பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 08, 2007

மன்னரின் ஓவியம்

இன்று ஒரு சின்ன கதை.

ஒருமுறை விவேகானந்தர் ஒரு மன்னரை பார்க்க போயிருந்தார். மன்னருக்கு ஆன்மிகத்தில் அவ்வளவாக நாட்டமில்லை. குறிப்பாக விக்ரக ஆராதனையை அவர் கேலிகூட செய்வார். விவேகானந்தர் வந்த போது அவரிடமும் விக்கிரக வழிபாட்டை கிண்டலடித்து விமர்சனம் செய்தார்.

அவருக்கு அவருடைய வழியிலேயே போய் பாடம் புகட்டவேண்டும் என்று விவேகானந்தர் நினைத்து கொண்டார். 'விக்ரகம் என்பது கடவுளின் ஒரு அடையாளம் என்று அதனை வழிபடுவதன் மூலம் நாம் கடவுளையே காண முடியும்' என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார், விவேகானந்தர். ஆனால் மன்னர் திருப்தியடைவதாக இல்லை.

விவேகானந்தர் அரசவையில் பிரமுகர்களை வரவழைத்தார். அந்த அறையில் இருந்த மன்னனின் ஓவியத்தை அவர்களிடம் காட்டினார். 'இது மன்னர் அவர்களின் ஓவியம், இதன் மீது எச்சில் துப்புங்கள்' என்று அவர்களிடன் சொன்னார். அவர்கள் பதைபதைத்துவிட்டார்கள். 'என்ன கொடுமை இது?' மன்னர் ஓவியத்தை அவமரியாதை செய்யலாமா?" என்று கேட்டார்கள். 'இது வெறும் ஓவியம்தானே, இதற்கு உயிர் இருக்கிறதா என்ன? நீங்கள் அவமரியாதை செய்தாலும் இதை கண்டு இந்த ஓவியம் கோபம் கொள்ளப் போகிறதா என்ன? பிறகு ஏன் தயங்குகிறீகள் ?' என்று கேட்டார் விவேகானந்தர். இது உயிரற்ற ஓவியமாக இருந்தாலும் இதனை நாங்கள் மன்னராகவே பாவிக்கிறோம்' என்று அவர்கள் ஒன்றுபட்டு உரத்த குரலில் சொன்னார்கள்.

விக்ரக வழிபாடு இப்படிப்பட்டதுதான், விவேகானந்தர் மன்னரிடம் சொன்னார். நாம் பார்க்க முடியாத கடவுளை ஒரு உருவமாக நாம் வழிபடுகிறோம். அதனால் ஒன்றும் தவறில்லை. கடவுளையே நேரடியாக வழிபடுவதுபோலத் தான் இது

மன்னர் புரிந்து கொண்டார்.

புத்தக கண்காட்சியில் வாங்கிய 'ஆன்மிக ஸ்வீட் ஸ்டால்' புத்தகத்திலிருந்து ஒரு சின்ன கதை. பிரபு ஷங்கர், வரம் பதிப்பகம்(கிழக்கு)

3 Comments:

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

இந்தப்பின்னுட்டம் விவேகானந்தருக்கு: :-)))

(வலைப்பதிவுல கருத்துச் சொன்னா பின்னூட்டம் வாங்கித்தானே ஆகணும்)

காவி உடுப்பையும் தாண்டி உங்களது கம்பீரமும்,பேச்சுக்களும்,மதம் தாண்டிய நல்ல கருத்துக்களும் எனக்குப்பிடிக்கும் என்றாலும் இந்த படம்/உருவ வழிபாடு விளக்கத்திலே சொதப்பீட்டீங்களே சார்.


உங்க விளக்கம் நன்றாகவே இருக்குதுசார். ஆனா எதிரி நாட்டு மன்னனின் படத்தை வைத்து துப்பச் சொன்னால் எல்லாரும் துப்புவார்கள்.

இவர்கள் துப்பாமல் இருந்தது பக்தி அல்ல பயம் அல்லது விசுவாசம்.இரண்டும் ஒன்னுன்னா கடவுளைப் பார்த்தும் மக்கள் பயப்படுகிறார்கள் என்றா சொல்றீங்க?

மக்களைப் பயப்படச் செய்பவன் எப்படி அன்பின் வடிவான கடவுளா இருக்க முடியும்.

மார்க்கட்டுல பல படங்கள் கிடைக்குதுசார். யாரும் அவர் விரும்பும் (நம்பும்) படத்துக்கு சாணியடிப்பது இல்லை.

அடிப்பது,துப்புவது எல்லாம் இவர்கள் நம்பாத மத்த படங்களுக்குத்தான்சார்.

எந்தப்படம் சார் ஒசத்தி?

நீங்களே இதுதான் உசத்தின்னு பேசுறதுக்காகத்தானே போனீங்க? மதத்தைவிட மனிதம்தான் உசத்தின்னு சொல்லவா போனீங்க இல்லையே.

Labels: விவேகானந்தரைக் கலாய்த்தல்

.

Anonymous said...

//இவர்கள் துப்பாமல் இருந்தது பக்தி அல்ல பயம் அல்லது விசுவாசம்.இரண்டும் ஒன்னுன்னா கடவுளைப் பார்த்தும் மக்கள் பயப்படுகிறார்கள் என்றா சொல்றீங்க?
//

உன்கலக்கு வசதியா மக்கள், மன்னெர் மிது அண்பு வைகவில்லை னு சொன்ன எப்படி?

பக்தி = Mutual (அண்பு + விசுவாசம்)

இவர்கல் எல்லாம் தம் தாய், தண்தை படஙகலை வனன்க மாடார்க்கல்....இவர்கல் பகுதரிவாலர்கல்....னல்லவர்கல்!!!

Anonymous said...

பாம்பு எதிரில் வந்தால் அடிச்சி கொல்றிங்க ஆனா பாம்பு புத்துக்கு பால் ? என்ன முரண்பாடு ?