பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 15, 2007

திமுக , பா.ம.க, காங்கிரஸ் ..

கூட்டணி மந்திரிசபை - கருணாநிதி அதிரடி முடிவு! என்ற தலைப்பில் இரண்டு மாதம் முன் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

இப்போது காங்கிரஸ் கட்சிக்கு 4-5 மந்திரி பதவி நிச்சயம் என்று தெரிகிறது. தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 22-ந்தேதி தொடங்குகிறது. இந்த கூட்ட தொடர் முடிந்த பிறகு தமிழக அமைச்சரவை விஸ்தரிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சமீபகாலமாக மருத்துவர் ஐயா கலைஞருக்கு ரொம்ப குடைச்சல் கொடுக்கிறார் அரசின் திட்டங்களையும், கொள்கை முடிவுகளையும் பா.ம.க. விமர்சித்து வருகிறது. எதை கலைஞர் செய்தாலும் அதற்கு பா.ம.க எதிர்ப்பு தெரிவிக்கிறது. இது கலைஞரை ரொம்ப அப்செட் செய்துள்ளது. இந்த நிலையில் ஆளும் கூட்டணி யில் இருந்தே பா.ம.க.வை கழற்றி விட்டு விடலாமா என்று கூட தி.மு.க. மூத்த தலைவர்கள் நினைப்பதாக கூறப்படுகிறது. பா.ம.க.வை கழற்றி விடும் பட்சத்தில் காங்கிரசை தங்கள் பிடியில் வைத்து இருப்பதற்காக அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கலாம் என்று பிரச்சினை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது சட்டசபையில் தி.மு.க.வுக்கு 96 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரசுக்கு 34 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். காங்கிரசுக்கு 4 மந்திரி பதவிகளை விட்டுக்கொடுக்க தி.மு.க. தலைவர் கள் சம்மதித்து இருப்பதாக தெரிகிறது.

எது எப்படியோ, தமிழகத்தில் பா.ம.க வளரவில்லை என்றால் அது தமிழகத்துக்கு நல்லது தான்.

9 Comments:

Hari said...

/*எது எப்படியோ, தமிழகத்தில் பா.ம.க வளரவில்லை என்றால் அது தமிழகத்துக்கு நல்லது தான்.*/

ரிப்பீட்டு

கலைஞரின் இந்த முடிவு திமுக-வின் சரிவை ஊர்ஜிதப்படுத்துகிறது. இதுவும் தமிழகத்துக்கு நல்லது தான்.

பிரதீப் said...

தற்போதைய சட்ட சபையில் திமுக-வுக்கு 96 இடங்களும் காங்கிரஸூக்கு 34 இடங்களும் உள்ளன.

IdlyVadai said...

பிரதீப், நன்றி. மாற்றிவிட்டேன்.

Anonymous said...

எனக்கு என்னமோ குழலிய கிண்டுரமாதிரி இருக்குது

Anonymous said...

பக்கா பாப்பார பதிவு

Anonymous said...

Mr. Idly Vadai, Only tress should be bothered about the growth of PMK. Why are you bothered? Do you think PMK will start felling humans also?

Thamizhan said...

நான் கூடக் கேள்விப்பட்டேன் உண்மையா?தங்கள் பதிவின் பெயர் பட்ஜெட்டுக்கு முன்னாடியே மாற்றப்பட்டு சாம்பார் என்று வருகிறதாமே.இப்போதே வாழ்த்துக்கள்.
கலைஞர் வரக்கூடாது என்று மும்மூர்த்திகள் சோமாரி,நரசிம்மன்,பொய்மூர்த்தி எவ்வளவோ முயற்சி செய்து சுப்புணியைக் கூட பொறுத்துக் கொள்ளுங்கள் அம்மையாருக்கு எதிராக அறிக்கை விடாதீர்கள் என்றெல்லாம் சொன்னார்களாம்.
கலைஞர் இப்படி துவேஷி ஆன்தும் எப்படியாவது கவிழ்க்க தீவிர தூதுவர்கள் இட்லி,வடை,சாம்பார் இன்னும் எதுவானாலும் பரவாயில்லை என்று அலைகிறார்களாம்.
இதிலே வேடிக்கை பாருங்கோ அத்ற்கெல்லாம் நாங்கள் பின்னூட்டம் வேறே போடவேண்டியிருக்கிறது.

சீனு said...

//

/*எது எப்படியோ, தமிழகத்தில் பா.ம.க வளரவில்லை என்றால் அது தமிழகத்துக்கு நல்லது தான்.*/

ரிப்பீட்டு

//

Me 2...Me 2...

//எனக்கு என்னமோ குழலிய கிண்டுரமாதிரி இருக்குது//

எனகென்னவோ 'மாதிரி'யால்லாம் தெரியல...

ravi srinivas said...

96+34 is enough to get majority.With support from left DMK govt can afford to ignore PMK but whether UPA will take a similar stand is an important question.To a great extent survival of the governments at the
state and centre are linked.
For DMK, a powerless and obliging
congress that is satisfied with represenatation in cabinet is better than an agressive and ambitious PMK as an
ally or partner.In the long run DMK may think that a stable coalition with congress,left,DPI
and organisations like TMMK is
enough to get majority than having
a grand alliance that includes PMK
and the breakaway faction of MDMK.
At the national level new coalitions may emerge after the
polls in UP.This is likely to have
repurcussions for the governments
at the centre and state.The left may flirt with the idea of third front consisting of left, regional
parties or may use that possibility
to pressurise UPA government.If BJP
does well in UP polls NDA which is
in limbo may get a boost.Some regional parties may join NDA again. In this situation PMK will also take a wait and watch approach
to this.If it sees that NDA is a better option it may join NDA or may have poll pact with ADMK.
So in politics there are no permanent enemies and friends but only self interest matters is
true for all parties including DMK
and PMK.Whether all this is good or bad for Tamil Nadu is a different question.