பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 14, 2007

பெண்களுக்கு ஒரு போட்டி !

மாசி கடைசியில் பங்குனிக்கு முந்தைய நாளில் பெண்கள் மிகுந்த பத்தியுடன் இருக்கும் நோன்பு காரடையான் நோன்பு ( இன்று ).

நேற்று நிறைய பேரிடம் கேட்டு அலுத்துவிட்டது.
இந்த நோம்புக்கு பெயர் காரணம் என்ன ? என்று தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்.

பிகு: ஆண்களும் கலந்துக்கொள்ளலாம்.

14 Comments:

Hari said...

காரடையான். கார் + அடையான்.

அந்த மால் வண்ணனை அடைவதற்கான நோன்பு

சரியா?

கீதா சாம்பசிவம் said...

அறுவடை ஆகி வந்த முதல் "கார்" அரிசியைத் தான் முன்னாட்களில் குத்தி , மாவாக்கி அத்துடன் முழுத்துவரையுடனும், தேங்காய், வெல்லமும் சேர்த்து, விறகு அடுப்பில் வைக்கலைப் போட்டு அதில் அரிசிமாவை அடையாகத் தட்டுவார்கள் என்று என்னோட அம்மா, அம்மாவின் அம்மா எல்லாரும் நான் சின்னப் பெண்ணாக இருந்தப்போ (ஹிஹிஹி) சொல்லி இருக்கிறார்கள். அதனால் ஒருவேளை வந்திருக்கலாமோ என்னவோ? கார்காலம் முடிந்து, குளிர்காலமும் முடிந்து வசந்தம் ஆரம்பிக்கும்போது வருவதாலும் வரலாமோ? ஆனால் காரடை என்றால் நான் சொன்னதுதான் கேட்டிருக்கிறேன். மற்றபடி போட்டியில் ஜெயித்தாலும் ஜெயிக்காட்டியும் பரவாயில்லை! :)))))

✪சிந்தாநதி said...

கரடையான் நோன்பு

சத்தியவான் சாவித்திரி கதை தெரியுமா?
திரியுமத்சேனன் எனும் அரசன் பகைவரின் படையெடுப்பால் நாட்டையும் கண்களையும் இழந்தான். பின்னர் காட்டிற்குச் சென்று தன் மனைவி மனுடன் வாழ்ந்து வந்தான். அசுபதி மண்ணனின் மகள் சாவித்திரி கானகத்துக்கு வந்தபொழுது திரியுமத்சேனனின் மகன் சத்தியவானைக் கண்டாள். காதல் கொண்டாள். அவனுக்கு ஆயுள் குறைவு எனத் தெரிந்த பின்னும், “வாழ்ந்தால் அவனுடன்தான் வாழ்வேன். அது ஒரு நாளாயினும் சரி” எனக் கூறி அவனை மணந்தாள்.

கணவனின் உயிரைக் காக்கவேண்டி கடும் விரதமிருந்து அன்னை காமாட்சியைப் பூசித்து வந்தாள். மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் பிறக்கும்பொழுது சத்தியவானின் ஆயுள் பிரியும். அந்நேரத்தே, காட்டில் கிட்டிய மண்ணைப் பிசைந்து அடையாகத் தட்டி அன்னை காமாட்சிக்குப் படைத்துப்பின் அதையே உண்டு தன் விரதத்தை முடித்துக்கொண்டாள். இருப்பினும் எமன் தன் கடமையைச் சரியாக முடித்து, சத்தியவானின் உயிரைக் கவர்ந்து சென்றான். எமனுடன் வாதாடி சத்தியவானின் உயிரை மீட்டாள் சாவித்திரி. அதுவும் அன்னை காமாட்சியின் அருளால்தான். மண்ணடையை உண்டதை அடிப்படையாகக்கொண்டு இன்றும் பெண்கள் ஆலயங்களில் “மண்சோறு” உண்ணும் நோன்பு நோற்கிறார்கள்.

காலம் செல்லச் செல்ல, முதல் போக(கார்) நெல்லைக் குத்தி, அதில் அடை செய்து அன்னைக்குப் படைத்து பெண்கள் வழிபடுகின்றனர்கள். இதால், கார்+அடை நோன்பு என்பது காரடையான் நோன்பு என மருவியது.
இந்நன்னாளில் பூரணகும்பம் அமைத்து, அதன் கழுத்தில் கழுத்திலணியும் மஞ்சள் கயிறுகளைச் சுற்றி வைத்து, அன்னை காமாட்சியை அழைத்து கும்பத்தில் இருத்தி(ஆவாகனம்) முறைப்படி பூசை செய்தால், அன்னை அவ்வில்லங்களுக்கு வருவாள் என நம்பிக்கை. பூசை முடிந்ததும் காரடையை உண்டு விரதத்தை முடித்துவிட்டு கும்பத்தில் உள்ள மஞ்சள் கயிற்றினை எடுத்து,”உருகாத வெண்ணையும் ஓரடையும் உனக்குத் தந்தேன்; நான் என் கணவனுடன் எந்நாளும் இணைபிரியாது வாழ அருள் புரிவாய்” என வேண்டிக் கழுத்தில் அணிந்துகொள்வர்.

இந்நன்னாளில், சிலர் “சம்பத் கெளவுரி” விரதமிருந்து, அன்னை பார்வதியை வணங்கி,”நல்ல குழந்தைகளைக் கொடுத்து அவர்களுக்கு குறையாக் கல்விச் செல்வத்தையும் தருவாய்” என வேண்டித் தாலிச் சரடை மாற்றிக்கொள்வார்கள்.

நன்றி: ஞானவெடியான் அவர்கள்

✪சிந்தாநதி said...

நன்றி:ஞானவெட்டியான் அவர்கள்

தமிழி said...

சத்தியவான் சாவித்திரியை நினைவுபடுத்தும் வகையில் கொண்டாடப்படும் பண்டிகை'காரடையான் நோன்பு' .

முதல் போக(கார்) நெல்லைக் குத்தி, அதில் அடை செய்து அன்னைக்குப் படைத்து பெண்கள் வழிபடுகின்றனர்கள். ஆகவே, கார்+அடை நோன்பு என்பது 'காரடையான் நோன்பு' என மருவியது.


இந்நன்னாளில் பூரணகும்பம் அமைத்து, அதன் கழுத்தில் கழுத்திலணியும் மஞ்சள் கயிறுகளைச் சுற்றி வைத்து, அன்னை காமாட்சியை அழைத்து கும்பத்தில் இருத்தி(ஆவாகனம்) முறைப்படி பூசை செய்தால், அன்னை அவ்வில்லங்களுக்கு வருவாள் என நம்பிக்கை. பூசை முடிந்ததும் காரடையை உண்டு விரதத்தை முடித்துவிட்டு கும்பத்தில் உள்ள மஞ்சள் கயிற்றினை எடுத்து,”உருகாத வெண்ணையும் ஓரடையும் உனக்குத் தந்தேன்; நான் என் கணவனுடன் எந்நாளும் இணைபிரியாது வாழ அருள் புரிவாய்” என வேண்டிக் கழுத்தில் அணிந்துகொள்வர்.

இந்நன்னாளில், சிலர் “சம்பத் கெளவுரி” விரதமிருந்து, அன்னை பார்வதியை வணங்கி,”நல்ல குழந்தைகளைக் கொடுத்து அவர்களுக்கு குறையாக் கல்விச் செல்வத்தையும் தருவாய்” என வேண்டித் தாலிச் சரடை மாற்றிக்கொள்வார்கள்.


அருமையான விளக்கமும் மேலும் பல செய்திகளுக்கும் Boston Bala'ன் இப்பதிவைப் பார்க்கவும்.(http://rp-padaippu.blogspot.com/2005/04/2005_111272607112639080.html)

தமிழி said...

தகவல் உபயம் :
ஞான வெட்டியான் :http://kuravanji.com/?p=38
வெட்டி ஒட்டியவர்கள் சிந்தா நதியும் பின்னே நானும்.

IdlyVadai said...

வெட்டி ஒட்டியவர்களுக்கு நன்றி. எனக்கு தெரிந்து 3 விதமான காரணம் இருக்கு. நீங்கள் வேட்டி ஒட்டியது ஒரு காரணம். இன்னும் இரண்டு காரணங்கள்( அல்லது கதைகள் ) இருக்கு :-)

Anonymous said...

இஞ்சி பச்சை மிளகாய் எல்லாம் போட்டு உப்பு உறைப்புமாய் அடை செய்து படைப்பதால், காரடையான் நோம்பு என்று பெயர்.
-usha

Dubukku said...

இன்னிக்கு வீட்டுல வெறும் நோன்பு தான் காரடை லாம் இல்லீயாம்...லேதன்டி...
இதெல்லாம் இப்போ அவசியம் உமக்கு தெரியனுமா?.மத்ததுக்கெலாம் கமெண்ட உடனுக்குட்டனே பப்ளிஷ் செய்யாதீரும்...இதெல்லாம் கரெக்டா மத்தியான நேரம் பார்த்து பப்ளிஷ் பண்ணும்.
இஞ்சி பச்சைமிளகாய் போட்டு உப்பும் உறைப்புமாய்...ஏன்யா வெந்த புண்ல வேலப் பாச்சுறீங்க....

சொக்காயி said...

(முன்னாடி போட்ட comment காணாமல் போய்விட்டது.)

உப்பு அடை எல்லோர் வீட்டிலும் செய்வதில்லை.

சில குடும்பங்களில், வெல்ல அடை மட்டும் தான். அதற்கும், காரடை என்றே பெயர். கீதா சாம்பசிவம் அவர்கள் சொன்னது தான் காரணம் என்று நினைக்கிறேன்.

மற்றபடி, காராமணி போடுவதால் காரடை ஆகிவிட்டதா?

Anonymous said...

è£ó¬ìò£ù¢ «ï£ù¢¹

êî¢î¤òõ£ù¢-ê£õ¤î¢î¤ó¤ è¬î¬ò å좮 â¿ï¢î¶ Þ¶. Þøï¢î èíõ¬ù âñù¢ â´î¢¶ê¢ ªêô¢õ¬î Üø¤ï¢î ê£õ¤î¢î¤ó¤ Üõ¬ù «õí¢®î¢ ªî£¿¶ îù¢ èíõÂ袰 àò¤ó¢ îï¢î£÷¢. Þï¢îè¢ è¬î ðô¼è¢°î¢ ªîó¤»ñ¢. èíõ¬ìò ïô¢õ£ö¢¬õ «õí¢®ð¢ ªðí¢è÷¢ ñ£ê¤ ñ£îñ¢ ð¤ø袰ñ¢ «ïóî¢î¤ô¢ ªêò¢õ¶ è£ó¬ìò£ù¢ «ï£ù¢¹. âñÂ袰 õ¤¼ð¢ðñ£ù¶ å¼õ¬è ܬì âù¢Âñ¢ ðí¤ò£óñ¢. Þ¶ 輬ñò£è ޼袰ñ¢. è£ó¬ìò¤ô¢ õ¤¼ð¢ðº÷¢÷õù¢ âñù¢. è£ó¬ìò£ù¢ «ï£ù¢¹ âù¢ø ªðòó¢ ܬìò£ô¢ õï¢î¶.

IdlyVadai said...

காரடையான் நோன்பு

சத்தியவான்-சாவித்திரி கதையை ஒட்டி எழுந்தது இது. இறந்த கணவனை எமன் எடுத்துச் செல்வதை அறிந்த சாவித்திரி அவனை வேண்டித் தொழுது தன் கணவனுக்கு உயிர் தந்தாள். இந்தக் கதை பலருக்குத் தெரியும். கணவனுடைய நல்வாழ்வை வேண்டிப் பெண்கள் மாசி மாதம் பிறக்கும் நேரத்தில் செய்வது காரடையான் நோன்பு. எமனுக்கு விருப்பமானது ஒருவகை அடை என்னும் பணியாரம். இது கருமையாக இருக்கும். காரடையில் விருப்பமுள்ளவன் எமன். காரடையான் நோன்பு என்ற பெயர் அடையால் வந்தது.

( Anonymous comment converted to Unicode )

Anonymous said...

Idly, Please tell us the "other stories" you heard. Most of them who ansewerd here are n realting only to Satyavan-Savithri only.

Subu said...

கார் அடையான் நோன்பு
---------------------------------------------

- வடக்கே கர்வா செளத், தெற்கே கார் அடையான் நோன்பு .. என்ன ஒற்றுமை ..என்ன வேற்றுமை ...குறைந்தபட்சம் ஆறு வித்தியாசமாவது எழுதுங்களேன்