பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 05, 2007

பக்தியா ? மரியாதையா ?

சாய்பாபா காலில் என் மனைவி விழுந்தது பக்தியால் அல்ல; பெரியவர்களுக்கு மரியாதை காட்டும் மரபுதான் - முதல்வர் கருணாநிதி

கலைஞர் அறிக்கை
மனிதருக்குப் பகுத்தறிவு எந்த அளவுக்கு தேவையோ, அந்த அளவுக்குப் பண்பாடும் தேவை. என் மனைவி, பக்தி மேலிட்டுக் காலில் விழவில்லை. வயதில் பெரியவர்கள் வந்தால் அவர்களை வணங்குவது என்ற மரியாதை காட்டும் மரபுதானே தவிர வேறில்லை. 1948-ல் எனக்கும் தயாளுவுக்கும் திருமணம் நடக்கும்போதே திருமாகாளம் கிராமத்தில் அந்தக் குடும்பத்தினர் தீவிர திராவிடர் கழகத்தினர். 1938-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்தான் தயாளுவின் பாட்டியார் ராஜாமணி அம்மாள்.

கீ.விரமணி ( ஆனந்த விகடன் பேட்டி )
"..தயாளு அம்மையார் பாபாவிடம் ஆசி வாங்கியதிலும் எங்களுக்கு உடன்பாடில்லை. ஏனென்றால், காலில் விழும் கலாசாரத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இருந்தாலும், தயாளு அம்மாள் கடவுள் நம்பிக்கையாளர். தங்கள் வீட்டுக்கு வந்தவரை மதிக்க வேண்டும் என்பதால் காலில் விழுந்திருக்கலாம் . அதைக் கண்டிக்க மாட்டோம். அதை எதிர்த்துப் பிரசாரமும் செய்ய மாட்டோம். கலைஞரின் மூத்த தமக்கையாருக்கே கடவுள் நம்பிக்கை இருந்தது. எங்களுக்கு அவருடைய குடும்பத்தினர் பற்றியெல்லாம் கவலை இல்லை"

3 Comments:

Anonymous said...

சம்பவம் நடந்து முடிந்து 15 நாட்களுக்கு அப்புறம், வந்தவங்களெல்லாம் திரும்பி போனதுக்கப்புறம், ஊர்லே இருக்கிற பத்திரிக்கையெல்லாம் எல்லாம் எழுதி முடிச்சு, அடுத்த மேட்டருக்கு போனதுக்கப்பறம், நின்னு, நிதானிச்சு, நல்லா யோசனை செய்து, தன்னை எவனும் கேட்காததினாலே தானே கேள்வி கேட்டு கொடுத்த பதில்.

நன்மனம் said...

//சம்பவம் நடந்து முடிந்து 15 நாட்களுக்கு அப்புறம், வந்தவங்களெல்லாம் திரும்பி போனதுக்கப்புறம், ஊர்லே இருக்கிற பத்திரிக்கையெல்லாம் எல்லாம் எழுதி முடிச்சு, அடுத்த மேட்டருக்கு போனதுக்கப்பறம், நின்னு, நிதானிச்சு, நல்லா யோசனை செய்து, தன்னை எவனும் கேட்காததினாலே தானே கேள்வி கேட்டு கொடுத்த பதில்.//

ஹா....ஹா....ஹா.....

தாங்கலடா சாமி ஒங்க லொள்ளு.

Hariharan # 26491540 said...

//சாய்பாபா காலில் என் மனைவி விழுந்தது பக்தியால் அல்ல; பெரியவர்களுக்கு மரியாதை காட்டும் மரபுதான் - முதல்வர் கருணாநிதி//

அட்றா சக்கை! இந்த மரியாதையைச் செய்யும் பாரம்பரியத்தை மறுப்பது தானுங்க பகுத்தறிவாச் சொல்லிக்கிட்டதுங்க!

ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்ப்பா கண்ணைக்கட்டுதே!

எப்படி கருணாநிதியால் மட்டும் இப்படி?

100ரூபாய் மஞ்சள் துண்டுக்கே துண்டு துண்டா 108 காரணம் இதுவரை சொல்லியாச்சு (ஸ்டாக்ல இன்னும் 108 இருக்கு:-))

மனைவி தயாளு அம்மா சாய்பாபா காலில் விழுந்ததுக்காக 1008 காரணம்
சொல்ல வேண்டிய கடமை இருக்கே!

வாயைத் திறந்து ஏன்னு கருணாநிதியைக் கேட்டா பின்ன 1008 காரணம் கேட்டு அவதிப்படணுமேன்னு பயத்தில் ஏன்னு கேட்கவே இல்லை என்றாலும் வாழைமட்டைத் தமிழன் 1008க்கு பிள்ளையார் சுழி போட்ட இந்தக் காரணத்தைச் சோற்றால் அடித்த பிண்டமாக இருந்து கேட்டாக வேண்டிய கட்டாயம் :-))

கருணாநிதி குடும்பம் பகுத்தறிவானதுதான் போதும் விட்டுடுங்கோன்னு தமிழன் அலறுவது கேட்கிறதா:-))