பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 05, 2007

சதாம் உசேன் - துக்ளக் தலையங்கம்

சதாம் ஹுஸேன் தூக்கு பற்றி துக்ளக் தலையங்கம்

தவறு காண இடமில்லை !
சதாம் ஹுஸேன் தூக்கிலிடப்பட்டது, இந்தியாவில் பலத்த கண்டனத்திற்குள்ளாகியிருக்கிறது. இது வியப்புக்குரியதல்ல.

பொதுவாகவே ஒரு குற்றத்திற்குரிய தண்டனை அளிக்கப்படுகிறபோது, பலர்
மனங்களிலும் குற்றம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, தண்டனையின் கடுமையே பெரிதாகத் தெரிகிறது. அதுவும், தண்டனை பெறுகிறவர் "பெரிய நபர்' என்றால், அதனால் ஏற்படுகிற அதிர்ச்சி பரவலாகவே அமைந்து விடுகிறது. சாதாரண மனிதன் மீது சட்டம் தனது கடுமையைக் காட்டினால் அது சர்வ சாதாரணமான விஷயமாகிறது; அதுவே ஒரு "பெரிய மனிதர்' – அதுவும் ஆட்சி செய்தவர், பெரிய பதவியில்
இருந்தவர் என்றால், மக்கள் சஞ்சலம் அடைகிறார்கள்.

கைது, சிறைவாசம், வழக்கு போன்றவற்றை அம்மாதிரி நபர் சந்திக்க நேர்ந்தால், "அப்படி என்ன யாரும் செய்யாத குற்றத்தை இவர் செய்து விட்டார்? இவரை இப்படி நடத்துகிறவர்கள் மட்டும் யோக்கியர்களா?' என்ற கேள்விகள் பலர் மனதில் எழுகின்றன. காரணம் – மக்கள் மனதில், குறிப்பாக ஆட்சி செய்தவர்கள் பற்றியும், பொதுவாகவே தங்கள் பின்னால் ஒரு கூட்டத்தை வைத்திருப்பவர்கள் பற்றியும், பிரமிப்பு கலந்த, ஒரு எண்ணம் இருக்கிறது; "அவர்கள் நம்மை விட உயர்ந்தவர்கள்' என்ற எண்ணம் பலர் மனதின் அடித்தளத்திலும் இருக்கிறது. அதனால்தான் சட்டம் அவர்களை நோக்கிச் செல்கிறபோது, மக்கள் மனதில் ஒரு நெருடல் உண்டாகிறது. ஆயிரம்தான் ஜனநாயகம், அனைவரும் சமம், மனிதர்களிடையே உயர்வு தாழ்வு கிடையாது என்றெல்லாம் பேசினாலும், "முக்கியஸ்தர்'களை, சட்டம் வித்தியாசமாக நடத்த வேண்டும் என்கிற எண்ணம், நமது மனங்களின் ஆழத்தில் புதைந்து கிடக்கிறது.

இது சரியான நிலை அல்ல; ஆனால் நடைமுறை உண்மை. சதாமுக்கு முன்னால், பல நாடுகளில் பலர் மரண தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்; இனியும் ஆவார்கள். இவற்றில் சில, சர்வாதிகார ஆட்சிகள் தருகிற அநியாயமான தண்டனைகள்; வேறு சில, தவறான தீர்ப்பினால் விளைபவை. இம்மாதிரி நடந்திருக்கிறது; நடக்கிறது; நடக்கும். ஆனால் அவை பற்றியெல்லாம் பத்திரிகைகளில் படிக்கிறபோது, அது அன்றைய செய்தியாக மட்டும் அமைகிறது; அடுத்த நாள் மறந்து விடுகிறது. சதாம் ஹுஸேனைத் தவிர மேலும் இருவர் தூக்கிலிடப்படுவது பற்றி, யாரும் பெரிய சோகத்திற்குள்ளானதாகத் தெரியவில்லை என்பது கவனிக்கத்தக்கது. சதாமுக்கு கிடைத்த தண்டனையோ உலகின் பல பாகங்களில் அதிர்ச்சியையும், கோபத்தையும் உண்டாக்கியிருக்கிறது.

இத்தனைக்கும், அவர் ஒன்றும் அப்பாவி அல்ல; தன் மீது சுமத்தப்பட்ட "148 பேர் கொலை' என்கிற குற்றத்தை, தான் செய்ததில் தவறில்லை என்றுதான் அவர் வாதாடினாரே தவிர, அம்மாதிரி நடக்கவில்லை என்று கூற அவரால் இயலவில்லை. ஆனால் அவரால் கொலையுண்டவர்கள் சாதாரண மக்கள்; அதனால் அது
அதிர்ச்சியைத் தரவில்லை. அவரோ ஆட்சியில் இருந்தவர்; முக்கியஸ்தர்; ஆகையால் அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை அதிர்ச்சியைத் தருகிறது! இது தவறான அணுகுமுறை.

நம்மைப் பொறுத்தவரையில், குற்றம் செய்தவர், குற்றத்திற்கேற்ற தண்டனையைப் பெற்றிருக்கிறார் என்றே கருதுகிறோம். இதனால் ஈராக்கில் அமைதி ஏற்பட்டு விடாது; மாறாக, ஷியாக்கள் மீது ஸுன்னிகள் நடத்துகிற பயங்கரவாதம் மேலும் கடுமையாகக் கூடும். ஆனால் அமைதி கருதி, ஒரு குற்றவாளியிடமிருந்து சட்டம் ஒதுங்கிக் கொள்ளும் என்பது சரியாக இருக்காது. அவர் உயிருடன் இருந்தாலும், அதன் காரணமாக, ஈராக் கலவரங்கள் நின்றுவிடப் போவதில்லை.

தங்களுடைய சர்வாதிகார ஆட்சியில் பல கொடுமைகள் புரிந்த யூகோஸ்லேவியாவின் (ஸெர்பியா) மிலோஷிவிச், சிலியின் பினோசெட் ஆகியோர் சமீப காலத்தில், தங்களுடைய கொடுமைகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் ஆனார்கள். அந்த வரிசையில்தான், சதாம் ஹுஸேனும் தனது கொடுமைகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர் ஆனார். இதில் தவறு காண இடமில்லை.

( நன்றி: துக்ளக் )

19 Comments:

Anonymous said...

தங்களுடைய சர்வாதிகார ஆட்சியில் பல கொடுமைகள் புரிந்த யூகோஸ்லேவியாவின் (ஸெர்பியா) மிலோஷிவிச், சிலியின் பினோசெட் ஆகியோர் சமீப காலத்தில், தங்களுடைய கொடுமைகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் ஆனார்கள்.
They were not convicted or hanged.
Pinochet faced trial but was not convicted.Milosevic was tried for genocide.The same should apply to
Modi.Will cho accept this.

Anonymous said...

//பொதுவாகவே ஒரு குற்றத்திற்குரிய தண்டனை அளிக்கப்படுகிறபோது, பலர்
மனங்களிலும் குற்றம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, தண்டனையின் கடுமையே பெரிதாகத் தெரிகிறது. அதுவும், தண்டனை பெறுகிறவர் "பெரிய நபர்' என்றால், அதனால் ஏற்படுகிற அதிர்ச்சி பரவலாகவே அமைந்து விடுகிறது. சாதாரண மனிதன் மீது சட்டம் தனது கடுமையைக் காட்டினால் அது சர்வ சாதாரணமான விஷயமாகிறது; அதுவே ஒரு "பெரிய மனிதர்' – அதுவும் ஆட்சி செய்தவர், பெரிய பதவியில்
இருந்தவர் என்றால், மக்கள் சஞ்சலம் அடைகிறார்கள்.

கைது, சிறைவாசம், வழக்கு போன்றவற்றை அம்மாதிரி நபர் சந்திக்க நேர்ந்தால், "அப்படி என்ன யாரும் செய்யாத குற்றத்தை இவர் செய்து விட்டார்? இவரை இப்படி நடத்துகிறவர்கள் மட்டும் யோக்கியர்களா?' என்ற கேள்விகள் பலர் மனதில் எழுகின்றன. காரணம் – மக்கள் மனதில், குறிப்பாக ஆட்சி செய்தவர்கள் பற்றியும், பொதுவாகவே தங்கள் பின்னால் ஒரு கூட்டத்தை வைத்திருப்பவர்கள் பற்றியும், பிரமிப்பு கலந்த, ஒரு எண்ணம் இருக்கிறது; "அவர்கள் நம்மை விட உயர்ந்தவர்கள்' என்ற எண்ணம் பலர் மனதின் அடித்தளத்திலும் இருக்கிறது. அதனால்தான் சட்டம் அவர்களை நோக்கிச் செல்கிறபோது, மக்கள் மனதில் ஒரு நெருடல் உண்டாகிறது. ஆயிரம்தான் ஜனநாயகம், அனைவரும் சமம், மனிதர்களிடையே உயர்வு தாழ்வு கிடையாது என்றெல்லாம் பேசினாலும், "முக்கியஸ்தர்'களை, சட்டம் வித்தியாசமாக நடத்த வேண்டும் என்கிற எண்ணம், நமது மனங்களின் ஆழத்தில் புதைந்து கிடக்கிறது//

ஆஹா ... அப்படியே பெரியவா சின்னவா விசயத்துல பொருந்தி போவுது.
துக்ளக் நன்றி ! பூனைக் குட்டியை அவ்வப்போது வெளியில் அனுப்புங்க.
:)))))))))

Anonymous said...

Interesting! it will be more interesting to know Thuglak's views if Narendra Modi was sentenced to death by an US appointed judge for Gujarat atrocities and hanged on a Deepavali morning.

Anonymous said...

சரியா சொன்ணீங்க!

Anonymous said...

Your views are mostly correct! I used the word "mostly" because you just missed the fact that he did all those crimes with the US government backing him esp the violence he led against Kurds now Saddam got the Justice he deserves but what about US?

simharn said...

anony's
You are all missing the point. Modi didnot order the killings in Gujarat. The riot was started by some bad-elemetns and the emotional outburst of the people led to the shameful event. You cannot hold Modi directly responsible for this. Whereas the massacre of 149 people and the poisonous gas attack on Kurds was ordered and signed by Sadaaam himself. Try to have some clarity.

Anonymous said...

//Modi didnot order the killings in Gujarat.//

OK OK.. Modi did not order the killings in Gujarat..

And Savarkar did not order the killing of Gandhi..

Thanks for your clarity!

simharn said...

Dear anony,
Relax buddy. There is no proof that Savarkar actually ordered the killing of Gandhi till-date (or for that matter Modi's involvement in the riots). Whereas your Sadaam's guilt is proven beyond doubts and he himself has agreed that he ordered the killings. :)))

Anonymous said...

//Relax buddy//

Thanks buddy. See how arrogant this US is! How can they deny visa for an 'innocent' Modi to visit their country? How dare they are to declare Modi "as an official responsible for carrying out severe violations of religious freedom!"

http://www.countercurrents.org/guj-angana220305.htm

See this islamist propoganda website says "The events of February 28-March 2, 2002 constitute genocide under the United Nations Genocide Convention. Modi and the Gujarat government face charges for crimes against humanity and genocide. Inquiries and commissions, including the Indian National Human Rights Commission, have condemned Modi's role in the politically motivated attacks on minorities." What a lie.. what a lie!!!

Surprisingly this piece of crap was written by guy called Angana Chatterji who is an associate professor of Anthropology at California Institute of Integral Studies, and member, Coalition Against Genocide. Traitors!!

After all, Modi did not order the killings in Gujarat. He only instructed Gujarat's police officers not to obstruct the saffron clad 'social workers'. How can anyone blame Modi for the voilence and killings?

Thank God, Gujarat does not have huge oil reserves as in Iraq, so that the arrogant US will not set their eyes on Modi! Phew! Let's relax buddy!

simharn said...

Ayyoyo anony, enna oru sarcasm... relax... If you are talking about US arrogance it's different. But if you are talking about leniency to sadaam it's entirely a different issue. Sadaam got what was coming to him... What you sow is what you reap..
As for Modi's role in gujarat riots, it's only the so-called secularist's mud-slinging op. Nothing more. Modi is better that the Saintess Sonia.

Anonymous said...

Hello Anoy Buddies ...

Though the Judge appointed by US is Still an Iraqui and he is a Muslim !!!

US used their disintegrity and they succeed !!!

And it will naver happen in India, Gujarat and you dont worry!!!

Thanks

Subbu

Anonymous said...

//As for Modi's role in gujarat riots, it's only the so-called secularist's mud-slinging op. Nothing more.//

OK OK you won!

Modi did not ordered the killing in Gujarat!

Modi is not directly connected with the Massacre of Gujarat!

Modi loves minorities!

Modi is a peace loving leader!

Modi is a saint!

Kudos to Modi!

(satisfied, buddy?)

Anonymous said...

முட்டாள் அனானி: இந்திராகாந்தி சீக்கியர்களை படுகொலை செய்ய ஆணையிட்டார். அவருக்கு அமெரிக்கா மரண தண்டனை கொடுத்தால் ஒத்துக் கொள்வீரா? மோடி மேல் சுமத்தப்படும் குற்றங்கள் அனைத்துமே, சூரியனைப் பார்த்து நாய்கள் குலைப்பது போன்றவைதான். நாய்களின் குணம் குலைப்பது. நாய்களின் பின்னால் தெருவில் அசிங்கம் புரிவதும், சூரியனின் பின்னாலிருந்து ஒளிமயமான எதிர்காலத்தைத் தேடுவதும், அவனவனுடைய பகுத்தறியும் திறன் பொருத்தது.
சதாம் ஒரு இஸ்லாமியன். அவன் இஸ்லாமியர்களைக் கொன்றான். இஸ்லாமியக் கோர்ட் அதை விசாரித்து அவனுக்கு மரண தண்டனை விதித்தது. இஸ்லாமியர்கள் தண்டனை நிறைவேற்றினார்கள். அதனால் உனக்கு என்ன வந்தது? உன் வீட்டில் விளக்குப் பிடிக்க சதாமா வந்தான்? இதில் ஒரு இந்தியனை எதற்கு உவமைப் படுத்துகிறாய்? தேசப்பற்றில்லாத நீயெல்லாம் ஒரு பிறவி. உன்னைப் பெற்று வளர்த்த தேசத்தின் விரோதியான நீ இருந்து சாதிக்கப் போவது என்ன?

-- அடிமுட்டாள் அனானி,
கருப்பு பாசறை,
சிங்கை

simharn said...

anony buddy, like you say, Modi is a peace loving leader. Only thing is he is not shameless like the italian led congress in going out to appease the minorities. All indians are equal, and should be treated accordingly. The very logic of appeasing one particular sect only leads to unnecessary hate and violence. On the day congress ceases to exist all people in India will leave peacefully. In the 60 years of independence, Congress has only managed to flare-up the hate between Hindus' and their Muslim bretherns by way of special treatment given to muslims. (for example, assistance to Haj Pilgrimage).

Anonymous said...

காங்கிரஸ் அரசென்ன பிஜேபி அரசென்ன எல்லாருமே முஸ்லிம்களுக்கு எதுவுமே செய்யலைன்னு சச்சார் கமிட்டியிலே விலாவாரியா பட்டியலிட்டிருக்கானே பார்க்கலியா.. இல்லை பார்க்காத மாதிரி நடிக்கிறீங்களாப்பா,,?? வசனத்த மாத்துங்கடா.. எவ்வளவு காலத்துக்கு இதயே சொல்லிட்டுருப்பீங்க...

Anonymous said...

100% Right.Democray must kill all
Dirty Politicians. Including Dirty Journalist like Cho.

Anonymous said...

Hi,
Rajiv gandhi did the same kind of evil to tamils in srilanka.So they gave the punishment to Rajiv.Whether SO.Ramasamy will accept rajiv murder as saddam.

Anonymous said...

//காங்கிரஸ் அரசென்ன பிஜேபி அரசென்ன எல்லாருமே முஸ்லிம்களுக்கு எதுவுமே செய்யலைன்னு சச்சார் கமிட்டியிலே விலாவாரியா பட்டியலிட்டிருக்கானே பார்க்கலியா//

அதுல குஜராத்துல (இரண்டாவது இடத்திலிருக்கு என்று நினைக்கிறேன்) முஸ்லீம்கள் மற்ற மாநிலங்களைவிட நல்ல நிலைமையில இருக்காங்கனு இருக்கே அத நீ பாக்கலையா.. இல்ல மறைச்சிட்டேயா?..

Anonymous said...

//காங்கிரஸ் அரசென்ன பிஜேபி அரசென்ன எல்லாருமே முஸ்லிம்களுக்கு எதுவுமே செய்யலைன்னு சச்சார் கமிட்டியிலே விலாவாரியா பட்டியலிட்டிருக்கானே பார்க்கலியா//

Not sure what Muslims are thinking. Are they expect Govt. to feed a banana after peal off?

Or Govt.did anything for Hindus?

Muslims send their childrens to Madarasa, but not to school. Still they expect Govt to do special considerations in all opportunities.

Also they expect to consider their Madarasa Qualifications in all opporutnities...


"IDHELA YEDAVADHU NEYYAM IRRUKA?" SOLUNGA MAKKALE...