பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 01, 2007

காதலர் தினத்துக்கு தடை - ராமதாஸ்

காதலர் தினத்துக்கு தடை விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.

பிப்ரவரி 14ம் தேதியை காதலர் தினம் என்ற பெயரில் கொண்டாடும் கலாச்சார சீரழவு நடந்து வருகிறது. இது தமிழர்கள் மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது. பாரம்பரியத்திற்கும் முரணானது. எனவே இதற்கு திமுக அரசு தடை விதிக்க வேண்டும்.

காதலர் தினம் என்று சொல்லிக் கொண்டு அந்த நாளில் இளைஞர்கள் தெருக்களில் அசிங்கம் செய்கிறார்கள். இதன் மூலம் இளைய சமுதாயம் சீரழிகிறது. காதலர் தினம் என்ற பெயரில் தெருக்களில் ஆடிப் பாடுவதும், ஆபாச செயல்களில் ஈடுபடுவதும், கலாச்சாரத்தைக் கெடுப்பதையும் அனுமதிக்க முடியாது.

காதலிப்பதை தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் அது தனிப்பட்ட நிகழ்வாக இருக்க வேண்டும். மாறாக, அதை தெருவில் வந்தா கொண்டாடுவது? பொது இடத்தில் வைத்து நாலு பேர் பார்க்கும் வகையிலா கொண்டாடுவது?

13 Comments:

சிநேகிதன் said...

தமிழ்மண விவாதக்குழுவுக்கு ஒரு நல்ல தலைப்பை கொடுத்துவிட்டீர்.

இனி இந்த கூட்டம் "காதலர் தினம்" தேவையா? இல்லையா? என்று அடித்துக்கொள்ளும்.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

யாரிடம் கோரியுள்ளார்?

மாநில அரசு?

(மாநில அரசே இவர் தயவில்தான் ஓடுகிறது.அவர்கள் தடை செய்யாவிட்டால் ஆதரவை விலக்கி விடுவாரா?)

மத்திய அரசு?
(அங்கும் இவர் கூட்டணிதான்.தடை செய்யாவிட்டால் என்ன செய்ய ப்போகிறார்? வாபஸ்?)

நீதி மன்றம்?

(வழக்கு போடப்பட்டு உள்ளதா?)

இ.வ வெவரம் ப்ளீஸ்

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

ஓ..சாரி சார்...
சரியா படிக்கல..
//இது தமிழர்கள் மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது. பாரம்பரியத்திற்கும் முரணானது. எனவே இதற்கு திமுக அரசு தடை விதிக்க வேண்டும்.//

சோ(so) மாநில அரசிடம் கோரியுள்ளார். நியாயமான கோரிக்கை. அப்படியே சன்,குங்குமம் செய்யும் கலாச்சாரம்,பாரம்பரியம் விசயங்களையும் தடுத்து நிறுத்த இலவச இணைப்பாக கேட்கலாம். அப்படியே இந்த "உச்சகட்ட" விளம்பரத்தையும் (யெஸ்.பாலபாரதி பதிவைப் பார்க்கவும்) பிய்த்துப் போடலாம். புண்ணியமாப்போகும்.

IdlyVadai said...

கல்வெட்டு - திண்டிவனத்தில் நிருபர்களிடம் சொல்லியிருக்கிறார். இதெல்லாம் ரொம்ப சிரியஸாக எடுத்துக்காதீங்க.

பதிவுகள் தமிழ்மணத்தில் பதிய முடியவில்லை. என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.

ரவியா said...

//இது தமிழர்கள் மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது. //

இங்கிளிசு சேக்காம தமுளு முதல பேசட்டும்பா

Anonymous said...

மரங்களை வெட்டுவதே ப.ம.க. கலசசாரம்

Anonymous said...

NO Celebration in WEST. BUT we Indians Import all DIRTY CULTURE
from west.

PMK Ramodas is right. welcome him.

bala said...

இட்லிவடை அய்யா,

எனக்கு என்னவோ மருத்துவர் அய்யா சொல்வது சரி என்று படுகிறது.நிறைய பேர் அன்னிக்கு க்ரீடிங் கார்ட் கொடுப்பாங்க.பேப்பர் நிறய வேஸ்ட் பன்ணுவாங்க.எத்தனை மரத்தை வெட்டியிருப்பாங்க,பேப்பர் உற்பத்தி செய்யரவங்க.ஆனா மர வெட்டி அய்யா இதை சொல்வது தான் கொஞ்சம் இடிக்கிறது.அது சரி கார்ட்டூன்ல மருத்துவருக்கே பூணுல் மாட்டி விட்டுட்டீங்களே? கிண்டலா?ஷோக்காத் தான் இருக்காரு மன்மத மருத்துவர்.

பாலா

Prince Ennares Periyar.S said...

மருத்துவர் சொல்கிற காதலர் தினம் பற்றிய கருத்து எனக்கு உடன்பாடில்லாததுதான். அவரது பல அறிவிப்புகள், நிலைப்பாடுகள் போன்றவற்றில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனாலும், அவரை மரம்வெட்டி என்று அடையாளப்படுத்துகிற 'தினமலர்' புத்தியை நாம் பயன்படுத்தக்கூடாது. மரம் வெட்டியது எப்போது, எதற்காக என்பதை பார்க்க வேண்டும்.

இடஒதுக்கீடு போராட்டத்தின்போது,
போராட நினைத்த விவசாயி, கிராமத்துக்காரன் பிறர் கவனத்தைக் கவர, தன் போராட்ட வடிவத்தை தன்னை சுற்றி இருப்பவைகளைக் கொண்டுதான் நடத்திக் கொள்வான். சிறையிலிருப்பவன் தட்டுகளைத் தட்டிதான் போராடுவான். அப்படித்தான் இதுவும். அவனால் வலைப்பூக்களில் வந்தா எதிர்ப்பு சொல்லமுடியும்?

இன்னும் அவன் தான் மரத்தை வைத்தான், இயற்கையோடு வாழ்கிறான், பராமரிக்கிறான். நாளைக்கும் அவன் தான் செடி நடப்போகிறான்.

பசுமைத்தாயகம் மூலம் திரு.ராமதாஸ் தூண்டுதலில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரங்களும், அவர்கள் சுற்றுச்சூழலியலில் செலுத்தும் அக்கறையும் பாராட்டுக்குரியது. அமைச்சர் அன்புமணியின் தொடர் செயல்பாடுகளும், புகைத் தடை தொடர்பான முயற்சிகளும் இங்கு கவனத்திற்குரியன. சுற்றுசூழல் குறித்து கவனம் கொள்கிற அரசியல் இயக்கமாக பா.ம.க. ஒன்றைத்தான் பார்க்க முடிகிறது.

அதையும் தாண்டி அவரை மரம்வெட்டியாக அடையாளப்படுத்த முயல்வது அசல் பார்ப்பனத்தனமாகவே இருக்கும்.

ஆனால், காதலர் தினம் குறித்தும், தமிழ் கலாச்சாரம் என்ற பெயரிலான அவரது சில நிலப்பாடுகளும் நம்மை பின்னோக்கி அழைத்துச் செல்வதாகவும், ஜாதிய முறைமைக்குள் கொண்டு செலுத்தும் அபாயத்தை நாம் உணர வேண்டும்.

Anonymous said...

என்ன இன்னுமா நம்ம குழலி வரல்ல?.....சரிசரி, ஏதாவது பிரிண்ட் எடுத்துக்கிட்டிருப்பாரு தமிழக அரசிடம் சிபாரிசுக்கு, அல்லது மானமிகுவின் சிபாரிசுக்கு......

செந்தழல் ரவி said...

காதலர் தினத்தால் கலாச்சார சீரழிவு வந்திடாது என்பது என் கருத்து. சில கிராமத்துல நடக்கற விஷயங்களை பார்த்தீங்கன்னா வெஸ்ட்டுகே சவால் விடப்படும்...போனாபோவுது லூஸ்ல விடலாமே...இவர் சிவசேனா மாதிரி ஆகிட்டு வரார்...

Muthurajan said...

இவர் சிவசேனா மாதிரி ஆகிட்டு வரார்...

Repeat

Rajasekar said...

Ramdoss wants to be in the news always by making loose statements.


| அதையும் தாண்டி அவரை மரம்வெட்டியாக அடையாளப்படுத்த முயல்வது அசல் பார்ப்பனத்தனமாகவே இருக்கும். |
Periyar Anna .. your statements are not in good sense.