எத்தனை நாட்களுக்குத் தான் கழகங்களுக்கு பல்லக்கு தூக்குவீர்கள் என்று கேட்கின்றனர்; தூக்க வேண்டும் என்பதற்காக தூக்கவில்லை. அரசியல் நிலைமை, கூட்டணி என்று வரும் போது, மற்ற கட்சிகளோடு இணைந்து பணியாற்ற வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக காலா காலத்திற்கும் பல்லக்கு தூக்குவது போன்ற நிலை இருக்கக் கூடாது. இன்னும் சொல்லப் போனால் தோளே தேய்ந்துவிடும் அளவிற்கு பல்லக்கு தூக்கக் கூடாது... - ( இப்போ உங்களுக்கு தோள் இருக்கா ? இல்லையா ? என்ன அதையும் டெல்லியை கேட்டுட்டு தான் சொல்லனுமா )
பயோடெக்னாலஜி வளர்ச்சியால் எதிர்காலத்தில் எதுவுமே நமது கட்டுப்பாட்டில் இருக்காது. அதிகாரம் படைத்தவர்கள், தீய எண்ணம் படைத்தவர்களின் கைகளுக்கு இந்த துறை சென்று விடக் கூடாது; மற்ற ஆயுதங்களை விட, பயோடெக்னாலஜி ஆயுதங்கள் அபாயமானவை... இவற்றால் ஏற்படும் கழிவுகளும் மோசமானவை. ஆங்கில படங்களில் வரும் "கிங்காங்' போன்ற விலங்குகளைக் கூட எதிர்காலத்தில் உருவாக்க முடியும். மனிதர்களையும், விலங்குகளையும் சேர்த்து புது உயிரை உருவாக்கும் முயற்சி கூட சில நாடுகளில் நடக்கிறது... ( கிங்காங் போன்ற விலங்குகள் ஓ.கே. ஆனால் அரசியல்வாதிகளை உருவாக்கிவிடாதீர்கள் )
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அந்தநாள் தமிழ் புத்தாண்டு நாளாக இருக்கலாம். தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசும், பா.ம.க.வும் தி.மு.க.வின் மீது அதிருப்தி யில் உள்ளன. இதனால் 2 கட்சிகளும் அந்த கூட்டணியில் இருந்து விலகி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் - எஸ்.வி.சேகர் ( நான் என்ன சொல்ல )
ஜெயலலிதாவுக்கு ஒத்து ஊதுவது போல நான் நடந்து கொள்வதாக வரும் விமர்சனம் தவறானது; நாங்கள் யாருக்குமே ஜால்ராக்கள் அல்ல... தி.மு.க., எங்களை அவமதித்து, ஏமாற்றியதால், அவர்கள் தொடர்பே வேண்டாம் என்று எங்கள் தொண்டர்கள் முடிவெடுத்தனர். இப்போது அ.தி.மு.க., கூட்டணியில் எங்களுக்கு மரியாதை, கவுரவம் எல்லாம் கிடைக்கிறது. உடன்பட வேண்டிய விஷயங்களில் உடன்பட்டாலும், எங்களுக்கென்ற சில தனிப் பிரச்னைகளிலும் நாங்கள் முனைப்புக் காட்டி வருகிறோம்... - வைகோ ( அட அப்படியா ? )
"கடவுள்' என்ற பெயரில் நான் படம் எடுத்தேன். அதில் கடவுள் இல்லை என்று வலியுறுத்தியிருந்தேன். இதற்காக இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்க மறுக்கவில்லை; அவர் தான் இசையமைத்தார். அவரை "பெரியார்' படத்திற்கு இசையமைக்க அழைக்கவில்லை. அப்புறம் எப்படி அந்தப் படத்திற்கு இசையமைக்க மறுத்திருப்பார். "பெரியார்' படத்திற்கு இளையராஜா இசையமைக்க மறுத்தார் என்று செய்திகள் வந்ததால் அவர் மிகவும் சங்கடப்பட்டார். அவருக்கு இசை தான் உலகம். அதில் பிரச்னை செய்கின்றனரே என்று வருத்தப்பட்டார்..திரைப்பட இயக்குனர் வேலுபிரபாகரன் ( என்ன நடந்தது என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம் )
சிறை சாலையை எந்த நேரத்தில் திறந்து வைத்தால் என்ன? தன் வீட்டு நிகழ்ச்சியை எந்த நேரத்தில் நடத்துகிறார்? ராகு காலத்தில் தனது இல்லத் திருமண விழாவை கருணாநிதி நடத்தியிருந்தால் அதில் அவர் பெருமைப்பட முடியும் - ஜெயலலிதா ( இதெல்லாம் படிகிற எங்களுக்கு தான் நேரம் சரியில்லை )
பெரியார் படத்துக்கு உதவி என்ற பெயரால், தன்னையும் ஒரு பாத்திரமாக படம் எடுக்கக் கருணாநிதி கொடுத்த பணம் 95 லட்ச ரூபாய். படம் எடுத்து முடியப் போகிறது. வினியோகஸ்தர்கள் விலை பேசி வாங்குகின்றனர்; வியாபாரம் லாபகரமாக முடியப் போகிறது. இதற்கு வீரமணி நிதி வசூலிக்கிறாரே ஏன்? யாரிடம் கொடுக்க? படம் எடுப்பவர் வியாபாரம் செய்கிறார். படத்தை யாருக்கும் இலவசமாகக் காட்டப் போவதில்லை. வினியோகஸ்தர்களோ, தியேட்டர்காரர்களோ யாருக்கும் ஓசியில் பெரியார் சினிமாவைக் காட்டப் போவதில்லை. பிறகு ஏன் வீரமணி லட்சம் லட்சமாக நிதி கேட்டு வாங்குகிறார்...? .."நாத்திகம்' பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரையின் ஒரு பகுதி ( இந்த மாதிரி பகுத்தறிவு கேள்வியெல்லாம் கேட்க கூடாது )
தமிழகத்தைப் பொறுத்தவரை, இலங்கை பிரச்னையில், கருணாநிதி அரசு செய்ய வேண்டியது நிறையவே இருக்கிறது. உலகில் உள்ள தமிழர்கள் அத்தனை பேருமே கருணாநிதியிடம் நிறைய எதிர்பார்க்கின்றனர். ஆனால், எதையுமே அவர் செய்யவில்லை. அவ்வப்போது அறிக்கை விடுகிறார்; அவ்வளவு தான்! வெறும் அறிக்கைகள் மூலமாக எதையும் சாதிக்க முடியாதே..பா.ம.க., ராமதாஸ் பேட்டி ( நீங்க இப்படி சொன்னது கூட ஒரு அறிக்கைதான் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, December 02, 2006
போட்டுத்தாக்கு
Posted by IdlyVadai at 12/02/2006 12:34:00 PM
Labels: போட்டுத்தாக்கு
Subscribe to:
Post Comments (Atom)











1 Comment:
சீக்கிரம் அடுத்த "போட்டுத் தாக்கு"வை வெளியிடுங்கள்...
Post a Comment