பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 29, 2007

அர்ச்சகர் ஆவதற்கு 1,267 பேர் ஆர்வம்

போன வருடம் மே மாதம் "எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம்!" என்ற பதிவை தொடர்ந்து வரும் செய்தி இது. நோ கமெண்டஸ்!

அர்ச்சகர் ஆவதற்கு 1,267 பேர் ஆர்வமாக விண்ணப்பித்துள்ளனர் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு தொடங்கவிருக்கும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர்வதற்கு, எதிர்பார்த்ததை விட அதிகமாகவே மனுக்கள் வந்துள்ளன. தமிழகத்தில் மொத்தம் 6 இடங்களில் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன.

இதில் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவெனில் 56 பிராமணர்கள், ஆதிதிராவிடர் 436 பேர், பிற்படுத்தப்பட்டோர் 424 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 296 பேர், பழங்குடியினர் 7 பேரும் விண்ணப்பித்துள்ளவர்களில் அடங்குவர்.

இவர்களில் சைவ முறையில் அர்ச்சகர் பயிற்சி பெறுவோருக்கு மதுரை, பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை கோயிலில் பயிற்சி தரப்படும். வைஷ்ணவ முறையில் பயிற்சி பெற விரும்புவோருக்கு சென்னை, திருச்சியில் பயிற்சி தரப்படும்.

11 Comments:

Hari said...

இது வரவேற்க்க படவேண்டியது. nice.

Anonymous said...

Real "Archanai" will be there hereafter?

Anonymous said...

Real "Archanai" will be there hereafter?

Anonymous said...

அஹா! ஒழிந்தது பார்பனீயத்தின் ஆதிக்கம்! தமிழகம் தலை நிமிர்ந்தது! தமிழகம் இந்தியாவின் முதல் மாநிலமானது. தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப் பட்டது. தமிழ் காப்பாற்றப் பட்டது! தமிழ் 'ஈனத்' தலைவரே - பிடியுங்கள் இன்னோரு பட்டம் - " பார்பனீயம் கொண்டான்"!

Anonymous said...

எங்களுக்கும் தமிழ் தெரியும், கடவுளுக்கும் தமிழ் தெரியும்

அப்புறம் எதற்கு இடையில் இந்த தமிழ் தரகப் பூசாரி.

நாமளே கடவுள் கிட்ட நேரடியாவே பேசிக்கலாமே.

அருண்மொழி said...

கேஸ் இன்னும் அவாள் கோர்ட்டில் இருக்கு. அவார்கள் எதையாவது செய்து மற்றவர் மணியாட்டுவதை தடுத்துவிடுவர்.

அருண்மொழி said...

//Real "Archanai" will be there hereafter?//

off-course. please refer the next comment. காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு பருப்பு அர்ச்சனை செய்வதை பாருங்கள்.

Anonymous said...

தங்க இடம், உணவு வசதி, (பயிற்சி கல்லூரியில் இரண்டு வருடம்) கொடுக்கப்படுகிறது.

அதன் பிறகு, நிம்மதியான அரசாங்க காசு பார்க்கும் நல்ல வேலை கிடைக்கிறது.

இவ்வளவு வாய்ப்பு இருந்தும் இத்தனை குறைத்துத்தான் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பது வியப்பை தருகிறது.

ஒரு வார்டு பாய் வேலைக்கு கூட அதிகமாக வரும் இந்த நாளில்...

வருத்தமாய் இருக்கிறது..

இதற்கு போய் இப்படி கும்மி அடிக்கிறார்களே... என்னமோ போங்க

Anonymous said...

விண்ணப்பித்த அனைவருக்கும் இடமா?.. இல்லை entrance Exam எதாவது உண்டா?..

Anonymous said...

//off-course. please refer the next comment. காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு பருப்பு அர்ச்சனை செய்வதை பாருங்கள். //

does your post reflect whatever you are eating?

Anonymous said...

//அஹா! ஒழிந்தது பார்பனீயத்தின் ஆதிக்கம்! தமிழகம் தலை நிமிர்ந்தது! தமிழகம் இந்தியாவின் முதல் மாநிலமானது. தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப் பட்டது. தமிழ் காப்பாற்றப் பட்டது! தமிழ் 'ஈனத்' தலைவரே - பிடியுங்கள் இன்னோரு பட்டம் - " பார்பனீயம் கொண்டான்"!
//

ரிபிடே....