பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 13, 2007

விருதுகள்

"நான்" - லா.ச.ராமாமிருதம் - வானதி பதிப்பகம். புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய மற்றொரு புத்தகம். இந்த புத்தகத்தில் குமுதம் ஜங்ஷன் பேட்டியிலிருந்து ஒரு கேள்வி, பதில்.

ஜங்ஷன்: பக்கத்து மாநில எழுத்தாளர்களுடன் ஒப்பிடும்போது தமிழ் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம், விருதுகள் எல்லாம் குறைவுதான். பலருக்கு அது ஒரு மனக்குறையாகவே இருக்கிறது. உங்களுக்கு எப்படி இருக்கிறது.

லா.ச.ரா: விருதுகள் என்று கணக்கிட்டால் 10, 12 வாங்கியிக்கிறேன். சாகித்ய அகாதமி கலைமாமணி... இப்படியே போய்க்கொண்டே இருக்கும். சங்கராச்சாரியார், பெரியவர் ஒரு விருது கொடுத்திருக்கிறார். நான் கொஞ்சம் அதனைப் பெரியதாகத்தான் நினைக்கிறேன். அவருக்கும் இலக்கியத்துக்கும் எவ்வளவு சம்பந்தம் என்று எனக்கு தெரியாது. ஆனால் என்னுடைய எழுத்தில் ஆன்மிகத்தின் சாயல் இருப்பதால் அவர் கொடுத்திருக்கிறார். அப்புறம் ஞானபீட விருதுக்கு இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறேன்.
நான் பிராமணன். அந்தத் தொந்தரவு வேறு இருக்கிறது. எனவே இங்கே திமுக ஆட்சியில் எனக்கு விருதும் கிடைக்கவில்லை. ஜெயலலிதா இருந்ததால் எனக்கு கலைமாமணி கிடைத்தது. அது கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன ? நான் அதையெல்லாம் போட்டுக் கொள்வதே கிடையாது. டாக்டர் பட்டம் வேறு யாரோ ஒருவர் கொடுத்திருக்கிறார். இதற்கும்மேல் மற்றவர்களால் எனக்கு என்னதான் தந்துவிட முடியும்!

5 Comments:

Anonymous said...

இது பெரியார் வழி செல்லும் நாடு. விருதா? பிராமணனாகப்பிறந்தது முதல் குற்றம், தமிழ் என்ற காட்டுமிராண்டி மொழியை வளர்த்தது இரண்டாவது குற்றம், ஆன்மீகத்தில் ஈடுபட்டது மூன்றாவது குற்றம். அடித்து கொல்லாமல் உயிருடன் விட்டுள்ளோமே என்று மகிழ்ச்சி கொள்.

Anonymous said...

விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட லா.ச.ரா மறைந்தாலும் தமிழ் மொழி உள்ளவரை " தமிழ் இலக்கியத்தின் பீஷ்ம பிதாமகர் லா.ச.ரா " படைப்பு இருக்கும்.

வாழ்க லா.ச.ரா !!!

வளர்க அவர் இலக்கிய ஆளுமை !!!


மதுரை இரா. அனந்த்

Erode Nagaraj... said...

லா.சா.ரா.வின் படைப்புகள் soft copy - downloadable இருக்கா?

Erode Nagaraj... said...

மௌனியின் கதைகள் கூட வேண்டும்...

Rahul said...

Good comments about the awards! எந்த ஒரு கலைஞனும் அற்ப விருதுக்காக எதுவும் செய்ய மாட்டார்கள்.