பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 28, 2007

'கேப் மாறி' என்றால் என்ன ?

'கேப் மாறி' என்றால் என்ன ? விடையை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
( இட்லிவடை தான் கேப் மாறி என்று நக்கல அடிக்க வேண்டாம் :-))

25 Comments:

Anonymous said...

கேள்வி கேட்டுவிட்டு, சரியான விடை மட்டும் வேண்டாம் என்றால் எப்படி?

:-))))

Anonymous said...

உம்மை முதலில் கேப்மாரி என்று திட்டிய மொள்ள மாரி யார் ? அந்த முடிச்சவிக்கியை நானும் திட்டுவேன்.

செந்தழல்

தமிழி said...

ஆங்கிலேயர் காலத்திற்க்கு முன்னர் தமிழரில் சிலர் தலைப்பாகை அணிந்தனர். ஆங்கிலேயர் கேப் (CAP) தான் அணிவர்.
ஆங்கிலேயர் ஆளும்போது "ஜால்ரா" அடிக்கும் அவ்வினம் மற்றும் சில தமிழர்கள் தலைப்பாகையிலிருந்து கேப்புக்கு(CAP) மாறினர்.

இவர்கள் தான் தலைப்பாகையிலிருந்து கேப்புக்கு மாறியபடியால் கேப்மாறிகள் என அழைக்கப்பட்டனர்.

- எனது விளக்கமல்ல பெரும்பாலோனோர் சொல்வது.

4 வருடம் ஆட்சி செய்துவிட்டு ஆதரவு தந்த கட்சி மத்தியில் பலமிழக்கிறது என்றவுடன் எதிரணியரிடம் நாங்கள் மதச்சார்பற்றவர்கள் இல்லையெனில் தேசியமுற்போக்கு என்றெல்லாம் கூறுபவர்கள் தான் மாறிகள் என்பார் சிலர்..(இது இட்லி வடை ஸ்டைலா?? :) )

என்னைப் பொருத்தவரை தமிழ் அகராதியில் இல்லாத வழக்கில் சொல்லுக்கு அர்த்தம் தேடுவது இட்லிவடையாரின் உள்குத்தே ;)

IdlyVadai said...

தமிழி உங்கள் விளக்கம் சரி. மற்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்க்கலாம் பிறகு உங்க விளக்கத்தை பிரசுரிக்கிறேன்.

Anonymous said...

'கேப்'பில் 'மாறி' பொழிபவன் தான் "கேப்மாறி".

இப்போ புரியுதா

இலவசக்கொத்தனார் said...

ஒரு சின்ன கேப் கிடைச்சாக்கூட கட்சி மாறிடறவன்.

(இதுனால எதாவது ஒன்றிரண்டு கட்சித் தொண்டர்கள் டென்ஷனாகி, எனக்கு எதாவது திட்டு கிடைச்சா அது இட்லிவடைக்கே அர்ப்பணம்.) :))

SurveySan said...

டிக்ஷனரில போடப் போறாளா?

சீனு said...

ஒரு வேளை இந்திய அணிக்கு கேப்டன் மாற்றம் பற்றியதோ?

மாசிலா said...

ஆஹா!
இதுவல்லவா தமிழ் ஆராய்ச்சி!

ச்சீ!
புள்ளைங்களா நீங்க!
:-)

மாசிலா said...
This comment has been removed by the author.
Simulation said...

தலைப்பாகை அணிந்த தமிழர்கள்
"கேப்" அணிந்த ஆங்கிலேயர் போல, கேப்பிலே மாறிவிட்டதால் "கேப் மாறி"களானாரோ?

Anonymous said...

Actually this is the real reason..

In older days (before our indian freedom) tamilians mostly use to wear "mundaasu","thalai paagai" etc . But due to westernization several people stopped wearing those cultural identities and started wearing caps and hats. So this Tamil word "Cap" - "Maari" (a person who started wearing a cap, ignoring Mundasu, thalaipaagai etc)came into existance. Hope i am correct.

Ramu

IdlyVadai said...

சரியான விடை சொன்ன தமிழி, சிமுலேஷன், ராமுக்கு வாழ்த்துக்கள்

மாசிலா said...

ஓஹோ. இதுதான் அதற்கு அர்த்தமா?
நன்றி விளக்கியதற்கு.

இதே வேளையில் நான் இன்னொரு உண்மையையும் தெரிந்து கொண்டேன். அடித்தள மக்கள் மட்டுமே உபயோகிக்கும் இவ்வார்த்தை இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டு வருகிறது. இதுபோல் இவர்களின் உதவியால் இன்னும் பல வார்த்தைகள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அவர்களுக்கு நன்றி சொல்வோம்.

Hariharan # 26491540 said...

அப்ப கேப்மாறித்தனம் என்பது "வீட்டு தெய்வத்தை வெளக்குமாத்தால அடிச்சுட்டு காட்டு தெய்வத்தைக் கை எடுத்துக் கும்பிட்டமாதிரி" என்பதன் Nutshell எனக் கொள்ளலாம் :-))

enRenRum-anbudan.BALA said...

IV,

Don't you have any other USEFUL work to do today ? ;-)

IdlyVadai said...

எ.அ.பா, யாரும் 300 பதிவு எழுதிதர சொல்லவில்லை அதனால் இதை எழுதினேன். :-)

enRenRum-anbudan.BALA said...

It is my TERRIBLE MISTAKE that I asked you this question :)))

BTW, I am expecting your comments on my comments to your 'vimarsanam' posting in my blog, DEFINITELY !

Don't disappoint me :)))))

IdlyVadai said...

as requested by you, I have commented in your blog ~idlyvadai

சுபமூகா said...

BTW, Bala:
What is your comments on
IV's comments about
your comments on
IV's comments on
your comments [i.e., your blog post]
;-)

enRenRum-anbudan.BALA said...

//
சுபமூகா said...
BTW, Bala:
What is your comments on
IV's comments about
your comments on
IV's comments on
your comments [i.e., your blog post]
;-)
//
kusumbu :) Anyway, nice !!!

IdlyVadai said...

சுபமுகா, கொஞ்சம் இருங்க பாலா யோசிக்க வேண்டாமா :-)

raj said...

capmaari vilakkam sari. Appo Somaari? Is it "Cho Maari"? Cho maahdiri irukkaravanga Chomaari(@) Somaariya?
Adikak varadheenga :-)

து. சாரங்கன் / Saru said...

இதே பாணியில் சொப்புமாறி என்றால் பிக்பாக்கெட் என்று அர்த்தம்.

முள்ளமாறி/மொள்ளமாறி என்றால் என்னவென்று யாருக்காவது தெரியுமா??

Anonymous said...

thank god ,my grandfAther always had a turban,not a cap!!!!
but gandhi also wore a cap ,so ,kape maari, as an adjective to describe ' british jalra' is not quite right ,dont you think?