பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 08, 2006

பெரியார் சிலை - சில கேள்விகள்

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் முன்பு 100 அடி தூரத்தில் நிறுவப்பட்ட 8 அடி உயர பெரியார் சிலையை நேற்று இந்துமக்கள் கட்சியை சேர்ந்த 5 பேர் உடைத்தனர். பின்பு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெரியார் சிலை உடைக் கப்பட்டதை கண்டித்து திராவிடர் கழகம் தி.மு.க., புரட்சிகர மாணவர் இளைஞர் அணி, மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சாலை மறியல், கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் உடைக்கப்பட்ட சிமெண்டு சிலைக்கு பதிலாக அதே இடத்தில் புதிய பெரியார் சிலையை அமைக்க திராவிட கழகம் முடிவு செய்தது. இதற்காக நேற்று சென்னையில் இருந்து புதிய வெண்கல பெரியார் சிலையை உடனே கொண்டு வந்தனர். இரவு 11 மணிக்கு தொடங்கிய பணி அதிகாலை 4 மணி வரை நடந்தது. புதிதாக வைக்கப்பட்டுள்ள வெண்கல பெரியார்சிலை 550 கிலோ எடை உள்ளது. பெரியார் உட்கார்ந்து படிப்பதுபோல் அமைக்கப்பட்டு உள்ளது.

புதிய பெரியார் சிலை வருகிற 16-ந்தேதி திறக்கப்படுகிறது. அமைச்சர் நேரு தலைமை தாங்குகிறார். அமைச்சர் செல்வராஜ் முன்னிலை வகிக்கிறார்.

திராவிட கழக தலைவர் வீரமணி திறந்து வைக்கிறார். புதிய சிலை சுற்றி தற்போது தகரத்தால் ஆன தடுப்பு போடப்பட்டு உள்ளது. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலை மையில் 4 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே இந்து மக்கள் கடசி போலீஸ் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்து உள்ளது. இதனால் ஸ்ரீரங்கத்தில் இன்றும் பதட்டம் நிலவுகிறது. சிலை திறப்பு விழா நாளன்றும் உண்ணாவிரதம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் பதட்டம் இன்னும் ஒயவில்லை.

போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சங்கர் ஜிவால், துணை கமிஷனர் ராஜசேகரன் மற்றும் ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து உள்ளனர்

சில கேள்விகள்:
1. பெரியார் சிலைக்கு தனி போலிஸ் படை, ஸ்டேஷன் ஒன்று ஸ்ரீரங்கத்தில் திறக்கப்படுமா ?
2. பெரியாருக்கு தகுந்த பாதுகாப்பு கிடைக்குமா ? நாளைக்கு அவர் சிலைக்கு யாராவது நாமம் போட்டால் பெரிய பிரச்சனை ஆகாதா ? ( U நாமமா Y நாமமா என்ற பிரச்சனை வேறு இருக்கிறது )
3. சிலைக்கு கீழ் என்ன எழுதியிருக்கும் ? ( பெரியாழ்வார் என்றா ? )
4. சிலையை வைத்தது பகுத்தறிவா, அல்லது அதற்கு உண்ணாவிரதம் இருப்பது பகுத்தறிவா ?
5. இந்த சம்பவம் பெரியார் படத்தில் கிளைமாக்ஸில் வருமா ?
( படம் உதவி செந்தழல் ரவி )

Update: 8/6/2006 12:30pm
கள்ளக்குறிச்சி அருகே வினாயகர் சிலைகள் உடைப்பு: கிராம மக்கள் மறியல்-பதட்டம்

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் தாலுகா அலுவலக வளாகத்தில் வினா யகர் சிலை வைக்கப்பட்டு இருந்தது. தாலுகா அலுவலகம் அருகில் வினாயகர் கோவிலும் உள்ளது.

இக்கோவிலில் வினாய கருடன் துர்க்கை அம்மன், நவக்கிரக கோவிலும் உள்ளது. நேற்று நள்ளிரவு இங்கிருந்த வினாயகர் சிலையை மட்டும் சில விஷமிகள் உடைத்து விட்டனர்.

இதே போன்று தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்த வினாயகர் சிலையும் உடைக் கப்பட்டு இருந்தது. இந்த இரு சிலைகளும் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.

இன்று அதிகாலை கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர்கள் வினாயகர் சிலை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். சற்று நேரத்தில் இந்த தகவல் காட்டுத்தீ போல சங்கராபுரம் முழுவதும் பரவியது.

பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை மெயின் ரோட்டில் குவிந்தனர். அவர் கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியில் போக்கு வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. பதட்டமான சூழ்நிலை உருவா னது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கள்ளக்குறிச்சி உதவி கலெக்டர் ஜெயபால், டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சங்கராபுரம் தாசில்தார் கதிர்வேல் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அவர்கள் மறியல் செய்தவர்களுடன் சமா தான பேச்சு நடத்தினர்.

ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்லவில்லை. தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். வினாயகர் சிலைகளை உடைத்த விஷமிகளை கைது செய்ய கோரி கோஷம் எழுப்பினார்கள்.

வினாயகர் சிலை உடைக்கப் பட்ட பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு துண்டு பிரசுரங்கள் கிடந்தன. அதில் அம்பேத்கார், பெரியார் சிலை உடைப்புக்கு எதிர்ப்பு என்று எழுதப்பட்டு இருந்தது.

ஆனால் அந்த துண்டு பிரசுரத்தில் வினாயகர் சிலையை உடைத்தது எந்த அமைப்பு என்பது பற்றி குறிப்பிடப்பட வில்லை. அந்த துண்டு சீட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

உடைக்கப்பட்ட இரு வினாயகர் சிலைகளையும் போலீசார் கைப்பற்றினர். அந்த சிலைகள் தற்போது தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சிலைகள் உடைப்பு சம்பவத்தால் சங்கராபுரத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ( செய்தி: மாலைமலர் )

24 Comments:

Anonymous said...

இந்த சம்பவம் பெரியார் படத்தில் கிளைமாக்ஸில் வருமா

Yes if idli vadai agrees to appear in the scene :)

IdlyVadai said...

You are trying to make a tragedy in the climax :-)

IdlyVadai said...

Update: கள்ளக்குறிச்சி அருகே வினாயகர் சிலைகள் உடைப்பு: கிராம மக்கள் மறியல்-பதட்டம்

Anonymous said...

இது நிர்வாண உலகம். இ.ம.க. கோவணம் கட்ட முயற்சிக்கிறார்கள். விடுவார்களா? இதை தொடர்ந்து சேலத்தில், காஞ்சி மடம் மீது தாக்குதல், பெரியவாளின் படம் உடைப்பு, ஒருவரின் பூணூல் அறுப்பு ஆகிய சம்பவங்கள் நடந்துள்ளன. மஞ்சள் துண்டான் சட்டசபையில் இந்நிகழ்வுகளையும் கண்டிப்பாரா? அதற்கான துணிவு உண்டா? ஒவ்வொரு முறை இவர் ஆட்சிக்கு வரும் போதும் திக வினருக்கு துளிர் விட்டுப் போய்விடுகிறது. போன முறை அம்மாவின் கால்களை நக்கிக் கொண்டிருந்த போது எங்கே போயிற்று இந்த தைரியம்?

Anonymous said...

You are trying to make a tragedy in the climax :-)

No sir/madam, it will be a tragicomedy :)

Anonymous said...

என்னப்பா எல்லாரும் ஒடச்ச சில பத்தி பேசுரீங்க தொறந்து வச்ச சிலை பத்தி பேசுங்கப்பா.

இப்படிக்கு,
கழகங்கள்.

SUNIFNB said...

People are going to be mad soon?? there are hell lots of problem around them... they make us fool to redirect the problem and concentration. I am going to order one steel statue for "idly vadai" because I am dam sure some people do the same thing with his statue also in future???

Anonymous said...

I am going to order one steel statue for "idly vadai" because I am dam sure some people do the same thing with his statue also in future???

order for a statue made of chewing gum so that they can chew it and you can replace it as they chew :)

Anonymous said...

You should have raised following questions :
1. Did they anticipate,if not planned, the desecration of the statue ?
2. Why installed a cement statue, when a bronze one was ready ?
3. Is the arson at many places a premeditated one ?
4. Why Police failed to protect the statue, in spite of controversy looming over its installation? Suspending few constables is an eyewash.

Hinduthva parties are playing into their hands and spoil the peaceful nature of the state. Periyaar is an important national leader whose statue installation should not have mired in controversy.

செந்தழல் ரவி said...

டியர் சார்/மேடம்,

ஐயம் ஹியர்பை செண்டிங் மை அப்ளிக்கேஷன் பார் த போஸ்ட் ஆப் பெரியார் மூவி வில்லன் இன் யுவர் எஸ்டீமுடு மூவி..ப்ளீஸ் கன்ஸிடர் மை அப்ளிகேஷன் அஸ் சூன் அஸ் பாஸிபுள் பிபோர் த மூவி கோ டு க்ளைமாக்ஸ்..ஈப் யூ அரேஞ் எ ரேப் ஸீன் அண்ட் ரீலொகேஷன் பெனிபிட்ஸ் தட் வுட் பீ க்ரேட் ஹெல்ப் பார் மை வில்லன் கரீயர்..

யுவர்ஸ் சின்ஸியர்'லீ',
கந்தசாமி லீ : புரூஸ்லீ ரசிகன்

Anonymous said...

ஈப் யூ அரேஞ் எ ரேப் ஸீன் அண்ட் ரீலொகேஷன் பெனிபிட்ஸ் தட் வுட் பீ க்ரேட் ஹெல்ப் பார் மை வில்லன் கரீயர்..

We have enough people waiting to do that without relocation benefits.I wish you better luck elsewhere.
K.Veeramani,President,DK

IdlyVadai said...

செந்தழல் ரவி,
நிறைய நண்பர்களுக்கு வேலை வாங்கி அதே ஸ்டைல எழுதவும் ஆரம்பிச்சிட்டீங்களா ? நல்லது..

Vajra said...

//
அது சரி..பின் நவீனம் பின் நவீனம் என்று சொல்கிறீர்களே..பின்ன நவீனமா என்ன இருக்கு? எல்லாருக்கும் இருப்பது தானே? BUMS.
//

அடப்பாவி மனுசா,
Post modern literature ஐ இப்படியும் கேவலப்படுத்த முடியுமா?

:D

//
பின்ன நவீனமா என்ன இருக்கு? எல்லாருக்கும் இருப்பது தானே?
//

ஒரு வேளை அவிங்களுக்கு அங்கன ஏதாவது முளைத்துவிட்டதோ என்னமோ! ?
:D

Anonymous said...

Hi IV, I just heard that there exploded a petrol bomb in Mambalam Ayodhya Mandapam. Please check up and update. My mom stays in a nearby house and she is not lifting the phone.

bala said...

//ஒரு வேளை அவிங்களுக்கு அங்கன ஏதாவது முளைத்துவிட்டதோ என்னமோ! ?//

வஜ்ரா அய்யா,

நீங்க சொல்றது சரியா இருக்கலாம். எதுக்கு சொல்றேன்னா, ஒரு Floating பதிவர், தனக்கு ஆடு/மாடு எல்லாம் அப்படியே கடிச்சி,கிழித்து சாப்பிட வசதியா ஓநாய் மாதிரி பல் இருக்கிறதா பெருமையா பீத்திக்கொண்டாரய்யா.பின்ன முளச்சிருக்குமோ என்னவோ யார் கண்டது.நவீனமா என்ன என்னமோ நடக்குது.

பாலா

Anonymous said...

//3. சிலைக்கு கீழ் என்ன எழுதியிருக்கும் ? ( பெரியாழ்வார் என்றா ? )//

:-)))

என்னவோ நம் நாட்டில் பிரச்சனையேயில்லாதது போல் இந்தச் சிலையுடைப்புப் போன்றவை தேவையா?

அரங்கன் தான் நம்மையெல்லாம் காப்பது போல் பெரியாரையுங்காக்க வேண்டும்!!

IdlyVadai said...

பாலா,
பெரியவர்களை நாம் மாமா, காகா என்று அழைப்பது நாகரிகமாக இருக்காது. அதனால் உங்கள் பின்னூட்டத்தையும் அதன் தொடர்பான பின்னூட்டங்களையும் நீக்குகிறேன்.
அன்புடன்,
இட்லிவடை

Anonymous said...

Mr. Idly,

I expect comment from Kuzali and Vidathu Karuppu !!!!! and one more survey by Kuzali on you.

bala said...

பாலா,
பெரியவர்களை நாம் மாமா, காகா என்று அழைப்பது நாகரிகமாக இருக்காது. அதனால் உங்கள் பின்னூட்டத்தையும் அதன் தொடர்பான பின்னூட்டங்களையும் நீக்குகிறேன். //

இட்லி வடை அய்யா,

உங்கள் இஷ்டம்.ஆனால் பெரியவர்களை அவ்வாறு சொல்வது முறையாகாது என்றும் ஏற்றுக்கொள்கிறேன்.ஆனால் கோவில் சிலைகளை உடைத்த ஒரு கும்பலின் தலைவரை,(like the Taliban destroying the Budha statue in Baamiyan) பெரியவர், மரியாதைக்குரியவர் என்று சொல்வது ஒரு "holier than thou" என்பது போல் போலித்தனம் என்பது என் கருத்து.


பாலா

IdlyVadai said...

//ஆனால் கோவில் சிலைகளை உடைத்த ஒரு கும்பலின் தலைவரை,(like the Taliban destroying the Budha statue in Baamiyan) பெரியவர், மரியாதைக்குரியவர் என்று சொல்வது ஒரு "holier than thou" என்பது போல் போலித்தனம் என்பது என் கருத்து.//
அவர்கள் அப்படி இருந்தால் நாமும் அப்படி இருக்க வேண்டுமா ? அன்பு மட்டுமே சிறந்தது என்று எடுத்துக்கொள்வோம். உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

Thamizhan said...

What happened to your other blog?I will write again.The land for Periyar statue was given in 1973 by a Dickchathar when he was the chairman.The foundation was laid 10 years ago.The opposition has done every thing including going to court.The statue is about a mile away from the temple unlike portrayed by the media and some others.Periyar actually didnot want any statue.I have seen the opinions expressed.Periyar had seen all kinds of insults not only words but chapels,snakes and threats to his life.He never bothered about the uncivilised attacks but always answered all the questions put to hom no matter how insulting.No matter what these people do his ideals and what he did for his people cannot bo undone.
One Dayanda Saraswathi had condemned in Coimbatore and next day 4 people had come from Coimbatore to do this dirty job.The President of DK had requested to be calm and not take ane revengeful activities.His cadre will listen but what others will do no one can say.All these crticisms and comments will only add to his ideals and not hurt in any way.So let the comments flow and thank you for your part.

Anonymous said...

This is not the time to throw
accusations - idly vadai should also note!

Both are at fault and now the law must be allowed to take its own course equally with same force on both sides. It appears people are losing their commonsense. Our Hindu Gods should not be denigrated this way and it will certainly wound many persons feelings. At the same time, it is also indecent on the part of some to damage Periyar statue. Let us come to our senses.

'amaithivirumbi'

Anonymous said...

Thevai illamal sandai pottu kondirukkum ulaha makkaley,

Mr.Ahila Ulaha Sathanayaalar, Arivuch chemmal, anja nenjan, Internetai kandupiditha, imalayathai kudaindha, maasila under wear potta erumai annan Murasoli Maran avarhalin silai thirappu thaan nadandhu vitathey. Inimel eerelu lohangalukkum subithchamthaan. Makkal pasi, pini, por, porukkithanam matrum innum pira eena gunangalai marandhu ellam petru inivodu vaalvarhal.

Ippadikku
Anony Aranganathan

bala said...

//Periyaar is an important national leader //

Dear Mr. Anonymous,

Is this a joke?

bala