பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 30, 2007

' இட்லியால்' ரணகளமான கல்யாண வீடு!

கடலூரில் கல்யாண விருந்தில் இட்லிக்குப் பதில் பொங்கல் பரிமாறப்பட்டதால், பெரும் ரகளை ஏற்பட்டு, அடிதடியில் முடிந்தது. ( செய்தி உதவி: தட்ஸ் தமிழ் ). விவரமான செய்தி கீழே...

கடலூர் அருகே உள்ள நத்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திராடன். இவரது மகன் முத்துலிங்கத்திற்கும், பண்ருட்டி அருகே உள்ள கரும்பூரைச் சேர்ந்த பத்மநாபன் மகள் கஸ்தூரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களது திருமணம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் மண்டபத்தில் குழுமியிருந்தனர்.

முத்துலிங்கம், கஸ்தூரியின் கழுத்தில் தாலி கட்டிய பிறகு கல்யாண விருந்து தொடங்கியது. அப்போது இட்லி, பொங்கல், வடை ஆகியவை ப>மாறப்பட்டது.

கூட்டம் அதிகமாக இருந்ததால் இட்லி, வடை ஆகியவை காலியாகி விட்டன. முதல் பந்திகளிலேயே மணமகனின் வீட்டார் ஆக்கிரமித்து எல்லாவற்றையும் காலி செய்து விட்டனர் போலும். எனவே பின்னால் சாப்பிட வந்த மணமகள் வீட்டாருக்கு வெறும் பொங்கல்தான் கிடைத்தது.

இதனால் அவர்கள் கோபமடைந்தனர். பெண் வீட்டுக்காரர் ஒருவர் எனக்கு கண்டிப்பாக இட்லிதான் வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார். ஆனால் இட்லி இல்லை, பொங்கல்தான் இருக்கிறது. சாப்பிடுங்கள் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து மாப்பிள்ளை வீட்டாருக்கும், பெண் வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. சாப்பாட்டு அறையிலேயே அடித்து உருண்டனர்.

இருக்கைகளை தூக்கி வீசியும், ஒருவரை ஒருவர் தாக்கியும், சட்டைகளை கிழித்தும், வேட்டிகளை உருவியும் சண்டை களை கட்டியது. இதனால் மண்டபமே களேபரமாக இருந்தது. திருமணத்திற்கு வந்தவர்கள் மண்டபத்தை விட்டு வெளியே ஓடினர். இதை பொதுமக்கள் திகைத்துப் போய் வேடிக்கை பார்த்தனர்.

இந்த சண்டையில் மாப்பிள்ளை வீட்டாருக்கே அதிகமான அடி விழுந்தது. ஆறுமுகம் என்பவர் உள்பட 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

பெண் வீட்டாரின் ஆவேச தாக்குதலால் பயந்து போன மாப்பிள்ளை முத்துலிங்கம் கடலூர் முதுநகர் போலீஸில் புகார் கொடுத்தார். மாப்பிள்ளை வீட்டாரை, பெண் வீட்டார் அடித்த வேகத்தைப் பார்க்கும்போது எனது வாழ்க்கை எப்படி இருக்குமோ என பயமாக இருக்கிறது என புகார் கொடுத்தார்.

இதையடுத்து பெண் வீட்டாரை காவல் நிலையத்திற்கு அழைத்த போலீஸார் அவர்களை மாப்பிள்ளை வீட்டாருடன் சமாதானம் பேசி இரு தரப்பையும் அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

9 Comments:

செந்தழல் ரவி said...

இட்லிவடையால எப்பவுமே பிரச்சினைதான் அப்படீங்கறீங்களா ?

கோபி(Gopi) said...

செந்தழல் ரவி,

இந்தச் செய்தி "இட்லி வடை இல்லை"ன்னா பிரச்சனைதான்னு இல்ல சொல்லுது!

கோபி(Gopi) said...

செந்தழல் ரவி,

இந்தச் செய்தி "இட்லி வடை" இல்லைன்னா பிரச்சனைன்னு இல்ல சொல்லுது!

சென்ஷி said...

ஆக மொத்தத்துல பிரசினை இட்லியாலதான்னு சொல்றீங்க :)

சென்ஷி

Hariharan # 26491540 said...

இட்லி வேணும்னா மல்லிப்பூ மாதிரி சாப்ஃடா இருக்கலாம். இட்லி இல்லைன்னா பூகம்பமே வெடிக்கும்:-))

IdlyVadai said...

Hariharan - சுட்ட இட்லியா வார்த்த இட்லியா ?

Hariharan # 26491540 said...

//Hariharan - சுட்ட இட்லியா வார்த்த இட்லியா ? //

வார்த்துச் சுட்டாதானே அது இட்லி?

நாந்தான் குழப்பத்துல பதிவு போட்டிருக்கேன்.

இட்லிவடையே சுட்ட இட்லியா வார்த்த்த இட்லியான்னு கேட்டா?

வார்த்தை இல்லை வி(வ)டைசொல்ல
:-))

Aani Pidunganum said...

என்ன கொடுமை இது சரவணன் அப்படி தான் சொல்லனும்.
நல்ல வேலை குஷ்பு இட்லி வெனும்னு சொல்லம விட்டாங்களே.
வரவர சட்னி இல்லைனா குட அடிச்சுபாங்க போல.

நாமக்கல் சிபி said...

இட்லி வடை இருந்தாலும் இன்னல்தான்!
இல்லாவிட்டாலும் இன்னல்தான்!

:))