பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 05, 2007

வீராசாமி - விமர்சனம்


அனுபவ ஐயங்கார் மற்றும் உருளைக்கிழங்கு போண்டா சாப்பிடும் இயக்குநரின் படம். அவரே வீராச்சாமி என்ற பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.

கதை:
இடைவேளி வரை இவர் பல போலி விலங்குகளுடன் சண்டை போடுகிறார். குறிப்பாக கருப்புப் பூனையுடன் இவர் போடும் சண்டையைக் கண்டு குழந்தைகள் மட்டும் பயப்படும் அபாயம் இருக்கிறது. இடைவேளிக்கு பின் இவரை ஒரு கொசு கடித்துவிட சுருண்டு விழுகிறார்.

'தசாவதானி' என்ற பெயருக்குத் தகுதியானவராக இவர் இப்படத்தில் தயாரிப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல், இசை, நடனம், கலை மற்றும் சண்டைப் பயிற்சி என்ற அனைத்தையும் வருமான வரிக்கு பயந்து சர்வாண்டிஸ், ஹேரி பார்ட்டர், வரதன், பரதன், பஜ்ஜி, சொஜ்ஜி, நாட்டாமை, கண்ணம்மா, முரளி மனோஹர் என்று வெவ்வேறு புனை பெயரில் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இது வருமான வரி ஏய்ப்பு என்று ஒரு பிரிவினர் படத்தைத் தடை செய்ய வழக்குத் தொடர, 'அவனவன் அடுத்தவன் திறமையில் செய்ததை எல்லாம் தன் பெயரில் போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தான் செய்தவைகளையும் அடுத்தவன் பெயரில் எழுதி வைக்கும் தயாள டோண்டுவின் சேவை நாட்டுக்குத் தேவை' என்று ஒரு கோஷ்டி ஆதரவுக் கொடி பிடிப்பது கதையின் நகைச்சுவை கலந்த திருப்பம். பெரிய அளவில் எதிர்பார்த்த போராட்டம் இவ்வளவு நகைச்சுவையாகப் பிசுபிசுத்துப் போனதில், "இந்த மேட்டருக்கு உங்க டோட்டல் ரியாக்ஷனே இவ்ளோதானாடா?" என்று எதிரணியினர் ஏமாற்றம்.

மீதிக் கதையை (இருந்தால்) தமிழ்மணத் திரையில் காண்க!!

13 Comments:

நாமக்கல் சிபி said...

//இடைவேளிக்கு பின் இவரை ஒரு கொசு கடித்துவிட சுருண்டு விழுகிறார்.
//

//'அவனவன் அடுத்தவன் திறமையில் செய்ததை எல்லாம் தன் பெயரில் போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தான் செய்தவைகளையும் அடுத்தவன் பெயரில் எழுதி வைக்கும் தயாள டோண்டுவின் சேவை நாட்டுக்குத் தேவை' என்று ஒரு கோஷ்டி ஆதரவுக் கொடி பிடிப்பது கதையின் நகைச்சுவை கலந்த திருப்பம்//

:))

Superb! இட்லி வடையாரே!

நாமக்கல் சிபி said...

//மீதிக் கதையை (இருந்தால்) தமிழ்மணத் திரையில் காண்க//

யார் இருந்தால்? இட்லி வடையாரே? நாங்களா?

:))

Anonymous said...

வில்லன் பிரிவினர் ஏகப்பட்ட ஹோம் வொர்க் செய்தும் உணர்சி பூர்வமாக செய்தும் கடையில் நகைசுவையாக போனது தான் வருத்தமாக இருக்கிறது

Anonymous said...

இட்லிவடை அய்யா,

அருமையாக ஒரு கேலிச்சித்திர பதிவு. நிகழ்வுகளுக்கு பொருத்தமாக நீங்கள் கிளப்பும் கேலிகள் நன்றாக இருக்கின்றன.

இந்நிகழ்வும் வழக்கம்போல குழு மணப்பான்மையில் கிடைத்தவரை புழுதி தூற்றுவதிலேயே மக்கள் முக்கிய குறியாக இருக்கிறார்கள் என்பது தங்களின் வரிகளிலும் வெளிப்படுகிறது. எனக்கென்னவோ இந்த கும்மியில் எல்லாம் அபஸ்வரமாகவே தெரிகிறது.

"He that is without sin among you, let him cast the first stone at her." என்றார் கர்த்தரின் புனித மகன்.

dondu(#11168674346665545885) said...

நான் உரக்க ரசித்து ரசித்து சிரித்த சிரிப்பில் மாடிப்படியடியருகில் எலிக்குட்டிக்காகக் காத்திருந்து விட்டு, களைப்புடன் சுருண்டு படுத்துக் கொண்டிருந்த கருப்புப் பூனை ஒன்று தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு மியாவ் என்று கத்திக் கொண்டே வாயில் கேட்டை தாண்டி எங்கள் தெருவில் கிழக்கு நோக்கிப் பாய்ந்தது.

ஆமாம் நான் தெரியாமல்தான் கேட்கிறேன், இப்போ என்ன ஆயிட்டுன்னு என் பதிவோட ஹிட் கவுண்டமணியை இப்படி கிட்டத்தட்ட ஆயிரம் ரேஞ்சுக்கு ஒசத்திட்டு போறாங்க?

:))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

சீனு said...

முழுக்கதையும் எனக்கு தெரியாததால்...இப்போதைக்கு ஒரு

B-)
B-(
B-|

Anonymous said...

சூப்பர் தல :-)

IdlyVadai said...

நாமக்கல் சிபி நன்றி.
அனானிகளுக்கு நன்றி
சீனு எந்த உலகத்தில் இருக்கீங்க ?
டோண்டு - நன்றி.

Anonymous said...

அய்யோ பாவம் அய்யரு தெரியாம செஞ்சிட்டாரு விட்டுவிடும்.இல்லாட்டி புது பேர்ல வந்து 'இட்லி பிரையும்,வடைகறியும் 'செஞ்சி உம்ம நாற அடிச்சிடுவார்.

உங்கள் நண்பன் said...

வீராசாமி பட விமர்சனம் காமெடியாக இருக்கும் என்று நினைத்து வந்தேன், இங்கு வந்தால் அதை விட காமெடிப் பதிவு...:)))

எடிட் செய்த படம் அருமை!

//மீதிக் கதையை (இருந்தால்) தமிழ்மணத் திரையில் காண்க!!//

காலைல இருந்தே தமிழ்மணத்தில் இந்தக் கதை தானே ஓடிக்கிட்டு இருக்கு:))))))))

அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் :-)

SurveySan said...

சூப்பர் இட்லி டச். கலக்கல்ஸ்.

ஆஞ்சு ஆராஞ்சு நானும் சர்வே போட்டுட்டேன். ====)

சிறில் அலெக்ஸ் said...

படம் சூப்பர்.
:))))

தனியா உக்காந்து சிரிச்சிகிட்டிருகேன்