பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 17, 2007

பகவான் சத்ய சாயிபாபா பாராட்டு விழா !

இட்லிவடையில் கழுகார் செய்தி
இன்றைய மாலை மலர் செய்தி கீழே !

சென்னை நகர மக்கள் குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நதிநீர் வழங்க வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் இருந்த போது கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தம் நடந்தது.

ஸ்ரீகைலேசம் அணையில் இருந்து சோமசீலா அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு அங் கிருந்து கண்டலேறு அணைக்கு விடப்பட்டு அதன் வழியாக சென்னையை அடுத்த பூண்டி ஏரிக்கு தண்ணீர் விடப்பட வேண்டும் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தத்தின்படி 3 மாநில அரசும் தலா 5 டி.எம்.சி. வீதம் 15 டி.எம்.சி. தண்ணீர் சென்னை குடிநீர் தேவைக்கு வழங்கப்பட வேண்டும்.

அந்த ஒப்பந்தத்தின்படி 1996-ம் ஆண்டு சென்னைக்கு தண்ணீர் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் வரவில்லை. ஆந்திர மாநிலத் தில் உள்ள கண்டலேறு நீர்தேக்கத்தில் இருந்து தமிழக எல்லை பகுதி வரை கால்வாய் மோசமாக இருந்ததே இதற்கு காரணம்.

கால்வாயின் இருபுறமும் பலம் இல்லாமல் உடைந்து இருந்ததாëல் கிருஷ்ணா நீர் வழியில் வீணானது. இதனால் தண்ணீர் வரவில்லை. குடிநீëர் கிடைக்காமல் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டதை அறிந்த புட்டபர்த்தி சாய் பாபா கால்வாயை சரி செய்து தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தார்.

ஸ்ரீசத்திய சாயி சேவா அமைப்பு மூலம் சுமார் ரூ.200 கோடி செலவில் கால்வாய் பலப்படுத்தப்பட்டது. பூண் டிக்கு வரும் நீரின் வேகத்தை தாங்கும் அளவிற்கு கால்வாயின் கரைகள் மேம் படுத்தப்பட்டன.

சாய்பாபாவின் முயற்சியால் சென்னை மக்களுக்கு கிருஷ்ணா நீர் கிடைத்ததையொட்டி அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் 21-ந் தேதி காலை 11 மணிக்கு சென்னை மக்கள் சார்பாக நடத்தப்படுகிறது. முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். விழாவில் சத்ய சாயிபாபா கலந்து கொள்கிறார்.

தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, மகாராஷ்டிரா கவர்னர் எஸ்.எம்.கிருஷ்ணா முதல்-மந்திரிகள் ராஜசேகர ரெட்டி (ஆந்திரா), தேஷ்முக் (மகாராஷ்டிரா), குமாரசாமி (கர்நாடகா), மத்திய மந்திரிகள் சிவராஜ் பட்டீல், லல்லு பிரசாத், தயாநிதி மாறன், மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

சாய்பாபாவுக்கு சென்னை மக்கள் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி குறித்து ஸ்ரீ சத்திய சாயி அமைப்பு அகில இந்திய தலைவர் சீனிவாசன், மாநில தலைவர் ரமணி ஆகியோர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

பகவான் சத்ய சாயிபாபா 10 வருடங்களுக்கு பிறகு நாளை (19-ந் தேதி) சென்னை வருகிறார். சென்னை மக் களின் தாகத்தை தீர்க்க உதவும் வகையில் கண்டலேறு அணை முதல் பூண்டி நீர் தேக்கம் வரை கால்வாய் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணி 18 மாதங்கள் நடந்தன.

இதன் மூலம் சென்னை மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி அடைந்து உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் குடிநீர் சேதம் அடை யாமல் முழுமையாக சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

பாபா டிரஸ்ட் மூலம் இந்த பொதுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ரூ.200 கோடி செலவிடப்பட்டது. சாய்பாபாவின் அற்புத சேவையை சென்னை மக்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் விழா நடத்தப்படுகிறது.

உலக மக்கள் நன்றாக இருக்கும் வகையில் திருவான் மிïரில் 10 நாட்கள் யாகம் நடத்தப்படுகிறது. 20-ந் தேதி முதல் நடக்கும் இந்த யாகத்தில் சாய்பாபா கலந்து கொள்கிறார்.

அதிருத்ரயகினம், அதிருத்ர அபிஷேகம் காலை 6 மணி முதல் 11 மணி வரையும் பிற்பகல் 3.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடக்கிறது. இதில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளலாம்.

கண்டலேறு-பூண்டி கால்வாய் சீரமைப்பு பணிக்கு என்று யாரிடமும் நன்கொடை பெறவில்லை. முற்றிலும் அறக்கட்டளையின் நன்கொடை நிதியில் இருந்து செய்யப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். பேட்டியின் போது டிரஸ்ட் உறுப்பினர்கள் பூபாலன், ஆதிமூலம் உடன் இருந்தனர்.
( நன்றி மாலை மலர் )

3 Comments:

Hariharan # 26491540 said...

ஆடி18ம் பெருக்கை ஆழ்துளைக் கிணற்றில் கொண்டாட காவிரிக்கரை தமிழர்களை தமிழின் தமிழின் அரசியல் சாணக்கியத்தினால் காவியம் எழுதியமாதிரி இல்லாமல் இந்துமத மூடன், தலைசீவக்கூட பகுத்தறிவில்லாத பரட்டைக்கு பகுத்தறிவுப்பகலவன், பண்பாளர் கருணாநிதி எடுக்கிறார் விழா!

அனைவரும் வாரீர்!

அது என்ன நேரு உள் விளையாட்டரங்கம்?

சூரியனாய் உதிக்கும், இலையாய்த் துளிர்க்கும் அரசியல் உள்குத்து விளையாட்டரங்கம் அல்லவா அது
:-)))

செந்தழல் ரவி said...

அதென்ன ஒன்னும் தெரியாத பச்சப்புள்ளையாட்டம் ஒரு பதிவு...!!

Anonymous said...

//இந்துமத மூடன், தலைசீவக்கூட பகுத்தறிவில்லாத பரட்டைக்கு //

கடைசியில் இவ்வளவுதானா
Hariharan # 26491540
அகத்தின் பண்பு.