பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 06, 2006

ரஜினிக்கு மேலும் சுமை

"புகழ் ஒரு சுமை' என்று அண்மையில் ஒரு விழாவில் கூறிய ரஜினிக்கு அவருடைய புகழை மேலும் கூட்டும் வகையில் ஜப்பானிலும் அவருக்கு ரசிகர் மன்றங்கள் உருவாகியுள்ளன.

இன்று தினமணியில் படித்தது. நீங்கள் படிக்காமல் இருந்தால் மேற்கொண்டு படிக்கலாம். ( நீங்க என்ன தான் கரடியாக கத்தினாலும் ரஜினியிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது, தெரியவில்லை என்றால் உங்கள் குழந்தைகளிடம் கேட்கவும். )



ரஜினிகாந்த் நடித்த "முத்து' படம் ஜப்பானில் வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்று பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து அவருக்கு ஜப்பானில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உருவாகினர்.

ரஜினியின் புதிய படங்கள் இங்கு வசூலாவதைப் போலவே ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வசூலை வாரிக்குவித்தன. "சந்திரமுகி' படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பெரும் வசூலை ஈட்டியது.

இதனால் ரஜினி நடித்த பழைய படங்களின் டி.வி.டி.க்களுக்கு ஜப்பானில் அமோக வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. தற்போது ரஜினிகாந்துக்கு தனி கொடியுடன் ஜப்பானில் ரசிகர் மன்றங்கள் உருவாகத் தொடங்கியுள்ளன.

ஆரம்பத்திலேயே 5 ஆயிரம் பேர் ரசிகர் மன்ற உறுப்பினர்களானார்கள். தற்போது அந்த எண்ணிக்கை மேலும் கூடி வருகிறது. ரசிகர் மன்றங்கெளுக்கென தனி அலுவலகம் அமைக்கப்பட்டு அங்கு ரஜினியின் பல வித போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ரஜினியை வாழ்த்தி ஜப்பானிய மொழியில் எழுதப்பட்ட பல வாசகங்கள் பேனர்களிலும், போஸ்டர்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. மன்றத்துக்கென தனி பஸ் வாங்கப்பட்டு அதில் ரஜினி படத்தில் இடம்பெற்ற பல வசனங்கள் தமிழிலும், ஜப்பானிய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன.

இந்த பஸ் மூலம் பல இடங்களுக்கும் சென்று ரசிகர் மன்றங்களுக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

'சிவாஜி' படம் பற்றிய பல துணுக்குச் செய்திகள் ஜப்பானிய பத்திரிகைகளிலும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

கடுமையான உழைப்புக்குப் பெயர் போன ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் இந்த சினிமா மோகம் அடுத்து எந்த மாதிரியான விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

11 Comments:

நாமக்கல் சிபி said...

மிக்க நன்றி இட்லி வடையாரே!

Anonymous said...

You are wantonly provoking Kuzhali
by publishing such news :).

IdlyVadai said...

இட்லிவடை பதிவினால் பலர் இன்ஸ்பையர் ஆனால் நான் ஒன்றும் செய்ய இயலாது.

Anonymous said...

எப்படியோ ரஜினியை வைத்து பாப்புலர் ஆகலாம் என்று பார்கிறீர்கள்.. நடத்துங்க நடத்துங்க..

IdlyVadai said...

அனானி - உங்க கருத்துக்கு நன்றி. அப்போ ராமதாஸ் கட்சி பாபா படம் ரிலீஸ் செய்த போது செய்த கூத்தை என்னென்னு சொல்லுவீங்க ?

Anonymous said...

யேவ் இருந்தாலும் உனக்கு குசும்பு ஜாஸ்தியா.

இப்படி உசுபேத்தி,உசுபேத்தியே குழலியெ ரணகளமாக்கீறிர்யா..

:0

Anonymous said...

Japan is famous for its fan clubs..It has the most number of fan clubs for Leonardo Di caprio, it has a temple for English Soccer star David beckham etc.. Dinamani's article portrays Japan as country which is only hardworkign and does not indulge in such stuff..Japs seem to have a penchant for preferring style over substance..

செந்தழல் ரவி said...

எல்லோரையும் கலாய்த்து ஒரு பதிவு போடுவீங்களே ஆறுமாசத்துக்கு ஒரு தரம்...நல்லா காமெடியா ? எங்கே அது ? நல்லா சிரிச்சு நாளாச்சு !!!

IdlyVadai said...

செந்தழல் ரவி,
இப்போது தமிழ்மணத்தின் எல்லா பதிவுகளும் அப்படித்தான் இருக்கிறது :-)

Nagarajan said...

Super appu

Nagarajan said...

Super appu