பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 30, 2007

பந்த் - யார் முட்டாள்

எங்கடா ரொம்ப நாளா தமிழ்நாட்டில் இது இல்லையே என்று பார்த்தோம். வந்துவிட்டது பந்த்.

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் ஏகோபித்த எதிர்ப்பு உணர்வினை காட்டும் வகையில் நாளை (மார்ச் 31ம் தேதி ) காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரையில் மாநிலம் முழுவதிலும் பொது வேலை நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என்று கலைஞர் அறிவித்திருக்கிறார். ( காமெடிக்கு ஒரு அளவே இல்லை )

தேர்வு எழுதும் மாணவர்கள் என்ன செய்வார்கள் ? அவர்களுக்கு தேர்வு இருக்கும் அதற்கு விதிவிலக்கு ஆனால் அவர்கள் எப்படி தேர்வு எழுத போவார்கள் ? நடந்தா ?(பொது வேலைநிறுத்தம் காரணமாக சனிக்கிழமை பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது) அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் கலைஞர் என்ன செய்வார் ? ஏதாவது ஒரு அசம்பாவிதத்தால் ஒரு வருடம் நாசமாக போனால் இவர்களுக்கு என்ன கவலை ? அவர்களுக்கு ஒரு இலவச கலர் டிவி தந்துவிடுவார்.

ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தை நிறுத்துவது குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படும் என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார். ஏன் இலக்கா கேட்டு மிரட்டியது போல் இப்போது அவர்கள் மிரட்டவேண்டியது தானே ?

சுப்ரீம் கோர்ட் எதனால் நிராகரித்தது என்று பார்க்க வேண்டும்
"இட ஒதுக்கீடு வழங்க இதர பிற்படுத்த பட்டோர் எண்ணிக்கையை கண்டறிய 1931ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 75 ஆண்டு பழமையான கணக்கெடுப்பை உறுதியானதாகக் கருத முடியாது. இட ஒதுக்கீடு என்பது நிரந்தரமாகவும், பின்தங்கிய நிலைமையை நீண்ட காலத்திற்கு தொடரச் செய்வதாகவும் இருக்கக் கூடாது. சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக யார் யார் பின் தங்கி உள்ளனர் என்பதை மத்திய அரசால் உறுதி செய்ய முடியாதவரை இந்த சட்டத்தை அமல் படுத்த முடியாது. எனவே இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க கோர்ட் தீர்மானிக்கிறது. அதே நேரத்தில் எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை உறுதியாக கண்டறியும் வரை, இவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு தொடரலாம்"


75 ஆண்டு பழமையான கணக்கெடுப்பு அதாவது கலைஞர் 8 வயதாக இருந்த போது எடுத்த கணக்கெடுப்பு !.


சுப்ரீம் கோர்ட் சொல்வதில் என்ன தவறு ? ஆனால் இது சமூக நீதிக்கு ஏற்பட்டுள்ள திடீர் பின்னடைவு என்று சொல்லுவதில் சிரிப்பு தான் வருகிறது. பந்த் நடத்துபவர்கள் முட்டாளா அல்லது இந்த அறிவு ஜீவிகளை தேர்ந்தெடுத்த நாமா ?

44 Comments:

senthil said...

அப்ப்டி போடு. அவ்ர்கள் முட்டாள் நாம் வடிகட்டிய முட்டாள்

கால்கரி சிவா said...

"இட ஒதுக்கீடு வழங்க இதர பிற்படுத்த பட்டோர் எண்ணிக்கையை கண்டறிய 1931ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 75 ஆண்டு பழமையான கணக்கெடுப்பை உறுதியானதாகக் கருத முடியாது. //

75 வருடத்தில் எத்தனை பேர் எத்தனை கோடிகளை சேர்த்தனரோ. ம்ம்ம்ம் இவர்களெல்லாம் பின் தங்கியவர்.

சனிகிழமைதானே. நல்லா எண்ணை தேய்ச்சி குளித்துவிட்டு தூக்கம் போடவேண்டியதுதான். கொடுத்துவைத்தவர்களையா இந்தியர்கள்

இலவசக்கொத்தனார் said...

பந்த் நடத்துவது சட்டரீதியாக தவறென்று ஒரு உச்ச நீதி மன்ற தீர்ப்பு வந்ததாக ஞாபகம். இல்லையா?

Anonymous said...

குழந்தை கூட சரியா 'ஹோம்வர்க்' செய்கிறது. இவர்களுக்கு என்ன கேடு ? எந்த தைரியத்தில் உச்ச நீதி மன்றம் போனார்கள் ? இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முட்டள்கள் அதிகம் இருக்கிறார்கள். ஒரு நாள் விடுமுறை அவ்வளவு தான், திங்கட்கிழமை பந்த் வைத்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.

சுந்தர் ராம்ஸ் said...

இது வெறும் இடைக்காலத் தீர்வே. உச்ச நீதிமன்றத்தின் நிலையும் நியாயமானதே. இவர்களுக்கு தேவை, மக்கள் கவனத்தைப் பெற ஒரு காரணம். தமிழ்நாடு தேர்ந்தார்ப்போலதான்.

-சுந்தர் ராம்ஸ்

அருண்மொழி said...

//தேர்வு எழுதும் மாணவர்கள் என்ன செய்வார்கள் ? அவர்களுக்கு தேர்வு இருக்கும் அதற்கு விதிவிலக்கு ஆனால் அவர்கள் எப்படி தேர்வு எழுத போவார்கள் ? நடந்தா ?//

உங்களைப் போன்ற இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மாணவர்களை பள்ளிக்கும், கல்லூரிக்கும் அழைத்து செல்லலாமே?

IdlyVadai said...

அருண்மொழி சிங்கபூரிலிருந்து உங்க கருத்துக்கு நன்றி. நிச்சயம் நீங்கள் சொல்லும் ஆலோசனையை பின்பற்றுகிறேன். உங்களுக்கு யார் சொன்னது நான் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறேன் என்று. உச்ச நீதிமன்றம் சொன்னதில் எந்த தவறும் இல்லை என்று சொன்னேன். பதிவை ஒழுங்காக படிக்கவும்.

உங்கள் நண்பன் said...

//இலவசக்கொத்தனார் said...
பந்த் நடத்துவது சட்டரீதியாக தவறென்று ஒரு உச்ச நீதி மன்ற தீர்ப்பு வந்ததாக ஞாபகம். இல்லையா?
//
கொத்ஸ் அந்தத் தீர்ப்பு கேரளாவிற்கான அவர்களின் உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்று நினைக்கின்றேன்!

Anonymous said...

ஆடத்ட்தெரியாத எவளோ தெருக் கோணல் என்றாளாம். அது போல இருக்கிறது கருணாநிதியின் இந்த பந்த்.

இந்த பந்தை வைத்து காவிரி, மற்றும் பெரியாறு, மற்ற பிரச்சனைகளை பின்னுக்கு தள்ள முடிவு செய்திருப்பார்.

ஆமாம் அருண்மொழி, நீங்க மற்றும் குழலி போன்றவர்கள் ஏன் வருடத்திற்கு 10 கோட்டா மாணவர்களூக்கு சிங்கப்பூர் - $ செலவழித்து படிக்க வைக்கவும், படித்து முடித்த மாணவர்களுக்கு சிங்கப்பூரில் வேலையும் வாங்கி தரக்கூடாது. சும்மா ராமதாஸுக்கும் கருணாநிதிக்கும் பஜனை செய்வதை விட்டு நீங்க ஆக்க பூர்வமா ஆரம்பியுங்கள். நாங்களும் டொனெட் பண்ணுகிறோம்.

Arun said...

//..சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக யார் யார் பின் தங்கி உள்ளனர் என்பதை மத்திய அரசால் உறுதி செய்ய முடியாதவரை இந்த சட்டத்தை அமல் படுத்த முடியாது. எனவே இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க கோர்ட் தீர்மானிக்கிறது. அதே நேரத்தில் எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை உறுதியாக கண்டறியும் வரை, இவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு தொடரலாம்..//

நியூஸ் படிப்பவன் said...

"Nowhere in the world do castes, classes or communities queue up for the sake of gaining status"
— The Bench

இரும்பொறை said...

சத்தியமா நீ,சோ,வெங்கட்ராமன்,காமகேடி எல்லாம் முட்டாள் கிடையாது.
உங்களையெல்லாம் இன்னும் உயிரோட
உலாவ விட்டிருக்கிற தமிழகமக்கள்
தான் முட்டாள்கள்.

நீ நல்லா கும்மி அடி ராஜா.

Anonymous said...

//உங்களையெல்லாம் இன்னும் உயிரோட
உலாவ விட்டிருக்கிற தமிழகமக்கள்
தான் முட்டாள்கள்
//

DON'T YOU HAVE ANY BRAIN ???
Give us a fact why the court is wrong? And dont shout (Only you can shout, like dogs) like this

உங்கலுக்கு மூலையெ கிடையாதா???

Anonymous said...

ஆமாம், அவர்கள் (அரசியல்வாதிகள் - ஒரு சிலர் தவிர) முட்டாள்கள் தான்.
அந்த பல முட்டாள்களில் இருந்து ஒரு முட்டாளை வடி கட்டி எடுத்தோம் அல்லவா, ஆகவே...நாம் வடி கட்டிய முட்டாள்கள்.

இவர்களுக்கு தேவையான தீர்ப்பு வந்தால் சரி, இல்லா விட்டால் பந்த். இவர்களுக்கும் மற்ற ( குறிப்பாக கேரள கர்நாடக )
மாநிலத்துக்கும் என்ன வித்தியாசம்(தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், தாம் தூம் என்று துள்ளுவது).

என்னை பொருத்த வரை, எல்லா அரசியல் வாதிக்கும் ஒரே நோக்கம் தான். அது கண்டிப்பாக மக்களை காப்பாற்றுவது இல்லை, மக்களை ஏமாட்றுவது என்றே நினைக்கிறேன்.

சரவணகுமார் said...

"அருண்மொழி said...
//தேர்வு எழுதும் மாணவர்கள் என்ன செய்வார்கள் ? அவர்களுக்கு தேர்வு இருக்கும் அதற்கு விதிவிலக்கு ஆனால் அவர்கள் எப்படி தேர்வு எழுத போவார்கள் ? நடந்தா ?//

உங்களைப் போன்ற இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மாணவர்களை பள்ளிக்கும், கல்லூரிக்கும் அழைத்து செல்லலாமே? """

கட்சி / கொள்கை சார்பு நிலை எப்படி மூளையை சலவை செய்து மழுங்கடிக்கும் என்பதர்க்கு அருண்மொழியின் கூற்று மிகச்சிரந்த உதாரணம்..முட்டாள்களை வெளியில் தேடவேண்டாம்

Analyzt said...

மிக நியாயமான தீர்ப்பு.. if they are really interested in the upliftment of Backward classes.. why can't they push for the reevaluation of Backward classes..

IdlyVadai said...

பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுச்சேரியில் நாளை பந்த் நடக்கிறது.< ஜனநாயக முற்போக்கு ., கூட்டணி கட்சிகளின் கூட்டம் புதுச்சேரியில் இன்று கூடியது , இதில் தமிழகத்தை போன்றே புதுச்சேரியிலும் நாளை பந்த கடைபிடிப்பது என முடிவு செய்யப்பட்டது.

புலிக்கு பிறந்தது புனையாகுமா ?

Anonymous said...

This is a stunt to outwit jayalalitha and ramadodd.had jayalalitha called for a bandh first MK would have to support it.
Dito for Ramadoss.For cauvery,Mullai Periyar,Srilankan
issues - no bandh, for OBC reservations- bandh.This shows that
for all these parties only OBCs matter.Unless victims of reservation come together this will
continue.
ravi srinivas

IdlyVadai said...

ravi srinivas already Ramadoss has stage a protest in Delhi. Karunanidhi is slightly late. I dont know if DMK members will join PMK in delhi including Dyanidhi Maran. I will update accordingly.

Anonymous said...

என்ங்க இந்த உடன்பிறந்தே கொல்லும் (நோ/நா)ய்கள்...ஓ!பந்த் சமயத்தில் எந்த கடைகளில் புகுந்து கொள்ளையடிக்கலாமென திட்டமிடுகிறார்களோ?

Anonymous said...

இங்கிலீஷ்ல பின்னூட்டம் வந்தா இங்கிலீஸ்லதான் பதில் சொல்லனும்னு எதாவது கீதா

IdlyVadai said...

//இங்கிலீஷ்ல பின்னூட்டம் வந்தா இங்கிலீஸ்லதான் பதில் சொல்லனும்னு எதாவது கீதா//

கரிட்டா சொன்ன நைனா

Anonymous said...

பந்த் அன்னிக்கு இட்லிவடை மெஸ் நடக்குமா.

IdlyVadai said...

அனானி நல்ல கேள்வி.
பதில் - நடக்காது

எம்.ஜி.ஆரின் ஆவி! said...

திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது...

அதைச் சட்டம் போட்டு தடுக்கும் கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது...

திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...

Anonymous said...

சன் டிவி நிர்வாகம் பந்த் அன்னிக்கு ஒளிபரப்ப நிறுத்தி தார்மீக ஆதரவக்காட்டுமா, இல்ல அன்னிக்கும் மசாலா படம் போட்டு காசு பாக்குமா ?

IdlyVadai said...

உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை உரிய முறையில் சந்தித்து நல்ல தீர்ப்பை பெற முயற்சிக்க வேண்டுமே தவிர, அதைவிடுத்து பொது வேலை நிறுத்தம் என்பது கண்துடைப்பு நாடகமாகவே கருதப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். இப்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ஆளும் கூட்டணி கட்சிகளே பொறுப்பு என்றும் அவர் கூறியிருக்கிறார். நீதிமன்றத்தில் கோட்டை விட்டவர்கள் இங்கே பொது வேலை நிறுத்தம் என்று அறிவித்திருப்பது கேலிக்கூத்து என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

IdlyVadai said...

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட் டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை நீக்கப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தீர்ப்பு திருத்தப்படும் வரை பாமகவினருக்கு துக்கநாள்தான் என்றும் அவர் கூறினார்

Anonymous said...

//தீர்ப்பு திருத்தப்படும் வரை பாமகவினருக்கு துக்கநாள்தான் என்றும் அவர் கூறினார் //
அப்படின்னா கருணாநிதிக்கு மஞ்சள் சால்வை தந்த மருத்துவரும், குழலியும் இனி கருப்பு சால்வையுடன் (அ)வலம் வருவார்களாமா?

kaveri said...

idly vadiayare , epptinga quika subject etuthu , blog la podrunigalo, super response, .

all the best, keep it up

IdlyVadai said...

//குழலியும் இனி கருப்பு சால்வையுடன் (அ)வலம் வருவார்களாமா?//

குழலி பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் அவர் வலைப்பதிவில் சொல்லவும். இது அதற்கான இடமில்லை. புரிந்துகொண்டதற்கு நன்றி.

kaveri said...

idly vdaiyare , athukulla unkalukulla ida othukidu pirachanaiya , vidunga thalaiva, kulali ammavuku onka blogla ida othukuitu kodunga

padikkathavan said...

nadunilai-ana pathivu

vazthukkal idyly-vadai avargale!

Anonymous said...

ஆடத்ட்தெரியாத எவளோ தெருக் கோணல் என்றாளாம். அது போல இருக்கிறது கருணாநிதியின் இந்த பந்த்.

இந்த பந்தை வைத்து காவிரி, மற்றும் பெரியாறு, மற்ற பிரச்சனைகளை பின்னுக்கு தள்ள முடிவு செய்திருப்பார்.

ஆமாம் அருண்மொழி, நீங்க மற்றும் குழலி போன்றவர்கள் ஏன் வருடத்திற்கு 10 கோட்டா மாணவர்களூக்கு சிங்கப்பூர் - $ செலவழித்து படிக்க வைக்கவும், படித்து முடித்த மாணவர்களுக்கு சிங்கப்பூரில் வேலையும் வாங்கி தரக்கூடாது. சும்மா ராமதாஸுக்கும் கருணாநிதிக்கும் பஜனை செய்வதை விட்டு நீங்க ஆக்க பூர்வமா ஆரம்பியுங்கள். நாங்களும் டொனெட் பண்ணுகிறோம்.

......

Why no response to this???

ஜெயா டீ.வீ ஓனர் said...

ரயிலையெல்லாம் அரசு அங்கீகாரத்துடன் ரத்து செய்யும் இந்த தி.மு.க தன் சொந்த டி.வி ஒளிபரப்பை ஒரு நாளைக்கு ராத்து செய்யட்டுமே....

சிவா said...

பந்த் நடததப்படும் சனிக்கிழமை (மகாவீர் ஜெயந்தி) அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே மாணவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. இதையெல்லாம் அறிந்தும் ஏதோ மாணவர்கள் இன்னலுக்கு உள்ளாகும் நிலை உள்ளது போல் ஏழுதி இருக்கிறீர்கள். கருணாநிதி என்ன செய்தாலும் குற்றமா?

கோவை நிலைமை said...

சத்தியமா கோவை நாளை பந்த்

Anonymous said...

எய்ம்ஸ் டாகடர்கள் வேலை நிறுத்தத்தினால் நோயாளிகளுக்கு ஏற்பட்ட சிரமம் சரியே.

ஆனால் தமிழ்நாடு பந்த தவறு.

வாழ்க நடுநிலைமை.

சோத்துக்கட்சி said...

SC/ST-க்கு வழங்கப்படும் சலுகைகளில் எந்த வித மாற்றமும் இல்லையே.

OBC மக்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும், ஓபிசி பிரிவுகளில் உள்ள சாதி மக்கள் இன்னமும் நசுக்கப் படுகிறார்களென்று.

எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்று சொன்னபோது கிளம்பிய எதிர்ப்பு அறியாததா? குறிப்பாக ஓபிசி சாதியினர் இன்னமும் பிற்படுத்தப்பட்டவன் என்று சொல்லிக்கொண்டிருப்பது ஏமாற்றுத்தனம்

இந்த பந்த், வோட்டு வங்கிக்காக கருணாநிதி ஆடும் நாடகம்.

இப்போது விதித்திருப்பது, வெறும் இடைக்காலத் தடை மட்டுமே, காசுகள் பரிமாறப்படலாம், நீதிபதிகள் விலை பேசப் படலாம், அல்லது மிரட்டப்படலாம், ம்ம்...நம் இந்தியநாடு..

Anonymous said...

கிருபா சங்கர் போன்ற பாப்பார நாயிங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே?

cyrus sorabjee said...

தமிழகத்தில் முழு பந்த் அறிவிக்கும் திருடர்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டுக்களவாணி கட்சிகள் முதலில் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்கள் நடத்தும் டீ.வி ரேடியோ, செய்தித் தாள்களை இந்த ஒரு நாளைக்கு நிறுத்தி தமிழகத்திற்கு முன்னுதாரணமாக திகழலாமே...

செய்வார்களா சன் டீ வி குழுமமும், கே. டீவி யும், இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக பந்த் ஜோதியில் ஐக்கியமாகும் ஜெயா டீவியும்...ராஜ் டீவியும்...இன்ன பிற செய்தித்ததள்களும்... ?

IdlyVadai said...

வழக்கம் போல் பாப்பார, தே.. என்று பின்னூட்டம் வந்துள்ளது. மற்றவர்களும் அதில் சம்பந்தப்பட்டிருப்பதால் அதை பிரசுரிக்க இயலவில்லை.

உண்மையை சொன்னால் கோபம் வருகிறது. பாவம் அந்த மகானை மன்னித்துவிடுங்கள்.

Reason said...

idlivadai,
I was blogging in english and had practically no comments. did two posts in tamil and the 'paarpara the..' that you mentioned came in. I could see the country from where they came in.
The few tamil blogs I read have comment moderation. i understood why.

கேவலமானவர்கள். அற்பப் பதர்கள்.

Anonymous said...

A person can be weighed based on his words. If one person works as a server in hotel, his words will be idly saambaar only. If a person is from a family where all the family members are prostitutes, pimps his words will be thev… only. Hence gentleman, please proceed with your good comments. Thev.. men, please proceed with your thev… comments.