பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 30, 2007

விஜயகாந்த் அம்மா அரசியல்

வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினால் அதை சட்ட ரீதியாக எதிர்கொள்ளாமல் கற்றுக்குட்டித்தனமாக கொடும்பாவியை எரிப்பது, வன்முறையில் ஈடுபடுவது ஆகியவை தவறான முன் உதாரணமாகும். "அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான்'' என்பதைப் போல நடந்து கொள்வது கடுமையான கண்டனத்திற்குரியது. இப்போதாவது அரசியலில் "வானம்'' யார் என்பதையும், வெறும் "கைக்குட்டைகள்'' யார் என்பதையும் புதிய "திடீர் அரசியல்வாதிகள்'' தெரிந்து கொண்டால் அவர்களுக்கு நல்லது.
- ஜெயலலிதா அறிக்கை


‘சென்னையின் 99 வார்டுகளுக்கான மறு தேர்தலில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்று ஜெய லலிதா அறிவித்திருக்கிறார். ‘வன்முறைக்குக் காரணமான வர்களான டி.ஜி.பி., தேர்தல் கமிஷனர், போலீஸ் கமிஷனர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்படும் வரை உள் ளாட்சி மன்ற தேர்தலில் கலந்துகொள்ள மாட்டோம்...’ என்பதுதான் அந்த அறிக்கையின் சாராம்சம். இப்படி யொரு அறிக்கை வந்திருப்பதன் பின்னணி குறித்து விசாரித் தால், விஜயகாந்தை கைகாட்டுகிறார்கள் அ.தி.மு.க-வினர். இப்போதிருக்கும் நிலையில் தேர்தல் நடத்தினால், சென்னையின் பல வார்டுகளில் விஜயகாந்த் கட்சி இரண்டாமிடத்துக்கு வந்துவிடுமாம். அதாவது, அ.தி.மு.க. மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டுவிடுமாம். அப்படி யொரு இக்கட்டை தெரிந்துகொண்ட பின்னால்தான் சாமர்த்தியமாக ‘தேர்தலைப் புறக்கணிக்கிறோம்’ என்று சொல்லி, ஒதுங்கிக்கொள்ள நினைக்கிறார்களாம் அ.தி.மு.க-வினர்.’’
- ஜூவி செய்தி

3 Comments:

Vicky said...

// 7 நிமிடம் தாமதம் இல்லாமல் ஸ்கோர்

:)

செந்தழல் ரவி said...

விஜயகாந்த் கட்சியில் போஸ்டிங் எல்லாம் என்ன ரேட்டுன்னு வெளியிட்டீங்கன்னா கொஞ்சம் வசதியா இருக்கும்.

Anonymous said...

Vijayakantha vachu camedy keemady pannaliye? :)))

Sakthi