2006ல் எல்லோரும் நிறையவே ஃபிலிம் காமித்தார்கள். ஃபிலிம் என்றால் கூடவே லூஸ் டாக்ஸூம் சேர்ந்து வரும். இதோ 2006 டாப் 10-1 லூஸ் டாக்ஸ்.
1. மண்டபக்காரன் - விஜயகாந்தின் அடுத்த படம்
அரசியலில் சமீபத்தில் குதித்து இவர் வெற்றி பெற, இவருடைய படங்கள் எல்லாம் மண்ணைக் கவ்வியது. முன்பு "ரமணா" என்ற படத்தில் "பொய், தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை!!" என்ற பன்ச் மிகப் பிரபலம் ஆகியது. அதனால் இந்த முறை "மண்டபக்காரன்" படத்திற்கு பொய் என்றால் வெகுண்டு எழும் குழலிக்கு ஒரு வாய்ப்பை அளிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார். ஆனால் குழலி மரம் வெட்டும் ஒரு சீன் கட்டாயம் வேண்டும் என்று அடம்பிடிப்பதாக வதந்தி. புதிதாக வெட்ட மரம் எதுவும் பாக்கி இல்லை என்றால் மண்டப வாசலில் கட்டியிருக்கும் வாழைமரத்தையாவது வெட்டவேண்டும் என்று பரபரக்கிறார். ஹீரோ கல்யாண மண்டபத்தில் பாம் வைக்கும் வில்லன்களை எப்படிக் கையாள்கிறார் என்பதே கதை. வசனகர்த்தா என்றாகிவிட்டால் எல்லாப் பகுதியையும் தான் தானே எழுதவேண்டும் என்று குழலியும் இயல்புக்கு மாறாகக் கஷ்டப்பட்டு வடிவேலுவின் நகைச்சுவை 'கைப்புள்ள' பகுதிகளுக்கும் எழுத முயன்று வருகிறார். விஜயகாந்த படத்துக்கான ஹைலைட்டான புள்ளி விபரங்களையும் பொளந்துகட்டி இருக்கிறார். தேவையே இல்லாமல் ரஜினியைத் தாக்கும் வசனங்களையும் அங்கங்கே சேர்ப்பது எதற்கு என்று தெரியவில்லை. எக்கச்சக்க புள்ளி விபரங்களையும் கைநிறைய வைத்துக் கொண்டு பக்கம் பக்கமாகப் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தவர் பாதியில் திடீரென தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் வெளியிட்டதில் 11 சதம் புள்ளிவிபரப் பக்கத்தைக் காணவில்லை என்று எங்கே எங்கே என்று தேடக் கிளம்பிவிட்டார். எப்போ வருவாரோ? 'பொழுதுபோகாம இட்லிக்கும் வடைக்கும் சர்வே எடுத்துண்டிருந்த ஆளை எல்லாம் கேப்டனுக்கு வசனம் எழுதவெச்சா இதுதான் கதி' என்று லைட்பாய் நமுட்டுச் சிரிப்புடன் பகிர்ந்துகொண்டது.
2. ஈ-தமிழ் - குடும்பம் ஒரு தேன்கூடு
வெள்ளித் திரையின் பக்கம் நெடுநாட்களுக்குப் பின் 'ஈ-தமிழில்' அடியெடுத்து வைத்திருக்கும் 'குடும்ப' இயக்குநர் வி. சேகர் கதைக் கருவை 'அசுர' வேகத்தில் பட்டியலிட்டு நண்பர் ஒருவருடன் சேர்ந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஈ என்று ஒரு படம் வந்துவிட்டதால், E-Tamil என்று ஆங்கிலத்திலும், வரிவிலக்குக்கு ஆசைப்பட்டு ஈ-தமிழ் என்று தமிழிலும் பெயர் வைத்துள்ளார். இவர் சீரியஸாகப் பேசிய ஆடியோ பேச்சுகள் 'ஒரே காமெடியாக இருக்கு!..' என்று நண்பர்கள் சொல்லுவதால் இந்தப் படத்தில் இவரே பாடவும் செய்வார் என்று பேசிக்கொள்கிறார்கள். படம் வெளியாகும் போது, தியேட்டரில் பிரகாசமான திரைப்பட 'அக்ரகேட்டர்' ஒன்று ஆரம்பிக்கும் பணியிலும் மும்முரமாக இருக்கிறார். "எதுக்கு ரிஸ்க், இப்படி ஓசியில மத்தவங்க படங்களுக்கும் விளம்பரம் தேவையா?" என்று கேட்டால், "நம்ம படம் அந்த அக்ரகேட்டர்ல வரவே வராது. அக்ரகேட்டர்ல வர படத்தையெல்லாம் பாத்துட்டு நம்ப படமே தேவலைன்னு எல்லாம் திரும்பி வந்துடுவாங்க" என்று ஒரே போடாகப் போடுகிறார். வர மாட்டார்களா பின்னே, இவர்தான் சொல்லி அடிப்பதில் 'கில்லி' ஆயிற்றே!. படம் பாத்துவிட்டு வெளியே வருபவர்களை "சார் படம் எப்படி இருக்கு?" என்று டிவிக்காரர்கள் கேட்பது போல், இந்தப் படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களை, "சார், படத்தில் பிடித்த காட்சி எது?" என்று கேட்கிறார்கள். எல்லோரும் கடைசியில் "சுபம்" ரொம்ப சூப்பர் என்கிறார்கள்.
3. தசாவதாரம் முடியுமா ?
கமல் தான் நடிக்கும் தசாவதாரம் படத்தை எப்படி எடுக்கலாம் என்று குழம்பிப் போயிருக்கிறார். பத்து வேஷம் போட வேண்டும் என்றால் சும்மாவா? சவாலாக தினமும் ஒரு மேக்கப் போட்டு பழக்கப் பட்ட பொன்ஸ் தீடீர் என்று ஏதோ புரட்சிகரமான புத்தகத்தைப் படித்துவிட்டு நான் யானைக்கு தான் மேக்கப் போடுவேன் மனிதருக்கு இல்லை என்று குட்டையைக் குழப்பிவிட்டார். இப்போது திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் பாதிக்கு மேல் இடதுகையால் எச்சில்தொட்டு அழித்துவிட்டு வலதுகையால் வாசுகியை எழுதச் சொல்லவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார். அம்மணி காதல், கற்பு, கல்யாணம், பிள்ளைக்குட்டி என்று எல்லாவற்றையும் கட்டுடைக்கும் ஜூரவேகத்தில் இருந்தாலும் மேக்கப்வுமன் காமிராவுக்குப் பின் தான் இருக்கவேண்டும், முன்னால் அல்ல என்பதில் மட்டும் பிடிவாதமாக இருக்கிற(பம்முகிற) முரணைத்தான் புரிந்துகொள்ள முடியாமல் திரையுலகம் திணறுகிறது. இவர் இதுவரை மேக்கப் போட்ட 'கமல் பக்கங்கள்' டைட்டில் ஜஸ்டிஃபை ஆகி இருப்பதால், Fire box தொழில்நுட்பத் திரையரங்குகளில் சரிவரத் தெரியாது. படத்தில் கமல் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியர். எனினும், கதைக் களம் சரவண பவனிலும், சென்னைப் பூங்காக்களிலுமே மாறி மாறிச் சுழலும் என்கிறார் படத்தின் பி.ஆர்.ஓ.
4. ஆழ்வார் படம் எப்படி?
காட்ஃபாதர் தந்த வெற்றியில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார் அஜீத். அடுத்த படம் ஆழ்வாரில் இவருக்கு கதை வசனம் எழுத தேசிகனை அணுகியிருக்கிறார். (அவர் சுஜாதாவை அனுகியிருக்கிறார் என்று சொல்லுகிறார்கள்.) 33% பெண்மை கலந்து நடித்ததற்கே இவ்வளவு பாராட்டு என்றால் முழுக்க முழுக்க பெண்ணாக நடித்தால் நிறைய பாராட்டு வரும் என்று டைரக்டரை நச்சரித்துக் கொண்டிருக்கிறார். தேசிகன் படம் என்பதால், படத்தில் இவர் தினமும் திருப்பாவை பாடுகிறார். நோன்பு இருப்பது, கோலம் போடுவது போன்ற காட்சிகளே படத்தில் ஏராளம். படத்தில் 'என் பேர் ஆண்டாள்' என்று பாடிக்கொண்டே வரும் ஓப்பனிங் சீன் அஜீத் ரசிகர்களுக்கு விருந்து. தல தல என்று தலை முழுக்க தலைமயிர் (விக்கு தாங்க) வைத்துகொண்டு பட்டையைக் கிளப்பியிருக்கிறார். சில சீன்களில் தேவை இல்லாமல் தப்புத் தப்பாக ஹிந்தி பேசுவதற்குத் தான் பலர் முகம் சுளிக்கிறார்கள். படம் முழுக்க எதாவது ஒரு கோயிலில் ஷூட்டிங் நடத்த வேண்டியிருப்பதில் நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருப்பதால், செட்போட்டு நடத்திவிடத் தீர்மானித்திருக்கிறது ஆழ்வார் யூனிட். யதார்த்தத்தை தத்ரூபமாகக் கொண்டுவருவதில் புலியான ஆர்ட் டைரக்டர் சாபுசிரிலுடன் கோவில் செட் அருகே அமைக்க பெரியார் சிலையின் வடிவமைப்பை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார். படத்தில் வரும் சுரேஷ் தனியாக வந்து காமெடி பண்ணுகிறார். அவர் வரும் போது ஃபிளாஷ் காட்சிகள் திருட்டுப் பட வீசிடியில் பினாத்தலாக படம் பார்ப்பது போல் இருக்கிறது என்கிறார்கள்.
5. சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம்
சத்யராஜ் பெரியார் படத்திற்குப் பிறகு அடுத்தப் படத்திற்கு மும்முரமாகி இருக்கிறார். படத்தின் பெயர் "சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்" என்று பூஜை போட்டிருக்கிறார்கள். நமக்குப் பழக்கப்பட்ட இரண்டு கோஷ்டிகளின் கதை. ஒரு கோஷ்டி பெரிய வெங்காயத்தை உரித்துக் கொண்டிருக்கிறது, இன்னொரு கோஷ்டி சின்ன வெங்காயத்தை உரிக்கிறது. யார் நிறைய உரிக்கிறார்கள் என்பதே கதை. பெரிய வெங்காயத்தை உரிக்கும் கோஷ்டி நிறைய கெட்ட வார்த்தைகளைப் பேசி விறுவிறுவென எல்லோர் மனத்திலும் இடம் பிடிக்கிறார்கள். சின்ன வெங்காயத்தை உரிக்கும் கோஷ்டி வெங்காயத்தை உரிக்க மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இந்தக் காட்சிப் படப்பிடிப்பிலேயே மக்கள் கண்ணீர் விடுகிறார்கள். (வெங்காயம் உரித்தால் கண்ணெரியாமல் என்ன ஆகும்?). இதனால் தமிழ்மணம் கம்பைன்ஸ் என்ற பெயரையே தயாரிப்பு நிர்வாகம் வெங்காயமணம் என்று மாற்றினாலும் மாற்றுவார்கள் என்று பேச்சு. பெரியார் படத்தில் குஷ்புவுடன் நடித்து அலுத்துப் போனதால். இந்தப் படத்தில் நமிதாவுடன் ஒரு குத்தாட்டம் போட வேண்டும் என்று கதையை விவாதித்துக் கொண்டிருக்கிறார் படத்தின் ஹீரோ.
இதற்கு இடையில் அதே கதையே ஒட்டுக்கேட்டு உல்டாவாக்கி "துபாயில் சின்ன பெரிய வெங்காயம்" என்று ஹரிஹரன் ஃபிலிம்ஸ் புதிதாகத் துவங்கிப் படமெடுத்து வருவதாக வந்த செய்தியில் தயாரிப்பு நிர்வாகமும் யூனிட்டும் கொஞ்சம் அதிர்ந்தும் குழம்பியும் போனதால் படப்பிடிப்பில் வேகம் குறைந்திருக்கிறது. தொடர்ந்து எடுத்தால் யார் படம் வெற்றி பெறும், யார் கையைச் சுட்டுக் கொள்வார்கள், எது அசல் எது சுட்டது என்பது போன்ற பரபரப்பான சண்டைக் காட்சிகள் திரைத் துறையில் அரங்கேறப் போவது உறுதி. இந்தப் படத்தின் கதையைச் சுடுபவர்கள் Intellectual Property rights(IP) சட்டம் மூலம் கைது செய்யப்படுவார்கள் என்று சொல்லுகிறார்கள்.
கிளைமாக்ஸ் காட்சியில் மாயவரத்திலிருந்து பாசஞ்சர் டிரேயின் பிடித்து மலேசியா சென்று போலிஸில் புகார் செய்கிறார்கள். ஆனால் கடைசியில் இருவர் உரிக்கும் வெங்காயமும் இட்லிவடைக்கு (இது போல்)தொட்டுக்கொள்ள சாம்பாராகிறது என்பது தான் கதை.
6. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் ( தமிழ் பெயர் சென்னப்பட்டிணம் )
இயக்குனர் பாலா பிதாமகன் ஸ்டைலில் மீண்டும் ஒரு படம் எடுக்க உள்ளார். படம் பெயர் என்ன என்று முடிவாக வில்லை ஆனால் திருவாளர் கோயிந்தா திருவாளர் குழந்தையா என்று விவாதிக்கப்படுகிறது. இதிலும் புரிந்துகொள்ள முடியாத ஹீரோ ரோல். ஹீரோ பார்ப்பதற்கு எவ்வளவு சீரியசாக இருந்தாலும் யாரும் அவரை சிந்தனாவாதியாக ஏற்றுக்கொள்ளாமல் கலாய்ப்பதிலேயே முடிகிறது. உணர்ச்சிவசப்பட்டாலும், கோபப்பட்டாலும் கூட திரையரங்கில் அனைவரும் சிரிக்கப் போவது உறுதி என்று படப்பிடிப்புக் குழு நம்புவதால் முழுநீளக் காமெடிப் படமாக இருக்கலாம். படத்தில் ஹீரோவின் பஞ்ச் டயலாக் "யூ டூ..." மட்டுமே இதுவரை படத்தில் மொத்தம் 539 தடவைகள் வருகிறது.
படப்பிடிப்பில் ஒரு காட்சி:
பஸ் கண்டக்டர்: ஆங் பனகல் பார்க் எல்லாம் இறங்கு
ஹீரோ: தி.நகர் பனகல் பார்க்கா?
கண்டக்டர்: அட ஆமாம் இறங்குய்ய்யா.. ரைட் ரைட்..
ஹீரோ: ஐயோ நான் மாட்டேன். இங்க பார்க்கே கண்ணுக்குத் தெரியலை.
கண்டக்டர்: அடச் சே ஒரு முடிவோட தான் கிளம்புவானுங்க போல, யோவ் சா..., நீ என்ன ஊருக்குப் புச்சா? அங்க எங்க போவணும்?
ஹீரோ: நான் தான் "சென்னப்பட்டிணம்" தலை. பனகல் பார்க்ல எங்க மாநாடு.
கண்டக்டர்: ஊரே உனக்கு சரியாத் தெரியலை. இந்த லட்சணத்துக்கு நீ சென்னப்பட்டின தலையா? பின்ன உன் வாலெல்லாம் எப்படி இருக்கும்? இறங்குய்யா..
படத்தைத் தூக்கி நிறுத்த விஜய் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் நடுவில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, விஜய் என்ற பெயரைக் கேட்டாலே ஜூட் என்று ஓடுகிறார் ஹீரோ. இவரைத் தொடர்ந்து மற்றவர்களும் ஓட, பார்ப்பதற்கு வைகோ நடைப் பயணம் போல் இருப்பதாகக் கோடம்பாக்கம் கெக்கலிக்கிறது.
7. ரவி'ஸ் ஏஞ்சல்ஸ்
Charlies' Angels என்கிற ஆங்கில படத்தின் உல்டா என்று சொல்லுகிறார்கள். சார்லியாக ரவியும் ஏஞ்சலஸ்(?)'ஆக மூன்று பெண்களும் நடிக்கும் படம் என்கிறார்கள். படத்தின் தமிழ் பெயர் - திமிரு, கொழுப்பு, தெனாவெட்டு; இதில் வரும் பெண்கள் அனைவருமே கலக்கியிருக்கிறார்கள். "பெண்களுக்கே இயல்பாக உள்ளவற்றை நடிக்க சொல்லித்தர வேண்டுமா?" என்கிறார்கள் அதில் நடிக்கும் துடிப்புள்ள பெண்கள். சார்லி ( ரவி) ஒரு பெண்ணை தற்கொலையிலிருந்து காப்பாற்ற முயல்கிறார். அந்த மூன்று பெண்களும் சார்லிக்கு உதவுகிறார்கள். அப்போது அவர்களிடையே சண்டை வருகிறது.அவர்களது ரசிகர்களுக்குள்ளும் சண்டை விரிவுபடுகிறது. இந்தக் குழப்பத்தில் சார்லி துண்டைக் காணேம் துணியை காணேம் என்று ஓடுகிறார். இந்த மூன்று பெண்கள் குழாயடி சண்டை போடுவதை பார்த்து அந்த பெண் மீண்டும் தற்கொலைக்கு முயல்கிறார் என்பதே கதையில் டிவிஸ்ட்.
8. இம்சை அரசன் 23.5 புலிகேசி
ஹீரோ காமெடி ரோல் பண்ணும் வித்தியாசமான படம். லக்கி என்பவர் பார்ப்பதற்கு நல்ல லுக்காக இருக்கிறார் என்பதால் அவர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். சமீபத்தில் இந்தப் பட பூஜை சென்னையில் நடந்தது நினைவிருக்கலாம். அந்தப் பூஜையில் சிகப்பு-கருப்பு (யூனிஃபார்ம்) சொக்காயில் ஷோக்காக வந்திருந்தார். அப்பொழுது யாரோ போகிற போக்கில், "உன் லுக் மட்டும் நன்னா இருந்தால் போதாதுடா கண்ணா, நீ மத்தவாளைப் பார்க்கற லுக்கும் நன்னா இருக்கவேண்டாமோ?!" என்று சாம்பிராணி போட்டதில் இவர் இந்தப் படத்தில் குங்குமத்தால் நெற்றியில் நாமம் போட்டுக் கொண்டு எல்லோருக்கும் நல்லவனாய் அடுத்த வருடம் நான் தான் நம்பர் 1 என்று வசனம் பேசிக்கொண்டு கலந்துகட்டியான புதுவித கெட்டப்பில் வருவார் என்று எதிர்பார்க்கபடுகிறார். இதனால் பொங்கிப் போன லக்கியின் 'பக்க'பலங்களிடம் "வேஷம் எதானால் என்ன, இதெல்லாம் சும்மா டைம் பாஸ்தான்" என்கிறார் சம்பந்தமே இல்லாமல் 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' என்ற எம்.ஜி.ஆர் பாடலும் கட்டாயம் படத்தில் தனக்கு இருக்கவேண்டும் என்று வற்புறுத்துவதில் தான் பட யூனிட் கொஞ்சம் குழம்பிப் போயிருக்கிறது.
9. மீண்டும் குமரன் ?
M.Kumaran - Son of Mahalakshmi என்ற படத்தின் மூலம் பிரபலம் அடைந்த இவர் M.குமரன் (மீண்டும் குமரன் என்று வரிவிலக்கிற்காக மாற்றம் செய்யபட்டுள்ளது. ) என்ற பெயரில் படம் எடுக்க உள்ளார். கதை என்னவோ பழைய முருகன், பிள்ளையார் மாம்பழக் கதையின் தெலுங்கு உல்டா தான். முருகன் என்ற குமரன் தமிழ்மணம் தான், தமிழுக்கும் தனக்கும் வாழ்க்கை கொடுத்ததாகக் கூறிக்கொண்டே அதே பெற்றோர் தனக்குக் கொடுத்தது தான் கொடுத்தார்; துர்மணம் கொண்ட அழுகல் மாம்பழத்தை அல்லவா கொடுத்தார் என்று கோபித்துக்கொண்டு உலகத்தைச் சுற்றக் கிளம்புவது திரைக்கதைக்குப் புதுசு கண்ணா புதுசு. அப்படிச் சுற்றும் போதே வெளிநாட்டில் லவ் செய்வது, டுயட் பாடுவது எல்லாம் செய்கிறார். முன்பு மயில் மேல் சென்றார். ஆனால் இதில் மயிலார் இவருக்குத் தோழர்; படத்தில் இவர்தான் ஓரளவு சிரிப்பு மூட்டுகிறார். பெற்றோர் இதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் தான் பிடித்த முயலுக்கு கருப்பே கலர் என்று விடாப்பிடியாக இருப்பதும் சுற்றி நின்ற சிவலோகத்தார் 'கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு..' என்று பாடத் தொடங்குவதும் கதையில் யாருமே எதிர்பாராத அல்லது சிலர் சரியாகவே எதிர்பார்த்த ட்விஸ்ட். குமரன் கடைசியில் தன் பெற்றோருடன் சேருகிறாரா, பெற்றோர் அதற்காக ஏதாவது கவலைப்பட்டு முயற்சி எடுக்கிறார்களா, அல்லது நாடகமாடித்தான் அவரைக் கழட்டிவிடார்களா? குமரன் குணமாகி மணத்தில் சேருகிறாரா, அல்லது கோபித்துக் குன்றமேருகிறாரா? தமிழ்மணமா, தமிழ் மானமா என்பதே மீதிக் கதை!.
பிகு : ஃபோட்டொ போட்டால் டென்ஷாகிறார்கள். புதுவருட ஆரம்பத்தில் டென்ஷன் வேண்டாம் என்று போடவில்லை. புத்தாண்டு வாழ்த்துக்கள்..மீண்டும் 2007ல் சந்திப்போம் :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, December 27, 2006
2007-1 டாப் 10-1 லூஸ் டாக்ஸ்
Posted by IdlyVadai at 12/27/2006 10:04:00 AM
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
Subscribe to:
Post Comments (Atom)











22 Comments:
யோம் கிப்புர் யுத்தம் செய்த முரட்டுவைத்தியக்காரரை தப்பவிட்டது தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனுக்கே அடுக்காது ஓய்.
Menachem Begin
One of the very best, you have written so far !
Fantastic satire :)))
அய்யயோ...
ஆனாலும் இப்படியெல்லாம் வாரக்கூடாதுங்க.
//திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் பாதிக்கு மேல் இடதுகையால் எச்சில்தொட்டு அழித்துவிட்டு வலதுகையால் வாசுகியை எழுதச் சொல்லவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்//
ஆனாலும் இது ரொம்ப ஓவரு.
பெண்ணுரிமை பேசுனா வாரிடுவீங்களே.
//ஹீரோ பார்ப்பதற்கு எவ்வளவு சீரியசாக இருந்தாலும் யாரும் அவரை சிந்தனாவாதியாக ஏற்றுக்கொள்ளாமல் கலாய்ப்பதிலேயே முடிகிறது//
இதற்கு முழு பொறுப்பும் ஜெய், பொன்ஸை சாரும்
//ஹீரோ: நான் தான் "சென்னப்பட்டிணம்" தலை. பனகல் பார்க்ல எங்க மாநாடு.
கண்டக்டர்: ஊரே உனக்கு சரியாத் தெரியலை. இந்த லட்சணத்துக்கு நீ சென்னப்பட்டின தலையா? பின்ன உன் வாலெல்லாம் எப்படி இருக்கும்? இறங்குய்யா..//
பனகல் பார்க்கை லலிதா ஜீவல்லரி,சாதாகுமரன், அஞ்சுமாடி குமரன், நல்லி சில்க்ஸ் என்று ஹோர்டிங்ஸ் வச்சு மறைச்சதாலேயே ஹீரோ பாலா பனகல் பார்க்கைத் தேடவேண்டி வந்திருக்கலாம் இல்லியா?
அப்படி இல்லை எனில் இது சென்னப்பட்டினம் பாலாவின் செல்ஃப் கலாய்த்தலில் இது டாப் :-)))
ஆண்டு நிறைவில் நிறைவான காமெட் கலக்கல்!
2007 புத்தாண்டு வாழ்த்துக்கள் இட்லி வடை!
யூ டூ
540!
:-))))))))))))))
இட்லிவடை,
உங்கள் லூஸ் டாக் பதிவுக்குப் பின்னூட்டம் இதோ:
//ஜஸ்டிஃபை ஆகி இருப்பதால், Fire box தொழில்நுட்பத் திரையரங்குகளில் சரிவரத் தெரியாது//
அப்படியா? இதோ.. புறப்பட்டாச்சு.. இனி இதைச் சரி செய்யாமல் ஓய மாட்டேன்!! :))))))))))))))))))
இதைக் கொஞ்சம் அதர் /அனானி ஆப்ஷன் வழியாக நீங்களே என் பெயரைச் சொல்லிப் போட்டுவிடுங்களேன்...
பினாத்தலார் அளவுக்கு மோசமில்லை என்றாலும் எங்கள் அலுவலக கனெக்ஷனில் இன்றைக்கு என்று பார்த்து பின்னூட்டம் இட முடியவில்லை.. எப்படியும், கஷ்டப்பட்டு உங்க பதிவைத் திறந்து பார்த்து சிரிச்சாச்சு.. :)))))
அன்புடன்
பொன்ஸ்
//நீ என்ன ஊருக்குப் புச்சா? அங்க எங்க போவணும்?//
பத்து நிமிஷம் பார்க்கும் கண்டக்டருக்கு கூட புரியர மாதிரி ஓப்பன் புக் எங்க தல... அவர் ஊருக்கு புதுசு தானே!! :)))
எங்க தலயே வந்து 540வது யூ டூ சொல்லி சிறப்பிச்சுட்டு போயிட்டாரு பார்த்தீங்களா, இதுல இருந்தே தெரியலையா சென்னப்பட்டிணம் சூப்பர் ஹிட் ஆகுன்னு:D
அவர் எறங்க மாட்டேன்னு சொல்ல இன்னொரு ரீஸன் இருத்தது அது தான் கதையோ 'நாட்'.
யாருங்க அந்த விஜய் கெஸ்ட் ரோல்!! என்ன வெச்சு காவெடி கீமிடி ஒன்னும் பண்ணலையே??
சிறந்த அங்கதம். மிகவும் ரசித்த பதிவு.
2006-ன் சிறந்த லொள்ளு பதிவுக்கு இதை சிபாரிசு செய்கின்றேன்.
தல... மறந்து போச்சு, அட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர்!
//இதற்கு இடையில் அதே கதையே ஒட்டுக்கேட்டு உல்டாவாக்கி "துபாயில் சின்ன பெரிய வெங்காயம்" என்று ஹரிஹரன் ஃபிலிம்ஸ் புதிதாகத் துவங்கிப் படமெடுத்து வருவதாக வந்த செய்தியில் தயாரிப்பு நிர்வாகமும் யூனிட்டும் கொஞ்சம் அதிர்ந்தும் குழம்பியும் போனதால் படப்பிடிப்பில் வேகம் குறைந்திருக்கிறது. //
ஒட்டுக்கேட்க இது பெரிய ரகசியமா. அரைநூற்றாண்டாக மேடைகள்போட்டு மைக் செட் வைத்து நடக்கும் நூடுல்ஸ் அளவுக்கு நூல்விட்ட பழைய வடைதானுங்களே!
மண்டபக்காரன்
இப்படி உஸுபேத்தி..உஸுபேத்தியே ...
குழலி உடம்ப ரணகளமாக்கிறீங்கப்பா..
:)))
தசாவதாரம்
நானும் தீநரி யூஸ் பண்ணுவதால் எனக்கும் தெரியவில்லை.
மத்தது ஒன்னும் புரியல..
:-))))))
அம்மாடியோவ் :)))
//'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்'//
மூ.க பற்றித்தான் என் பேச்சிருக்கும்!
//இவர் இந்தப் படத்தில் குங்குமத்தால் நெற்றியில் நாமம் போட்டுக் கொண்டு எல்லோருக்கும் நல்லவனாய் அடுத்த வருடம் நான் தான் நம்பர் 1 என்று வசனம் பேசிக்கொண்டு கலந்துகட்டியான புதுவித கெட்டப்பில் வருவார் என்று எதிர்பார்க்கபடுகிறார்.//
லக்கிருந்தால் லுக்கும் உண்டு.
பெனாத்தலார் நிலைமை பொன்ஸ் முதல் இட்லிவடை வரை சிரிப்பாச் சிரிக்குது:-((
காமெடி ட்ரேக் எந்தக்கதையோடவுமே ஒட்டலையே இட்லிவடை:-)))
அட, Dhooளு.
கலக்கல் வாரல்ஸ்.
சார்லீஸ் ஏஞ்சல்ஸ் சூப்பர். படத்தோட பட்ஜெட் வெறும் 60000 ரூபாதானாமே?
சூப்பர் காம்ர்டி
I had a good laugh :-))
New year wishes to you idlyvadai
Suresh.K
இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவைப் பதிவு
ஆமா எங்க இன்னும் வரல்ல லக்கியார், வந்து கமண்ட் அடிக்க மாட்டாரா அந்த வருத்தப்படாத வாலிபர்....
:-))))))))
வேற ஒன்னும் சொல்றதுக்கில்ல...
:-))))
கருத்து தெரிவித்த எல்லோருக்கும் நன்றி + புத்தாண்டு வாழ்த்துக்கள். இதற்கு பிறகு கருத்து சொல்லுபவர்களுக்கு அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள் :-)
அன்புடன்,
இட்லிவடை
Post a Comment