பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 14, 2007

ரோஜா தெரியாத தகவல்கள் !

காதலர் தினத்திற்கு உதவும் ரோஜா பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்கள் சில


* தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் இருக்கும் மாலூர் என்ற இடத்தில் பிளாஸ்டிக் கூடாரத்தில் ரோஜாக்கள் வளர்க்கப்படுகிறது.

* சுமார் 1000 ஏழை பெண் குழந்தைகள் சுறுசுறுப்பாக இங்கு வேலை செய்கிறார்கள்.

* இந்த பெண் குழந்தை தொழிலார்களுக்கு கூலி 20-25 ரூபாய். ஏற்றுமதி ஆகும் ஒரு ரோஜாவின் விலை வெளிநாடுகளில் (ஹாலாந் ஜப்பானில்) 100 ரூபாய்.

* பெங்களூரிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு விமானம் அளவிற்கு ரோஜாக்கள் ஏற்றுமதி ஆகிறது. காதலர் தினம் போன்ற விஷேச நாட்களில் இது பன் மடங்கு அதிகரிக்கிறது. குழந்தைகளும் இரண்டு ஷிப்டுகளில் வேலை பார்க்கிறார்கள்.

* ஒரு நாளைக்கு சில பெண் குழந்தைகள் 10,000 மேற்ப்பட்ட ரோஜாக்களை பறிக்கிறார்கள்.

* ரோஜாக்களை மென்மையாக பறிக்க வேண்டும் அதனால் பெண் குழந்தைகள் தான் இங்கு அதிகம் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள் !

4 Comments:

Anonymous said...

யேன் இன்கே மனிதம் பேசியவர்கல் யாரயும் கானோம் !

பத்மா அர்விந்த் said...

வருத்தம் தரும் தகவல்கள். உண்மையில் இது போல குழந்தைகள் வேலைக்கு செய்வதை தடுத்து, கல்வி வழங்க வேன்Dஉம்.அந்த குழந்தையின் வருவாய் ஈடு செய்யும் வகையில் பெற்றோருக்கு மாற்று ஊதியம் அல்லது சலுகைகள், மிக குறைந்த வருமானம் அல்லது வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கான உணவு திட்டங்கள் வரவேண்டும்.
உங்கள் பதிவை படிக்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சில சமயம் நான் உங்களை அனுமதி கேட்க வேண்டுமெ ன்றும் தகவல் வருகிறது. எப்படி என்று தெரியாததால், முயற்சித்து விட்டுவிடுகிறேன்.

IdlyVadai said...

நீங்கள் சொல்லுவது சரி, ஆனால் யார் பூனைக்கு மணி கட்டுவது. லண்டனில் 15,000 இந்திய டாக்டர்கள் போராடுகிறார்கள் எதற்கு ? அவர்களில் எவ்வளவு பேர் இந்தியா வந்து ஏழைகளுக்கு போராடுவார்கள் ? நன்றாக யோசித்தால் இந்த ஏழை பெண் குழந்தைகளின் நிலைமைக்கு நாமும் ஒரு வகையில் காரணம் தான்.

//உங்கள் பதிவை படிக்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சில சமயம் நான் உங்களை அனுமதி கேட்க வேண்டுமெ ன்றும் தகவல் வருகிறது. எப்படி என்று தெரியாததால், முயற்சித்து விட்டுவிடுகிறேன்.//

நண்பர் தேன்கூடு கல்யாண் அவர்களின் மறைவிற்கு ஒரு நாள் இட்லிவிடை மூடப்பட்டது, அதனால் இருக்கலாம்.

பத்மா அர்விந்த் said...

//நன்றாக யோசித்தால் இந்த ஏழை பெண் குழந்தைகளின் நிலைமைக்கு நாமும் ஒரு வகையில் காரணம் தான்// உண்மையான வார்த்தைகள். பேச, விவாதிக்க முடிந்த அளாவு தனிப்பட்ட கடமைகளால் செய்ய விரும்பி செய்யமுடியாதவர்கள் பலர். இப்பொதைக்கு வருத்தப்பட மட்டுமே முடிகிறது.