பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 19, 2007

ஆண்களுக்கு ஆபத்து

தை மாதம் பிறந்த நேரம் ஆண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற வதந்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் காட்டுத்தீ போல் வேகமாக பரவி வருகிறது. இந்த தோஷத்தில் இருந்து தப்பிக்க வீடுகளுக்கு முன் பெண்கள் விளக்குகள் ஏற்றி வழி படவேண்டும் எனவும் தகவல் பரப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று அதிகாலை முதல் சென்னை நகரிலும், புதுச்சேரியிலும் பெண்கள் வீட்டில் உள்ள ஆண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அகல் விளக்குகளை வீட்டின் வாசலில் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்

வலைப்பதிவில் இருக்கும் ஆண்களை காப்பாத்த பெண் வலைப்பதிவர்கள் விளக்குகள் ஏற்றுவார்களா ?

7 Comments:

திருவடியான் said...

முன்பு ஒரு தடவை மஞ்சள் சேலையோ அல்லது பச்சைச் சேலையோ அக்காள் தங்கைக்கு வாங்கித்தரவேண்டும் என்று பரவிய வதந்தீ மாதிரிதான் தெரிகிறது.

எப்படியோ எண்ணெய் வியாபாரிகளும் அகல்விளக்கு விற்போர்களும் பிழைத்தால் சரி...

thiruvadiyan said...

முன்பொரு முறை அக்காள் தங்கைகளுக்கு மஞ்சள் கலரிலோ அல்லது பச்சைக் கலரிலோ புடவை வாங்கித்தரவேண்டும் என்று ஒரு வதந்தீ கிளம்பியது போலத்தான் இருக்கிறது.

எப்படியோ.. அகல் விளக்கு விற்போரும் எண்ணெய் வியாபாரிகளும் பிழைத்துக் கொண்டால் சரி...

✪சிந்தாநதி said...

அடப்பாவி மனுசா:)))

நேத்து நான் இந்தச் செய்தியைப் படிச்சுட்டு நொட்பேடில் பிரதிகூட எடுத்தேன்... பிறகு மூடநம்பிக்கையை நாமளும் சேர்ந்து பரப்பணுமான்னு விட்டுட்டேன்...

நல்லா பரப்புங்க... பரப்புங்க...

செந்தழல் ரவி said...

தமிழ்நாட்டில் பணப்புழக்கம் வர இந்த மாதிரி வதந்தீ அப்ப்பப்போ கிளப்பனும்...

உருப்புடியாக கிளப்ப பத்து வதந்திகள் என்று யாராவது எழுதினால் அதை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து எங்க ஊர்ல கொடுத்து மாசத்துக்கு ஒன்னா கிளப்ப சொல்றேன்....

இட்லிவடை கவனிப்பாரா ?

IdlyVadai said...

சென்னை கொடுங்கையூரில் உள்ள கடும்பாடி அம்மன் கோவில் தெருவைச் சேர்நத் ஜக்கம்மா, பாண்டியம்மாள், ஈஸ்வரி உள்ளிட்டோரும் தங்களது குடிசை வீடுகளுக்கு முன் அகல் விளக்குகளை வைத்தனர்.

அப்போது ஜக்கம்மாவின் வீட்டு முன் வைக்கப்பட்ட அகல் விளக்கிலிருந்து கிளம்பிய தீப்பொறி குடிசையில் பற்றிக் கொண்டது. மளமளவென அருகில் இருந்த குடிசைகளுக்கும் தீ பரவியது.

இதில் கோபால் என்பவரின் குடிசையில் இருந்த சிலிண்டர் வெடித்து பெரும் தீ விபத்தாக மாறியது. கோபால் குடும்பத்தினர் குடிசைக்குள் சிக்கிக் கொண்டனர்.

தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து கோபால் குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் 12 குடிசைகள் கருகி சாம்பலாயின. ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டது.

வல்லிசிம்ஹன் said...

இருள் போக விள்க்கேற்றுவது
அறிவுசார்ந்த நைகழ்ச்சி.
இந்த வதந்தியை என்ன செய்யலாம்.:-)(

துளசி கோபால் said...

//இதில் கோபால் என்பவரின் குடிசையில் இருந்த சிலிண்டர் வெடித்து பெரும் தீ விபத்தாக மாறியது. கோபால் குடும்பத்தினர் குடிசைக்குள் சிக்கிக் கொண்டனர்.//

ஐய்யோ.... இப்ப நான் என்ன செய்யணும்?
கையும் ஓடலை காலும் ஓடலை(-: