பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 06, 2006

சித்துவிற்கு 3 ஆண்டு சிறை தண்டனை

முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவிற்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து பஞ்சாப் அரியானா ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. நவ்ஜோத்சிங் சித்து 18 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதனால் அவர் தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார். இன்று அவருக்கு பஞ்சாப் அரியானா ஐகோர்ட் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை வரும் ஜனவரி 31 , 2007 ம் தேதி வரை கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. எனவே அதற்குள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து கொள்ளலாம். அதனால் சித்து உடனடியாக கைது செய்யப்படவில்லை. ( செய்தி: மாலைமலர், தினமலர் )

7 Comments:

கைகாட்டி said...

குற்றம் நடந் தபின் சீக்கிரமே தீர்ப்பு வந் து குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் தானாகவே பயம் வரும். ஆனால் இந் தியாவில் குற்றவாளி தண்டிக்கப்படுவது பத்து பதினைந் து வருடங்கள் கழித்துத்த்தான். அதிலும் கீழிருந் து உச்ச நீதிமன்றம் வரைக்கும் ஒரே வழக்கு மேல் முறையீடு என்ற பெயரில் ஜவ்வாக இழுக்கப்படும். அதற்குப்பின் கருணை மனு என்றூ வேறு ஒன்று உண்டு. பின்னே யார் பயப்படுவார்கள்?

IdlyVadai said...

கைகாட்டி - இங்கே பாருங்கள்
http://idlyvadai.blogspot.com/2005/10/blog-post.html

கைகாட்டி said...

பார்த்தேன்
அடேங்கப்பா, போகிற போக்கில் மக்கள் தொகையையத் தாண்டிடும் போல வழக்குகளின் எண்ணிக்கை.
வழக்குகளின் தீவிரத்தைப் பொறுத்து மேல் முறையீடு மட்டுப்படுத்தப்பட்டால் ஒருவேளை குறையலாம். எ.கா: ரூ. 50000 வரையான சிவில் வழக்குக்களை மாவட்ட நீதி மன்றத்துக்கு மேல் , மேல் முறையீடு செய்ய முடியாது என்பது போல. ஒரு வேளை ஏற்கனவே அப்படி கட்டுப்பாடு இருக்கிறதோ என்னவோ.

கார்மேகராஜா said...

///கொலை கொலை ///

ரெண்டு கொலையா?

ரவிசங்கர் said...

உங்களுக்கு உதவியாக ஒரு நல்ல இட்லி வடை படம் - http://wikitravel.org/en/Image:Idli_vada_sambar_and_chutney.JPG

IdlyVadai said...

ரவிசங்கர் - நல்ல படம். நன்றி.

delphine said...

he deserves it. he should be taught a good lesson.