பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 20, 2006

எல்.கணேசன் வைகோவிற்கு டாட்டா என்கிறார்

ஜூவியில் "வைகோவுக்கு நெருக்கடி" என்று படித்த போது, சரி இன்னும் சில வாரங்களில் இது நடக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இன்று தினமணி, தினமலர் செய்திகளை பார்த்தால் இன்னும் இரண்டு நாட்களில் இந்த செய்தி பரபரப்பாக இருக்கும் போல இருக்கிறது.

தினமலர் செய்தியில் எல்.கணேசனுக்கு மத்திய அமைச்சர் பதவி என்று சொல்லுகிறார்கள். பார்க்கலாம்.


மூன்றில் ஒரு பங்கு எம்.பி.,க்கள் கட்சி மாறினால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவியை பறிக்க முடியாது. அதனால் செஞ்சி ராமச்சந்திரனும் மாறுவார் என்று தெரிகிறது.

"வைகோ அடிக்கடி கூட்டணி மாறியதால் மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்" - எல்.கணேசன். அதே போல் இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியின் சாதனையை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.

தனது மகள் திருமணத்தை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தான் நடத்தப் போவதாக செஞ்சி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

வைகோ இது பற்றி எதுவும் பேசவில்லை. என்ன பேச முடியும் ?

5 Comments:

Anonymous said...

மதிமுக சுத்தமாக போகுதுன்னு ஒரே வார்த்தையில சொல்லலாம்ல.

பதவி ஆசை புடிச்சவங்க எல்லாம் ஆட்சில இருக்கிற கட்சிக்கு தாவுறது சகஜம் தானே?

IdlyVadai said...

இது இன்றைய செய்தி:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிராக 18 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். கட்சி கணக்கு காட்ட வேண்டும் என்று கேட்டிருப்பதுடன் முக்கிய பிரச்சனைகளில் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

* அண்மையில் கட்சியின் நிதியி லிருந்து ரூ.10 கோடி எடுக்கப்பட்டி ருப்பதற்கு அவர்கள் கணக்கு கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


* குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் கட்சியை கலந்தாலோசிக்காமல் நடைப் பயணம் மேற்கொண்டிருப்பதையும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது மதிமுக நடைப்பயணமா? அல்லது வைகோ நடைப்பயணமா? என்று அவர்கள் கேள்வி எழுப்பி யிருப்பதாக சொல்லப்படுகிறது.

* தந்தை பெரியாருக்கு சிலை வைத்ததை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் விடுதலைப் புலிகளை அவர் கடுமையாக சாடி யிருக்கிறார். தூக்குத் தண்டனையை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறி வருகிறார்.
இது குறித்தெல்லாம் கருத்து கூறாமல் மவுனமாக இருப்பது சரியா? என்றும் அவர்கள் கேட்டிருப்பதாக தெரிகிறது.

Hariharan said...

தமிழ்நாட்டில் ஈசல்கள் மாதிரி தோன்றுபவைதானே இந்த மாதிரி அரசியல் திரா'விட" இயக்கங்கள்!

கட்சிக் கணக்குக் கேட்டா இயக்கம் பிரிந்து போவது என்பது திரா'விட' அரசியல் வரலாற்று வழக்கம் தானுங்களே!

எப்போதுமே சுயநல அரசியல் செய்கின்ற இந்த திரா'விட" இயக்கங்கள் நீர்த்துப் போவது தமிழ்நாட்டுக்கு நல்லதுதான்!

IdlyVadai said...

நான் அமைச்சர் ஆக வேண்டும் என்று நினைப்பது பாவம் அல்ல. இன்னும் ஓரிரு நாட்களில் தனது அடுத்த கட்ட முடிவை எடுப்பேன் என்று ம.தி.மு.க., - அவைத் தலைவர் எல்.கணேசன்.

ம.தி.மு.க.,வில் உட்கட்சி; ஜனநாயகத்தை வைகோ பின்பற்றவில்லை - செஞ்சி ராமச்சந்திரன்

ம.தி.மு.க.,வை உடைக்க தி.மு.க., சதி செய்கிறது. மந்திரி பதவி ஆசை காட்டி எம்.பி.,க்களை இழுக்கிறார்கள் - வைகோ ஆவேசம்

சுப்பு said...

தமிழ்நாட்டில் ஈசல்கள் மாதிரி தோன்றுபவைதானே இந்த மாதிரி அரசியல் திரா'விட" இயக்கங்கள்!

// கட்சிக் கணக்குக் கேட்டா இயக்கம் பிரிந்து போவது என்பது திரா'விட' அரசியல் வரலாற்று வழக்கம் தானுங்களே!

எப்போதுமே சுயநல அரசியல் செய்கின்ற இந்த திரா'விட" இயக்கங்கள் நீர்த்துப் போவது தமிழ்நாட்டுக்கு நல்லதுதான்! //

அப்போ யார் தான் வரவேண்டும் என்கிறீர்கள். யார் பெரியவன் என்று தினந்தோறும் சண்டையிடும் காங்கிரசா ? அல்லது தொகுதிக்கு 100 ஓட்டுக்கூட வாங்காத பி.ஜே.பி யா ? அல்லது வீர வசனம் பேசும் விஜயகாந்தா ?. குறை கூறுவது எளிது ஏதாவது மாற்று வழி கூறுங்கள் நண்பரே.