பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, February 03, 2007

வலைப்பதிவர் மீட்டிங் - தத்துகுட்டி நிருபரின் குட்டி குட்டி தகவல்கள்

வலைப்பதிவாளர்கள் சந்திப்பு பற்றி புதிதாக சேர்ந்த தத்துக்குட்டி (ஸ்பெஷல்) ரிப்போர்ட்டரின் அரைகுரை தகவல்கள்..

1) மொத்தம் இருபத்தியிரண்டு நபர்கள் (வாட்ச்மேன், டீக்கடைக்காரர்கள் எல்லாம் சேர்த்தா என்று தெரியவில்லை)
2) ரோசாவசந்த் இன்னமும் இந்தியாவில்தான் இருக்கிறாராம். சந்திப்பில் பார்த்ததும்தான் தெரிந்தது.
3) பெரும்பாலும் பெங்களூருக்கும் சென்னைக்கும் இடையில் தொலைபேசிக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன (தொலைபேசி எண்களை என்று இருந்திருக்க வேண்டும்).
4) போண்டா இல்லாமல் டோண்டு ராகவன் கலந்துகொண்ட மிகச்சில அரியதொரு மீட்டிங்க் என்று பார்க் வாட்ச்மேன் தெரிவித்தார்.
5) வழமையாக நடப்பதுபோல் இல்லாமல், இந்த முறை இந்தியப் பொருளாதாரம் பற்றியும், கல்வித்தரத்தை உயர்த்துவது பற்றியும் எதுவுமே பேசவில்லை.
6) நீல நிற சட்டை அணிந்தவர் ( பெயர் தெரிவவில்லை) எதுவும் பேசவில்லை.
7) Exclusive வலைப்பதிவாளர் சந்திப்பு அரங்கப் புகைப்படங்களை பார்க்க, இங்கே சொடுக்கவும். ( படம் 1, படம் 2, படம் 3 )

5 Comments:

வழிப்போக்கன் said...

ஹிம்...

நம்ப மக்கா உம்மை உசுப்பேத்தி உசுப்பேத்தி... நீரும் அதை அப்படியே நம்பி செய்திகளை முந்தி தந்தே தீருவேன்னு அடம்புடிக்கறீர். அது கழுதை தேஞ்சி கட்டெரும்பான கதையா இந்த மாதிரி சப்பை பதிவுகள் போடுவதில் கொண்டு உம்மை விட்டிருக்கிறது.

ஏனைய்யா, உம்ம ஊருபேரு வெளியே தெரியாம இம்புட்டு ஜோரா மெயின்டெயின் செய்யறவருக்கு நாலுபேரு சந்திக்கறதை மறைந்திருந்து வேவு பார்த்து பதிவிடுவதில் என்ன சுகமோ யாமறியோம்!

கூட்டத்தில் வெளிப்படையா கலந்துகொண்டு நியுஸ் கொடுப்பவர்தான் நிருபர். இப்படி வேவு பார்த்து தகவல் சொல்லறவருக்கு வேற பெயர்!

( உடனே, அதான் தத்துக்குட்டி நிருபர்னு சொன்னேன்னு கத்துக்குட்டி பதிவர் பதிவர் மாதிரி ஏதாவது ஜல்லியடிக்காதீங்க... )

கால்கரி சிவா said...

செமை ரகளைக் காரர் ஐயா நீர்

சீனு said...

//7) Exclusive வலைப்பதிவாளர் சந்திப்பு அரங்கப் புகைப்படங்களை பார்க்க, இங்கே சொடுக்கவும். ( படம் 1, படம் 2, படம் 3 )//

ஹூம்...நீர் இப்படி போட்டிருக்கும் போதே டவுட்டு ஆகி க்ளிக் பன்னாம இருந்துருக்கனும்...என் நேரம்...

Anonymous said...

அந்தப் படங்கள் நடுப்பகலில் எடுக்கப்பட்டவை என்று புகைப்படக்கலைக் கத்துக்குட்டி சொல்லிவிடுவார் :-)

செந்தழல் ரவி said...

உங்களைத்தான் நான் பார்த்தேனே ? அதே சமயம் பக்கத்தில் அமர்ந்திருந்த வலைப்பூ சுனாமியிடமும், முத்து தமிழினியிடமும் உம்மை காட்டினேன்..

சற்று நேரம் உத்து உத்து பார்த்து எண்ணிவிட்டு பிறகு சற்று மோனலிஸா சிரிப்புடன் கிளம்பினீர் இடப்புறம் உள்ள கேட்டு வழியே...

யாரை ஏமாற்ற பார்க்கிறீர் ?? :) ( இட்லிவடை வருகிறாறா என்று கவனிக்க தனி உளவாளி அமர்த்தப்பட்டார்)