பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 20, 2007

சென்னை சங்கமம் - தொகுப்பு

சென்னை சங்கமம் குறித்து பல் வேறு பத்திரிக்கைகளில் வந்த செய்திகள், கட்டுரைகளின் சங்கமம் :-)

கனிமொழிக்கு பாராட்டு விழா: ( 19 மார்ச், செய்தி தினத் தந்தி )

தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை மக்கள் முன் கொண்டு செல்லும் வகையில் சென்னை சங்கமம் என்ற கலைவிழாவை நடத்திய முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகள் கவிஞர் கனிமொழிக்கு பிரம்மகான சபாவின் சார்பில் பாராட்டு விழா சென்னை உட்லண்ட் ஓட்டலில் நடந்தது.

விழாவிற்கு சபாவின் தலைவர் நல்லி குப்புசாமி செட்டியார் தலைமை தாங்கி கவிஞர் கனிமொழிக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

கவிஞர் வாலி பேசியதிலிருந்து...

முதல்-அமைச்சர் கருணாநிதி கவிஞருக்கெல்லாம் கவிஞர். அந்த கலைஞர் இயற்றிய கவிதைகளில் தலைசிறந்த கவிதை கனிமொழி. 100 சதவீதம் பாராட்டுவதற்கான தகுதியும், புலமையும், எளிமையும் கொண்டவர் கனிமொழி. அவரை உளப்பூர்வமாக பாராட்டுகிறேன்.

இளையராஜாவுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது சமீபத்தில் எதாவது ஒரு பாட்டுக்கு இசைஅமைத்து இருந்தால், அதை பாடுங்கள் என்று கூறினேன். அவர் ஒரு பாட்டை பாடினார். அது எந்த படத்தில் உள்ளபாடல் என்று கேட்டேன். அது தனி சி.டி.என்றார். பாட்டு பிரமாதமாக இருக்கிறதே யார் எழுதியது என்று கேட்டேன். கனிமொழி என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

கனிமொழி ராஜ்யசபா உறுப்பினர் ஆகவேண்டும் என்று நல்லி கூறினார். அவர் கலைஞரின் புதல்வி, வருங்கால தமிழ்மண்ணின் முதல்வி. நாணயமான பெண் ஆளும் நிலை வரவேண்டும். அந்த நிலை இன்னும் 10 அல்லது 15 ஆண்டில் வரும். தொன்மையான கலைகளான தெருக்கூத்து, மயிலாட்டம் போன்றவை மேலாதிக்கம் என்ற பாறையால் மூடிக்கிடந்தது. கனிமொழி உளிகொண்டு அனாவசிய கல்லை தட்டி எடுத்து வெளிக்கொண்டு வந்தார்.
உலகத்தில் எளிமை ஒன்றுதான் உயர்ந்த வலிமை. கனிமொழி எளிமையாக உள்ளார். மண்ணின் ஆளுமைக்கு நாடு எதிர்பார்த்தால் அதற்கு தகுதியானவர் கனிமொழி.


‘‘சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சி பற்றிய உங்களது கருத்து என்ன?’’ ( ஆனந்த விகடன் )

ராமதாஸ் பதில்: ‘‘சென்னை சங்கமம் நிகழ்ச்சியை இப்படி அவசர அவசரமாக நடத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்ற முதல் கேள்விக்கே இன்னும் பதில் தெரியவில்லை. பொங்கல், சித்திரைத் திருவிழா மாதிரி இது கலை விழாவுக்கான காலமும் அல்ல! வெளிநாட்டுப் பயணிகள் வருகிற காலமும் அல்ல. தவிர, அந்த விழாவை நடத்திய விதம், நடத்திய அமைப்பு தொடர்பாக தமிழ் பண் பாட்டுத் துறையும் சுற்றுலாத் துறையும் தவறான முடிவுகளை எடுத்திருப்பதாகவும் நான் கருதுகிறேன். இதன் மூலம் கலைகளை மீட்டெடுத்துவிட முடியும் என்று நான் நம்பவில்லை. ஒரு பூங்காவில் ஐம்பது பேர் பார்க்கிறார்கள், ஐம்பத்தைந்து கலைஞர்கள் பங்கேற்கிறார்கள், அதற்கு அறுபது போலீஸார் காவலுக்கு நிற்கிறார்கள் என்பது அந்தக் கலைக்கும் கலைஞர்களுக்கும் நிகழ்ந்த அவமானம்!’’

கனிமொழி பேட்டி ( குமுதம் )

ஜெயா’ தொலைக்காட்சியில் ‘சங்கமம்’ விழாக்களை குற்றஞ்சாட்டி வந்த நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா? அதிகார துஷ்பிரயோகம் என்று சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் முதல்வரின் மகள் என்பதால் அரசாங்கம் உங்களுக்கு உதவியதா?

கனிமொழி : நான் அதை பார்க்கவில்லை. இந்த சங்கமம் நிகழ்ச்சி எங்களுடைய தனிப்பட்ட நிகழ்ச்சி. இதில் அரசையும் இணைத்துக் கொண்டோம். ஆனால் அவர்களிடமிருந்து எந்தப் பண உதவியும் பெறவில்லை. அதற்கான கணக்கு வழக்குகளை விரைவில் வெளியிடுவோடும். நாங்கள் நடத்திய இந்த சங்கமம் நிகழ்ச்சிக்கு எதிராக சிலர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பேசுகிறார்கள். எங்களிடம் அனைத்து கணக்குகளும் தெளிவாக இருக்கிறது. அவற்றை இணையதளத்தில் வெளியிடுவோம். எல்லோருமே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

துக்ளக் கேள்வி பதில்கள்:

கே : கனிமொழியின் "சங்கமம்' நிகழ்ச்சி தொடர்பாக, "திடுக்கிடும் உண்மைகள்' என்ற தலைப்பில் "ஜெயா' டி.வி. அதன் பின்னணி பற்றி விவரித்திருந்தது. இது பற்றி தங்கள் கருத்து என்ன?

ப : "கற்பனை கதை' என்று இதை அலட்சியமாக பேசியிருக்கிறார் முதல்வர். ஆனால் அப்படி ஒதுக்கக் கூடிய விஷயமாக இது தெரியவில்லை. விடுதலைப் புலிகளோடு நெருங்கிய தொடர்பு கொண்ட ஒருவர் நடத்துகிற அமைப்பில், தமிழக முதல்வரின் குடும்பத்தில் இருந்து ஒருவர் சேர்ந்து கொள்வதும், அதன் பின்னர் அந்த அமைப்புக்கு "உச்ச வரம்பின்றி செலவு செய்து கொள்ளலாம்; பிறகு ஒப்புதல் பெற்றுக் கொள்ளலாம்' – என்ற அனுமதி அரசால் வழங்கப்படுவதும், சாதாரண விஷயங்கள் அல்ல. கற்பனையும் அல்ல.

கே : லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து, விளம்பரம் செய்து, கோடிக்கணக்கில் செலவு செய்து, ஆடம்பரமான "சென்னை சங்கமம்' விழாவை தமிழக அரசு நடத்த வேண்டிய அவசியம் என்ன?

ப : எவ்வளவு செலவழித்தார்கள் என்பது ஒருபுறமிருக்கட்டும். "எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளுங்கள்; அரசின் ஒப்புதலைப் பிறகு பெற்றுக் கொள்ளலாம்' என்று ஒரு "வரலாறு காணாத' அரசாணை இதற்காக போடப்பட்டதுதான் அதிர்ச்சிக்குரியது.

இப்படி உச்சவரம்பின்றி செலவு செய்து கொள்ள, இவ்விஷயத்தில் அனுமதி அளிக்கப்பட்டது பற்றி, நான் "ஹிந்து' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் விமர்சனம் செய்திருந்தேன்.

அதற்கு "ஹிந்து'விலேயே சுற்றுலாத் துறைச் செயலர் பதில் அளித்தார். அதில் "94ஆம் வருட அரசாணையில் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச செலவு 3 லட்சம் ரூபாய் என்பதில் அடங்கியதுதான், இப்போதைய உத்திரவும்' என்று அவர்
கூறியிருந்தார்.

இது தவறு. உண்மைக்கு மாறானது. ஏனென்றால், இப்போதைய அரசாணை, "94ஆம் ஆண்டு அரசாணைக்கு மேல் செலவு செய்யலாம்' என்று குறிப்பிட்டு அனுமதி அளிக்கிறது. அதாவது, செயலர் கூறிய பதில், தெரிந்தே கூறப்படுகிற தவறான தகவல்.

இது ஒருபுறமிருக்க, கிராமியக் கலைகள், கோவில் திருவிழாக்களிலும், பல பண்டிகைகளை ஒட்டியும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. உச்சவரம்பின்றி செலவு செய்ய முதல்வர் குடும்பத்தினர் பெறுகிற அனுமதி மூலமாகத்தான், இக்கலைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அவசியம் எதுவுமில்லை.

முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம், ஆகியவற்றின் சங்கமம் இது.

கற்றதும் பெற்றதும் - சுஜாதா - ஆனந்த விகடன்

தமிழ் மையமும் தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சித் துறையும் இணைந்து, ஐ.ஐ.டி. திறந்தவெளி அரங்கில் கலைஞர் துவக்கிவைத்த ‘சென்னை சங்கமம்’ என்னும் விழாவில், தமிழ்நாட்டின் அசலான நாட்டுப் புறக் கலை வடிவங்கள் அனைத்தும், தோட்டாதரணியின் பிரமாண்டமான மேடை ஏறின. நகரத்தின் பல தெருக்களிலும் பூங்காக்களிலும் இடம்பெற ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கலைஞர் தன் சரியான வழித்தோன்றல் என்று சான்றிதழ் தந்த கனிமொழியின் செல்லத் திட்டம் இது. அடுத்த ஆண்டில் இந்த விழா தனக்கென ஓர் அந்தஸ்தும் தன்னாட்சியும் பெற்று மக்களிடையே இயல்பாகப் பரவி, அவர்களே நடத்துவார்கள் என்ற நம்பிக்கை யில் கோலாகலமாகத் துவங்கியிருக்கிறார்கள்.

அது தொடர்பான ஓர் ஒலித்தகடு/ஒலிநாடாவை டைரக்டர் வஸந்த் வெளியிட, அடியேன் பெற்றுக்கொண்டேன்.

பாம்பே ஜெயஸ்ரீ, ஸ்ரீனிவாஸ், சங்கர் மகாதேவன், பிரசன்னா, சித்ரா போன்ற வர்கள் சங்கப் பாடல்களிலிருந்து துவங்கி, கனிமொழியின் புதுக்கவிதைகள் வரை மேற்கத்திய இசையும் நாட்டுப்புற இசையும் உறுத்தாமல் கலந்து சிறப்பாகப் பாடிய பாடல்கள், நிச்சயம் இந்த முறையைப் பிர பலமாக்கும்.

‘கற்பூரம் நாறுமோ’ என்ற ஆண்டாள் பாசுரம், சிந்து பைரவியில் சோகமும் அந்நியோன்யமும் கலந்து ஒலிக் கிறது (பாம்பே ஜெயஸ்ரீ). அப்பரின் ‘நாமார்க்கும் குடியல்லோம்’ சூஃபியானா போலப் பாடப்பட்டு இருக்கிறது. திருவள்ளுவரின் ‘வான் சிறப்பு’ அதிகாரம், சித்ராவின் குரலில் சிம்பொனி போல் ஒலிக்கிறது. வரிகள் முதலில் புரியாவிட்டாலும், காதுக்கு இதமாக இருப்ப தால் நிச்சயம் மக்கள் கேட்டு ரசிப்பார்கள். அதன்பின் சிலர் அர்த்தம் தேடுவார்கள். ஆண்டா ளும் வள்ளுவரும் அப்பரும் கூட அங்கிருந்து பாராட்டி மழைத் துளிகளை அனுப்பினார்கள். இல்லையென்றால், பிப்ரவரியில் சென்னையில் மழை எப்படி?

சென்னைவாசிகள் அதிர்ஷ்டக்காரர்கள்!


சென்னை சங்கமம் பற்றி ஜூவியில் ஞாநி

சில சந்தேகங்கள்...

அரசு நிதி உதவியுடன் தனியார் அமைப்பான தமிழ் மையம், ‘சுற்றுலாவையும் தமிழ் பாரம்பரியத்தையும் ஊக்குவிப்பதற்காக’ என்று சொல்லி நடத்திய சென்னை சங்கமத்தின் அசல் நோக்கம் என்ன?

வரையறுத்திருக்கும் உச்ச வரம்புக்கு மேல் கூடுதலாக செலவிடுவதற்காக விதியை தளர்த்தி சிறப்பாக பிறப்பிக்கப்பட்ட சுற்றுலா- பண்பாட்டுத்துறையின் ‘அரசாணை (நிலை) எண் 20’ சொல்லும் நோக்கம்தான் என்ன?

‘தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ்ப் பண்பாட்டையும் இலக்கியத்தையும் பெரிதும் கண்டுகளிக்க விரும்பு வதால், அவர்கள் பேராவலைத் தணிக்கும் பொருட்டு சென்னையில் தனியார் ஒத்துழைப்புடன் பண்பாட்டுப் பெருவிழா நடத்தப் போவதாக, ஏற்கெனவே மானியக் கோரிக்கை விவாதத்தின்போது சுற்றுலா அமைச்சர் அறிவித்திருந்தாராம்! அதன்படிதான், ‘‘தனியார் அமைப்பான தமிழ் மையத்தால் நடத்தப்படவுள்ள சென்னை சங்கமம், பாரம்பரியமிக்க தமிழகப் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகளைத் தக்க வைக்கவும், புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழகம் வரும்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கவும், அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதத்திலும் அமையும்’’ என்று அரசாணை சொல்லியிருக்கிறது.

சுற்றுலா ஊக்குவிப்பு, புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆர்வம் என்பதெல்லாம் நிதி வரையறையை தளர்த்துவதற்காக அரசாணையில் காட்டப்படும் காரணங்கள் மட்டும்தானா என்ற கேள்வி எழுகிறது.

ஏனென்றால், பிப்ரவரி 21 முதல் 26 வரை சென்னை நகரப் பூங்காக்களிலும், திறந்தவெளி அரங்கங்களிலும் திரளாகக் கூடியவர்களில் நூற்றுக்குப் பத்து பேர்கூட புலம் பெயர்ந்த தமிழர்களோ, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளோ அல்ல. இது அந்த நிகழ்ச்சிகளின் வீடியோ பதிவுகளைப் பார்த்தாலே தெளிவாகத் தெரிகிறது. கலையார்வமுடைய புலம் பெயர்ந்த தமிழர்களும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளும் டிசம்பர் சீசனுக்கு வந்து விட்டுப் பொங்கல் முடியும்போது திரும்பிப் போய்விடுவார்கள் என்பது, இது போன்ற கலை நிகழ்ச்சித் துறைகளில் ஈடுபட்டுள்ள எல்லோரும் அறிந்த உண்மை.

அப்படி இருக்க எதற்காக பிப்ரவரி 21-26 இதை தனியாக இத்தனை செலவழித்து நடத்த வேண்டும்?

‘பொங்கல் சமயத்திலேயே நடத்த திட்டமிட்டோம். அப்போது அது முடியாமல் போய்விட்டது’ என்று அமைப்பாளர்கள் சொல் கிறார்கள். அப்படியானால், அடுத்தப் பொங்கலின்போது நடத்த வேண்டியதுதானே? இப்போது என்ன அவசரம்?

இந்த வருட பட்ஜெட் ஒதுக்கீடு முடியும் முன்பாக எஞ்சியிருக்கும் நிதியை எடுத்து செலவு செய்யும் அவசரமா?

‘இதில் அவசரமாக எதுவும் நடக்கவில்லை’ என்று பதில் கூற வாய்ப்பில்லை. ஏனென்றால், அரசாணையில் உள்ளபடி, ‘தமிழ் மைய ஒருங்கிணைப்பாளர் கனிமொழி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு’ மடல்கள் அனுப்பிய நாட்கள் - 25-1-2007, 6-2-2007. உடனே, கடிதம் அனுப்பப்பட்ட அதே 6-2-2007 அன்றே சுற்றுலாத் துறை செயலாளர் நேர்முகக் கடிதம் எழுதி சென்னை சங்கமத்துக்கு விளம்பரம் செய்ய நிதி வழங்குவதற்கான உச்ச வரம்பை தளர்த்திடக் கோருகிறார். அரசாணை பிறப்பிக்கப்படுவது ஒரே வாரத்தில் -அதாவது 13-2-2007 அன்று. அதே நாளில் நிதித் துறையும் இசைவு கொடுத்து ஆணை பிறப்பித்துவிடுகிறது.

புலம் பெயர்ந்த தமிழர் கலிஃபோர்னியாவிலிருந்து கணியான் கூத்துப் பார்க்க விமானத்தில் சென்னைக்குப் பறந்து வரும் வேகத்தைவிட அதி வேகத்தில் தலைமைச் செயலகத்தில் இந்தக் கோப்புகள் பறந்திருக்கின்றன.

ஆட்சியாளர் மனநிலைக்கு ஏற்ற மாதிரி கோப்பெழுதும் ஆற்றல் தானே IAS. (In Ayya’s Service அல்லது In Amma’s Service)!

இன்னும் சில அடிப்படையான கேள்விகளும் உண்டு... ஏன் இந்த நிகழ்ச்சியை ஒரு தனியார் அமைப்பிடம் அரசு தரவேண்டும்? அரசிடம் இத்தகைய நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஆற்றலோ அமைப்போ இல்லையா?

மத்திய அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படும் இரு அரசு சார்ந்த கலாசார அமைப்புகள் இருக்கின்றனவே! ஒன்று தஞ்சையில் இயங்கும் தென் மண்டல கலாசார மையம். கிராமியக் கலைஞர்களை அனுப்பி வைக்கும் தரகர் வேலை மட்டும் இதனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இந்த அமைப்பு ஆண்டுதோறும் முழுமையான கலை விழாக்களை தானே நடத்தி வரும் அனுபவம் உடைய அமைப்பு. இதேபோன்ற இன்னொரு அமைப்பு சென்னையில் இயங்கி வரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்.

ஏன் இந்த இரு அமைப்புகளிடமும் விழாப் பொறுப்பு தரப் படாமல், தனியார் அமைப்பான தமிழ் மையத்தின் ஏவல்படி செயல் படும் நிலைக்கு அவை கீழிறக்கப்பட்டன?

முதலில் இந்த தமிழ் மையம் என்பது என்ன? இந்த தனியார் அமைப்பில் நேற்று வரை கனிமொழி ஒருங்கிணைப்பாளராக இல்லை. துல்லியமாக சொல்வதானால், தி.மு.க ஆட்சி அமையும்வரை இல்லை. ஜகத் கஸ்பர் ராஜ் என்பவர்தான் தமிழ் மையத்தின் முகம்.

அவர் மீதான முந்தைய சர்ச்சைகள் எதுவுமே அரசுக்குத் தெரியாதா?

இப்படிப்பட்ட விழாக்கள் கலையின், கலைஞர்களின் அசல் பிரச்னைகளை கவனிக்க விடாமல் மறைக்கின்றன. சென்னைப் போன்ற பெரு நகரம் தொடங்கி சிற்றூர்கள் வரை கலைகளுக்கு ஏற்ற சூழல் அரசால் உருவாக்கப்படவும் இல்லை. நசுக்கப்படுவதே அதிகம். சென்னையில் அரசு வசம் இருக்கும் அரங்கங்களில் விதித்துள்ள கட்டணத்தை செலுத்தி நிகழ்ச்சி நடத்துவதானால், எந்த நாடகக்குழுவும் கலைக் குழுவும் பார்வையாளர்களிடம் நூறு ரூபாய் டிக்கெட் போடாமல் நிகழ்ச்சி நடத்த முடியாது. இல்லாவிட்டால், தனியார் ஸ்பான்சர்களிடம் கெளரவப் பிச்சை எடுக்க வேண்டும். நாடக, கலைப் பயிற்சிகளுக்கு எளிய கட்டணத்தில் அரசு ஹால்களை ஏற்படுத்தித் தரவேண்டுமென்ற கோரிக்கை 30 வருடங்களாகப் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

பூங்காக்களில் வீதி நாடகக் குழுக்கள் நாடகம் போட அனுமதி இல்லை. கடுமையான காவல்துறை முன் தணிக்கையும் கெடுபிடிகளும் இருக்கின்றன. சென்னை சங்கமம் திருவிழாவில் ஒப்புக்கு சப்பாணியாக மூன்றே இடங்களில் முப்பது நிமிடம் மட்டுமே பாட அழைக்கப்பட்ட சென்னை இளைஞர் சேர்ந்திசைக் குழு மறைந்த இசை மேதை எம்.பி.சீனிவாசனால் உருவாக்கப்பட்டது. சேர்ந்திசை என்ற அருமையான வடிவத்தை பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகளுக்கு கற்றுத் தருவதற்கான திட்டத்தை எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அன்றைய அமைச்சர் அரங்கநாயகம் செயல்படுத்தினார். நூற்றுக்கணக்கான குழந்தைகள் தமிழகம் முழுவதும் சில ஆண்டுகள் பயிற்சி பெற்றார்கள்.

அந்தத் திட்டத்தைப் பின்னர் நிறுத்தியது யார் என்பது இப்போது அரசுப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு நினைவிருக்கிறதா?

சென்னை சங்கமத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து, முதல்வர் கருணாநிதி அந்த விழாத் துவக்கத்தில் பேசியதிலிருந்தே வெளிப்பட்டு விட்டது.

கனிமொழியை தன் வழித் தோன்றலாக அங்கே வர்ணித்தார். எந்தத் துறைக்கு? உலகம் முழுவதும் தமிழைப் பரப்புவதில் தன் வாரிசு கனிமொழி என்று அறிவித்தார்.

ஆக, சென்னை சங்கமத்தில் சங்கமித்தது மக்களும் கலையும்தானா? அல்லது அரசியலும் ஆதாயமுமா?புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் கருத்துடைய இரு நாடகங்களை, சென்னை சங்கம விழாவில் மாநில நூலகத் துறை நிகழ்த்தச் செய்தது. அதே சமயம், ஒவ்வொரு வருடமும் அக்டோபரிலேயே நடந்து முடியவேண்டிய நூலகங்களுக்கான புத்தகங்கள் தேர்வு ஐந்து மாதமாகியும் இன்னும் நடக்கவில்லை!

அதுசரி... வேகமாக பறப்பதற்கு, கோப்புகளுக்கு சில சமயம் சிறகுகளுக்குப் பதிலாக கிரீடம் அல்லவா வேண்டியிருக்கிறது..?


11 Comments:

Anonymous said...

இந்த பதில் உங்களுக்கு அல்ல. அறிவாளி சோ அவர்களுக்கு...

// இது ஒருபுறமிருக்க, கிராமியக் கலைகள், கோவில் திருவிழாக்களிலும், பல பண்டிகைகளை ஒட்டியும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. உச்சவரம்பின்றி செலவு செய்ய முதல்வர் குடும்பத்தினர் பெறுகிற அனுமதி மூலமாகத்தான், இக்கலைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அவசியம் எதுவுமில்லை.
//

எல்லா கோவிகளிலும்தான் பஜனை பாடறாங்கோ! அப்பறம் எதுக்கய்யா தனியா மீஜிக் அகாடமில டிசம்பர்மாதம் தனியா கச்சேரிங்க?

மீஜிக் அக்காடமி மூலமாத்தான் கர்னாடிக் மீஜிக்கை காப்பாத்தனும்னு அவசியம் இருக்கா என்ன?

இந்த கருத்துச்சொல்லிங்கோ இம்சை தாங்க முடியலை...

Anonymous said...

பக்கா பாப்பார பதிவு

Anonymous said...

Regarding Bajani Kacheri,
Govt Fund is involved?

வழிப்போக்கன் said...

//இப்படிப்பட்ட விழாக்கள் கலையின், கலைஞர்களின் அசல் பிரச்னைகளை கவனிக்க விடாமல் மறைக்கின்றன.//

இதை யாராவது கேட்டால் உடனே பார்ப்பன துவேஷம், காழ்ப்புணர்ச்சி என்று.....


அட போங்கடா...

Anonymous said...

பாப்பார பண்டார பரதேசிகளால் மட்டுமே இப்படி பதிவிட முடியும்

Anonymous said...

சூப்ப்ர் என்று வாழ்த்திய சுஜாதாவும் ஒரு பாப்பாரபய தான்.

Anonymous said...

உண்மையை சொன்னால் உடனே கோபம் வரும். விவாதிக்க முடியலை என்றால் உடனே பாப்பார பரதேசிகள் என்று திட்ட வேண்டியது. இது உங்க தப்பு இல்லை. நீங்க என்ன செய்யுவீங்க, உங்க இயலாமைதான் இதற்கு காரணம். உங்க ஊர் பக்கம் டாக்டர் காளிமுத்து வந்தா ஒரு தபா போய் செக்கப் செஞ்சிக்கோ சரியா ?

Anonymous said...

//உண்மையை சொன்னால் உடனே கோபம் வரும். விவாதிக்க முடியலை என்றால் உடனே பாப்பார பரதேசிகள் என்று திட்ட வேண்டியது
//

சும்மா "NACHINU" சொனீங்க....:-))))

யோசிப்பவர் said...

Hi,
Please visit http://yosinga.blogspot.com/2007/03/blog-post_20.html

I've tagged you

Boston Bala said...

நன்றீ!!!

IdlyVadai said...

யோசிப்பவர் : யோசிக்கிறேன் :-)

பாலா : எதற்கு நன்றி ?