பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 24, 2007

ரெய்டுக்கு பிறகு விஜயகாந்த் பேட்டி

வீடு, கட்சி அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை குறித்து தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் சோதனை முடிந்தபிறகு வீட்டில் நிருபர்களிடம் கூறியது:


எனது வீடு மட்டுமல்ல கல்லூரி, கட்சி அலுவலகம், உறவினர் வீடுகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். இது போன்ற எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படமாட்டேன். இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.

கருணாநிதிக்கு நான் பொன்விழா நடத்தினேன். அப்போது கருணாநிதி என்னிடம் தம்பி சிறப்பாக விழா நடத்தி உள்ளாய், இதற்கு உங்களுக்கு என்ன கைமாறு பண்ணப்போகிறேன் என்று தெரியவில்லையே என்றார். இந்த சோதனை மூலமாக கைமாறு செய்துள்ளார்.

திருமணமண்டப விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு, மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது. அதை திசைதிருப்ப இப்படி செய்கிறார்கள். இந்த வருமானவரி சோதனை கோடிக்கணக்கில் ஆவணங்கள் சிக்கியதாக பொய் செய்தி பரப்பி உள்ளார்கள். அதிகாரிகள் சோதனையில் ஒன்றும் கிடைக்கவில்லை. ஒன்றும் கிடைக்காத போதும் அதிகாரிகள் போனில் யாரிடமோ அடிக்கடி பேசினார்கள்.

வருமானவரி சரியாக கட்டியதால் எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படமாட்டேன். இதனால் கட்சியை விட்டு விட்டு ஓடிவிட மாட்டேன். என் சொத்தே அழிந்தாலும் கட்சியை விட்டுவிட்டு ஓடமாட்டேன். மக்களை நான் தெய்வமாக நினைக்கிறேன். அவர்கள் நடப்பதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஊழல் செய்த அமைச்சர்கள் வீட்டில் இப்படி சோதனை நடத்தினார்களா? ஊழல் செய்து சொத்து சேர்த்தால் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் உழைத்து சம்பாதித்தால் அரசியல் பழிவாங்க வருமானவரி சோதனை நடத்துகிறார்கள்.

சட்டசபைக்கு இன்று (நேற்று) போவதாக இருந்தேன். இதன் மூலம் தடுத்துவிட்டார்கள். சட்டசபைக்கு செல்லாமல் தடுப்பது உரிமைமீறல் பிரச்சினை ஆகும். இது குறித்து சட்டசபையில் உரிமை மீறல் பிரச்சினை எழுப்புவேன்.

11 Comments:

செந்தழல் ரவி said...

எனக்கென்னவோ தலைவர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் என்ற பழமொழி நினைவில் வந்துதொலைக்கிறது...( கொஞ்சம் லோக்கலா சொன்னா : ஏத்திவிடுறது)

We The People said...

//எனக்கென்னவோ தலைவர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் என்ற பழமொழி நினைவில் வந்துதொலைக்கிறது//

இல்லை தலைவா, இது ஒரு கல்லில பத்து பதினைந்து மாங்கா அடிக்கற வித்தை!!!

1. மாநகராட்சி தேர்தல் - உயர் நீதி மன்ற தீர்ப்பு, அரசுக்கும் அதன் போலீஸ்க்கும் கிடைத்த அடி, மறைந்து விஜயகாந்த் மேட்டர் பூதாகரமாகும்.

2. விஜயகாந்த்தை இந்த மாதிரி ஏத்திவிட்டா தி.மு.கவுக்கு நஷ்டம் இல்லை, அதன் ஓட்டு வங்கி இன்டாக்ட் , அ.தி.மு.கவுக்கு போகும் ஓட்டு தான் காலியாகும்!!

3. சாதரண மக்கள் பிரச்சனையான விலைவாசி உயர்வு மற்றும் பல விசயங்கள் அடி பட்டுப்போகும்

என பல விசயங்கள் குறிவைத்து தான் இந்த ரெய்டு!! சபாஷ் சொல்லுங்க நம்ம ராஜதந்திரிக்கு!!!

அருண்மொழி said...

"ரசிகர்கள் அரசாங்க கார்களை சேதப்படுத்தியது ஒண்ணும் தப்பில்லை" என்ற பதிலை ஏன் தவிர்த்துவிட்டீர்கள்?

bala said...

//"ரசிகர்கள் அரசாங்க கார்களை சேதப்படுத்தியது ஒண்ணும் தப்பில்லை" என்ற பதிலை ஏன் தவிர்த்துவிட்டீர்கள்?//

அருண்மொழி அய்யா!

இதுக்கெல்லாம் வீதபீப்புள் அய்யா பதில் அளிக்க மாட்டார் அய்யா. கருணாநிதி அய்யாவை பார்த்தாலே வீதபீப்புள் அய்யாவுக்கு மொளகாய் வெச்சமாதிரி இருக்கும் அய்யா.

பாலா

சிநேகிதன் said...

சோ அடுத்தவார துக்ளக்கில் ஒப்பாரி பாடப்போகிறார் :-)

Anonymous said...

//"ரசிகர்கள் அரசாங்க கார்களை சேதப்படுத்தியது ஒண்ணும் தப்பில்லை" என்ற பதிலை ஏன் தவிர்த்துவிட்டீர்கள்?//

இது தமிழக அரசியலில் ஓர் அங்கம். கருனாநிதி வீட்டில் இப்படி நடந்தால் திமுக தொண்டர்கள் கைகட்டிக்கொண்டா இருப்பார்கள்.

இப்படியெல்லாம் நடக்கவேண்டும் என்பதுதானே கருனாநிதியின் எண்ணம்.

Anonymous said...

//சோ அடுத்தவார துக்ளக்கில் ஒப்பாரி பாடப்போகிறார் :-) //

அவரு நெலைமையை ததிங்கிணத்தோம் போடுது. அவரு விஜயகாந்துக்காக ஒப்பாரி வெக்கப் போறாரா?

அவரோட ஆழ்வார்ப்பேட்டை பில்டிங்கை காப்பாத்திக்குறதுக்காக கருணாநிதி கால்ல விழப்போறாரு பாருங்க

We The People said...

பாலா


//"ரசிகர்கள் அரசாங்க கார்களை சேதப்படுத்தியது ஒண்ணும் தப்பில்லை" என்ற பதிலை ஏன் தவிர்த்துவிட்டீர்கள்?

இதுக்கெல்லாம் வீதபீப்புள் அய்யா பதில் அளிக்க மாட்டார் அய்யா. கருணாநிதி அய்யாவை பார்த்தாலே வீதபீப்புள் அய்யாவுக்கு மொளகாய் வெச்சமாதிரி இருக்கும் அய்யா.//

என்னங்க இது நானா இந்த பதிவை போட்டேன்!!?? என்னை ஏன் கேட்கச் சொல்லறீங்க?? மொளகாயை தான் எல்லா அரசியல்வியாதிகளும் சேர்ந்து மக்கள் தலையில தேய்க்கிறாங்களே!!! நானும் மக்கள் கூட்டத்தில் ஒருத்தன் தானே அப்பறம் எனக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீங்க??

We The People said...

பாலா


//"ரசிகர்கள் அரசாங்க கார்களை சேதப்படுத்தியது ஒண்ணும் தப்பில்லை" என்ற பதிலை ஏன் தவிர்த்துவிட்டீர்கள்?

இதுக்கெல்லாம் வீதபீப்புள் அய்யா பதில் அளிக்க மாட்டார் அய்யா. கருணாநிதி அய்யாவை பார்த்தாலே வீதபீப்புள் அய்யாவுக்கு மொளகாய் வெச்சமாதிரி இருக்கும் அய்யா.//

என்னங்க இது நானா இந்த பதிவை போட்டேன்!!?? என்னை ஏன் கேட்கச் சொல்லறீங்க?? மொளகாயை தான் எல்லா அரசியல்வியாதிகளும் சேர்ந்து மக்கள் தலையில தேய்க்கிறாங்களே!!! நானும் மக்கள் கூட்டத்தில் ஒருத்தன் தானே அப்பறம் எனக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீங்க??

சிநேகிதன் said...

//சிநேகிதன் said...

சோ அடுத்தவார துக்ளக்கில் ஒப்பாரி பாடப்போகிறார் :-)
//

பார்பணர்களை எதிர்ப்போருக்கு எதிராக எழுதுபவருக்கும், கருனாநிதியின் ஆட்சியை விமர்சித்து எழுதுபவருக்கும். திராவிடத்தை தூக்கிபிடித்து எழுதுபவருக்கு எதிர்கருத்து சொல்வருக்கும் இந்த வலைப்பதிவுலகில் போலிகள் எவ்வளவு சீக்கிரம் வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரும் என்பதற்கு இந்த போலியும் ஒரு உதாரணம்.

சில நாட்களுக்கு முன் இட்லி வடை அவர்கள் கருனாநிதி, சாய்பாப சந்திப்பை தொடர்ந்து போலி பற்றி பதிவு வெளியிட்டு இருந்தார்.

எதிரிகளை நேருக்கு நேராக எழுத்துகள் மூலம், கருத்துக்கள் மூலம் சந்திக்க திறமையில்லாதவர்கள் இது போல போலிகள் மூலம் முடக்கப்பார்கிறார்கள்.
இதிலிருந்தே தெரிகிறதா இவர்களின் அராஜகம்.

கரு.மூர்த்தி said...

We The People said...

//பாலா


//"ரசிகர்கள் அரசாங்க கார்களை சேதப்படுத்தியது ஒண்ணும் தப்பில்லை" என்ற பதிலை ஏன் தவிர்த்துவிட்டீர்கள்?

இதுக்கெல்லாம் வீதபீப்புள் அய்யா பதில் அளிக்க மாட்டார் அய்யா. கருணாநிதி அய்யாவை பார்த்தாலே வீதபீப்புள் அய்யாவுக்கு மொளகாய் வெச்சமாதிரி இருக்கும் அய்யா.//

என்னங்க இது நானா இந்த பதிவை போட்டேன்!!?? என்னை ஏன் கேட்கச் சொல்லறீங்க?? மொளகாயை தான் எல்லா அரசியல்வியாதிகளும் சேர்ந்து மக்கள் தலையில தேய்க்கிறாங்களே!!! நானும் மக்கள் கூட்டத்தில் ஒருத்தன் தானே அப்பறம் எனக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீங்க?? //

We The People அய்யா , ஏமாறலாமா ? அது பாலா அல்ல , தனகென்று ஏதுமில்லா திருடியே பிழைக்கும் திராவிட போலி ( திராவிடத்தில் தனியே போலி வேறா ?)

சினேகிதன் , பாலா இரு பின்னூட்டங்களூமே போலிதான் , தன் குழந்தைகளுக்காவது தந்தையாக இருக்க ( அதுக்கும் போலி தேடாதீங்கப்பா) வேண்டுவோம் .