பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 05, 2006

ஜெ - பேட்டி

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் சட்டசபை எதிர்க் கட்சி தலைவருமான ஜெயலலிதா இன்று பகல் 12.05 மணிக்கு சட்டசபைக்கு வந்தார். அவர் சட்டசபை லாபிக்கு வந்து உறுப்பினர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற போது தந்த பேட்டி

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் 2 மாநில முதல்வர்களும் பேசியே முடிவெடுக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது அவர்களுக்கு கீழ்உள்ள அமைச்சர்கள் பேசி என்ன முடிவு ஏற்படப் போகிறது.

இது காலம் தாழ்த்த நடத்தப் படும் நாடகமே தவிர வேறு எதுவும் இல்லை.

நமக்கு பொன்னான வாய்ப்பு ஏற்பட்டது. அதை வீணடித்து விட்டார்கள். கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது மதகுகளை இறக்கிஇருந்தாலே 142 அடி உயரத்துக்கு தண்ணீரை உயர்த்தி இருக்கலாம். ஆனால் நம்முடைய வாய்ப்பை வீண டித்து விட்டார்கள்.

கேள்வி:- நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலை முழு உருவச்சிலையாக வைக்கப்படுமாப

பதில்:- நாடாளுமன்ற வளாகத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் முழு உருவச் சிலை வைக்கப்படும். மக்க ளவை சபாநாயகர், எம்.ஜி. ஆரின்சிலையை திறந்து வைப்பார். இந்த நிகழ்ச்சிக்காக துணை ஜனாதிபதி பைரோன் சிங் செகாவத், பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, வாஜ்பாய், அத்வானி ஆகியோருக்கு அ.தி.மு.க. சார் பில் அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது.

கே:- முன்னாள் மத்திய மந் திரி சிபுசோரனுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதே?

ப:- இந்திய வரலாற்றில் இது ஒரு கரும்புள்ளி சம்ப வம். திரும்பத் திரும்ப அவருக்கு ஏன் அமைச்சர் பதவி அளித்தார்கள் என்று

தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் `காரில் ஏறிச் சென்றவர் மீண்டும் நிருபர் களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் சிலை வைக்க அனுமதி அளித்தது பாரதீய ஜனதா அரசு. அதனால் வாஜ்பாய்,அத்வானிக்கு அழைப்பு அனுப்பியுள் ளோம்.

தற்போது காங்கிரஸ் தலை மையிலான மத்திய அரசு உள்ளது. எனவே பிரத மர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோருக்கும் அழைப் பிதழ் அனுப்பியுள்ளோம்.

நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்கனவே அண்ணா சிலை அமைக்க ஏற்பாடு செய்ததும் அ.தி.மு.க.தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயலலிதா இன்று சட்ட சபைக்கு வந்த போது அவரை ஓ.பன்னீர்செல்வம், செங் கோட்டையன், ஜெயக் குமார், சேகர்பாபு உள்படஏராளமான பேர் அவரை வரவேற்று அழைத்து சென்ற னர். ம.தி.மு.க. சார்பில் கண்ணப்பன் ஜெயலலிதாவை வரவேற்றார்.

ஜெயலலிதாவை பார்ப்ப தற்காக இன்று சட்டசபைக்கு வெளியே ஏராளமான பொதுமக்கள் கூடி இருந் தனர். போலீஸ் பாதுகாப்பும் அதிக அளவில் போடப்பட் டிருந்தது.
( நன்றி: மாலைமலர் )

2 Comments:

Hariharan # 26491540 said...

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மக்களைவிட பறவைகளுக்கு அக்கறைப்படுகிறார்கள்.

இதோ பாரளுமன்ற வளாகத்தில் உலவும் பறவைகளுக்கு கழிப்பறை கட்ட (சிலை வைக்க) எத்தனை போட்டா போட்டி....

மக்களுக்கு மெய்யாலுமே கழிப்பறைகள் கட்டினால் பொதுவில் சுகாதாரமாவது கூடும்!

ஒண்டிபுலி said...

//கே:- முன்னாள் மத்திய மந் திரி சிபுசோரனுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதே?

ப:- இந்திய வரலாற்றில் இது ஒரு கரும்புள்ளி சம்ப வம். திரும்பத் திரும்ப அவருக்கு ஏன் அமைச்சர் பதவி அளித்தார்கள் என்று
தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.//


ஜெயாவே இரண்டு முறை முதலமைச்சராகும் போது,சிபு
ஆகலாம்......
இருந்தாலும் ஜெயலலிதாவுக்கு இவ்வளவு நகைச்சுவை
உணர்வு இருக்ககூடாது.!!