பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 05, 2007

ராமர் பாலமா ? ராமர் பலமா ?

ராமேஸ்வரம் அருகே ராமர் பாலத்தை உடைக்க முயன்று உடைந்து கடலுக்குள் மூழ்கி விட்ட கருவியை மீட்க வந்த கிரேனும் உடைந்தது. இதனால் சேது சமுத்திரத் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ( அதை பற்றி ஒரு தொகுப்பு )

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள ராமர் பாலம் எனப்படும் ஆதாம் பாலத்தை (தீவுத் திட்டுக்களால் ஆன நீண்ட பாறை). தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்குமிடையே கடலுக்கடியில் புதைந்து கிடக்கிறது ராமர் பாலம். ‘சீதையை மீட்க ராமன் இலங்கை மீது படையெடுத்தபோது, வானரசேனைகளால் அமைக்கப்பட் டது இந்தப் பாலம்’ என்று புராணம் சொல்கிறது. அது உண்மையோ கற்பனையோ... தற்போது அந்த இடத்தில் சுமார் ஆறு மீட்டர் உயரத்துக்குக் கல்லும் மணலும் கொண்ட பெரும் திட்டு ஒன்று இருப்ப தாக அமெரிக்காவின் நாசா விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாட்டி லைட் படங்கள் மூலம் கண்டு பிடித்துச் சொல்லியிருக்கிறது. இது ராமர் பாலத்தின் சிதைவுதான் என இந்து அமைப்புகளும், மதவாதிகளும் நம்புகிறார்கள்.

கடலுக்குள் இருக் கும் இந்தத் திட்டை அப்புறப்படுத்தி னால்தான் சேதுக்கால்வாய் திட்டம் அடுத்த கட்டத்துக்கு நகரும் என்பதால் அதைத் தகர்க்கும் பணி மும்முரமாக்கப்பட்டு. உடைக்கும் முயற்சிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

கடந்த பத்து மாதங்களுக்கு முன் சேது கால்வாய்க்காகக் கடலுக்குள் இருக்கும் மணலை அள்ளும்பணியில் ஈடுபட்ட ‘டக்-6’ என்ற கப்பலில் கோளாறு ஏற்பட்டு அது கட லில் மூழ்கிப் போனது. சமீபத்தில் ராமர் பாலத்தை உடைப்பதற் காக ஆசியாவின் மிகப்பெரிய கப்பலான சி.எஸ்.சி.அக்வரியஸ் கொண்டு வரப்பட்டது. அது ராமர் பாலத்தை நெருங்கிய நிலையில், பாலத்தின் முனை கப்பல் மீது தட்டிவிட கப் பலிலிருந்த ‘ஸ்பட்’ என்ற தோண்டும் கருவி உடைந்து கடலுக்குள் விழுந்து விட்டது. சுமார் ஐம்பது டன் எடை கொண்ட இந்த பாகத்தை வெளி யில் எடுக்க சென்னையிலிருந்து ‘தங்கம்’ என்ற கிரேனை கொண்டு வந்தார்கள். சோதனை மேல் சோத னையாக அந்த கிரேனும் உடைந்து போக, ஒருவழியாக அதை சரி செய்து ‘ஸ்பட்’டின் உடைந்த பாகத்தை வெளியே தூக்கியபோது, அதன் ஒரு பகுதி கடல் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது தெரிந்தது. இதனால் புதிய ‘ஸ்பட்’ கருவியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டிருக்கிறது.

‘‘கால்வாய் தோண்டும் பணிக்கு இப்படி அடிமேல் அடி விழுந்து கொண்டிருப்பதற்கு காரணமே ராமர் பாலத்தை இடிக்கப்போனதுதான்’’ என்று இந்து அமைப்புகள் இப்போது சென்டிமென்ட்டான பிரசாரத்தைத் துவக்கியிருக்கின்றன.

புராதண காலத்தில் ராமரால் போடப்பட்ட பாலம் என்பது ஐதீகம். இந்தப் பாலத் துக்கு ஹனுமன் பாதுகாப்புக்கு இருக்கிறதா இந்துக்கள் நம்புறாங்க. (ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக இருந்து ராமநாம ஜெபம் பண்ணிக் கொண்டி ருப்பதாக நம்பிக்கை) அதனால்தான் இப்போது அதை இடிக்கப் போனவர்கள், இடிபட்டுத் திரும்பியிருக்காங்க. இது ஒரு எச்சரிக் கைதான். இதையும் மீறி பாலத்தை உடைக்க கச்சை கட்டி னால் அது ஆட்சியாளர்களுக்கு அவ்வளவு நல்லதல்ல’’ என்கிறார்கள்.

‘ராமர் பாலத்தை உடைத்தால் கோர்ட்டுக்குப் போய் தடுப்போம்’’ என்று அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவும் தற்போது எதிர்ப்புக் குரல் எழுப்பியிருக்கிறார்

ராமர் பாலம் இடிப்பதைக் கண்டித்து ராமேஸ்வரத்திலிருந்து ரதயாத்திரை தொடங்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் ராம.கோபாலன்.

இந்து அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் ஒன்றுகூடி அப்துல்கலாமை போய் பார்த்துக் கவலை தெரிவித்திருக்கிறார்கள்
( படம் - நாசா விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம்
சாட்டி லைட் படங்கள், நன்றி ஜூவி. செய்தி - ஜூவி, தினத்தந்தி, தட்ஸ் தமிழ் )

அப்படியே உங்க ஓட்டை போட்டுவிட்டு போங்க

9 Comments:

Hariharan # 26491540 said...

காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, பெரியாறு என எல்லா நதிகளும் நீர் இல்லாத மணல் ஆறுகளாக்கிய, தமிழகத்தில் மட்டுமே ஜீவநதி மாதிரி உற்பத்தியாகும் பகுத்தறிவு மூடநம்பிக்கையை எதிர்கொண்டு வெல்லும்.

//இதையும் மீறி பாலத்தை உடைக்க கச்சை கட்டி னால் அது ஆட்சியாளர்களுக்கு அவ்வளவு நல்லதல்ல’’ என்கிறார்கள்//

ஆஆஆ..ஐயோ பாபாகிட்ட ஆசி வாங்கியாச்சு... அம்மா கிட்டேயும் ஆசி வாங்கியாச்சு.... இன்னும் புளி கரைக்கிறாங்களேளே.... பகுத்தறிவுகளுக்குப் பரிகாரம் சொல்லுங்கப்பா...

ஆனால் பரிகாரம் சுயமரியாதையைத் தாக்குவதா மட்டும் இருக்கக்கூடாது என்பதுதான் பகுத்தறிவு!

இட்லி வடை: இந்தப்பாலம் கட்ட சின்னதாகக் கல் தூக்கிப்போட்டு ராமர் தடவியதால் முதுகுல மூணு கோடு பெற்ற அணில் தூக்கிப்போட்ட கல்லைப் பகுத்து அறிஞ்சு, பார்த்து பெயர்த்து எடுத்து வரச்சொல்லுங்க.

ஈரோட்டு பெரிய வெங்காயத்தின் மியூசியத்தில் வைக்கலாம் இல்லியா:-))

Anonymous said...

i am aasath

Did you heard the Newtons' Formula:

G = (M1*M2)/r^2

If you have such knowledge about properties of matter, try to derive the formation of this path. It is very,very simple. But for this research we need the non-fundamentalistic approach.

Do you accept the changes on everything ....

Change of geography of earth also possible .... Lemuurya is possible ... Faqruli has also possible .... Ramars' bridge also possible ... Carbon-aging also possible ....

IT has not within the matter of probability. IT is based on priorities of testing. Through scientific methodoloy, we take gegraphy first using carbon-aging also.

On Himaalayaas, such onthroplogist had found such body marks of deep-sea fishes. Due to the pull-out motion of dishes at core of earth, sea had changed to Himalayaa and Mountains change to Indian ocean/Bay of Bengal. On himalayaas, we show big rivers but at southside we can find the ground stream of water even at Merina beach. Our Western Mountains at TN had a big mountain before this changes had ocured. So-called Ramar Bridge ihad small mountains.

Beyond this scenerio we will show the 1964 disaster and destroy of Dhanushkodi. "Dhanush" has not a Tamil Word. Before Sankrization we havd used the words in tamil which is including the character of "akh". "Fakhuruli" is the one piece of example. so some lot of lands had continuously sinking at south-pole of our penninsula while growing of Everest. It is the nature of controversy. Pls see this correct way of approach.

Pls remember once again to the famous Newton's formula about two different masses (M1,M2) which is separated by a distance (r).

Anonymous said...

//i am aasath

I really dont understand what you are trying to convey.

Please explain in detail.

Thanks

Layman.

Vajra said...

இப்ப என்னன்றீங்க ?

ராமர் பாலத்த இடிக்கிறதா வேணாமா ?

நாட்டு மக்களின் எதிர்காலம் கருதி அதை உடைத்து சேது கால்வாய் அமைக்கவேண்டும். ஆனால், தொல்பபொருள் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து அதை நடுக்கடல் museum ஆக மாற்றி விட்டு டூரிஸ்ட் attaction ஆக்கிவிட வேண்டும். கால்வாய்க்கு கால்வாய், மியூசியத்துக்கு மியூசியம் என்று டபுள் காசு பாக்கலாம்!

மதுசூதனன் said...

ஐயா ஆசாத்....சத்தியமா நீன்ங்க சொல்ல வரும் விஷயம் புரியவில்லை. கொஞ்சம் விளக்கவும்...

இந்தத் தொகுப்புக்கு சுவையூட்டும் வித்தில் ஒரு சிறு கொசுரு இதோ...

இந்தப் பாலத்தை பகுதிகளை கார்பன் டேட்டிங் முறை மூலம் சோதனை செய்ததில் அதன் வயது சுமார் 17 லட்சம் ஆண்டுகள் எனத் தெரிய வருகிறது. அதே போல் ராமாயணம் நடந்ததாய்ச் சொல்லப்படும் காலமான த்ரேதாயுகம் 17.5 லட்சம் ஆண்டுகளுக்கும் முந்தையது. :)

அப்படியயின் ராமாயண காலத்தில் இந்தப் பாலம் கட்டப் பெற்றது உண்மையாக இருக்க வாய்ப்புன்டு அல்லவா?

அரவிந்தன் நீலகண்டன் said...

இல்லை இது தவறான தகவல். கார்பன் டேட்டிங் எப்படி பாறையில் செய்தார்கள்? என்ன மடத்தனம் இது. அது ராமர் கட்டிய பாலம் அல்ல என அடித்து சொல்லலாம். அது பவளப்பாறை தொகுப்பு மற்றும் இதர இயற்கை படிமங்களால் ஏற்பட்ட திட்டுக்கள். பால வடிவில் அமைந்திருக்க தொன்ம நினைவில் ராமர் பாலம் ஆகிவிட்டது. நாஸா படத்தினை விட சிறப்பாக நமது செயற்கை கோள்கள் இதனை படமெடுத்துள்ளன. அதில் இது இயற்கையாக உருவானதென்பது தெளிவாக தெரிகிறது. 17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மானுடத்தின் நிலை என்ன என்பதை சிறிதே சிந்தியுங்கள். இதனை இராமர் கட்டியதாக கூறுவது தவறு என்பது புலப்படும்.

Anonymous said...

அய்யா ஆசாத்,
//Did you heard the Newtons' Formula:
G = (M1*M2)/r^2//
என்னது இது. ஒன்னு ஒழுங்கா தெரிஞ்சா சொல்லு. இல்ல சும்மா இரு.
கீழே இருக்குறது நியுட்டன் பார்முலா.

The two forces at work are defined by F=G(M1)/r^2 and F=G(M2)/r^2. The total acceleration due to those "forces" involved in the M1-M2 system is a=G(M1+M2)/r^2. The accelerations due to the masses of the two components of the system are additive; and the relative acceleration of M2 toward M1 is twice the rate than that of the insignificant meteor toward M1.

Newton's F=G(Mm)/r^2 (along with the corresponding Principle of Equivalence that negates the accelerating effects resulting from the large product: F) assumes that two bodies are "action-reaction pairs," and that the force exerted on M1 by a meteor is "equal and opposite" to that exerted on the meteor by M1.
This comes from Newton's hypothesis that gravity is essentially an "action-at-a-distance" where the bodies somehow detect each other's mass, and then act accordingly.
All of this is based on the idea that gravity is an applied external force.

//On Himaalayaas, such onthroplogist had found such body marks of deep-sea fishes. Due to the pull-out motion of dishes at core of earth, sea had changed to Himalayaa and Mountains change to Indian ocean/Bay of Bengal. On himalayaas, we show big rivers but at southside we can find the ground stream of water even at Merina beach. Our Western Mountains at TN had a big mountain before this changes had ocured. So-called Ramar Bridge ihad small mountains.//

இங்கையும் திரும்பவும் தப்பு. இந்தோ ஆசியன் பிளேட்டுன்னு கேள்வி பட்டு இருக்கீங்களா?..

இம்யமலை எப்படி உருவானதனு தெரியுமா?..

//த்ரேதாயுகம் 17.5 லட்சம் ஆண்டுகளுக்கும் முந்தையது
//
மனிதன் தோன்றி 4லட்சம் ஆண்டுதான் ஆகுது.
அதுக்கு முன்னாடியே ராமர் வந்து ஆளில்லாத கடையில யாருக்கு டீ ஆத்திக்கிட்டு இருந்தாரு?.

Anonymous said...

i am aasath

i expect the answers from the persons who can journey with all Natural sciences.

Madhu! - Has Ramayanam done before 17.5 lakhs year or 17,000 yrs. Pls verify your History knowns.

Anonymous said...

From aasath

first one is my typo erroe about formula. ok. But did you have copy and paste this formula. I NEED the APPLICATION of this FORMULA to GEOScience of EARTH. Be develop your vision not DATA.

Second, i cant say that Himalayan DISC. While introduction to this vision, i had explain it. It is your own word.

I can give the Evidence of Onthropologist Report to you.. about the formation of Himalayaas. It had derived from geologist survey of india's 2005 report also.

Neelakandarae! Carbon dating has possible on Stones also. If it have a organic material it is possible. While under sea, it is the spot of birth of first organic compound before many million years (>17.5 lakhs years)