பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 13, 2007

கோன் பனேகா ராஷ்ட்ரபதி

ஜனாதிபதி பதவிக்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் பெயரை பரிந்துரை செய்ய சமாஜ்வாதி கட்சி பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.ஜனாதிபதி அப்துல் கலாமின் பதவிக்காலம் 5 மாதங்களுக்கு பிறகு முடிவடைகிறது. இந்நிலையில், அடுத்த ஜனாதிபதியாக யார் வரக்கூடும் என்பது பற்றி பல்வேறு விதமான யூகங்கள் கூறப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் டாக்டர் கரண்சிங் மற்றும் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோர் நிறுத்தப்பட லாம் என கூறப்பட்டு வருகிறது.

துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத் மற்றும் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரின் பெயர்களும் அடிபடுகிறது. ஜனாதிபதி அப்துல் கலாமே மீண்டும் இந்த பதவிக்கு முன்னிறுத் தப்படலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆச்சரியப்படும் வகையில் இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் பெயரும் சேர்ந்திருக்கிறது.

சமாஜ்வாதி கட்சி அவரது பெயரை பரிந்துரைப்பது பற்றி தீவிரமாக பரிசீலித்து வருவதாக பேசப்படு கிறது. அமிதாப்பச்சன் சமாஜ்வாதி கட்சிக்கு நெருக்கமானவர். தெலுங்கு தேசம், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் 3வது அணியின் வேட்பாளராக அமிதாப்பை நிறுத்த சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டிருப்பதாக பேசப் படுகிறது.

2 Comments:

பினாத்தல் சுரேஷ் said...

நேற்று இந்த விஷயம் கேள்விப்பட்ட உடனே மனசில தோன்றியது:

"கோன் பனேகா ராஷ்ட்ரபதி"

IdlyVadai said...

சுரேஷ் நல்ல தலைப்பு. பதிவுக்கு யூஸ் செஞ்சிக்கிறேன். நன்றி.