவிடம் மோதிரம் வாங்கியபோதே அவர் ஆன்மிக வாதியாகிவிட்டார் என்று சொல்லப்பட்டாலும், இப்போதுதான் அவர் முழு ஆன்மிகவாதியாகிவிட்டார் என்று சொல்கிறார்கள். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

பட்ஜெட் கூட்டத்தொடர் வருவதால் அதற்கு முன்பாக எல்லா அமைச்சர்களுமே மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தங்கள் துறை ரீதியான பணிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். அந்த வகையில், பொதுப் பணித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், கடந்த பதினெட்டாம் தேதி ஒரு நாள் சுற்றுப்பயணமாக குமரிக்கு வந்தார்.

பொதுப்பணித் துறை சார்பில் நடைபெறும் கடலோர தடுப்புச் சுவர் பணிகளைப் பார்வையிடுவது, கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது, இரவில் கட்சிப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பது... ஆகியவைதான் அமைச்சரின் அறிவிக்கப்பட்ட பயணத் திட்டம். இதற்காக குழித்துறை பயணியர் விடுதியிலிருந்து நாகர்கோயில் நோக்கி வந்து கொண்டிருந்த அமைச்சரின் கார், திடீரென உள்வாங்கி திருவட்டார் நோக்கி ஓடத் தொடங்கியது.

அப்போதே கட்சிக்காரர்களுக்குப் பயங்கர வியப்பு! கூடவே, ‘கட்சிக்காரர்களோ, அதிகாரிகளோ அமைச்சரைப் பின்தொடர வேண்டாம்!’ என்றும் அறிவுறுத்தப்பட்டது. குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் அமைச்சரின் உதவியாளர்கள் உள்ளிட்ட வெகு சிலரே அமைச்சருடன் பயணமானார்கள்.

திருவட்டாரில் அமைச்சரின் கார் நேராகப் போய் நின்ற இடம், பிரசித்திப் பெற்ற ஆதி கேசவப்பெருமாள் ஆலயம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப் பழைமையான ஆலயம் இது. திருவிதாங்கூர் மகாராஜா வம்சத்தினர் இன்றும் தங்கள் குலதெய்வமாகக் கொண்டாடும் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோயிலுக்கு முன்மாதிரியே, இந்த ஆலயம்தான் என்கிறார்கள். ஒரே வித்தியாசம், அங்கு மூலஸ்தானத்திலுள்ள விஷ்ணுவின் சிலை சயன (படுத்த) நிலையில் பதினெட்டு அடி நீளம் இருக்கும். இங்கோ சிலையின் நீளம் இருபத்திரண்டு அடி.

தமிழக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில், வருகிற 24_ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. கோயிலின் கும்பாபிஷேகமும் நடைபெற இருப்பதால், திருப்பணி வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில்தான், கட்சிக் கரைவேட்டி சகிதமாக அமைச்சர் கோயில் வளாகத்திற்குள் வந்தார்.

கேரள ஆகம விதிமுறைகள் இங்கு கண்டிப்பாக அமல்படுத்தப்படுவதால், மேல்சட்டை அணிந்து உள் பிராகாரத்தினுள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. எனவே, அமைச்சரை கோயில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், அவருக்கு ஜரிகை போட்ட பட்டு வேஷ்டி மற்றும் மேலே போர்த்திக்கொள்ள மெல்லிய அங்கவஸ்திரம் ஆகியவற்றை வழங்கினர். அமைச்சரும் பவ்யமாக அவற்றை வாங்கிக் கொண்டு, கட்சிக் கரை போட்ட வேஷ்டிக்கும் தனது சட்டைக்கும் விடைகொடுத்தார். சந்தனமாலை மரியாதைகளையெல்லாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட அமைச்சர், அடுத்து கோயில் உள் பிராகாரத்தினுள் செல்ல ஆயத்தமானார்.

உடனே பூஜைக்காக பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் ஒரு தாம்பாளத்தில் கொண்டு வரப்பட்டன. உதவியாளர் ஒருவர் அதனை ஏந்திக் கொண்டுவர, அமைச்சர் உள்ளே போனாராம்.

கோயிலில் பூஜை செய்யும் நாராயணன் நம்பூதிரி, முதலில் அமைச்சரின் பெயரைக் கேட்டிருக்கிறார். அமைச்சர் தனது பெயரைச் சொன்னÊதும், நட்சத்திரத்தைக் கேட்டாராம் நம்பூதிரி. சற்று நிதானித்து, ‘கார்த்திகை’ என்று சொன்னாராம் அமைச்சர். பின்னர் அமைச்சரின் பெயரில் சிறப்பு பூஜை நடந்திருக்கிறது. பூஜை முடிந்ததும் நம்பூதிரி கொண்டுவந்த பழங்கள் உள்ளிட்ட பிரசாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட அமைச்சர், சந்தனத்தை எடுத்துத் தனது மார்பில் லேசாகத் தேய்த்துக் கொண்டாராம்.

அதன் பிறகு, அங்கவஸ்திரம் சகிதமாகவே கோயிலை வலம் வந்து அங்குள்ள சிற்பங்களை வெகுவாக ரசித்தார் அமைச்சர். உத்தேசமாக முக்கால் மணிநேரம் அங்கு செலவழித்த அமைச்சர், பின்னர் கரைவேஷ்டி _சட்டைக்கு மாறி நாகர்கோயிலுக்குப் பயணமானார்.

மாணவப் பருவம் தொட்டு திராவிட இயக்கத்தில் ஊறியவரான துரைமுருகன், இந்த அளவுக்குப் பக்தி மார்க்கமாக மாறிப் போனதை தங்களாலேயே நம்ப முடியவில்லை என்கிறார்கள் உடன் பிறப்புகள். அதே சமயம், தி.மு.க.வின் மேல்மட்டப் பிரமுகர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், ‘‘மிக மோசமான உடல் நலப்பாதிப்பு, இருதய அறுவை சிகிச்சை ஆகிய பிரச்னைகளுக்குப் பிறகுதான் அமைச்சரின் போக்கில் இந்த மாற்றம்’’ என்றார்.

அண்மையில் சத்ய சாய்பாபா, கலைஞர் இல்லத்திற்கு வந்தபோதும் கூடவே இருந்து மோதிரம் கேட்டு வாங்கியவர்தான் துரைமுருகன். பின்னர் சாய் பாபாவுக்கு நடந்த பாராட்டு விழாவில், ‘எதையும் முன்கூட்டியே அறியும் சக்தியை, சாய்பாபா பெற்றிருக்கிறார்’ என துரைமுருகன் பேசப்போக, அது பெரிய சர்ச்சையானது. ‘பெரியார்_அண்ணா அரசு என நாங்களெல்லாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு மூத்த அமைச்சர் இப்படி அறியாமையை மக்கள் மனதில் விதைக்கலாமா? இருதய ஆபரேஷன் செய்தவர் என்பதால், இதைவிடக் கடுமையாக அவரைக் கண்டிக்க விரும்பவில்லை’ என அதற்குக் காட்டமாக அறிக்கை விடுத்திருந்தார் தி.க. தலைவர் வீரமணி. இந்தச் சூழலில் மறுபடியும் ஆன்மிக சர்ச்சை துரைமுருகனை வளைத்துக் கொண்டிருக்கிறது.

தவிர, சமீபத்தில் தஞ்சையில் நடந்த அன்பில் பொய்யாமொழி மகன் திருமண விழாவில் மு.க. ஸ்டாலின் பட்டு வேஷ்டி_சட்டையோடு கலந்து கொண்டதைக் கண்டித்து, மேடையிலேயே வாங்குவாங்கென்று வாங்கிவிட்டார் கருணாநிதி. துரைமுருகன் கோயிலில் பட்டு வேஷ்டி சகிதம் வலம் வந்ததை அவர் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறாரோ? ‘எனினும் தனது துறைக்குச் சற்றும் சம்பந்தமில்லாத கோயிலுக்கு துரைமுருகன் போனது நிச்சயம் சர்ச்சையைக் கிளப்பக் கூடியதுதான்’ என்கிறார்கள், விவரமறிந்தவர்கள். என்றாலும், கோயில் சிற்பங்களையும் தூண்களையும் சுத்தப்படுத்துவதற்காக நவீன கருவி ஒன்று வாங்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடங்கி வைப்பதற்காகத்தான் அமைச்சர் கோயிலுக்குச் சென்றார் என்றும் சிலர் கூறுகிறார்கள். ‘அதுதான் உண்மையானால், கட்சிக்காரர்களையும் பத்திரிகையாளர்களையும் அமைச்சர் அழைத்துச் செல்லாதது ஏன்? இதிலிருந்தே தெரியவில்லையா அவர் சாமி கும்பிடத்தான் சென்றாரென்று!’ என்றும் சிலர் பதிலடி தருகிறார்கள்.

துரைமுருகனுக்கு நெருக்கமான குமரி தி.மு.க. வி.ஐ.பி. ஒருவர் இது சம்பந்தமாக நம்மிடம் கூறுகையில், ‘‘அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதர், அமைச்சருக்கு மிகவும் வேண்டியவர். அவரது வற்புறுத்தலால்தான் அமைச்சரின் இந்தக் கோயில் விசிட்’’ என்றார்.

கோயில் நம்பூதிரியான நாராயண நம்பூதிரியிடம் அமைச்சர் பெயரில் நடந்த பூஜை பற்றி நாம் கேட்டபோது, அவர் வாய் திறக்கவே மறுத்து விட்டார். அக்கம்பக்கத்தினரோ, ‘‘அமைச்சர் வருவது முன்கூட்டியே தெரிந்திருந்தால், இங்கு நடக்கும் ஊழல்களைப் பட்டியல் போட்டிருப்போம். முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் வந்துட்டுப் போயிட்டார்’’ என ஆதங்கப்பட்டனர்.

இது குறித்து அமைச்சர் துறைமுருகன் என்ன சொல்கிறார் என்பதையறிய அவரைத் தொடர்பு கொள்ள முயன்றோம். பலமுறை முயன்றும் முடியவில்லை. இந்நிலையில் பொதுவான சிலரிடம்கருத்துக் கேட்டோம்.

‘பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்; பிள்ளையார் சிலையையும் உடைக்க மாட்டேன்’ என்ற அண்ணாவே ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்கிற திருமூலரின் வாக்கியத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அப்படிப் பார்த்தால் தி.மு.க.வின் கொள்கை என்பது ‘கடவுள்மறுப்பு’ அல்ல; மூட நம்பிக்கைகளை ஒழிப்பதுதான். அந்த வகையில் தி.மு.க.வினர் கோயிலுக்குச் செல்வதோ, சாமி குப்பிடுவதோ அவர்களின்பகுத்தறிவுக் கொள்கைக்கு விரோதமானது அல்லது.

‘நட்டகல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே சுற்றிவந்து மொண மொணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா! நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்’ என்று சித்தர்கள் பாடியதில் மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் பகுத்தறிவுதான் மிளிர்கிறது. அதற்காக சித்தர்கள் நாத்திகர்களா என்ன?

எனவே, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று அண்ணா சொன்னதை மீண்டும் இப்போது வலியுறுத்திச் சொல்லி, ‘நாங்கள் மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் பகுத்தறிவுவாதிகளே தவிர, கடவுள் மறுப்பாளர்கள் அல்ல; ஆன்மிகத்தின் விரோதிகள் அல்ல’ என்பதை தி.மு.க.வினர் தெளிவுப்படுத்தி விட வேண்டும். அப்படிச் செய்துவிட்டால் இந்தச் சர்ச்சைகளுக்கெல்லாம் இடமே இல்லை. ஏன் அப்படிச் செய்யத் தயங்குகிறார்கள் என்பதுதான் புரியவில்லை!’’ என்றார்கள்.




கி.வீரமணி அறிக்கை ( விடுதலை )

துரைமுருகன் கட்சிக்கரை வேட்டியை மாற்றி
மேலாடையின்றி கோயிலுக்குச் செல்வதா?
தி.மு.க.,வுக்கும், கலைஞருக்கும் இழைத்த
தீரா களங்கம், கறை வேறு உண்டா?
துரைமுருகன் அவர்களை அமைச்சராக்கியது கட்சியும், கலைஞருமா - ஆதிகேசவப் பெருமாளா?
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

தமிழ்நாடு பொதுப் பணித்துறை அமைச்சர் துரை முருகன் குமரி மாவட்டம் ஆதிகேசவப்பெருமாள் கோயிலுக்கு கட்சிக்கரை வேட்டியை மாற்றிக் கொண்டு, மேலாடையின்றி சென்றது குறித்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களைப் பற்றி எழுத அவர் நமக்கு ஓர் அவசியத்தை உண்டாக்கித் தந்தமைக்காக வெட்கமும், வேதனையும் அடைவதோடு, கூனிக்குறுகி நிற்கும் பகுத்தறிவுச் சுயமரியாதைக் கொள்கை யாளர்களின் குமுறலை முறைப்படி வெளியிட்டு,
நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு (குறள் 784)
என்பதற்கொப்ப, நமது வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டியுள்ளது குறித்து, நாம் மகிழவில்லை; மிகுந்த துன்பத்துடன் தான் எழுதுகிறோம்.
கரை வேட்டியை மாற்றுவதா?
அவர் ஒரு சாதாரண துரைமுருகனாக இருந்து எந்தக் கோயிலுக்குள்ளும் சட்டையைக் கழற்றிவிட்டுச் சென்றால், அதுபற்றி பத்தோடு பதினொன்று சம்பவம் என்று நாம் அலட்சியப்படுத்தி விடலாம், கவலைப்படத் தேவையில்லை.
அவர் மானமிகு முதல்வர் கலைஞர் அவர்களது அமைச்சரவையில் உள்ள ஒரு மூத்த அமைச்சர். தி.மு.க.,வின் தலைமைப் பொறுப்பாளர் களில் ஒருவர். அவர் தனது குமரி மாவட்ட கேசவப் பெருமாளிடம் உள்ள பயபக்தியைக் காட்ட, சட்டையைக் கழற்றியதோடு தி.மு.க., கரை போட்ட தனது வேட்டியையும் கூட மாற்றிவிட்டு, வேறு வேட்டி அணிந்து, ``பகவானைத் தரிசித்துப் பரவசமானார்’’ என்றால், இதைவிட தி.மு.க.,வுக்கு அதன் ஒப்பற்றத் தலைவருக்கு, தன்னை அமைச்சராக்கிய முதல்வருக்குத் தீரா களங்கம் - கறை வேறு உண்டா? `குமுதம் ரிப்போர்ட்டரின்’ அட்டைப் படத்தையும், செய்தி யையும் படிக்கும் கலைஞர் மனது எவ்வளவு காயப்பட்டு, உள்ளம் ரத்தக் கண்ணீர் வடித்திருக்கும் என்பதை நாம் நன்கு உணர்வோம்.
தம்முடைய தோழர்கள், தொண்டர்கள் பெரியார் - அண்ணா வகுத்த கொள்கை நெறியில் நிற்கவேண்டும் என்பதற்காக வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்தி எழுதியும், பேசியும் வருபவர் நம் முதல்வர் கலைஞர் அவர்கள்.
83 வயதிலும் `சதாவதானம்’ செய்யும் கலைஞர்
`குடிசெய்வார்க்கில்லை பருவம்’ என நேரங் காலம் பார்க்காது, தனது 83 ஆம் வயதிலும் கூட, அத்துணைப் பிரச்சினைகளையும் சந்தித்து - அஷ்டாவதானம் கூட அல்ல - ``சதாவதானம்’’ செய்து, கடுமையாக உழைக்கும் அவருக்கு, சக அமைச்சர்கள் மகிழ்ச்சியைத் தருவதா அல்லது மாறாக நடப்பதா?
`மாண்புமிகு’ வரும் போகும் - `மானமிகு’ அப்படியல்லவே!
`மாண்புமிகு’ என்பது வரும் போகும்; ஆனால், `மானமிகு’ என்பது ஒருமுறை ஏற்றுக்கொண்டால், அது கொள்கையாளர்களை விட்டு இறுதி மூச்சடங்கும் வரை விலகாது!
25.3.2007 `குமுதம்’ ரிப்போர்ட்டரில்’ அட்டையிலேயே (ஊடிஎநச ளுவடிசல) ``பக்திப் பழமான அமைச்சர் துரைமுருகன்’’ என்று அவரின் சட்டை அணியாத படம் போட்டு உள்ளே எழுதியுள்ள கட்டுரையில் உள்ள முக்கிய பகுதிகள் இதோ:
``...திருவட்டாரில் அமைச்சரின் கார் நேராகப் போய் நின்ற இடம், பிரசித்திப் பெற்ற ஆதிகேசவப் பெருமாள் ஆலயம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப் பழைமையான ஆலயம் இது. திருவிதாங்கூர் மகாராஜா வம்சத்தினர் இன்றும் தங்கள் குல தெய்வமாகக் கொண்டாடும் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோயிலுக்கு முன் மாதிரியே, இந்த ஆலயம்தான் என்கிறார்கள். ஒரே வித்தியாசம், அங்கு மூல°தானத்திலுள்ள விஷ்ணுவின் சிலை சயன (படுத்த) நிலையில் பதினெட்டு அடி நீளம் இருக்கும். இங்கோ, சிலையின் நீளம் இருபத்திரண்டு அடி.
தமிழக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில், வருகிற 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. கோயிலின் கும்பாபிசேகமும் நடைபெற இருப்பதால், திருப்பணி வேலைகளும் நடந்து கொண்டிருக் கின்றன. இந்தச் சூழலில்தான், கட்சிக் கரை வேட்டி சகிதமாக அமைச்சர் கோயில் வளாகத்திற்குள் வந்தார்.
கேரளா ஆகம விதிமுறைகள் இங்கு கண்டிப்பாக அமல்படுத் தப்படுவதால், மேல்சட்டை அணிந்து உள் பிரகாரத்தினுள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. எனவே, அமைச்சரை கோயில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், அவருக்கு ஜரிகை போட்ட பட்டு வேஷ்டி மற்றும் மேலே போர்த்திக் கொள்ள மெல்லிய அங்கவ°திரம் ஆகியவற்றை வழங்கினர். அமைச்சரும் பவ்யமாக அவற்றை வாங்கிக் கொண்டு, கட்சிக் கரை போட்ட வேஷ்டிக்கும், தனது சட்டைக்கும் விடை கொடுத்தார். சந்தன மாலை மரியாதைகளையெல்லாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட அமைச்சர், அடுத்து கோயில் உள் பிரகாரத்தினுள் செல்ல ஆயத்தமானார்.
உடனே, பூஜைக்கான பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் ஒரு தாம்பாளத்தில் கொண்டு வரப்பட்டன. உதவியாளர் ஒருவர் அதனை ஏந்திக் கொண்டுவர, அமைச்சர் உள்ளே போனார்.
கோயிலில் பூஜை செய்யும் நம்பூதிரி, முதலில் அமைச்சரின் பெயரைக் கேட்டிருக்கிறார். அமைச்சர் தனது பெயரைச் சொன்னதும், நட்சத்திரத்தைக் கேட்டாராம் நம்பூதிரி. சற்று நிதானித்து, `கார்த்திகை’ என்று சொன்னாராம் அமைச்சர். பின்னர் அமைச்சரின் பெயரில் சிறப்புப் பூஜை நடந்திருக்கிறது. பூஜை முடிந்ததும் நம்பூதிரி கொண்டு வந்த பழங்கள் உள்ளிட்ட பிரசாதங்களைத் தொட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட அமைச்சர், சந்தனத்தை எடுத்துத் தனது மார்பில் லேசாகத் தேய்த்துக் கொண்டாராம்.
அதன் பிறகு அங்கவ°திரம் சகிதமாகவே கோயிலை வலம் வந்து அங்குள்ள சிற்பங்களை வெகுவாக ரசித்தார் அமைச்சர். உத்தேசமாக முக்கால் மணிநேரம் அங்கு செலவழித்த அமைச்சர், பின்னர் கரைவேஷ்டி - சட்டைக்கு மாறி நாகர்கோயிலுக்குப் பயணமானார்.
மாணவப் பருவம் தொட்டு திராவிட இயக்கத்தில் ஊறியவரான துரைமுருகன், இந்த அளவுக்கு பக்தி மானாக மாறிப் போனதை தங்களாலேயே நம்ப முடியவில்லை என் கிறார்கள் உடன்பிறப்புகள். அதே சமயம், தி.மு.க.,வின் மேல்மட்டப் பிரமுகர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், ``மிக மோசமான உடல்நலப் பாதிப்பு, இருதய அறுவை சிகிச்சை ஆகிய பிரச்சினைகளுக்குப் பிறகுதான் அமைச்சரின் போக்கில் இந்த மாற்றம்’’ என்றார் என்று `குமுதம் ரிப்போர்ட்டர்’ எழுதுகிறது!
அன்று சாய்பாபா சிக்கல்!
முன்பு முதல்வர் கலைஞர் இல்லத்திற்கு சாய்பாபா வந்தபோதே, அவரை வரவேற்று மேலே அழைத்துப் போக கலைஞரின் தூதுவராக வந்த சகோதரர் துரை முருகன், சாய்பாபாவிடம் மோதிரம் பெற்றதோடு, எதையும் முன்கூட்டியே அறியும் சக்தியை, சாய்பாபா பெற்றிருக்கிறார் என்று பேசிய போதும், மோதிரம் வரவழைக்கும் சாய்பாபாவின் மோடி ம°தான் வேலை பி.பி.சி. தொலைக்காட்சி மூலம் சந்தி சிரித்ததும் உலகம் முழுவதும் அறிந்த செய்தி என்றே அவருக்குச் சுட்டினோம்.
நீங்கா அவமானம்!
இப்போதும் அதுபற்றிக் கவலைப்படாமல், இப்படி நடந்துகொள்வ தனால் தி.மு.க.,வுக்கும், கலைஞர் அரசுக்கும் நீங்கா அவமானத்தை அல்லவா தேடி வைத்துவிட்டார்! நாம் எங்கு போய் முட்டிக் கொள்வது?
இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்கென்றே ஓர் அமைச்சர் உள்ளார். கோயிலுக்குச் செல்வதும் அவருடைய பல பணிகளில் ஒரு பகுதி என்றாலும்கூட, அவர் கூட தி.மு.க., கரை வேட்டியை மாற்றிக் கொண்டு சென்றார் என்று செய்தி வந்ததில்லையே!
அ.தி.மு.க.,வும் - பகுத்தறிவும்
முந்தைய அ.தி.மு.க., அமைச்சர்கள் மண் சோறு, கல் சோறு தின்று, வீதியில் புரண்டனர் என்றால், அவர்கள் தலைமையும் சரி, அவர்களும் சரி தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று என்றும் அழைத்துக் கொண்டதில்லை.
ஆனால், கலைஞர் அரசில், பதவிப் பிரமாணம் எடுக்கும்போது முதல்வரிலிருந்து எந்த அமைச்சரும் கடவுள் பெயரால் பிரமாணம் (டீயவா) எடுக்கவில்லை என்பதற்கு என்ன காரணம்? ஒரே காரணம், இது பெரியார் - அண்ணா வழி நடக்கும் பகுத்தறிவாளர் அரசு என்று உலகுக்குப் பிரகடனப்படுத்தத்தானே!
அப்படி உறுதிமொழி எடுத்த பிறகு, இப்படி ஒரு அலங்கோலமா? அவலமா?
முதலமைச்சருக்கு மன உளைச்சல்!
முதல்வர் கலைஞருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தாவிட்டாலும், மன உளைச்சலையாவது ஏற்படுத்தாமல் உதவ வேண்டிய பொறுப்பு நம் மைப் போன்றோரின் ஆதரவுகளைவிட, அவருடைய அமைச்சரவை யில் அங்கம் வகிப்பவர்களின் ஆதரவு அன்றாடக் கடமை அல்லவா?
அமைச்சராக ஆக்கியது கேசவப் பெருமாளா?
தி.மு.க., கரை போட்ட வேட்டிதான் அவரை மந்திரியாக்கியது - கலைஞரின் சகோதரப் பாசமும், கொள்கைக் குடும்பம் இது என்று காட்டுகின்ற வற்றாத அன்பும்தான் அவரை அமைச்சராக்கியது!
கேசவப் பெருமாளோ அல்லது பட்டுத் துண்டு, பட்டு வேட்டியோ அல்ல. வேலிகள் பயிரை மேய்ந்தால், நாம் வன்மையாகக் கண்டிப்பது நம்முடைய கடமையாகிறது!
இந்த அரசின் சாதனைகளைப் பாராட்ட வேண்டியவற்றை பாராட்டும் அதே நேரத்தில், கண்டித்து உரிமையுடன் சுட்டிக் காட்டவேண்டியவற்றை உடனடியாகச் சுட்டிக்காட்ட திராவிடர் கழகம் ஒருபோதும் தயங்காது!

சென்னை
22.3.2007





தலைவர்,
திராவிடர் கழகம்



பிகு: பழைய படங்கள் சில ..



































11 Comments:

ravi srinivas said...

How about non-hindu minsiters in the cabinet.Do they keep away
from churches and mosques. Will
Veeramani condemn them if it is
found that they also visit religious places and worship.
I think this statement is
just an excuse.Why Veeramani
is targetting Duraimurugan.
There can be some reason,
unknown to the public.

Anonymous said...

எங்க நம்ம கழக வலைபதிவாளர்கள்.....இப்போ எலெக்ஷன் ஒண்ணும் நடக்கல்லையே?....ஏன் ஒரு சத்தமும் காணோம்?....

IdlyVadai said...

ரவி ஸ்ரீநிவாஸ் கடைசியாக இரண்டு படங்கள் கொடுத்திருக்கிறேன் :-)

Anonymous said...

நீங்க எத்தனை பழைய படங்களை வேண்டுமானாலும் பதிவிடுங்கள்....நாங்கள் தமிழர்கள் எங்களுக்கு இந்துமதம் மட்டுமே மதமாக தெரியும், அதனை மட்டுமே தாக்குவோம்.....குரானும், பைபிளூம் விடுதலையின் அடிநாதம்....அதிலும் வலையரசியலுக்கு முதல் நாதம்....

பெரியார் 1943ல் என்ன சொன்னார்?, குரானில் சொல்வது போல் ஒரு திராவிடனாவது இங்குண்டா என ஆக்ரோஷமாக கேட்டார்...அதனால்தாம் நாம் நோம்பு கஞ்சி குடித்து அவரை நினைவு கூறுகிறோம். உடன்பிறப்பே, உனக்கு தெரியும் நான் என்றும் கிருத்துவத்தை வாழ வைப்பவனென்று, இல்லையென்றால் கனிமொழி கழகத்தில் இருந்தாலும் ஜெபகாஸ்பருடன் மேடை ஏறுவாரா?.
என்னுடன் உண்ட பிறப்பல்லவா ஆயர்கள். எப்படி இதனை மறக்க இயலும். முன்னம் நான் தயாளு அம்மையுடன் திருவெற்றியூர் கோவில் சென்ற விதத்தினை அறிந்தும் அது போல் செய்யாது, தாந்தோன்றி தனமாக துரைமுருகன் நடக்கலாமா?, அதனால் தான் எனது தற்போதைய மனச்சாட்சி மானமிகு வீரமணி கேள்வி கேட்கிறார்.

அரவிந்தன் நீலகண்டன் said...

அமைச்சர் செய்ததில் எந்த தவறும் இல்லை. நல்ல மாற்றம். வரவேற்கிறேன்.கரை வேட்டிகள் கறை நீங்கி காவியாகும் அந்த நாளும் வந்திடாதோ!

Anonymous said...

அது சரிங்க!
தலைவருக்கு குல்லாப் போடறது என்றால் மிகவும் பிடிக்கும்.
மருத்துவர்(மருத்துவர் ஐயா அல்ல) வேண்டுகோளுக்கிணங்க கொஞ்சம் நொய் கஞ்சி குடிச்சார் அவ்வளவே!

மேலும், கனிமொழி ஒரு கவிஞர்..அவர் தமிழர் தம் குடும்ப வாழ்வை எப்படி வாழவேண்டுமென உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கும் தலைவரின் புதல்வி. மேலும், கணவனை தொந்திரவு செய்யாமல் தன்னிச்சைப்படி வாழும் தனித்துவம் மிக்கவர்.

இப்படி பாரம்பர்யமிக்க ஒரு கட்சியை குறை சொன்ன இட்லி வடையை மெஸ்ஸிலிருந்து நீக்கப் போராட்டம் நடத்த சிறுபான்மையினப் பாதுகாவலர்களிடம் ஆலோசிக்கப் போகிறோம்.

நன்றி.
உண்மையுள்ள,
திராவிட உடன்பிறப்பு.

Arun said...

பிகு படங்கள் Ultimate.

இவனுங்க பகுத்தறிவாளர்களா?? பன்னாடைங்க.. ஊரை ஏமாத்திட்டு திரியரானுங்க..
கடவுள் என்பவர் மதம் சார்ந்தவரல்லர். பொதுநலம் என்ற போர்வையில் இவர்களிடும் நாடகம் இன்னும் சிறிது காலம்தான் நீடிக்கும்.

Anonymous said...

பாப்பார பரதேசிங்களுக்கு இதே வேலை

IdlyVadai said...

அனானி உங்களை அதிகேசவ பெருமாள் தான் காப்பாத்தனும். சரி டெல்லியில எல்லோரும் நலமா :-)

ravi srinivas said...

The photos can be always be explained as proof of being secular
and sensitive to feelings of minorities.If Duraimurugan worships
in a temple heavens wont fall nor will statues of Periyar run away.
Veeramani is anti-hindu and perhaps there are other reasons
for him to critise Duraimurugan.

கரை வேட்டிகள் கறை நீங்கி காவியாகும் அந்த நாளும் வந்திடாதோ!
That is too much, do you want
them to become sannyasis or what :)

bala said...

இட்லி வடை அய்யா,

மஞ்ச துண்டு அய்யா வெள்ளை தாடி ஒட்டிக் கொண்டு,குல்லாவும் போட்டு போயிருந்தா ஃபோட்டோ ரொம்ப அம்சமா இருந்திருக்கும்.எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணுமே.

பாலா