பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, February 03, 2007

உலககோப்பையும் சிவாஜியும்

அடுத்த மாதம் இறுதியில் உலககோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்ப மாகிறது. ஏப்ரல் 28-ல் உலக கோப்பை இறுதி போட்டி நடக்கிறது. எனவே 19 புதிய படங்கள் இம்மாதம் ரிலீஸ் ஆகின்றன. `டப்பிங்', `எடிட்டிங்' வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது.

இம்மாதம் வெளியாகும் படங்களின் பட்டியலில் சபரி, தீபாவளி, திருமகன், பருத்திவீரன், மொழி, உன்னாலே உன்னாலே, கூடல் நகர், அடாவடி, ஓரம்போ, லீ, முனி, சொல்லி அடிப்பேன், பெரியார், கண்ணும் கண்ணும், தூவானம், காசு இருக்கணும், பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகியவை உள்ளன. `வீராசாமி' படம் நேற்று (1-ந்தேதி) ரிலீசானது. `பொறி' இன்று வெளியானது. ஒரே மாதத்தில் இவ்வளவு படங்கள் வெளியாவது இம்முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

`சபரி'யில் விஜயகாந்த் டாக்டர் வேடத்தில் நடிக்கிறார். `பருத்திவீரன்' சூர்யா தம்பி கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகும் படம். பொங்கலுக்கே இப்படம் எதிர்பார்க்கப்பட்டு தள்ளிப்போனது. `திருமகன்' படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். `மொழி'யில் ஜோதிகா வாய்பேசதெரியாதவராக நடித்துள்ளார்.

`கூடல் நகரில்' பரத், சந்தியா ஜோடியாக நடித்துள்ளனர். `அடாவடி', `பெரியார்' படங்களில் சத்யராஜ் நடித்துள்ளார். `பெரியார்' பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம். இதில் மணியம்மை பாத்திரத்தில் குஷ்பு நடித்துள்ளார். `ஓரம்போ'வில் ஆர்யாவும், `லீ'யில் சிபியும் நடித்துள்ளனர்.

`சொல்லி அடிப்பேன்' விவேக் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம். முனியில் ராஜ்கிரணும், ராகவா லாரன்சும் நடித்திருக்கிறார்கள்.

ரஜினின் `சிவாஜி' படம் உலககோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்தபின் ரிலீசாகும் என்று தெரிகிறது. `தனுசின் பரட்டை என்கிற அழகு சுந்தரம்' படமும் சிவாஜியோடு ரிலீசாகிறது. கமலஹாசனின் `தசாவதாரம்' ஜுலை மாதத்துக்கு தள்ளி போகிறது.

( செய்தி மாலைமலர் )

1 Comment:

IdlyVadai said...

கிரிக்கெட் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகளை நேரடியாக ஒளிபரப்பும் போது அதை மத்திய அரசின் பிரசார் பாரதியுடன் பகிர்த்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய அவசர சட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி கலாம் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்