பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 02, 2007

ஒரு பாட்டி, கனவில் சிவாஜி, கருணாநிதி!

சிவாஜி கணேசன் கனவில் வந்தார் என்று கூறி முதல்வர் கருணாநிதியை சந்திக்க அவரது வீட்டுக்கு வந்த பாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.


முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு ஒரு வயதான பெண்மணி வந்தார். வீடு உள்ள தெருவுக்கு இரண்டு தெருக்கள் முன்பாக பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் அந்தப் பாட்டியை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அவரது பெயர் வசந்தா (வயது 60). திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டைச் சேர்ந்தவர். சென்னையில் தனது 2 குழந்தைகளுடன் ஓட்டேரி நம்மாழ்வார்ப்பேட்டையில் வசித்து வருகிறார்.

தனது கனவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வந்ததாகவும், அப்போது ஒரு கதையைக் கூறி, அதில் பிரபுவை நடிக்க வை என்று கூறியதாகவும், பிரபுவின் கால்ஷீட் வாங்கித் தர உதவுமாறு முதல்வரை பார்க்க வந்ததாகவும் வசந்தா கூறியதால் போலீஸார் குழப்பமடைந்தனர்.

அவர் மன நலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக் கூடும் என்று அவர்கள் சந்தேகித்தனர். பின்னர் அப்பெண்மணியை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் போலீஸார் ஒப்படைத்தனர். அவர்கள் வசந்தாவின் வீட்டுக்கு தகவல் கொடுத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.

( தட்ஸ் தமிழில் வந்த செய்தி(நன்றி). கலைஞருக்கும் அடிக்கடி கனவில் அண்ணா, பெரியார் வருவார்கள் )

17 Comments:

சென்ஷி said...

//( தட்ஸ் தமிழில் வந்த செய்தி(நன்றி). கலைஞருக்கும் அடிக்கடி கனவில் அண்ணா, பெரியார் வருவார்கள் ) //

எல்லோரும் வாங்க..இட்லிவடை ஒரு உண்மையை சொல்லி மாட்டிக்கிட்டாரு..கும்மியடிங்க..இதப்பத்தி ஜல்லியடிங்க..


சென்ஷி

செந்தழல் ரவி said...

அடப்பாவிங்களா ?

டைரக்ஷன் ஆசையை தீர்க்க இப்படியெல்லாம் வழியிருக்கா ?

நேத்து எனக்கு என்ன கனவு வந்துதுன்னு சொன்னா உங்களுக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிரும்...

அதனால...

செந்தழல் ரவி said...

நல்லா பாருங்க, கிழவியோட மருமகன் ஏதாவது அஸிஸ்டெண்ட் டைரக்டரா இருக்க போறான் ?

IdlyVadai said...

//நேத்து எனக்கு என்ன கனவு வந்துதுன்னு சொன்னா உங்களுக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிரும்..// தனிமடலில் உங்க கனவை சொன்னதற்கு நன்றி. ஏதோ அர்ஜண்ட் வேலை இருக்கு என்று என்னிடம் சொல்லிவிட்டு சென்றார். உங்களை பார்க்க தானா ? பேஷ் பேஷ்.

சென்ஷி said...

////நேத்து எனக்கு என்ன கனவு வந்துதுன்னு சொன்னா உங்களுக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிரும்..// தனிமடலில் உங்க கனவை சொன்னதற்கு நன்றி. ஏதோ அர்ஜண்ட் வேலை இருக்கு என்று என்னிடம் சொல்லிவிட்டு சென்றார். உங்களை பார்க்க தானா ? பேஷ் பேஷ்.//

ரவி..அப்படியே அந்த கனவ எனக்கும் ஃபார்வர்ட் பண்ணுங்க

சென்ஷி

IdlyVadai said...

செந்தழல் ரசி அனுமதி கொடுத்தால் 'அந்த' கனவை பொதுவில் வைக்க நான் தயார்.

செந்தழல் ரவி said...

சென்ஷி...தட்டியாச்சு பாருங்க...முதல்ல டெல்லியில் இருந்து சென்னை பக்கம் வாங்க...பா.க.ச. கொஞ்சம் காஞ்சு போயிருக்கு...


//தனிமடலில் உங்க கனவை சொன்னதற்கு நன்றி. ஏதோ அர்ஜண்ட் வேலை இருக்கு என்று என்னிடம் சொல்லிவிட்டு சென்றார். உங்களை பார்க்க தானா ? பேஷ் பேஷ்.//

அடப்பாவி இட்லிவடையே...!!! உமக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு கேள்விப்பட்டேன்...இந்த விஷயம் அவங்களுக்கு தெரியுமா ? ( செகண்ட் ஹேண்ட்ல வாங்குற மேட்டரா அது ) கருமம் கருமம்..!!!!

செந்தழல் ரவி said...

அய்யோ அய்யோ வேண்டாம் மானத்தை வாங்கிறாதேப்பு...:))))))))

செந்தழல் ரவி said...

ஒரு பொண்ணுகிட்ட அடிவாங்க வேண்டியிருக்கும் நானு...இது ஆண் குலத்துக்கே அவமானமில்லையா ?

IdlyVadai said...

செந்தழல் ரவி - ஒரு டவுட். நேற்று கனவில் வந்தவர் டென்னிஸ் பேட்டை வைத்துக்கொண்டு எந்த பந்தை எப்படி அடித்தார் ?

சென்ஷி said...

கனவ படிச்சுட்டேன்.

கிசுகிசுவாக்கூட போட முடியாதேப்பா. உண்மையிலேயே சந்தோஷமான கனவுதான், நமக்குத்தான் கனவுல கூட பசுமை தெரிய மாட்டேங்குது

சென்ஷி

✪சிந்தாநதி said...

ஏதோ கனவு கினவுன்னு காதுல விழுது நம்கும் கொஞ்சம் தட்டுங்கப்பா....

ஐயா இட்லி வடை. நல்லதா ஒரு மேட்டர் தேறிடுச்சேன்னு சுரதால மாத்தி எடுக்கவும் கரண்ட் போயிடுச்சு. இங்க வந்து பாத்தா நீரு கனவை களவாடிட்டிரே...

Anonymous said...

தனது கனவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வந்ததாகவும், அப்போது ஒரு கதையைக் கூறி, அதில் பிரபுவை நடிக்க வை என்று கூறியதாகவும், பிரபுவின் கால்ஷீட் வாங்கித் தர உதவுமாறு முதல்வரை பார்க்க வந்ததா

Tamilnadu CM would have obliged her, had she happened to be a rich lady. The only condition he would have put was that he would inagurate the shooting of the film.

Anonymous said...

நமக்குத்தான் கனவுல கூட பசுமை தெரிய மாட்டேங்குது

Dont read bloggers by bachelors :)

சென்ஷி said...

//செந்தழல் ரவி - ஒரு டவுட். நேற்று கனவில் வந்தவர் டென்னிஸ் பேட்டை வைத்துக்கொண்டு எந்த பந்தை எப்படி அடித்தார் ?//

அது சரி..இப்படியெல்லாம் கேட்டு சின்னபசங்க மனச புண்படுத்த கூடாது.

ரவி, எத்தன மணிக்கு கனவு கண்டீங்க. ஏன்னா காலையில் கண்ட கனவு பலிக்குமாம்.
பலிச்சிடப்போகுது. (வயித்தெரிச்சல்)
:))))

சென்ஷி

We The People said...

//செந்தழல் ரவி - ஒரு டவுட். நேற்று கனவில் வந்தவர் டென்னிஸ் பேட்டை வைத்துக்கொண்டு எந்த பந்தை எப்படி அடித்தார் ?//

ஆனாலும் இட்லிவடை உமக்கு குறும்பு ஓவர் தான்... அனேகமா உங்களுக்கு ச(சா)னியா உச்சத்துல இருக்கா? .... ;)

நாகு (Nagu) said...

செந்தழலாரே,

கனவுக் கதையை எனக்கு அனுப்பாவிட்டால், நடேசன் பார்க்குக்கு 3 ஆட்டோ வரும் என அன்புடன் எச்சரித்துக் கொள்கிறேன்.