கலைஞர் பேட்டி - மத்திய அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள், ""டைட்டில்'' முடிந்தவுடன் "கிளைமாக்ஸ்" ?, முல்லைப் பெரியாறு, அலையன்ஸ் பப்ளிஷர்ஸ்..
கேள்வி:-"மத்தியில் 12 அமைச்சர்களைப் பிடிவாத மாகக் கேட் டுக் பெற்ற தி.மு.க. தலைவர் மத்திய நீர் வள அமைச்சர் பதவியை ஏன் போராடிப் பெற வில்லை?'' என்று தேனி உண்ணா விரத கூட்டத்தில் விஜயகாந்த் கேட்டிருக்கிறாரே?
பதில்:- நதி நீர்ப் பிரச்சினையை உள்ளடக்கிய மாநிலங்களில் இருந்து நீர்வள அமைச்சரை நியமித்தால், அவரது நடுநிலையில் ஐயப்பாடு வரும் என்பதற்காக அந்தப் பிரச்சினையுள்ள மாநிலத் தவரை நீர் வள அமைச்சராக நியமிப்பதில்லை என்று இன்றைய மத்திய அரசு ஒரு வழி முறையை வைத்திருக்கிறது என்பதை அரசியல் தெரிந்த பண்ருட்டியாவது விஜயகாந்த்துக்கு கூறியிருக்கலாம். தமிழ் நாட்டுக்கும் கேரளாவுக்கும் நதி நீர்ப்பிரச்சினை இருப்பதால்தான் கேரளாவில் இருந்தோ, தமிழ்நாட்டில் இருந்தோ நீர் வளத்துறை அமைச்சர் நியமிக்கப்படவில்லை என்பதை இன்றைய அரசியல் வகுப்பு மூலம் புதிய மாணவர்கள் கற்றுக் கொள்வார்களாக.
கே:- விஜயகாந்த் கட்சியினர் உண்ணாவிரதம் என்று அறிவித்ததும் தமிழக முதல்வர் டெல்லியில் முல்லைப் பெரியாறு பற்றி பேசியதை விளம்பரமாகப் போடுகிறார்கள் என்று விஜயகாந்த் கேலி பேசியுள்ளாரே?
ப:- "காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது'' என்ற கதை தான் டெல்லி பேச்சு வார்த்தை கூட்டத்தில் நான் பேசியதை, தமிழில், ஆங்கிலத்தில், மலை யாளத்தில் மொழியில் வெளி யிடப்பட்டுள்ளது. அதைப் பொறு மையாகப் படித்துப் பார்த்தால் கேரள மக்களுடன் நட்புணர்வு கெடாமலே முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவு காணவே நாம் விரும்புகிறோம் என்ற தூய உள்ளம் புலப்படும். அண்டை மாநிலங்களில் வாழும் மக்களுடன் ஒருமைப்பாடும், ஒற்றுமையும் வலிமை பெற்று விளங்கிட அந்தந்த மாநில அரசுகள் முனைய வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் விருப்பம்.
கே:- முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக தமிழகத்தில் உள்ள மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்களா? என்று விஜயகாந்த் கேட்டுள்ளாரே?
ப:- அவர் நடித்த எந்தவொரு படத்திலாவது "டைட்டில்'' முடிந்தவுடன் "கிளைமாக்ஸ்'' காட்சி காட்டப்பட்டுள்ளதா என் பதை அவர்தான் விளக்கிச் சொல்ல வேண்டும்.
கே:- இலவச "கியாஸ்'' அடுப்பு கொடுப்பதற்குக்கூட ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளாரே?
ப:- அவர் எதற்குத் தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லைப அரிசி கிலோ 2 ரூபாய் என்றால், அதற்கு எதிர்ப்பு, நிலமற்ற ஏழை விவசாயிக்கு நில மென்றால் அதற்கும் எதிர்ப்பு, சத்துணவுடன் வாரம் 2 முட்டை என்றால் அதற்கும் எதிர்ப்பு, 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு கடன் அறவே ரத்து என்றால், அதற்கும் எதிர்ப்பி, இலவச வண்ணத்தொலைக்காட்சிக்கு எதிர்ப்பு, ஜெயலலிதா தருவதாகச் சொல்லி தராமலேயே விட்டு விட்ட இலவச கியாஸ் அடுப்புக்கும் இப்போது நாம் வழங்கும் போது எதிர்ப்பு, எல்லாமே அம்மையாரின் நல் லெண்ணத்தைப காட்டும் அடையாளர்கள்தானே?
கே:- நாளிதழ் ஒன்றில் தி.மு.க. அரசு வண்ணத் தொலைக் காட்சிக்காக 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக ஒரு அதிகாரி சொன்னதாக செய்தி வெளியிட்டுள்ளதே?
ப:- 2006-07ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் வண்ணத் தொலைக்காட்சிக்காக 750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவரோ ஒரு அதிகாரி சொன்னதாக அந்த ஏடு எழுதி யிருப்பது உண்மைக்கே பெருங்கேடு!
கே:- வருமான வரி வழக்கி லிருந்து தப்பிக்க ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவினை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதே?
ப:- உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததும், அதை உடனடியாக ஜெயலலிதா ஏற்றுக் கொண்டு விடுவாரா என்னப உச்ச நீதி மன்றம் செல்வார், அங்கே மீண்டும் முறையிடுவார், அங்கும் தள்ளுபடி செய்யப்பட்டால் மீண்டும் ஒரு காரணத்தைக்கண்டு பிடித்து தொடக்கத் திலிருந்து வழக்கை நடத்த வேண்டுமென்பார்.
கையிலே காசு இருக்கிறது, வழக்காட வக்கீல்கள் இருக் கிறார்கள். நீதிமன்றத்திலே விசாரணை நடைபெறாமல் எத்தனை ஆண்டுகளுக்கு இழுத்துக் கொண்டு சென்றா லும், மக்களுக்கு உண்மை நன்றாகவே தெரியும் அல்லவா?
கே:- கேரளாவிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடு ஒன்று முல்லைப் பெரி யாறு பிரச்சினையில், அந்த மாநிலத்திற்கு ஆதரவாகவும், தமிழகத்திற்கு பாதகமாகவும் உண்மைகளைத் திரித்தும், மறைத்தும் நீண்ட கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருக்கிறதே?
ப:- அந்த மாநிலப் பற்று தமிழகத்திலே உள்ள ஒரு சில ஆங்கில ஏடுகளுக்கு இல்லையே என்பதை நினைத்துத் தானே இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். தமிழகத்தின் சாபக்கேடு அது, இங்கே தமிழகத்தின் நலனைப் பற்றிக் கவலைப்படுவதை விட, தி.மு.க. அரசை எதிர்க்க ஒரு வாய்ப்பு என்று நினைக்கும் போக்குதான் அந்த ஏடுகளுக்கு உள்ளது.
கே:- போரூர் ஏரிப் பிரச்சினை முடிந்து விட்டதா?
ப:- அதைப் பற்றி ஒரு சில ஏடுகளில் மட்டும் வந்துள்ள செய்தி கவனத்தில் கொள்ளத்தக்கது. அது வருமாறு:-
"போரூர் ஏரியில் வீடிழந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு கூடப்பாக்கம் கிராமத்தில் ஒரு சென்ட் வீதம் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு குடியேறுபவர்களுக்கு முதல் கட்டமாக இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் தண் ணீர் வசதிக்காக நான்கு கை பம்புகள், குடிநீர்தொட்டி அமைக்கப்படவுள்ளது. ரூ. 2.5 லட்சம் மதிப்பில் கழிப்பறைகள், சாலை வசதிகள் மற்றும் பஸ் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்.
மின் வாரியம் மூலம் தெரு விளக்குகள், வீடுகளுக்கு உடனடி மின் இணைப்புகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. மாற்று இடம் வழங் கப்பட்டு குடியேறுபவர்கள் அனைவருக்கும் உடனடியாக ரேஷன் கார்டு வழங்க மாவட்ட வழங்கல் அலுவலருக்கு உத் தரவிடப்பட்டுள்ளது. இவர் களது குடும்பத்தில் உள்ள குழந்தைகள் படிப்பிற்காக கூடப்பாக்கம், திருமழிசை, கீழ்மணம்பேடு, கொப்பூர், மணவாளநகர் ஆகிய பகுதி களில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள கல்வித்துறை அலுவலர் களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட உள்ளது''.
கே:- தமிழை நீதி மன்றத்தில் வழக்கு மொழியாக்க உள் கட்டமைப்பு வேண்டும் என்று தலைமை நீதிபதி அறிவித்துள்ளாரே?
ப:- ஆம் கொள்கை அளவில் தமிழை நீதி மன்றத்தில் வழக்கு மொழியாவதை ஏற்றுக் கொண்டுள்ள தலைமை நீதிபதி அவர்கள். அதற்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளார். நீதிபதி அந்தக் கருத்தை தொலை நோக்குப் பார்வையில் அணுகி அவரது அரிய யோசனைகளை நடைமுறைப் படுத்திட அந்த அரசு இயன்ற வகையில் எல்லாம் பாடுபடும் என்பது உறுதி.
கே:- பதிப்புப் பணியிலும் தமிழ் வளர்ச்சிப் பணியிலும் கடந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாகத்தொடர்ந்து ஈடுபட்டு வரும் அலையன்ஸ் பப்ளிஷர்ஸ்'' நிறுவனத்தின் அரிய பணிகளைப் பாராட்டி சான்றிதழ் வழங்கி உள்ளீர்களே?
ப:- இந்த செய்தி பல ஏடுகளில் வெளியிடப்படவில்லை. ஆனால் இதற்கென்று ஒரு பின்னணி செய்தி உண்டு. அதாவது இந்த நிறுவனத்தினைப் பாராட்டி சான் றிழ் வழங்வேண்டும் என்பதற்கான கோப்பு கடந்த ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே முறையாக அனுப்பப்பட்டு, அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்ட போதிலும், பின்னர் அந்தச் சான்றிதழ் முதல்-அமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு பல மாதங்கள் அது முதல்- அமைச்சர் அலுவலகத்திலே காத்திருந்தும் கையெழுத்தாகவில்லை. பின்னர் ஆட்சி மாறிய பிறகு அந்தக் கோப்பு என்னுடைய ஒப்புதலுக்காக வந்து நான் கையெழுத்திட்டு, நேற்றைய தினம் அந்தச் சான்றிதழ் அந்த நிறுவனத் தினருக்கு வழங்கப்பட்டது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, December 04, 2006
கலைஞர் பேட்டி - விஜயகாந்த் ஸ்பெஷல்
Posted by IdlyVadai at 12/04/2006 08:05:00 AM
Labels: பேட்டி
Subscribe to:
Post Comments (Atom)











2 Comments:
ஆம்!
நதிநீர்ப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மாநிலத்திலிருந்து அத்துறைக்கு அமைச்சர் வரக்கூடாது.
ஆனால் சன் டீவி என்ற கொள்ளை லாபம்தரும் நிறுவனத்தை வைத்திருப்பவர் அது சம்பந்தமான துறைக்கு அமைச்சராக வந்து இன்னும் கொள்ளையடிக்கலாம்.
ஏன் பிரதர்...
எங்கே இருந்து வெட்டி ஒட்டினீங்கன்னு லின்க்காவது போடவேண்டாமா?
என்னவோ சொந்தமா பேட்டி எடுத்தாப்புல போட்டிருக்கீரு...
Post a Comment