பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 05, 2007

2/3 ? 3/4 ?

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு இன்று வெளியாகிறது.
* கர்நாடக 2/3 பங்கு தண்ணீர் வேண்டும் என்கிறது.
* தமிழ்நாடு 3/4 பங்கு தண்ணீர் வேண்டும் என்கிறது.
* கர்நாடகாவில் 17,500 போலிஸ் குவிக்கப்படுள்ளார்கள்
* சென்னை, சேலம், கிருஷ்ணகிரி, உள்பட தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வந்த பஸ்கள் ஓசூரில் நிறுத்தப்பட்டன. சேலத்தில் இருந்து பெங்களூருக்கு தினமும் 60 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இன்று அந்த பஸ்கள் அனைத்தும் ஓசூர் வரையே இயக்கப்பட்டன.
* நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, மதுரை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து சரக்கு ஏற்றி வந்த லாரிகள் பரமத்தி வேலூரில் நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான லாரிகள் அங்கு காத்துக்கிடக்கின்றன.
* கோர்ட்டு தீர்ப்பு பெரிய அளவில் கலவரத்தை ஏற்படுத்தலாம் என்ற பீதி காரணமாக பெங்களூரில் உள்ள தமிழர்களில் பலர் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டனர். நிலமை சீரான பிறகு செல்ல அவர்கள் முடிவு செய்துள்ளனர். பெங்களூரில் இருந்து வெளியேற இயலாத தமிழர்கள் இன்று வீடுகளை விட்டு வெளியே வரவில்லை.
* எங்க ஆபீஸில் வேலை செய்யும் தமிழர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள். என் நண்பர்கள் எல்லோரும் ஆபிஸ் சென்று விட்டார்கள். ஆகையால் இது தப்பான நியூஸ். ( தகவல் செந்தில் குமரன் )
( செய்தி : மாலைமலர், NDTV, தினமலர் )
* More updates follow..

5 Comments:

செந்தில் குமரன் said...

///
பெங்களூரில் இருந்து வெளியேற இயலாத தமிழர்கள் இன்று வீடுகளை விட்டு வெளியே வரவில்லை.
///

:-))).

எங்க ஆபீஸில் வேலை செய்யும் தமிழர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள். என் நண்பர்கள் எல்லோரும் ஆபிஸ் சென்று விட்டார்கள். ஆகையால் இது தப்பான நியூஸ்.

IdlyVadai said...

நன்றி செந்தில் குமரன்.

IdlyVadai said...

சில அப்டேட்

1. பெங்களூர் செல்லும் பஸ்கள் நிறுத்தம் - CNNIBN

2. பெங்களூரில் சில அலுவலகங்களிலிருந்து மக்கள் வீட்டுக்கு கிளம்புகிறார்கள் ( மின்ஞ்சல் வழியாக திரு பாஸ்கர் )

IdlyVadai said...

தொடர்புடைய சுட்டிகள்
http://thamili.blogspot.com/2007/02/blog-post_05.html
http://imohandoss.blogspot.com/2007/02/blog-post_05.html
http://kaalangkal.blogspot.com/2007/02/blog-post_04.html

செந்தில் குமரன் said...

2.30க்கு தீர்ப்பு சொல்லத் துவங்குவார்கள் என்று cnn-ibn தெரிவிக்கிறது. தமிழ் நாடுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளி வந்தால் கிளம்பலாம் என்று எங்கள் டீமில் முடிவு செய்திருக்கிறோம்.

இன்று தான் தீர்ப்பு என்பதால் பிரச்சனை நாளை தான் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

கடையடைப்பு போன்றவை நாளை நடை பெறலாம். எங்கள் அலுவகத்தில் தமிழ் பேசுபவர்கள் தூரமாக செல்ல வேண்டியது இருந்தால் சீக்கரம் கிளம்பவும் முடிவெடுத்திருக்கிறார்கள்.