கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?
அப்படி என்றால் என்ன ? தெரிந்தவர்கள் பின்னூட்டதில் தெரிவிக்கவும்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, March 28, 2007
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?
Posted by IdlyVadai at 3/28/2007 08:22:00 PM
Labels: நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)











19 Comments:
உங்கள் பதிவுகளை திட்டும் விதமாக பின்னூட்டமிடும் பெயரிலியை(அனானி) கூறிப்பிடுகிறீர்களா?
உங்களுக்கு தெரியுமா இல்லையாண்ணு உங்களுக்கே தெரியாதா?தெரிஞ்சு தான் என்ன பண்ண போறீங்க!
உங்கள் பதிவுகளை திட்டும் விதமாக பின்னூட்டமிடும் பெயரிலியை(அனானி) கூறிப்பிடுகிறீர்களா?
உள்குத்து எதுவும் கிடையாதே?:))
பொதிசுமக்கும் கழுதை கற்பூரத்தை சுமந்தாலும்,சந்தனத்தை சுமந்தாலும், மண்ணை சுமந்தாலும் வேறு எதை சுமந்தாலும் எந்த வித்யாசமுமில்லாமல் தான் சுமக்கும்.அதனால் தான் கழுதைக்கு கற்பூரவாசனை தெரியாது என்றார்கள்.
(பதிவை விட நீளமாக பின்னூட்டம் போட்டதற்கு அவார்ட் கிடையாதா?:)))
இதைப் பத்தி ஒரு கதையில் எழுதியிருந்தேன்.
அது வந்து கழு தைக்கத் தெரியுமா கற்பூர வாசனை.
கழு ஒருவகை பருத்தி.
அதில் கற்பூரவாசனை வரும்.... அதைத் தைத்து ஆடையாக்கினால் வாசனை போய்விடும்.
//உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா?
என்னது இல்லையா?
அதுசரி, சும்மாவா சொன்னாங்க
"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை//
copied from some sms
கலசத்துக்கு தெரியுமா கற்பூர வாசனை? என்பது மருவியதாக சிலர் சொல்வதுண்டு.
கோவிலில் கருவறையில் இருக்கும் விக்கிரகத்துக்குத் தான் மரியாதையே தவிர உயர்ந்த இடத்தில் இருந்தாலும் கலசத்துக்கு கற்பூர ஆராதனை கிடைக்காது.
நேரடி பொருளாக கொண்டால் கழுதைக்கு நல்ல வாசனைகள் பிடிக்காது. அது எப்போதும் சாக்கடை வாசத்தையே தேடிச் செல்லும்.
Must be a latest comment about Ramadoss or Vijayakant
கழுதையும் நல்லது.
பொதி சுமக்கும். சாது.
உதைக்கிற நேரம் தவிர.
பொறுமை நிறைய.
கற்பூரம் வெளிச்சம், பக்தியின் சிம்பல். வாசனை உண்டு.
அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது. எதற்குக் கழுதைக்குக் கற்பூர வாசனை.
அவசியமே இல்லை.:-)
அதனாலே தெரிந்து கொள்ளவில்லை.
அவ்வளவுதான்.
I think no body will show camphour aarathi for donkey..Hence donkey will never come to know how camphour would smell. Similarly a person who is so unimportant will never enjoy any luxurious stuff!!!
கழுதைக்கு மோப்ப சக்தி குறைச்சலோ?
அது கிடக்கட்டும். யார் தலைவர் இட்லிவடையைப் பார்த்து இந்த வார்த்தை சொன்னது? சொல்லுங்கள், சாம்பாரில் புரட்டிவிடுகிறோம்.
மோகன்தாஸ் கிட்டத்தட்ட வந்துட்டீங்க
பாய் செய்ய கோரை புல்லையும், கற்பூர புல்லையும் பயன்படுத்துவார்கள். இரண்டு வகை பாய்களும் பார்க்க ஒன்று போலவே இருக்கும். அவற்றில் வரும் வாசனையைக் கொண்டுதான் வேறுபாட்டை அறிய முடியும்.
கோரைப்புல்லுக்கு 'கழு' என்ற பெயரும் உண்டு. கோரைப்புற்களால் செய்யப்பட்ட பாயில் கற்பூர மணம் தெரியாது என்ற அர்த்தத்தில்தான் "கழு தைக்க தெரியுமா கற்பூர வாசனை?" என்கிறார்கள். இதுவே ('கழுதை தேய்ந்து கட்டெறும்பு' அனாது போல) "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று மாறிவிட்டது. பாவம் கழுதை அதை விட்டுவிடுங்கள் :-)
ஆஹா, தன்யனானேன்.
எங்க ஊர்ல கழுதைக்கு தெரியுமா கருவாட்டு வாசனன்னு இல்ல சொல்லுவாங்க?
அது எங்கேருந்து மருவிச்சு?
தெரியாத தகவல். மோகன் தாஸ், இட்லி வடையாருக்கு என் நன்றிகள்!
சார், நான் உங்களை வியர்டுக்கு அழைத்து இருக்கிறேன்.
http://arvindneela.blogspot.com/2007/03/blog-post_22.html
அரவிந்தன் நீலகண்டன் said...
//தங்கள் எழுத்துக்களைப் படித்தேன். ரொம்பவும் பிடித்து இருக்கிறது. தங்களைப் பற்றி சொல்லுங்களேன். வளர்ந்து வரும் எனக்கு ஆலோசனைகள் சொல்லவும்.//
ஆதிசேஷன் தங்கள் மடலை தற்போதே பார்த்தேன். நான் 2002 முதல் திண்ணையில் எழுதி வருகிறேன். என் பெயருடனேயே எழுதி வருகிறேன். இதில் தங்களுக்கு கூற அதிக விவரம் என்ன தேவையோ அது கிடைக்கும். தவிர தனிமடல்கள் தேவையில்லை. குறிப்பாக தங்களைக் குறித்து தாங்கள் எதுவுமே தெரிவித்திடாத நிலையில்.
7:23 AM
Anonymous said...
அரவிந்தன், நான் உங்கள் எதிரணியைச் சேர்ந்தவன். உங்கள் இந்துத்வா அடிப்படைவாதம் என்னைப் பொறுத்தவரை ஒரு செல்லாக்காசு. இருந்தாலும் ஒரு எச்சரிக்கை. ஆதிசேடனார் வேறு யாருமில்லை. நம் ஆப்புபுகழ் போலியார்தான்.
வடிவேல் சிண்டை மட்டும் அப்படியே விட்டுவிட்டு வேடம் கட்டுவதுபோல அவர்
விட்டுச்செல்லும் அடையாளங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். :-))
அவர் அப்பாவி அய்யங்கார்களுக்காக எடுத்திருக்கும் அவதாரம் இது. சந்தேகம் இருந்தால் எந்த நாட்டு ஐபி என்று செக் செய்து பாருங்கள். இந்த
வலையில் நீங்கள் மாட்டிக் கொண்டு விடாதீர்கள். வேறு எந்தத் தனிப்பட்ட தகவல்களையோ புகைப்படங்களையோ அனுப்பி வைக்காதீர்கள். அடுத்தவாரம் ஆப்பில் வெளியாகி உலகப்புகழ் பெற்று விடுவீர்கள். :-))
நண்பர் தங்கவேல் பதிவில் உங்களைப்
பற்றிப் படித்தேன். நீங்கள் உண்மையானவர் என்பதால் இதை எழுதி இருக்கிறேன். உங்கள் தந்தை தமிழாசிரியர் என்று தெரியவந்ததும் இன்னொரு காரணம்.
//தெரியாத தகவல். மோகன் தாஸ், இட்லி வடையாருக்கு என் நன்றிகள்!//
ரிப்பீட்டே....
Post a Comment