நாட்டை கவ்விய சோகம் !
இந்த மாதிரி சோகம், இந்நாட்டைக் கவ்வியதில்லை; சோகத்திற்குக் காரணமானவர்கள் மீது இந்த மாதிரி கோபம், இந்நாட்டில் தோன்றியது இல்லை. காஷ்மீர் உயிரிழப்புகள் தராத சோகத்தையும், அதற்குக் காரணமான தீவிரவாதிகள் மீது வராத கோபமும்; முன்னாள் பிரதமர் ஒருவர் கொலை செய்யப்பட்ட போது ஏற்படாத சோகமும், அந்தக் கொலைக்குக் காரணமான விடுதலைப் புலிகள் மீது வராத கோபமும்; பாராளுமன்றம் தாக்கப்பட்டு பலர் உயிரிழந்தபோது ஏற்படாத சோகமும், அதற்குக் காரணமான பயங்கரவாதிகள் மீது வராத கோபமும்; பல
பயங்கரச் செயல்கள், மோசடிகள், ஊழல்கள், தேர்தல் தில்லுமுல்லுகள் போன்றவை ஏற்படுத்தாத மனச் சோர்வும், அவற்றிற்குக் காரணமானவர்கள் மீது வராத கோபமும்
– இப்போது நம் நாட்டினருக்கு வந்திருக்கிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் பந்தயத்திலிருந்து இந்திய அணி, முதல் சுற்றிலேயே வெளியேறுகிற நிலையை அடைந்து விட்டது. இதனால், சோகத்தில் மூழ்கி எழுந்து, கோபத்தில் நாடு நர்த்தனம் ஆடிக் கொண்டிருக்கிறது. (கூடவே, ஒரு அல்ப ஆசை. பங்களாதேஷை, பெர்முடா தோற்கடித்தால்... ஆஹா! அடுத்த சுற்று!)
பங்களாதேஷிடம் தோற்ற போதே, துன்பக் கடலில் விழுந்து விட்ட நம் நாடு, "இலங்கையிடம் ஜெயித்து, மேல் சுற்றிற்குப் போகலாம் என்ற ஆறுதலைப் பெற்று, அதுவும் பலிக்காது போனபோது, ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்து விட்டது. தோனியின் வீட்டை உடைப்பதில் ஆரம்பித்து, ஆட்டக்காரர்களின் உருவப் பொம்மைகளைக் கொளுத்துவதில் தொடர்ந்த கோபம் – இப்போது "காரி உமிழ்! கொண்டு வா சாப்பலின் தலையை! வீசி கடலில் எறி டெண்டுல்கரை! ட்ராவிடை நாடு கடத்து!...' என்று மக்கள் பேசுகிற அளவிற்குப் போய்விட்டது.
அதுவும் டெலிவிஷன் சானல்கள், மக்களின் வக்ரங்களைக் காட்டுவதையே முதல் பணியாக கொண்டுள்ளன எனும்போது – ரசிகர்களும், ரசிகைகளும் வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாவற்றையும் தியாகம் செய்து, டெலிவிஷன் காமிராக்கள்
முன்பாக பேசுகிற பேச்சும், போடுகிற கூச்சலும், அசல் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. ஆட்டக்காரர்களின் பெயர்களிட்டு, உருவங்களைச் செய்து, அவற்றை தரையில் கிடத்தி, அவற்றை பிரேதங்களாக நினைத்து, மார்பில் அடித்துக் கொள்வதும்; தலையை மோதிக் கொள்வதும்; கண்ணீர் விட்டு கதறுவதும்... அடடா! ஓ அடடா! அற்புதக் காட்சிகள்!
அப்படி என்ன நடந்து விட்டது? நடப்பது ஆட்டமே தவிர, யுத்தம் அல்ல. (யுத்தத்தில் தோற்றால் கூட நாம் இவ்வளவு பாதிக்கப்பட மாட்டோம் என்பது வேறு விஷயம்). அதுவும் உலகிலேயே நாம்தான் முதல் அணி மாதிரியும், நாம் தோற்றது பெரிய அதிர்ச்சி மாதிரியும் நடந்து கொள்வது அபத்தம் அல்லவா?
டெலிவிஷன் சானல்களும், பத்திரிகைகளும், சில "நிபுணர்'களும், கோப்பையைப் பெறுகிற வாய்ப்பு நமக்குப் பெரிதாகவே இருக்கிறது – என்று அனுதினமும் பறைசாற்றியது உண்மையே. இது போதாதென்று நடிகர், நடிகைகளும், பிரபலங்களும் பேட்டி காணப்பட்டு, "இந்தியா கோப்பையை வெல்லும்' என்று உறுதி அளித்தார்கள். ஏனென்றால், அப்படிச் சொல்வது, தேச பக்தி.
அதுவுமின்றி கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றியும், வெவ்வேறு அணிகளின் திறமைகள் மற்றும் பலவீனங்கள் பற்றியும் ஒன்றும் தெரியாதவர்களுக்குக் கவலையே இல்லையே! அவர்கள் எதுவும் பேசலாம்தானே! அதனால் இந்தியா கோப்பையை நிச்சயம் வெல்லும் – என்ற ஆரூடம், அனுதினமும் ஒளிபரப்பாகியது; பிரசுரமாகியது.
இதோடு விட்டார்களா நம்மை? பங்களாதேஷிற்கு எதிராகத் தோற்றவுடன், தைரியம் சொல்லி, "இன்னமும் இலங்கையை தோற்கடித்து மேல் சுற்றுப் போட்டிக்குச் சென்று, கோப்பையை வெல்வோம்' என்று நமக்கு ஆறுதல் கூறினார்கள் "நிபுணர்கள்'. அவர்கள் மட்டும் சொன்னால், அது அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காதே! அதனால் ஆட்டக்காரர்களின் அம்மாமார்கள் டெலிவிஷனில் கருத்து தெரிவித்தார்கள். "கவலையே வேண்டாம். நமது அணி, இந்திய அணி. அது நிச்சயம் கோப்பையை கைப்பற்றும். ஆகையால் எல்லோரும் இதை நம்பி, வேண்டிக் கொண்டு, ஆதரவு அளிக்க வேண்டும்' என்று ட்ராவிடம்மா, ஷேவாக்கம்மா... போன்ற அம்மாக்களின் அப்பீல் வேறு வந்தது. அசல் கோமாளிக் கூத்து!
ஏன் இவ்வளவு கூத்துக்களை டெலிவிஷன் சானல்களும், பத்திரிகைகளும்
அரங்கேற்றுகின்றன? வியாபாரம், பணம். கிரிக்கெட் பைத்தியக்காரர்களின் வெறியைத் தூண்டி விட்டால்தான், அவர்கள் நடுராத்திரிக்குப் பிறகும் விழித்திருந்து, ஆட்டத்தைப் பார்ப்பார்கள். அப்போதுதான் விளம்பரங்கள் வரும். அதில்தான் பணம்.
இது சூதாட்டக்காரர்களுக்கும் வசதியாக இருக்கிறது. பெட்டிங் அமோகமாக நடக்கிறது. அதில் எந்த எந்த பெரிய தலைக்கு பங்கு இருக்கிறதோ, தெரியவில்லை! "எத்தனை ஆட்டக்காரர்கள் பணம் வாங்கி, மோசமாக ஆடுகிறார்களோ?' என்ற
சந்தேகத்திற்கும் இடம் இல்லாமல் போகவில்லை.
இதனால் எல்லாம், ஆட்டக்காரர்கள் போடுகிற ஆட்டம் அநாகரிகமாக இருக்கிறது. ஒரு ஸென்சுரி போட்டாலோ, விக்கெட்டை எடுத்தாலோ இவர்கள் செய்கிற ஆர்ப்பாட்டம் அசிங்கமாக இருக்கிறது. இவர்களுடைய முறைப்புகளும், அம்பயரைப் பார்த்து இவர்கள் எழுப்புகிற கூச்சல்களும், பொதுவாகவே இவர்கள் மைதானத்தில் செய்கிற அநாகரிகங்களும், "அக்ரஷன்' என்று பாராட்டப்படுகிறது. நமது ஆட்டக்காரர்களின் அகங்காரம் தலைக்கேறுகிறது. பணம் வேறு கொட்டுகிறது. கேட்பானேன்? தங்களைத் தவிர, மற்ற எல்லாமே இவர்களுக்கு துச்சமாகி விட்டன.
இது எப்படிப்பட்ட மனப்பான்மையை வளர்க்கும்? சில மாதங்களுக்கு முன், நமது வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு, வேகப்பந்து வீச்சு பற்றிய சில நுணுக்கங்களை விளக்கிச் சொல்ல, ஒரு முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வேகப் பந்து வீச்சாளர்
முயன்றார். நமது ஆட்டக்காரர் அதை அலட்சியமாக உதறித் தள்ளினார்! ஏனென்றால் இவர்களுக்குத் தெரியாதது எதுவுமில்லையே! இந்த மனப்பான்மை நமது ஆட்டக்காரர்களைப் பற்றியிருக்கிறது என்பது இந்திய அணியின் பலவீனங்களில் ஒன்று. ஆனால் தோல்விக்குக் காரணம் இதுவல்ல.
தென் ஆஃப்ரிக்காவில், சில மாதங்களுக்கு முன்பாக இந்திய அணி தோல்விகளை
சந்தித்தபோது, ஒரு வாசகர் அது பற்றி கேள்வி கேட்டிருந்தார். 13.12.2006 தேதியிட்ட "துக்ளக்' இதழில் அவருக்கு அளிக்கப்பட்ட பதிலிலிருந்து சில பகுதிகளை இப்போது பார்ப்பது பொருத்தமாக இருக்கும்:
கிரிக்கெட் நமது நாட்டில் ஒரு போதைப் பொருள். பார்த்தாலே பலருக்கு புத்தி பேதலித்து விடுகிறது. அதனால் நிதானம் தவறி ஏதேதோ பேசுகிறார்கள்.
மிகவும் பலம் வாய்ந்ததாகக் கருதப்படுகிற கட்சிகளும் தோற்பதுண்டு; பலவீனமானது என்று பெயரெடுத்துள்ள கட்சிகளும் வெல்வது உண்டு. இது சகஜம். அதனால் இப்போது தோற்றதால் மட்டும், இந்திய அணி மட்டமான கட்சியாகி விடவில்லை. ஏற்கெனவே உள்ள குறைபாடுகளை, சில வெற்றிகள் மூடி மறைத்திருந்தன; இப்போது அந்தத் திரை விலகி விட்டது. அவ்வளவுதான்.
நமது அணியில், உலகத்தரம் வாய்ந்தவர்கள் என்று சொல்லக் கூடிய ஆட்டக்காரர்கள் சுமார் நாலைந்து பேர் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் சுமார் ரகம்தான். வேகப் பந்து வீச்சு நம்மிடம் ஒரு சம்பிரதாயத்துக்காக இருக்கிற விஷயம்.
உலகத்தரம் வாய்ந்தவர்களின் பட்டியலில் இடம் பெறக்கூடிய டெண்டுல்கருக்கு, ஆட்டத்தில் முனை மழுங்கியிருக்கிறது. (அப்படி இருந்தாலும் அவரைத் தவிர்க்கக் கூடிய நிலையில் நமது அணி இல்லை.) கங்குலி, டெண்டுல்கர் இருவருமே
முன்பிருந்த வல்லமை படைத்தவர்களாக இப்போது திகழவில்லை; ஆனால் இவர்களுக்குப் பதிலாக அணியில் இடம் பெறுகிற சிலரை விட, இன்றும் கூட இவர்களே மேல்தான் என்ற என் கருத்தை நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.
ஒரு வெற்றி பெற்றால், உடனே "நாம்தான் உலக சாம்பியன்கள்' என்று கொண்டாடுவதும், ஒரு தோல்வி என்றால், "நாம் மஹா மட்டம்' என்று நொந்து கொள்வதும், சிறுபிள்ளைத்தனமான அணுகுமுறைதான்.
இன்று கூட, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூஸிலாந்து போன்ற அணிகளை விட, நம்மிடம் உள்ள அணி மேலானதுதான். ஆஸ்திரேலியா, தென்னாஃப்ரிக்கா போன்ற அணிகளை விட நாம் மிகவும் பலம் குறைந்தவர்களே. இதை நினைவில் வைத்துக் கொண்டால், நிதானமிழந்த விமர்சனங்கள் பிறக்காது.
இப்போது நிதானம் எந்த அளவிற்கு இழக்கப்பட்டிருக்கிறது – என்பதைப் பார்க்கும்போதுதான் வேடிக்கையாக இருக்கிறது. கோச்தான் தோல்விக்குக் காரணம் என்று சேப்பலை அனைவரும் தூற்றத் தொடங்கி விட்டார்கள். இது பிதற்றல். உள்ள சரக்கை, சேப்பல் கெடுத்து விட்ட மாதிரி பேசுவது, கோச்சிங் பணியை புரிந்து கொள்ளாமல் பேசுகிற பேச்சு.
...அடிப்படைக் கோளாறு ஒன்றிருக்கிறது. கிரிக்கெட் ஆட்டக்காரர்களை, தெய்வத்திற்கு அடுத்த ஸ்தானத்தில் இந்த நாடு வைத்து விட்டது. அதனால்தான், இந்த ஏமாற்றம், இந்த நிதானமின்மை எல்லாம் ஏற்படுகிறது.
நான் முன்பே சொன்ன மாதிரி, அவர்கள் இந்திய கிரிக்கெட் போர்டின் ஆட்டக்காரர்கள். அதற்கு மேல் ஒரு அந்தஸ்தை அவர்களுக்கு அளித்துவிட்டு, அவர்களுடைய தோல்வியை, நாட்டின் தோல்வியாக ஸ்வீகரித்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.
இதே அணி, சில மாட்ச்களை ஜெயித்து விட்டால், அப்போது நமக்கு போதை மீண்டும் தலைக்கேறிவிடும். அந்த தமாஷையும் பார்க்கத்தான் போகிறோம்.
அப்போது தெரிவிக்கப்பட்ட கருத்து, இப்போதும் பொருத்தமானதே. இப்போது பங்களாதேஷிடமும், இலங்கையிடமும் தோற்று விட்டதால், இந்திய அணி மட்டமான அணியாகி விடவில்லை. இவற்றில் ஒன்றில் வென்று, மேல் ஆட்டத்திற்குப்
போயிருந்தால், இந்திய அணி சிறந்த அணியாகியிருக்கப் போவதுமில்லை. கிரிக்கெட்டில் முன்னணி வகிக்கிற அணிகளிலேயே சற்றேறக்குறைய நமது தரம், நடுத்தரம்.
சில சமயங்களில் எதிர் அணிகளின் தவறுகள் காரணமாகவும், இந்திய ஆட்டக்காரர்கள் சிலருக்கு ஆட்டம் பிடித்ததாலும், நமது அணி வெற்றிகளைக் கண்டது; இனியும் காணும். அதற்கு மேல் எதிர்பார்க்கக் கூடிய அளவில், தரமுள்ள ஆட்டக்காரர்கள் இப்போது இங்கு இல்லை. இனி வரலாம். அல்லது இதையும் விட மோசமாகவும் போகலாம். ஏனென்றால் ஆடுவது ஆட்டம்; அது இயந்திரமல்ல; ஒரே மாதிரி சுழல்வதற்கு. அப்படிப்பட்ட ஒரு ஆட்டத்தில், இந்திய அணி என்ற பெயர் கொண்ட, கிரிக்கெட் சங்கத்தின் அணி தோற்றதற்காக, நாட்டையே எழவு வீடாக்கி, புலம்புவதும், ஒப்பாரி வைப்பதும், மூக்கை சிந்துவதும், கதறி அழுவதும்
– நம்முடைய முதிர்ச்சியின்மையைத்தான் காட்டும்.
நன்றி: துக்ளக்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, March 29, 2007
கிரிக்கெட் தோல்வி - துக்ளக் தலையங்கம்
Posted by IdlyVadai at 3/29/2007 07:55:00 PM
Labels: விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)











12 Comments:
//பொதுவாகவே இவர்கள் மைதானத்தில் செய்கிற அநாகரிகங்களும், "அக்ரஷன்' என்று பாராட்டப்படுகிறது.
//
சோவின் இந்த விமர்சனம் வெறும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு மட்டும் தானா? அல்லது ஜெயலலிதாவிற்கும் பொறுந்துமா?
இதையே தான் நான் ஒரு பதிவா எழுதி வைத்திருந்தேன். சோ திருடிட்டாரா?
சரி.. தொடர்ந்து துக்ளக் படிக்கிறீர்களா?
துக்ளக் படிப்பது கிறுக்குத்தனம் என்று சொல்கிறார் இங்கே ஒருவர் .. இது இங்கே இணைக்கப்பட்டுமுள்ளது (விளம்பரம்)
சோவின் இந்த விமர்சனம் மரம் நட்டு தண்ணி ஊத்துபவர்களுக்கும் பொருந்துமா ?
இதிலும் சந்தடி சாக்கில் விடுதலைப் புலிகளை இழுத்துவரும் 'சோ'மாரி தனம் தவிர்த்தால் நன்றாகவே சொல்லியிருக்கிறார்.
முதல் பத்தியில் சோகங்கள்+கோபங்கள் பட்டியலில் பாபர்மசூதி இடிப்பை, குஜராத், பாகல்பூர் இனப்படுகொலைகளை ஞாபகமாக மறந்து எழுதுமளவுக்கு சோ "புத்திசாலி" தான் என்பது வெளிப்படாமல் எழுதியிருக்கலாம்.
கிரிக்கெட் பற்றிய மற்ற கருத்துகள் சரிதான்.
// இது போதாதென்று நடிகர், நடிகைகளும், பிரபலங்களும் பேட்டி காணப்பட்டு, "இந்தியா கோப்பையை வெல்லும்' என்று உறுதி அளித்தார்கள். ஏனென்றால், அப்படிச் சொல்வது, தேச பக்தி.//
பிற அணியினர் நன்றாக விளையாடுவதைக் கை தட்டிப் பாராட்டும் பொழுதும், இது விளையாட்டு தான், இதை தேசபக்தியோடு ஒப்பிட்டு இகழ வேண்டாம் என்பதையும் சொல்லத் தான் வேணும்.
நண்பன்
//முன்னாள் பிரதமர் ஒருவர் கொலை செய்யப்பட்ட போது ஏற்படாத சோகமும், அந்தக் கொலைக்குக் காரணமான விடுதலைப் புலிகள் மீது வராத கோபமும்// these statements are totally unwanted and uncalled for. Cho's thalaiangam is otherwise good... ..the plight of Tamils in Sri Lanka is pathetic under the opressive regime of Rajapakshe..Sorry, i dont have tamil fonts now..naan Joe sonnathai vazhimozhigiraen.
சோ சரியாகத்தான் பார்த்திருக்கிறார், நம்ம மக்கள் காட்டுவது ஓவர் ரியாக்சன்தான்.
/பிற அணியினர் நன்றாக விளையாடுவதைக் கை தட்டிப் பாராட்டும் பொழுதும், இது விளையாட்டு தான், இதை தேசபக்தியோடு ஒப்பிட்டு இகழ வேண்டாம் என்பதையும் சொல்லத் தான் வேணும்/
நண்பன் அவர்களே,
பாகிஸ்தானுக்கு மட்டும் கைதட்டி விட்டு இந்தியா நன்றாக ஆடும்போது சோகமாக முகத்தை வைத்துக் கொள்வதையும், இந்தியா பாகிஸ்தான் பந்தயங்களில் பாகிஸ்தான் ஜெயித்தால் பட்டசு கொளுத்தி மகிழ்வதையும், இந்தியா ஜெயித்தால் சோகமாக இருப்பதையும் தான் கண்டிக்கிறோம்.
சென்னை கிரிக்கட் டெஸ்ட் ஒன்றில் பாகிஸ்தான் ஜெயித்தபோது அனைத்து ரசிகர்களும் கைதட்டினர்.லாகூர் டெஸ்டில் இந்தியாவுக்கும் கைதட்டினர்.இதை எல்லாம் பெருந்தன்மையாக ஏற்கமுடியும்.ஏன் என்றால் சென்னை/லாகூர் ரசிகர்கள் இந்தியா பாகிஸ்தான் இரண்டும் நன்றாக ஆடும்போது இரண்டுக்கும் கைதட்டினர்
ஆனால் இந்தியர்களீல் சிலர் பாகிஸ்தானுக்கு மட்டும் கைதட்டுவதையும் இந்தியா ஜெயித்தால் திட்டுவதையும் வருத்தப்படுவதையும் என்ன பொருளில் அர்த்தம் செய்துகொள்ள வேண்டும் என்று நீங்களே சொல்லுங்களேன் பார்க்கலாம்
சோ எழுதினா பிரபலமாகுது... ம்ம்ம்... :)
http://sirippu.wordpress.com/2007/03/19/criketnegative/
சரியான பதிவு
சரியாக சொல்லியிருக்கிறார்
எதற்கு இந்த கோபம்
அப்பாவி சிறுவர்கள் செஞ்சோலையில் கொல்லப்பட்டபோது வராத கோபம்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டபோது வராத கோபம்
இலங்கை தமிழ் மக்கள் குடும்பத்தோடு குண்டுவீச்சில் அழிக்கப்பட்டபோது வராத கோபம்
தனது மாநிலத்தில் உள்ள ரயில் நிலையங்களை தனது கோட்டத்தில் இணைப்பதை எதிர்க்கும் அண்டை மாநில அரசியல்வாதிகள் மேல் வராத கோபம்
முதிய வயதிலும் தன் எழுத்து மூலம் நச்சு பரப்பும் சோமாறிகள் மீது வராத கோபம்
எதற்கு இப்போது மட்டும்
இவன்
வெற்றி திருமலை
Post a Comment