பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 07, 2007

அவர்தாம் பெரியார்

பெரியார் ரசிகர்கள், அவர் கொள்கைகளை எதிர்க்கிறவர்கள் எல்லோரும் நிச்சயமாக படிக்க வேண்டிய கட்டுரை. 19.9.2004 ஜூனியர் விகடனில் ஞாநி எழுதிய கட்டுரை.

தீண்டாமை என்ற மிகப் பெரிய சமூகக் கொடுமைக்கு எதிராக இருபதாம் நூற்றாண்டில் நடந்த முதல் மாபெரும் போராட்டம்... வைக்கம் போராட்டம்! 1924-ல் நடந்த அந்தப் போராட்டத்துக்குக் காரணம், மாதவன் என்ற ஈழவ சாதி வக்கீலை திருவனந்தபுரம் நீதிமன்றத்துக்குள் பணிக்குச் செல்லவிடாமல் தடுத்ததுதான். நீதிமன்றம் அரண்மனை வளாகத்தில் இருந்தது. மகாராஜா பிறந்த நாளுக்காக யாகம் நடந்துகொண்டிருந்தது. அப்போது ஈழவர் அந்த வளாகத்தில் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று மாதவன் தடுக்கப்பட்டார்.

கேரளா முழுவதும் கோயில்களை சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் நடக்கக்கூடாது என்ற தடை இருந்தது. இதையெல்லாம் எதிர்த்துதான் வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில், நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டது. போராட்டத்தை முன்னெடுத்த 19 முக்கிய தலைவர்களும் கைதானதும், போராட்டம் தொய்வடைந்தது. சிறையில் இருந்த தலைவர்கள் ஜார்ஜ் ஜோசப்பும் கேசவ மேனனும் அன்றைய சென்னை மாகாண காங்கிரஸ் செயலாளருக்குக் கடிதம் அனுப்பினார்கள். 'நீங்கள் வந்து தலைமை ஏற்றால்தான் போராட்டம் தொடர முடியும். உடனே வாருங்கள்' என்ற அந்தக் கடிதம் வந்தபோது, பண்ணைபுரத்தில் பொதுக்கூட்டம் பேசிவிட்டு, ஈரோடு திரும்பிவந்த காங்கிரஸ் செயலாளர் உடனே வைக்கம் சென்றார். அவர் தலைமை ஏற்றபிறகுதான் வைக்கம் போராட்டம் சூடுபிடித்தது. அவர்தான் 'அய்யா', 'பெரியார்', 'தந்தை பெரியார்' என்றெல்லாம் அன்புடன் பலராலும் அழைக்கப்படுகிற ஈ.வெ.ராமசாமி (1879-1973).

பெரியார் தன் அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் காரராகத்தான் தொடங்கினார். ஈரோடு நகராட்சித் தலைவராகவும் பெரும் வியாபாரியாகவும் இருந்தவரை அரசியலுக்கு அழைத்துவந்தவர்கள் ராஜாஜி, வரதராஜுலு நாயுடு இருவரும்தான்.

அரசியலுக்கு வந்ததும் அரசாங்கப் பதவிகளைப் பிடிப்பதுதான் பலருக்கும் லட்சியம். ஆனால், பெரியார் அரசியலுக்குள் நுழையும்முன்பு, தான் வகித்துவந்த பல்வேறு பதவிகளை உதறிவிட்டு வந்தார். வியாபாரிகள் சங்கத் தலைவர், தென்னிந்திய வியாபாரிகள் சங்க நிர்வாக சபை உறுப்பினர், இன்கம்டாக்ஸ் டிரிப்யூனல் கமிஷனர், டவுன் ரீடிங் ரூம் செக்ரெட்டரி, ஹைஸ்கூல் போர்ட் செக்ரெட்டரி, தாலூகா போர்ட் பிரசிடெண்ட், முனிசிபல் சேர்மன், ஜில்லா போர்ட் மெம்பர், வாட்டர் ஒர்க்ஸ் கமிட்டி செக்ரெட்டரி, ப்ளேக் கமிட்டி செக்ரெட்டரி, தேவஸ்தான கமிட்டி செக்ரெட்டரி, தேவஸ்தான பிரசிடெண்ட், உணவு கண்ட்ரோல் டிஸ்ட்ரிப்யூஷன் ஆபீஸர் உட்பட மொத்தம் இருபத்தொன்பது பதவிகளையும் விட்டுவிட்டு அரசியலில் நுழைந்தார். கடைசிவரை தேர்தலில் போட்டியிடவில்லை. எந்த அரசுப் பதவியையும் வகிக்கவில்லை. அவர் மறைந்தபோது அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார். காந்திய இயக்கம், பொது உடைமை இயக்கம், திராவிட இயக்கம் என்று தமிழ்நாட்டின் மூன்று பெரும் இயக்கங்களிலும் தீவிரப் பங்காற்றிய முதல் பெரும் தலைவர் அவர்தான். காங்கிரஸில் காந்தியின் தலைமையை ஏற்று இருந்தபோது, தமிழகம் முழுவதும் கதர் துணியைப் பரப்பினார். தன் குடும்பம் முழுவதும் கதர் உடுத்தச் செய்தார். மதுவிலக்குப் போராட்டத் துக்காக, தனக்குச் சொந்தமான கள் இறக்கும் தென்னைமரங் களையே வெட்டித் தள்ளினார். ஒத்துழையாமை இயக்கத்துக்காக நீதிமன்றப் புறக்கணிப்பு செய்து, வழக்குகளின் மூலம் தனக்கு வரவேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களை இழந்தார்.


கொள்கையில் உறுதி என்பதை அவர் கடைசிவரை தளர்த்தியதில்லை. ராஜாஜியுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமான நண்பராக இருந்தார். ஆனால், கொள்கைப் போராட்டத்தை விட்டுக்கொடுத்த தில்லை. ராஜாஜி இறந்தபோது தன் நோயையும் பொருட்படுத்தாமல், சக்கர நாற்காலியில் சென்று இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார். ‘சுயநலமற்ற வரான ராஜாஜி, இட ஒதுக்கீடு, சாதி ஒழிப்பு என்ற இரண்டையும் ஏற்றுக்கொண்டு, காங்கிரஸ் கட்சி மூலமாகவே அதைச் செயல்படுத்தியிருந்தால், நான் கடைசிவரை அவர் தொண்டனாகவே மகிழ்ச்சியுடன் என் காலத்தைக் கழித்திருப்பேன்’ என்று அப்போது பெரியார் எழுதினார்.
அநாதை இல்லக் குழந்தைகளுடன்..

வைக்கம் போராட்டத்திலேயே அவருடைய கொள்கை உறுதியைப் பார்க்கலாம். காந்தி, ராஜாஜி, சீனிவாச அய்யங்கார் என்று சக காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக்கொண்டும்கூட போராட்டத்தை நிறுத்திவிட்டு, சென்னை திரும்ப மறுத்தார் பெரியார்.

இந்தப் போராட்டத்துக்காக கைதான பெரியார், சிறையில் இருந்தபோது, அவருக்கு எதிராக சத்ரு சம்ஹார யாகம் ஒன்றை கேரள சனாதனிகள் நடத்தி னர்கள். யாக முடிவில் எதிரி (ஈ.வெ.ரா.) சாகவேண்டும் என்பது நோக்கம். ஆனால், யாகத்தின் முடிவில் மகாராஜா இறந்துவிட்டார். பெரியாரைக் குறிவைத்து அனுப்பிய யாக பூதம் திருப்பிக்கொண்டு ராஜாவையே கொன்றுவிட்டது என்று சிறை வார்டன் தன்னிடம் சொன்னபோது, அப்படிச் சொல்வதும் மூட நம்பிக்கைதான் என்றார் பெரியார்.

தீண்டாமை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, வகுப்புவாரி இட ஒதுக்கீடு, பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற பெரியாரின் கொள்கைகள் அளவுக்கு முக்கியமானவை, அவருடைய பெண்ணுரிமைக் கோட்பாடுகள். தன் மனைவி நாகம்மாள், தங்கை கண்ணம்மாள் இருவரையும் போராட்டங்களுக்குத் தலைமை ஏற்க வைத்தார். சடங்குகள் இல்லாத எளிமையான சுயமரியாதை திருமண முறையை அறிமுகப்படுத்தியவர் அவர்தான். 1929-லிருந்து நான்கே ஆண்டுகளில் அப்படிப்பட்ட எட்டாயிரம் திருமணங்களை சுயமரியாதை இயக்கம் நடத்தி வைத்தது. திருமணம் செய்யும் உரிமை, செய்யாமல் இருக்கும் உரிமை, பிடிக்காத திருமணத்திலிருந்து வெளியேறும் உரிமை, திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் உரிமை, குழந்தை பெறும் உரிமை, பெறாமல் இருக்கும் உரிமை, இவையெல்லாம் பெண்ணுக்கு உரிய உரிமைகள் என்று அவர் முன்னோடியாக பிரசாரம் செய்திருக்கிறார். பெண்களுக்கு எல்லா உத்தியோ கங்களிலும் சரி, பாதி இட ஒதுக்கீடு செய்யவேண்டுமென்று 80 ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானம் போட்டவர் அவர்.

இன்று கல்வி நிலையங்களிலும் அரசு வேலைகளிலும் எல்லா சாதியினரும் இருப்பதற்கான முக்கியமான காரணங் களில் ஒருவர் பெரியார். அவர் இதற்காகப் போராடத் தொடங்கிய காலத்தில், கல்லூரிப் படிப்பு படித்தவர்களில் நூற்றுக்கு 65 பேர் பிராமணர்கள். மீதி 35 பேர்தான் எல்லா சாதியினரும். ஆனால், அன்று மக்கள் தொகையில் நூற்றுக்கு 97 பேர் பிராமணரல்லாதவர்கள்தான். அன்று அரசாங்க வேலைகளில் உயர் பதவிகளில் நூற்றுக்கு 47 இடங்களில் பிராமண அதிகாரிகள், 30 இடங்களில் ஆங்கிலேயர்கள், 23 இடங்கள்தான் மீதி எல்லா சாதியினருக்கும்.

ஒரு பெரும் சமுதாயத்தின் கல்வி நிலை, வேலை நிலையை மாற்றி அமைத்த பெரியார், மூன்றாவது வகுப்புக்கு மேல் படித்தவரல்ல. ஆனால், அவர் கொண்டுவந்த மொழிச் சீர்திருத்தத்தைப் பின்பற்றித்தான் இந்தக் கட்டுரைகூட எழுதப்படுகிறது. காந்தி, நேரு, போஸ், திலகர், ராஜாஜி என்று மெத்தப் படித்தவர்களே பெரும் தலைவர்களாக இருந்த காலகட்டத்தில், பெரியார்தான் மூணாங்கிளாஸ் படித்த தலைவர். ஆனால், பெரும் படிப்பு படித்த பலரை அவரது இயக்கம் ஈர்த்து, அவருக்குத் தொண்டர்களாகப் பணிபுரியச் செய்தது. காங்கிரஸிலிருந்து சுயமரியாதை இயக்கம்வரை பெரியார்கூட நெருக்கமாக இருந்து அவர் நடத்திய பத்திரிகைகளில் எழுதிய மற்றும் பொறுப்புவகித்த எஸ். ராம நாதன், குத்தூசி குருசாமி, அண்ணா, கி.வீரமணி, ஆனைமுத்து எனப்பலரும் முதுநிலைப் பட்டதாரிகள்.

ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக் காக சாகும்வரை ஓயாமல் பிரசாரம் செய்ததில் அவரை மிஞ்ச உலக அளவில் கூட யாரும் இல்லை. வருடத்தில் பாதி நாள் டூர்தான். மீட்டிங்தான்.

90-வது வயதில் 41 நாள் டூர். 180 கூட்டம்.

91-வது வயதில் 131 நாள் டூர். 150 கூட்டம்.

93-வது வயதில் 183 நாள் டூர். 249 கூட்டம்.

94-வது வயதில் 177 நாள் டூர். 229 கூட்டம்.

வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்) 38 நாள் டூர். 42 கூட்டம்.

இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன். ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார். சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருந்தது.

பெரியாரின் வாழ்க்கை, சுமார் 500 எபிசோடுகளில் ஒரு மெகா சீரியலாக எடுப்பதற்கான தகுதியும் தகவல்களும் நிரம்பியது. அதை ஐந்து எபிசோடுகளாக எடுக்க பொதிகை சேனல் எனக்கு வாய்ப்பளித்தது. என் மீடியா அனுபவங்களில் இது மறக்கமுடியாத செறிவான அனுபவம். பெரியார் பெயரைச் சொல்லி அதிகாரத்தை, ஆட்சியைப் பிடித்தவர்கள் நடத்தும் சேனல்கள் எதுவும் இன்றுவரை பெரியார் பற்றி அரை மணி நேர நிகழ்ச்சிகூட தயாரித்ததில்லை என்பதும் பெரியார் வாழ்க்கையின் விநோதங்களில் ஒன்று. அவர்களுக்கு, பெரியாரின் தேவை முடிந்து விட்டிருக்கலாம்... ஆனால், தமிழக மக்களுக்கு இன்றும் பெரியார் தேவைப்படுகிறார் என்பதுதான் உண்மை.


ஓ... அடுத்த ஈ.வெ.ர
இந்தக் கட்டுரையில் இடம்பெற்றி ருக்கும் படங்களை எடுத்தவர், பத்திரிகைத் தொடர்பாளரான ஈ.வெ.ரா. மோகன். பெயரைப் பார்த்ததும், இவர் பெரியாரின் சொந்தக்காரர் என்றுதான் பெரும் பாலும் நினைப்பார்கள். ஆனால் இவர், ஈரோடு வெங்கடேசனின் மகன் ராம்மோகன். அவர் பெரியாருடனான தன் புகைப்பட அனுபவத்தைச் சொல்கிறார்.

''பிராமணரான நான் அக்ரஹாரத்தில் பிறந்து வாழ்ந்தாலும் பெரியார்மேல அபார ரசிப்பு உள்ளவன். ஒருநாள் 'பெரியாரையும் படமெடுத்தா என்ன?'னு தோணுச்சு. அவர் வீட்டுக்குப் போனேன். உள்ளே கூட்டிட்டுப் போய் என்னை பெரியாரிடம் 'ஈ.வெ.ரா.மோகன்’னு அறிமுகம் செய்து வெச்சாங்க. 'ஓ... அடுத்த ஈ.வெ.ரா-வா?’னு கேட்டவர் என்னைப் பற்றி விசாரிச்சார்.

நான் 'என் பூர்வீகம் ஈரோடுதான்’ என்றபடி, என் தாத்தா, அப்பா பெயரையெல்லாம் சொன்னேன். பெரியார் ஈரோடு நகர சேர்மனாக இருந்த காலத்தில் என் தாத்தா முனிசிபல் கவுன்சிலரா இருந்தவர். அதையெல்லாம் சொன்ன பெரியார், நான் விரும்பினபடியெல்லாம் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

படுத்தபடி ஒரு போஸ், புத்தகம் படிக்கும்விதமாக ஒரு போஸ், அவருக்குப் பிரியமான நாய்களை வைத்துக்கொண்டு ஒரு போஸ்னு பல கோணங்களில் எடுத்தேன். அதுதான் நான் பெரியாரை முதலும் கடைசியுமாகப் பக்கத்தில் பார்த்தது. ஆனா, 'அவரோடு நின்று ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு தோணாமல் போச்சே’னு இன்றுவரை வருத்தப்பட்டுக்கிட்டே இருக்கேன்’’ என்ற ஈ.வெ.ரா.மோகன்


37 Comments:

Gopalan Ramasubbu said...

Article by Dr. V.C. Kulandaiswamy on Periyar is a good read too.

Periyar, the Relentless Crusader

Dr. V.C. Kulandaiswamy(Former Vice-Chancellor, Anna University, Madras)

http://www.themronline.com/200108m19.html

Excerpts:

After 50 years of tireless striving, hard struggle and massive educational efforts through speeches, writings and demonstrations, he left behind him a society vastly different from the one he inherited - more alert, more questioning, less gullible, better educated, more modern and in general closer to the take of point for a state of living that would be richer in all respects.

செந்தழல் ரவி said...

இனம்புரியாத மகிழ்சியுடன் இந்த கட்டுரையை படித்தேன்...

Thamizhan said...

ந்ல்ல சுருக்கமான ஆனால் ஆழமானக் கருத்துக்களை ஞாநி வெளியிட்டிருக்கிறார்.பெரியாரின் அடிப்படைக் கொள்கையே மனித நேய்ந்தான்.அவர் எந்த தனிமனிதனையும் வெறுக்கவில்லை.கடைநிலைத் தொண்டரையும் மனிதனாக மதித்தார்.மக்கள் அதுவும் பெண்கள் படும் அவமான்த்தால் துடித்தார்.சாதி மூட நம்பிக்கைகள் ஒழிந்து ஆண்களும் பெண்களும் சமமாக மகிழ்ச்சியான் வாழ்க்கை அனைவரும் வாழவேண்டும் என்று உண்மையாகத் துணிவுடன் உழைத்தார்.நன்றி எதிர் பார்ப்பது கேவலம் என்று நினைத்தார்.
உண்மையாகவே நாம் மன நிறைவான் மகிழ்ச்சியான வாழ்வு வாழ அடுத்தவரைச் சமமாக மதித்து உதவி வாழ்வதுதான் சிறந்த வழி என்று அறிந்துவிட்டால் அதில் வரும் நிறைவு வேறு எதிலும் இல்லை.

மனதின் ஓசை said...

//After 50 years of tireless striving, hard struggle and massive educational efforts through speeches, writings and demonstrations, he left behind him a society vastly different from the one he inherited - more alert, more questioning, less gullible, better educated, more modern and in general closer to the take of point for a state of living that would be richer in all respects. //

மிகச்சரியான வரிகள்.. ஒவ்வொரு தமிழனும் அவருக்கு மிக்க கடமைப்பட்டவன்.

BadNewsIndia said...

நல்ல தகவல்கள். பெரியாரின் மதிப்பை கூட்டும் நிகழ்வுகள்.

IdlyVadai said...

இந்த கட்டுரை ஓ-பக்கங்கள் - ஞாநி - விகடன் பிரசுரம். இந்த புத்தகம் புத்தக சந்தையில் வாங்கினேன். இதே போல் மற்ற புத்தகங்களிலிருந்து ஏதாவது ஒன்றை அவ்வப்போது தருகிறேன். அடுத்த கட்டுரை நாளை.

சென்ஷி said...

பெரியார் என்றும் பேருக்கேறார்போல்தான் வாழ்ந்திருக்கின்றார்.

//இதே போல் மற்ற புத்தகங்களிலிருந்து ஏதாவது ஒன்றை அவ்வப்போது தருகிறேன். அடுத்த கட்டுரை நாளை.//

எதிர்பார்ப்புகளுடன்

சென்ஷி

Hariharan # 26491540 said...

//90-வது வயதில் 41 நாள் டூர். 180 கூட்டம்.

91-வது வயதில் 131 நாள் டூர். 150 கூட்டம்.

93-வது வயதில் 183 நாள் டூர். 249 கூட்டம்.

94-வது வயதில் 177 நாள் டூர். 229 கூட்டம்.

வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்) 38 நாள் டூர். 42 கூட்டம்.//

ஈவெராவின் பல கருத்துக்களில் ஒப்புமை எனக்கு இல்லை.

என்றபோதும் இந்த உழைப்பு, முதிர்ந்த வயதிலும் அவரது இந்தக் கடினமான உழைப்பு எனக்கு மிகவும் பிடித்தது.

கொண்ட கொள்கைகள் உருப்படியாக இருந்திருந்தால் இந்த உழைப்பு உண்மையான மறுமலர்ச்சியைத் தந்திருக்கும்.

தமிழகத்தில் இன்று நிதர்சனத்தில் மிதமிஞ்சிக் காணப்படுவது நேர்மையற்ற கொள்கைகளுடன் ஈவெராவழி வந்த திராவிடக்கட்சிகள் ஏற்படுத்தி வைத்திருப்பது வெட்டியான வெறுப்பு மட்டுமே. இவர்கள் ஈவெராவை அடையாளம் காட்டியிருப்பது இப்படித்தான் இருக்கிறது:

ஈவெரா=ஹிப்போக்ரேஸி

இக்கூற்று முற்றிலும் பொய் எனச் சொல்ல முடியாது!

IdlyVadai said...

ஆனானி - உங்க பின்னூட்டத்தை பிரசுரிக்க இயலவில்லை. Sorry.

ravi srinivas said...

This is a santised version by Jnani.The real fact is Periyar hated brahmins and spread hatred against them till his end.Jnanis may write like this about Periyar but Periyar's followers will still brand Jnanis as evil brahmins and defame them despite their progressive views.Afterall it was Periyar who
categorised brahmins as
conservative and pragmatic and
preached that pragmatic brahmin
was more dangerous than conservative brahmin.I do appreciate the good work done
by Periyar but such santised versions that project Periyar without any criticisms are insults to one's intelligence.Jnani may like Periyar and consider him as an
ideal but neither Periyar nor his DK ever recognised the greatness of
Subramania Bharathi.Such is their
outlook.Jnani will not write a word
about this but this is the brutal
and harsh fact one has to remember.
When one sees so much hatred for brahmins in tamil blogs, it is easy to discern the evil influence
of Periyar and his anti-brahmin
teachings.

சீனு said...

Thanx for the excellent post.

PKS said...

இட்லிவடை,

இந்தக் கட்டுரைக்கு நன்றி. ம.வெங்கடேசன் எழுதிய பெரியாரின் மறுபக்கம் (அல்லது ஈ.வெ.ரா.வின் மறுபக்கம்) புத்தகத்தில், வைக்கம் வீரரா பெரியார் (அல்லது இதே மாதிரியான தலைப்பில்) ஒரு முழு அத்தியாயம் இருக்கிறது. உங்களிடம் புத்தகம் இருந்தால் (இல்லையென்றால் நியூபுக்லேண்ட்ஸ் போன்ற கடைகளில் கிடைக்கிறதாம். :-) ) அந்த அத்தியாயத்தையும் வருடி (scan) இங்கே இடுங்களேன். உங்களுக்கு நேரமில்லை என்றால் சொல்லுங்கள், உங்களுக்காகப் புத்தகத்தைத் தேடியெடுத்துத் தட்டச்சு செய்து தருகிறேன். ஏதோ என்னாலானது :-)

அன்புடன், பி.கே. சிவகுமார்

IdlyVadai said...

பிகேஸ் வருகைக்கு நன்றி. பரவாயில்லை இங்கெள்ளாம் கூட வருகிறீகளே!. இன்னிடம் இந்த புத்தகம் இருக்கும் ஆனால் தேட வேண்டும். நீங்கள் தட்டச்சு செய்து தந்தால் இங்கு பதிவாக ( உங்களுக்கு நன்றி ) என்று போடுகிறேன்.

Thamizhan said...

வெங்கடேசனின் பெரியாரின் மறுபக்கம் போட்டால் அவர் பற்றியும் அவருக்குப் பின்னால் நிற்கும் தமிழினத்துரோகிக்ள் பற்றிய் மற்றவர்களின் கதைகளையும் போடுவது நல்லது.சந்தணத்தைத் தொட்ட கைகளிலே சாணியைத் தொட்டால் அதை சோப்புப் போட்டுக் கழுவ வேண்டாமா?சோப்புந்தயார் அதை அனைவரும் அறிந்து கொள்வதும் இனத்தின் அழுக்குருண்டைகள் பற்றித் தெரிவதும் நல்லது.

IdlyVadai said...

தமிழன் - கொடுங்கள் அதையும் போடுகிறேன்.

balan said...

I think MR.ravi srinivas looked emotional.

The backround was very well within the article. In a society where 3% brahmins exists how could they hold 50% jobs.is it justified ?

Even today in the northern part where the nonsecular parties thrive this social imbalance goes on.

even if someone says EVR hated brahmins, nothing wrong. there is no sanitation needed.

Good luck

Anonymous said...

மத்ததையெல்லாம் விடுங்கள். பெரியார் மனித நேயம் மிக்கவர் என்று இங்கு ஒருவர் சொன்னதுதான் பெரிய ஜோக். 'பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி' என்று இனவெறியோடு பேசுவது எந்த மனித நேயத்தோடு சேர்த்தி. அவர் சமூக நீதிக் காவலராக இருக்கலாம், ஆனால் அதை குறுகிய நோக்கத்தோடு அணுகியதால் தான் அவரால் தமிழ் நாட்டு எல்லையைத் தாண்டி புகழ் பெற முடியவில்லை. அ தி மு க அவரை அடியோடு மறந்துவிட்டது. இன்னும் ஒரு தலைமுறைக்குப் பிறகு மற்ற அரசியல் கட்சிகளும் அவரை விட்டுவிடும்

அருண்மொழி said...

இட்லி வடையார் மற்ற பதிவுகளை படிப்பதில்லையா. முகமூடியின் பதிவில் (பெரியார் படத்தைபற்றியது) சிலர் எல்லா தகவல்களையும் போட்டுள்ளனர்.

அருண்மொழி said...

// 'பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி' என்று இனவெறியோடு பேசுவது எந்த மனித நேயத்தோடு சேர்த்தி. //

அவர் பாப்பானைதானே அடிக்க சொன்னார், மனிதனை இல்லையே.

Anonymous said...

//அவர் பாப்பானைதானே அடிக்க சொன்னார், மனிதனை இல்லையே.
//
அருண்மொழி...அஹ என்னெ மனித னெயம்!!! ;-)))))

பாரதிதாசன் said...

நான் எழுதிய கவிதைகளில் சில மிக நன்றாக அமைந்துவிட்டது.அதில் சிறப்பான் ஒன்றுதான் "அவர்தாம் பெரியார்".
இந்திய அரசியல் சட்டத்திலே சாதி இருப்பதை ஒழிக்கவேண்டும் என்று பெரியார் பல்லாயிரக்கணக்கானத் தொண்டர்களுடன் சட்டத்தின் அந்தப் பகுதியை எரித்தார்.சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வருகிறார்.சிதம்பரத்திலே மிகப்பெரிய வரவேற்பு்.வெள்ளி சிம்மாசனத்திலே பெரியார் உட்கார்ந்து பவணி வருகிறார்.
அங்கே வந்த ஒரு பட்டிக்காட்டுப் பெண் கேட்கிறார்."மச்சான் அந்த சிம்மாசனத்திலே போவுதே அது என்ன சாமி?"என்று.அப்போது அவர் தன் மனைவிக்குச் சொல்கிறார்.
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உல்கு தொழும்!
மனக் குகையில் சிறுத்தை யெழும்
அவர்தாம் பெரியார்!

Anonymous said...

//நான் எழுதிய கவிதைகளில் சில மிக நன்றாக அமைந்துவிட்டது.அதில் சிறப்பான் ஒன்றுதான் "அவர்தாம் பெரியார்".
இந்திய அரசியல் சட்டத்திலே சாதி இருப்பதை ஒழிக்கவேண்டும் என்று பெரியார் பல்லாயிரக்கணக்கானத் தொண்டர்களுடன் சட்டத்தின் அந்தப் பகுதியை எரித்தார்.சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வருகிறார்.சிதம்பரத்திலே மிகப்பெரிய வரவேற்பு்.வெள்ளி சிம்மாசனத்திலே பெரியார் உட்கார்ந்து பவணி வருகிறார்.
அங்கே வந்த ஒரு பட்டிக்காட்டுப் பெண் கேட்கிறார்."மச்சான் அந்த சிம்மாசனத்திலே போவுதே அது என்ன சாமி?"என்று.அப்போது அவர் தன் மனைவிக்குச் சொல்கிறார்.
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உல்கு தொழும்!
மனக் குகையில் சிறுத்தை யெழும்
அவர்தாம் பெரியார்!//

ஏழை மக்கள் சாப்படுக்கு வழி இல்லாத போது வெட்டி போராட்டம் செயத பின் வெள்ளி சிம்சானத்தில் சீட் போட்ட பெரியார் வாழ்க

Anonymous said...

//அவர் பாப்பானைதானே அடிக்க சொன்னார், மனிதனை இல்லையே.//

உன்னையும் நான் அடிக்கிறேன் அடிச்சு துவைக்கிறே,ன் யாரேனும் கேட்டால் எங்க தலைவரு கிறுக்குகளை அடிக்க சொன்னார்ன்னு சொல்வேன்
அப்ப இந்த லாஜிக் ஒத்து வருமோ

நாட்டுகோழி said...

பெரியார் ஓர மாபெரூம் சமுக புரட்சியாளர் என்பதை ஓத்து கெள்கிறேன் ஆனால் சில தவறுகளையும் செய்தார். உ.த. இராமர், விநாயகர் போன்ற இந்து கடவுளை மாத்திரம் இழிவு செய்தது,ஏன் இந்த பாரபட்சம் என்று புரியவில்லை.......

வாசகன் said...

நல்ல பதிவு,
ஆனால் பரஸ்பர துவேஷங்களுடன் வரும் பின்னூட்டங்களை மட்டுப்படுத்தினால் தான் பதிவுக்கு மரியாதை இருக்கும். ஏனென்றால் 'அநாநிமஸ்ஸாக' வருபவர்கள் யாரென்று ஊகங்களில் மனம் வீழும். திசை மாறும்.

'பாம்பையும், பார்ப்பானையும் கண்டால், பார்ப்பானை அடி' என்று பெரியார் சொன்னதாகச் சொல்லப்படுவதற்கு யாராவது ஆதாரம் கொடுக்க முடியுமா, ப்ளீஸ்.

பார்ப்பானை அவர் எதிரியாக நினைக்கவில்லை, பார்ப்பனீயத்தைத் தான் கடுமையாக விரோதித்தார் என்பதற்கு அவர் இராஜாஜியுடன் கொண்டிருந்த தனிப்பட்ட நட்பு நல்ல உதாரணம்.

அரசியல் சமூக வானில் ஒரு பெரியார் தோன்றுவதற்கு இராஜாஜி காரணமாக இருந்தார் என்பது இறைச்சித்தம் தான்.

'மனிதர்களுக்குள் வேற்றுமை பாராட்டாத கடவுளை வணங்குவதில் யாருக்குத்தான் தடையிருக்க முடியும்'
என்பதும் பெரியாரின் பொன்மொழி தான். அவரை ஒற்றைப்பரிமாணத்தில் காட்ட முனைந்த முனைப்பில் இத்தகைய கருத்துக்கள் காணாதொழிந்தன. திராவிடக் கட்சிகளே இதற்கு காரணம் என்று சொல்லலாம்.

இன்றைக்கு பார்ப்பனீயம் பார்ப்பனர்களிடம் மட்டுமின்றி, அவர்களை விடவும் அதிகமாக, மற்ற ஆக்களிடம், மற்ற தளங்களிலும் இருக்கிறது என்பதை 'பக்தர்'களும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

அதுபோல, பெரியாரை இன்னமும் ஈ.வே.ரா என்றே இன்னமும் விளித்து, இழிவுபடுத்துவதாக நினைக்கிற கேணத்தனத்தை '.......க்குஞ்சுகளும்' விட்டு விடவேண்டும். இன்றைய சமூக மாற்றத்துக்கு தலையாய காரணமான ஒருவரை 'பெரியார்' என்று ஏற்றுக்கொள்ள எந்த பாசமும் குறுக்கீடு செய்யக்கூடாது.

பெரியாராக இருந்தாலும் விமர்சனத்துக்கு அப்பாற்படுவதில்லை என்பது பெரியாரே வலியுறுத்திய உண்மை.

பெண்ணியச்சிந்தனைகள் இன்று பட்டொளி வீசிப்பறக்க முதன்மை காரணம் பெரியார் தாம். யார் மறுக்க இயலும். ஒருபக்கம் எதிர்த்தாலும், அதன் தாக்கத்தால் அதை அதிகம் இன்று ஏற்றுச்செயல்படுத்துபவர்கள் பிராமண வகுப்பினரே என்பதும் உண்மை.

பெரியாரின் தேவை தீர்ந்துவிடவில்லை என்பதை திராவிட இயக்கங்களே நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.

பெரியாரைப் படமெடுத்துக்காட்டுவதை விடவும், ஆராய்ந்து படிப்பினை பெறுவதற்கு ஏராளமிருக்கிறது - இரு தரப்பாருக்கும்!

ஜெஸிலா said...

படித்துவிட்டு அப்படியே விட்டுவிடாமல் பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி.

பனித்துளி said...

எல்லாரும் புல்லரிச்சு புளங்காகிதப்பட்டுத்தான் ஈவேரா பத்தி எழுதறாங்க. என்னவோ சீர்திருத்தம் செய்ததாய் சொல்றாங்க.

மரத்தோட குணத்தை அதன் பழத்தை வச்சுத்தான் பாக்கணும்னு எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும்.

என்ன சீர்திருத்தம் என்று பார்த்தால் பீயை கரைச்சு தலித்துகளின் வாய்க்குள் ஊற்றுவது தெரிகிறது. எல்லா திராவிட அரசியல் கட்சிகளும் இப்போதும் வன்னியருக்கு எத்தனை ஓட்டு, தேவருக்கு எத்தனை ஓட்டு, முதலியாருக்கு எத்தனை ஓட்டு என்று கணக்கிடுவதில் இருந்து மாறவில்லை. இதில் டெவலப் ஆகி மரைக்காய முஸ்லீம்களுக்கு, லப்பை முஸ்லீம்களுக்கு எத்தனை ஓட்டு, கிருத்துவ நாடார்களுக்கு எத்தனை ஓட்டு, கிருத்துவ பிள்ளைமார்களுக்கு எத்தனை ஓட்டு என்று பிரித்து பிரித்து சாதி மத வெறியை வளர்க்கிறார்கள்.

ஈவேரா பிறந்த புண்ணிய பூமியை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் மற்ற மாநிலங்களில் சாதிவெறி குறைவாகவே இருக்கிறது.

இதுதான் ஈவேரா செய்த சீர்திருத்தத்தின் விளைவு என்பது தெரிகிறது.

நாயுடுகளின் கட்சியாக அறியப்பட்ட காங்கிரஸில் பார்ப்பனர்கள் பொறுப்புள்ள பதவிகளில் வரக்கூடாது என்றுதான் ஈவேரா காங்கிரஸிலிருந்து விலகினார் என்று ஞானிகள் இல்லாத சராசரி மனுசங்க சொல்லுகிறார்கள்.

அப்புறம் இட்லி வடைக்கு சில கேள்விகள். தேவைப்பட்டால் ஞானியிடம் கேட்டும் சொல்லலாம்.

1. அனாதை குழந்தைகளோடு போட்டோ எடுத்துக்கொண்ட ஈவேரா இதுவரை அனாதை இல்லங்களுக்கு டொனேஷன் கொடுத்ததுண்டா?

இல்லை, போட்டோ எடுத்த செலவை அனாதை இல்லத்திடமிருந்து வசூலித்துக்கொண்டாரா?

2. அவருடைய இயக்கத்தில் ஏன் ஒரு தலித் தலைவராக முடியவில்லை? வீரமணி போன்ற தலித் அல்லாதவர்கள் மட்டுமே தலைவராக இருக்கக் காரணம் என்ன?

3. சென்னையில் என் பக்கத்துவீட்டுக்காரரான ஈழவ நண்பரின் தாத்தா வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டவர். அவர் என்னிடம் சொன்னது: "ஈழவர்களின் போராட்டம் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. அந்த நேரத்தில் இந்த போராட்டத்திற்கு எதிராக இருந்த ஒரே ஆள் சர் சிபி ராமசாமி ஐயர்தான். அக்காலத்தில் இருந்த எல்லா திவான்களையும் போல அவரும் ஆங்கிலேயரின் கைக்கூலி. சாதிவெறி சாகக்கூடாது என்கிற எவாஞ்சலிக்கல் ஆங்கிலேயர்களின் ஆசைப்படி நடந்து "சர்" பட்டமெல்லாம் வாங்கியவர்.

அவர் இந்த பிரச்சினையினால் தன்னுடைய பதவியிலிருந்து வெளியேற முடிவு செய்துவிட்ட நிலையில் ஈழவர்களுக்கு ஏற்கனவே வெற்றி கிட்டிவிட்டது. ஆனால், இந்த பதவிவிலகலுக்கு எதிராக இருந்த ஒரு விசயம் சர் சிபி ரா ஈழவத் தலைவர்களை சிறையில் அடைத்து போராட்டத்தின் இறுதிக்கட்டத்தை நீட்டிக்கவிரும்பியதுதான். இந்த நீட்டிப்பை தடுக்க அகில இந்திய அளவில் பலம் வேண்டும் என்பதற்காக ஈழவத் தலைவர்கள் காந்திக்கு கடிதம் எழுதிப் போட, காந்தி காங்கிரஸ் பலமுள்ளதாக இருந்த பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டு காங்கிரஸ் இதை எடுத்து நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டார். காந்தியின் இந்த உத்தரவிற்குப் பின்னால்தான், காங்கிரஸ் கட்சி இதில் ஈடுபட்டது. அதன் தலைவராக அந்த சமயத்தில் இருந்தது ஈவேரா. எனவே அதற்கு அவர் தலைமை ஏற்றார். சாதிவெறியை சாகவிடாமல் காத்து வைத்திருந்த கிருத்துவ ஆங்கிலேயர்களின் கைக்கூலி சர் சிபிரா பதவி விலகியதோடு பிரச்சினை தீர்ந்தது. இதற்கு 95 சதவீத க்ரெடிட் ஈழவப் போராளிகளுக்கும், 5 சதவீத பலன் காந்திக்கும் போய்சேரவேண்டும். காந்தியின் உத்தரவு வரும்வரையில் ஈவேரா இந்த போராட்டம் பற்றி கவலைப்பட்டதில்லை. கேரளாவில் வைக்கம் போராட்டம் இன்றும் ஈழவர்களின் போராட்டமாகவே அறியப்படுகிறது. அங்கே வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராகவே ஈவேரா அறியப்படுகிறார், அதுவும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களுக்கு மட்டுமே தெரிந்த அளவில்."

சர் சிபி ராமசாமி போன்ற தேசத் துரோகிகள் இல்லாத நிலையில், அவரைவிட அதிகமாக ஆங்கிலேயருக்கு விசுவாசியாக இருந்த ஈவே ராமசாமி கிடைத்தது ஆங்கிலேயர்களுக்கு ஆண்டவன் செய்த ரட்சிப்பு. தமிழகத்தில் சாதி வெறி இன்னும் அழியவில்லை. கர்த்தருக்கு நன்றி.

4. ஈவேராவை எதிர்த்து பார்ப்பனர்கள் சத்ரு சம்ஹார யாகம் செய்தார்கள் என்கின்ற கதையை உலகிற்கு சொன்னவர் இந்த ஈவேராதான். அவ்வளவு பெரிய கொடுமையான செயலை காங்கிரஸ் தலைவர் ஒருவருக்கு எதிராக செய்ததாக வேறு யாரும் சொல்லாத நிலையில், ஈவேரா தன் வாயாலேயே இந்த கதையை சொல்லுகிறார்.

பார்ப்பனர்களுக்கு ஆதரவாக காந்தி பேசினார் என்றும், அதனால்தான் காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு எதிராகாது என்றும் காந்தி-ஈவேரா உரையாடலின் எடிட்டராக (ஆசிரியர்?) இருந்தவர் பெயரும் ஈவேரா என்றுதான் இருக்கிறது. (மேல் விவரங்களுக்கு திண்ணையில் அருணகிரியின் கட்டுரைகள் http://www.thinnai.com/?module=displaystory&story_id=80704123&format=html பார்க்கவும்)

கல்லக்குடி போராட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் கண்ணதாசன் தலைவைக்க, அங்கனம் தலைவைத்து இந்தி அரக்கியை அழித்தது நான்மட்டுமே என்று ஈவேராவின் வாரிசு பெயர்பெற்றது ஏனோ ஞாபகம் வருகிறது.

சாதி வெறியின் மறு பெயர் திராவிடவாதம். இந்த சாதிவெறியை பரப்பியதுதான் ஈவேராவின் சாதனை.

ஜடாயு said...

பெரியாரின் சாதிவெறிக் கோரமுகத்தில் சந்தனம் பூசப் பார்க்கிறார் ஞானி என்று ரவி சீனிவாஸ் சரியாகசவே சொல்லியுள்ளார்.

தனது கலாசாரம், பண்பாடு பற்றிய சுய வெறுப்பை ஒரு மோசமான மூளைச்சலவையால் தனக்குள் வளர்த்து விட்டுக் கொண்டிருக்கும் ஞானி இப்படிச் சொல்வதில் ஆச்சரியமில்லை தான். அவருக்காகப் பரிதாபப் படுகிறேன்..

இதோ பெரியாருக்கு ஒரு கவிதாஞ்சலி, என் பழைய பதிவிலிருந்து - http://jataayu.blogspot.com/2007/01/blog-post_24.html

ஈ.வெ.ரா பெரியார் - இவரா பெரியார்?

பெரியார் யாரெனத் தெரியா மூடர்
சிறுமை தம்முள் அதிகம் கொண்டவர்
ஒருவர் தம்மைத் தேர்ந்து எடுத்து
பெரியார் என்றொரு பெயரும் வைத்தார்.

அறியார் அறவழி தெரியார் அடிமை
வெறியார்வத்தால் வேற்றவனுக்கு
விரிவாய்ப் பலவாய்ச் சேவகம் செய்து
இழிவாய் வாழ்ந்தார் இவரா பெரியார்?

அடிமை செய்த வெள்ளையன் அவனின்
கொடுமைத் தளையைக் கொன்றிடும் நாளில்
மிடிமை கொண்டெமை மீண்டும் ஆளெனக்
கடிதம் போட்டார் இவரா பெரியார்?

செந்தமிழ் மொழியின் சிறப்பறியார், பல
குந்தகம் சொன்னார்; கொள்ளையன் வந்து
தந்த அம்மொழியே தனிச்சிறப் பென்றார்
இன்தமிழ் இகழ்ந்தார் இவரா பெரியார்?

கீழ்மைச் சிந்தனை யாளர் சீழ்மனப்
பான்மை கொண்டு ஆபாசப் பேச்சில்
தாழ்மைக் கோஷம் போட்டார் சொல்லின்
நேர்மையற்றார் இவரா பெரியார்?

உள்ளம் தன்னில் உயர்நெறி இல்லார்
சொல்லும் சொல்லின் சுத்தம் அறியார்
தள்ளும் வயதில் மகளெனத் தக்க
பிள்ளை மணந்தார் இவரா பெரியார்?

மண்ணின் உடலை மதத்தால் வெட்டி
பின்னப் படுத்திய எதிரியைப் போல
இன்னும் இதனை இரண்டாய் வெட்டச்
சொன்னார் சிறியார் இவரா பெரியார்?

நாய்ப்பால் குடித்த நரிக்குக் கூட
நன்றி என்றொரு ஞாபக மிருக்கும்
வாய்ப்பால் வெள்ளையன் வாலைத் தூக்கி
நோய்ப்பால் குடித்தவர் இவரா பெரியார்?

வீட்டின் விளக்கை விலைமகள் என்று
ரோட்டில் செல்கையில் கேவலம் செய்யக்
கூட்டம் சேர்த்துக் குறுமதி சேர்த்துக்
காட்டிக் கொடுத்தார் இவரா பெரியார்?

அறிவின் விரிவில் அடக்கம் காட்டி
எளியார் மீதும் இரக்கம் காட்டி
கருமித்தனமும் காழ்ப்பும் நீங்கிய
தருமர் எவரோ அவரே பெரியார்!

சகாயராஜ் said...

ஜடாயு,

தமிழினை இகழ்ந்த ஒருவரின் தரம் பற்றி மிக அருமையான தமிழாலே பாடியுள்ளீர்கள்.

இன்பத் தமிழின் அருமை பற்றி படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். புரிந்துகொள்பவர்கள் மேலும் படிப்பார்கள்.

தமிழ் கொஞ்சி விளையாடுகிறது, ஐயா !

ஹிந்துத்துவவாதிகள் தமிழ் காதலர்களோ என்கிற சந்தேகம் எழுகிறது.

பொன்னியின் சாறு குடித்த தஞ்சாவுரா உங்களுக்கு?

மதுரையில் சங்கம் வளர்த்தவர் வம்சத்தில் வந்ததா தமிழ் ஹிந்துத்துவா?

உங்களைப் போன்றவர்களால் தமிழும் வளர்கிறது, உங்களது கொள்கை பற்றி குறை சொல்பவர் பொய் சொல்கிறார் என்பதும் தெரிகிறது.

வாழ்க நீவிர் !

Anonymous said...

இந்தக் கட்டுரையால் பெரியார்மேல் எனக்கு இருந்த மதிப்பு மேலும் உயர்கிறது. பெரியார் ஒரு கலகக்காரராகவே வாழ்ந்திருக்கிறார். அதன் காரணமாக சில தவறுகளும் செய்திருக்கிறார். ஆனால் அவர் கொள்கை உயர்ந்தது என்று நான் நம்புகிறேன். பெரியாரின் மதிப்பைக் குறைப்பவை அவரின் சீடர்களாக சொல்லிக்கொள்பவர்களின் செயல்பாடுகள்தான். இதற்கான பொறுப்பையும் பெரியார்தான் ஏற்கவேண்டும். அதுதான் ரவி ஸ்ரீநிவாஸ், ஜடாயு போன்றோர் பெரியாரை குறை சொல்வதற்கும் காரணமாக இருக்கிறது.
இந்தக் கட்டுரை பெரியாரைப்பற்றி இன்னும் அதிகமாக படிக்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டுகிறது. இந்தியாவுக்கு வருவதற்கு இன்னும் கொஞ்ச காலம் ஆகும். அதுவரை உங்களால் முடிந்த அளவு இதைப்போன்ற கட்டுரைகளை எழுதுங்கள்.

Ganesh Ram said...

We have developed and released a free mobile book on PERIYAR. Please find the Press Release at

http://www.prlog.org/10020318-thoughts-of-periyar-goes-hi-tech-now-on-mobile.html

also put your comments at Digg

http://www.digg.com/movies/Thoughts_of_Tamil_Leader_Periyar_Goes_Hi_tech_now_its_on_your_mobile_too

Kindly help to promote this by informing your friends and posting an entry too. Thanks

முத்துகுமரன் said...

//ம.வெங்கடேசன் எழுதிய பெரியாரின் மறுபக்கம் (அல்லது ஈ.வெ.ரா.வின் மறுபக்கம்) புத்தகத்தில், வைக்கம் வீரரா பெரியார் (அல்லது இதே மாதிரியான தலைப்பில்) ஒரு முழு அத்தியாயம் இருக்கிறது. உங்களிடம் புத்தகம் இருந்தால் (இல்லையென்றால் நியூபுக்லேண்ட்ஸ் போன்ற கடைகளில் கிடைக்கிறதாம். :-) ) அந்த அத்தியாயத்தையும் வருடி (scan) இங்கே இடுங்களேன். உங்களுக்கு நேரமில்லை என்றால் சொல்லுங்கள், உங்களுக்காகப் புத்தகத்தைத் தேடியெடுத்துத் தட்டச்சு செய்து தருகிறேன். ஏதோ என்னாலானது :-)//


ஈ.வே.ராமசமி நாயக்கரின் மறுபக்கம் என்றா நூல் ம.வெங்கடேசனவர்கள் எழுதி பாரதிய பார்வேர்ட் பிளாக் - முருகன் அவர்களால் அச்சிடப்பட்டது :-).

பிகேஎஸ் மின்னஞ்சல் முகவரி தந்தால் அந்த பகுதியை வருடி அனுப்புகிறேன். ஏதோ என்னாலானது :-)

**இ.வ.

தீடிரென்று கண்ணில் பட்டது இந்த பதிவு.

எதோ என்னாலானதூ :-)

Anonymous said...

periyar na suthula melakai vatcha mari erukkum pappaukku nu kealvi pattu erukkerean,,,,,,,,,,

athu eppa theriyuthu

vijay fm tirupur.....
vijaycreate@gmail.com

Anonymous said...

பாப்பான் பார்ப்பணன் பார்ப்பான் ஆகியவற்றெல்லாம் சொல்லி எழுப்பும் மடையங்கள் பல வகையுள்ளார்கள்; இவை கீழ் வருமாறு :

1) OBC சான்றிதழைக் கைப்பற்றும் தெலுங்கு பேசும் சாதியினத்தவர்.

2) OBC சான்றிதழைக் கைப்பற்றும் கன்னடம் மொழி பேசும் சாதியினத்தவர்.

3) இந்தி மொழி பேசும் OBC முஸ்லிம்கள் மற்றும் இதர சாதிகள்.

இவர்கள் தாங்கள் தமிழர் அல்ல என்பதை மறைக்கும் வழிகள் கீழ் வருமாறு:

1) வஞ்சகமாக ஒரு தமிழ் பெயர் வைப்பது.

2) தாங்கள் வெறுக்கும் தமிழர்களை அவர்கள் தமிழழே கிடையாது என பறைசாடுவது.

3) இந்து, தெலுங்கு மற்றும் தமிழ் அல்லாத இதர மொழி பேசுவோர்களை தாங்கள் தான் "உண்மைத் தமிழர்கள்" என அழைப்பது.

முதலில் தமிழ் நாடு என்கிற மாநிலத்தில் முதலில் தமிழ்மை என்பது கிடையாது. எல்லாமே ஒரு பெரிய வஞ்சகம்.

1)பள்ளிக்கூடங்களில் தொடரும் இந்தி திணிப்பு : நமது தமிழக அரசு தமிழ் கட்டாய மொழி என்பதை பெயர் பெற்றுவிட்டது தவர அதை அமல்படுத்துவதில்லை. தமிழகத்தில் பெரும்பாலுமான CBSE ராணுவ Matric பள்ளிகளில் இந்தி மொழி திணிக்கப்பட்டு வருகிறது. CBSE பள்ளிகளில் தனி விதிவிலக்கு!! ஆனால் கர்நாடக CBSE பள்ளிகளில் கன்னடம் கட்டாயம்; பஞ்சாப் CBSEஇல் பஞ்சாபி; மகாராஷ்டிராவில் மராட்டி எப்படி அமல்படுத்தப்படுகிறது?

2) இந்தி பேசும் நபர்களுக்கு ஐ ஐ டி, விமானநிலைய, இரயில் நிலைய பாதுகாப்புப் பணிகளில் சிறப்பு இடஒதுக்கீடு.

3) தமிழ் பள்ளிகளை மூடுவது.

4) தமிழ் பேசும் சமூகத்தினரை "அவர்கள் தமிழே கிடையாது" என வஞ்சகப்பேச்சு பரவுதல்.

5) இந்தி பேசும் பீஹாரிகளுக்கு போலி ரேஷன் அட்டைகள் வழங்குவது.

6) சென்னை, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாக்குமரி போன்ற இடங்களில் தமிழ் பலகைகளே இல்லாமல் இந்தி மற்றும் ஆங்கிலப் பலகைகளில் மட்டும் கடைகள் நடத்துதல்.

7)கல்வித்துறையில் தமிழ் அறியாத OBCகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடு.

இதன் பின்னணியின் நமது தமிழ்நாட்டின் தெலுங்கு பேசும் அரசும் அவர்களின் இணையவழி தொண்டர்களில் பார்ப்பான் நாடகம் தொடர்ந்து நடைபெறுகிறது.

இன்னும் 50 வருடங்களில் தமிழ்நாட்டில் போலித்தமிழ் OBC வெறித்தனத்தால் தமிழ்நாடு தமிழை விட்டு இந்தி, தெலுங்கு, கன்னடம் மட்டும் பேசும் மாநிலம் ஆகும்.

ஹரன்பிரசன்னா said...

பெரியாரின் மறுபக்கம் - வைக்கம் போராட்டம் http://www.tamilhindu.com/2009/09/periyar_marubakkam_part16/

பெரியாரின் மறுபக்கம் - எல்லாப் பாகங்களும் இங்கே - http://www.tamilhindu.com/?s=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

Anonymous said...

Thanks for sharing this

Anonymous said...

Hi.. Balaa...
Thanks to give this article in this Blog. Periyar not only an atheist.He also a social reformer. Another side of periyar :
Very childish habit
Very nice person among with enemies also.
Kusumbu, Kurumbu ku peyar ponavar
Romba yathaarthavaathi..

Oru murai avaridam oruvar kettaar.. Neenga eppavume kadavul illainu solringale.. Ipo kadavul ungal munnaal thondrinaal enna solveerkal endru. Udane periyaar sonnaar..ithula ennaa irukku.. appadi vanthaa udane kadavul irukkaar nu solven endru sonnaar.

So, avar oru yathaarthavaathi.
Avar oru tholai noakkaalar.

Any how thanks for your post

Vetrichelvan
Ayyampet