பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, December 09, 2006

பெரியார் சிலை - இல.கணேசன் பேட்டி

அயோத்தியா மண்ட தாக்குதல் கோழைத்தனமானது- இல.கணேசன் பேட்டி

தயானந்தசரஸ்வதி சுவாமிகள் மீது பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் குற்றம் சுமத்தியதாக தெரிகிறது. ஆனால் அரசு நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

பொய்யாக, பொறுப்பற்ற முறையில் யாரோ ஒருவர் புகார் செய்தார் என்பதற்காக தயானந்தசரஸ்வதி சுவாமி மீது நடவடிக்கை எடுத்தால் தேசிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கிறேன்.

ஈ.வெ.ரா. வாழ்நாள் முழுவதும் நாத்திகம் பேசி வந்தவர். ஆலயங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர். அவருக்கு ஆலயத்தை பார்த்து நிற்பதை போல் சிலை அமைப்பது அவருக்குத்தான் அவமானம். தேசிய அளவில் பிரபலமான ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மனம் இதனால் புண்படும். எந்த நோக்கத்திற்காக இந்த இடத்தை சிலை வைக்க தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை.

இவ்வளவு எதிர்ப்பு கிளம்பிய பிறகும் அந்த இடத்தில்தான் சிலை திறக்க வேண்டுமா என்பதை பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும். ஈ.வெ.ரா.வுக்கு சிலை வைக்க கூடாது என்பதல்ல. ஸ்ரீரங்கம் கோவில் முன்தான் சிலை வைக்க வேண்டுமா? என்பதுதான் கேள்வி.

உணர்ச்சி வயப்பட்ட சில இளைஞர்கள் ஈ.வெ.ரா. சிலையை சிதைத்ததை அமைதியை விரும்பும் எவரும் அங்கீகரிக்கவில்லை. அவர்கள் மீது அரசும் சட்டரீதியான நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனால் இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பாவிகள் தாக்கப்படுவது, சாமிசிலைகள் சேதப்படுத்துவது கோழைத்தனமான செயல். நேரடியாக மோத திராணியற்றவர்கள், முதுகெலும்பு இல்லாதவர்கள், அப்பாவிகள் மீது தங்கள் வீரத்தை காட்டுகிறார்கள்.

காவல்துறையையும், சட்டம் ஒழுங்கையும் நம்பும் மக்களை அரசு பாதுகாக்க வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் அரசின் கொள்கைக்கு உடன்பட்டவர்கள் செய்வதால்தான் கண்டு கொள்ளவில்லை என்ற அவநம்பிக்கை அரசு மீது ஏற்பட்டுவிடும். எனவே அப்படி ஒரு சூழல் உருவாக அரசு அனுமதிக்காது என்று நம்புகிறேன்.
( செய்தி : மாலைமலர் )

5 Comments:

Hariharan # 26491540 said...

வெட்டிப் பசங்க! பகுத்தறிவுக் கொளுகைத் தேய்மானத்தை சுயமான சிலைஉடைப்புச் சம்பவங்கள் மூலம் சரி செய்ய முயல்கின்ற சமூகக் கேட்டான செயல்! வெட்கக்கேடு!

Anonymous said...

ஆத்திகர்கள் முன் நாத்திகருக்கென்ன வேலை சிலையை வேறு பக்கம் வைக்கக்கூடாத? இது தான் தில்லை நடராஜரையம் ஸ்ரீரங்க பெருமானையும் பீரங்கி வைத்து தகர்ப்போம் என்ற திராவிட கொள்கையின் முதல் நடவடிக்கையோ?

Anonymous said...

பெரியார் சிலை சேதம் - உணர்ச்சிவடப்பட்ட செயல்!

சாமி சிலை சேத - கோழைத்தனமான செயல்!!

நல்லாயிருக்கு நடுநிலைமை!

வாழ்க தமிழ்க மக்கள்

சுப்பு said...

இலகணேசன் என்று ஒருவர் இருக்கிறாரா யார் அவர் என்று விளக்குவீர்களா ? .... தனித்து தேர்தலில் நின்றால் ( கண்டிப்பாக தனித்து நிற்க மாட்டார் ) ஒரு 10 ஒட்டு வாங்குவாரா ?

SUNIFNB said...

what to say?? its just like budda says "there is no god"... now he is god.. and even different thoughts and different believes in same religion. It seems pariyar might be God soon.. I think already they start worship like god and destroy equalent that. who knows?