சதாம் தூக்கிலிடப்பட்டது சரியா தவறா என்று விவாதிக்கலாம். ஆனால் இதை அமெரிக்கா செய்தது சரியா ? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் ? இன்று நாம் சாதாமிற்கு கலங்குவது அவர் அமெரிக்காவை எதிர்த்தது தான் காரணம். இதன் பலனை அமெரிக்கா இன்னும் 100 ஆண்டுகளுக்கு அனுபவிக்கும்.
இன்று வந்த The Hindu கார்ட்டூனை நான் பார்க்கும் போது சதாம் துக்கிலிடப்பட்டார் என்று செய்திகள் வந்ததது.
சதாம் உசேன் வாழ்க்கையில் ஏற்பட்ட எழுச்சியும் வீழ்ச்சியும் :
1937 ஏப்ரல். 28:- பாக்தாத் நகருக்கு அருகே உள்ள திக்ரித்தில் அல் அலாஜா கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தில் சதாம் உசேன் பிறந்தார்.
1956 அக். :- இங்கிலாந்து ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அரசுக்கு எதி ராக போராடினார். `பாத்' கட்சியில் சேர்ந்து தீவிரமாக போராடினார்.
1959:- மன்னர் ஆட்சி அகற்றப்பட்ட ஓராண்டுக்குப் பிறகு பிரதமர் அப்துல் கரீம் காசிமை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப் பட்டார். நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
1963 பிப். :- பாத் கட்சி புரட்சி செய்து ஆட்சியை பிடித்ததும் சதாம் நாடு திரும்பினார். ஆனால் 9 மாதத்திலேயே பாத் கட்சி ஆட்சி அகற்றப்பட்டது. சதாம் கைது ஆகி சிறையில் அடைக் கப்பட்டார். சிறையில் இருக்கும் போதே கட்சியின் துணை பொதுச் செயலாளராக அவரை தேர்ந்தெடுத்தனர்.
1968 ஜுலை:- பாத் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
1979 ஜுலை. 16:- அதிபர் அகமது உசேன் அப்பகர் பதவி விலகியதை தொடர்ந்து புரட்சி படை கவுன்சில் தலைவர் ஆனார்.
1980 செப். 22:- ஈரான் மீது படையெடுத்து சதாம் உசேன் இந்த எல்லைப்போர் 8 ஆண்டுகளாக நீடித்தது.
1988 மார்ச். 16:- ஈராக் படைகள் விஷவாயு தாக்குதல் நடத்தியது. இதில் ஈராக்கின் ஹால்பூஜா நகரில் உள்ள 5000 பேர் பலியானார்கள்.
1990 அக். 2:- குவைத் மீது போர் தொடுத்தார் சதாம்.
1991 ஜன. 17:- அமெரிக்காவினால் கூட்டுப்படைகள் ஈராக் படையை குவைத்தில் இருந்து விரட்டி அடித்தது. ஈராக் மீது ஐ.நா. பல்வேறு தடைகள் விதித்தது.
1995 :- சதாம் மீண்டும் ஈராக் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 99 சதவீத ஓட்டுகள் அவருக்கு கிடைத்தது.
2002 அக். 15:- மீண்டும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். குவைத் மீது படையெடுத்ததற்காக இதே ஆண்டில் டிசம்பர் 7-ந் தேதி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
2003 மார்ச். 20:- பேரழிவு ஆயுதங்கள் தயாரித்ததாக கூறி ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.
சதாமின் 2 மகன்களும் மோசல் நகரில் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் ஜுலை 22-ந் தேதி அறிவித்தது.
2003 டிச. 14:- பாதாள அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேன் அமெரிக்க படையினரிடம் சிக்கினார்.
2005 அக்.19:- ஷியா முஸ்லிம்கள் 148 பேரை துஜைல் நகரில் கொன்று குவித்ததாக சதாம் மீது பாக்தாத் கோர்ட்டில் விசாரணை தொடங்கியது.
2006 நவ. 5:- ஷியா மக்கள் 148 பேரை கொன்ற வழக்கில் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
2006 டிச. 26:- சதாம்உசேன் அப்பீல் மனுவை நிராகரித்த மேல் கோர்ட்டு உறுதி செய்தது.
2006 டிச. 30:- பல்நாடுகளின் எதிர்ப்பையும் மீறி சதாம்உசேன் தூக்கில் போடப்பட்டார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, December 30, 2006
சதாம் உசேன் - எழுச்சியும் வீழ்ச்சியும்
Posted by IdlyVadai at 12/30/2006 02:55:00 PM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










4 Comments:
//2006 நவ. 5:- ரஷியா மக்கள் 148 பேரை கொன்ற வழக்கில் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.//
அப்படியா???!!!. ரஷியா மக்களை எப்ப கொன்றார்???!!!
//இதன் பலனை அமெரிக்கா இன்னும் 100 ஆண்டுகளுக்கு அனுபவிக்கும்.//
ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி?
ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோம் - நம்முள்
சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?"
பாரதியின் வரிகள் ஈராக்குக்கும் பொருந்தும்
நூறாண்டுகள் தேவையிருக்காது 2020 க்குள் கிழக்கின் எழுச்சியும் மேற்கின் வீழ்ச்சியும் நடந்தே தீரும்
ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி
பாரதியின் வரிகள் ஈராக்குக்கும் பொருந்தும்
சூப்பர்சுப்ரா அய்யா,
ஆனால் இரானிய ஜனாதிபதி, சதாம் ஹுசைன் தூக்கிலடப்பட்டதை வரவேற்று பேசியிருப்பதை என்னவென்று சொல்வது/
பாலா
//இதன் பலனை அமெரிக்கா இன்னும் 100 ஆண்டுகளுக்கு அனுபவிக்கும்.//
ஆமாங்க. அப்போ அமெரிக்காவிற்காக கண்ணீர் சிந்த யாரும் இருக்க மாட்டார்கள்.
//ஆனால் இரானிய ஜனாதிபதி, சதாம் ஹுசைன் தூக்கிலடப்பட்டதை வரவேற்று பேசியிருப்பதை என்னவென்று சொல்வது//
'நாளைக்கு நமக்கும் இருக்கு'ன்னு கண்டிப்பா நினைப்பார்.
Post a Comment