பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, February 24, 2007

சிங்குரில் நிலம் - தவறு நேர்ந்துள்ளது - ஐகோர்ட்

கம்யூனிஸ்டுகள் சாயம் வெளுக்க தொடங்கியுள்ளது.

"மேற்கு வங்கம் சிங்குரில் டாடா நிறுவன கார் தொழிற்சாலைக்காக நிலங்களை மாநில அரசு கையகப்படுத்தியது சட்ட விரோதமான செயல் போல தோன்றுகிறது,'' என அம்மாநில ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கம் சிங்குரில் டாடா நிறுவனம் கார் தொழிற்சாலை துவங்க விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது தொடர்பாக, ஜோய்தீப் முகர்ஜி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் அம்மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, மேற்கு வங்க ஐகோர்ட் தலைமை நீதிபதி(பொறுப்பு) பாஸ்கர் பட்டாச்சார்யா மற்றும் பிரசாத் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:
நிலத்தை கையகப்படுத்த 1894ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் இரண்டு பிரிவுகளை ஒரே நேரத்தில் அரசு பயன்படுத்தியிருக்கிறது. இதிலிருந்து, நிலம் கையகப்படுத்தும் முறையில் தவறு நேர்ந்துள்ளது என தெரிகிறது. விவசாயிகள் அரசு வழங்கிய நஷ்டஈட்டை ஏற்றுக் கொள்ளவில்லை என்றதும், அரசு கூடுதலாக 10 சதவீத போனஸ் தொகை வழங்க முன்வந்துள்ளது தெரிய வருகிறது. அரசின் நிதியின் ஒவ்வொரு பைசாவும் பொதுமக்களின் பணம். அவற்றை தேவையில்லாமல் யாருக்கும் கொடுக்கக் கூடாது. பிரச்னைக்குரிய 997 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மேற்கு வங்க அரசு நான்கு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விவசாயிகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட நஷ்டஈடு உள்ளிட்ட தகவல்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

4 Comments:

Voice on Wings said...

"அரசு எனப்படும் நிறுவனம் தனக்குத் தேவைப்படும்போது, தேவைப்படும் இடத்தை, அதன் சொந்தக்காரருக்கு விருப்பமில்லாவிட்டாலும் அவரிடமிருந்து கையகப்படுத்த முடியும்" என்ற அநீதியுடன் ஒப்பிடுகையில் பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து கூடுதலாக 10% போனாஸாக வெளியேறுவது பெரிய அநீதியாகப் படவில்லை.

(எனக்குத் தெரிந்து) இந்த முக்கியமான பிரச்சனையைப் பற்றி எழுதிய ஓரே தமிழ் வலைப்பதிவு என்ற வகையில் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். இது குறித்து வலையுலக இடதுசாரிகளின் மௌனம் வியப்பைத் தருகிறது / தரவில்லை :)

இலவசக்கொத்தனார் said...

//இது குறித்து வலையுலக இடதுசாரிகளின் மௌனம் வியப்பைத் தருகிறது / தரவில்லை :)//

:))

IdlyVadai said...

... கம்யூனிஸம் இன்று ஒரு பிரேதம்; அதைத் தங்கள் ஆட்சி நடக்கிற மாநிலத்தில் வைத்துக் கொண்டு சுகாதாரக் கேடு உண்டாக்க விரும்பாத இடதுசாரிகள், அதை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பி,
அங்கெல்லாம் அந்த பிரேத ஊர்வலத்தை நடத்தி வருகிறார்கள். இதை எல்லோரும் உணர்கிறபோது, நாட்டின் பொருளாதாரச் சுகாதாரம் வலுப்பெறும். ( இரண்டு மாதம் முன் துக்ளக் தலையங்கம் )

Voice on Wings said...

For the record - நீங்கள் பிரேத ஊர்வலம் என்று விவரிக்கும் பொருளாதாரக் கொள்கையை நான் ஆதரிக்கிறேன். அதை, மேற்கு வங்கத்திலும் ஏன் செயல்படுத்துவதில்லை என்பதில்தான் எனக்கு மாற்றுக் கருத்து.

மேலும்,இது குறித்து யாரும் பதிவிடவில்லை என்று தவறுதாலாகக் கூறிவிட்டேன். அருள் செல்வன் கந்தசுவாமியின் இடுகை இங்கே.