ஆங்கிலம் விலக்கு = வரிவிலக்கு. எது சூப்பர் விளக்கு ?
ஜெயில் கைதிகளுக்கு சிக்கன் சலுகை மாதிரி, தமிழ் சினிமாவுக்கு தமிழில் பெயர் வைத்தால் முழு வரி விலக்கு என்று கலைஞர் அளித்த சலுகை முகமது பின் துக்ளக் செய்யும் காமெடியை 2006ல் மிஞ்சியது. ஏற்கெனவே தமிழ்ப் பெயரோடு வந்த திரைப்படங்கள் ? நோ பிராபளம். மிஸ்ஸியம்மா படத்தை கூட மாத்தலாம் என்று சிக்ஸர் மேல் சிக்ஸர் அடித்தார் கலைஞர்.
உங்க குழந்தையின் பெயர் தமிழில் இருந்தால் படிப்பு இலவசம், கடையின் பெயர் தமிழில் இருந்தால் விற்பனை வரிவிலக்கு, நீங்கள் போகும் பஸ் ஸ்டாண்ட் பெயர் தமிழில் இருந்தால் பஸ் கட்டணம் இலவசம் என்று 2007ல் நடக்கலாம்.
கோடம்பாக்க காரர்களை சும்மா என்று நினைத்துவிட்டீர்களா ? வரலாறு என்று சொல்லிவிட்டு - History of God Father, சிவாஜி என்று சொல்லி விட்டு - The Boss, வாத்தியார் - The Ruler என்று தமிழில் பெயர் வைத்துவிட்டு கீழே ஆங்கிலத்தில் ஒரு எஸ்ஸே எழுதுகிறார்கள். அதைவிடுங்க 90% தமிழ் படங்களில் பேர் காண்பிக்கும் போது(அதாங்க டைட்டில்) ஆங்கிலத்தில் தான் முதலில் காண்பிக்கிறார்கள். இப்படி போஸ்டர்களில், விளம்பரங்களில் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தி விட்டு, ஃபிலிம் போர்டு சான்றிதழில் மட்டும் தமிழ்ப் பெயரை வைப்பதால், தமிழுக்கு அப்படி என்னதான் நல்லது நடக்கப் போகிறதோ, தெரியவில்லை.
'மைடியர் குட்டிச் சாத்தான்' என்று முன்பு ஒரு 3-D படம் வந்தது. அதற்கு வரிவிலக்கு அளித்தார்கள். டிக்கேட் கட்டணம் குறைந்தது. ஆனால் வரிவிலக்கு அளித்த தற்போதைய படங்களுக்கு டிக்கெட் கட்டணம் ? இன்றும்ம் சம்திங் சம்திங் கொடுத்து பிலாக்கில் தான் பார்க்கிறோம். புதிதாக வரி வந்தால், அது மக்கள் தலையில், வரிக்கு விலக்கு வந்தால் மட்டும் அது மக்களுக்கு இல்லையா? இல்லாத வரியை வசூல் செய்து தியேட்டர், விநியோகஸ்தர், தயாரிப் பாளர் ஆகியோர் பங்கிட்டுக் கொள்கிறார்கள். நமக்கு ? 30 ரூபாய் என்று அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டில் 50 ரூபாய் என்று ரப்பர் ஸ்டாம்ப் குத்தி வசூலிக்கிறார்கள். நாமும் பிரிண்ட் சரியாக இல்லை என்றாலும் திருட்டு விசிடியில் பார்த்து, வலைப்பதிவில் விமர்சனம் செய்கிறோம்.
2006 - சிறந்த வரிவிலக்கு நாமினேஷன்'ஸ்:
1. சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்: வரி விலக்கு பெற்ற முதல் படம் என்ற பெருமையை தட்டிச் சென்றது. முதலில் 'Something Something உனக்கும் எனக்கும் 'என்று இருந்தது, பிறகு 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும' என்று மாறி, கடைசியாக 'உனக்கும் எனக்கும்' என்று மாறியது. இன்றும் போஸ்டர்களில் மட்டும் சம்திங் சம்திங் இருக்கும்.
2. காட்ஃபாதர் - வரலாறு. அஜித் நடித்த படம். கே.எஸ்.ரவிகுமார் ஒரு பேட்டியில் வரிவிலக்கு என்பதால் ரொம்ப சந்தோஷம் என்று சொல்லியிருந்தார். வரலாறு என்று சொல்லிவிட்டு Background'ல் கொட்டை எழுத்தில் காட்ஃபாதர் என்று எழுதி ஒரு வரலாறு படைத்தார்.
3. எம்டன் மகன் - எம் மகன் - டன் என்ற சொல்லை டண்டனக்காவாக்கி பெயர் மாற்றம் செய்த படம். கூடிய சீக்கிரம் தமிழ் சினிமா பெயர் மாற்றும்அகராதி போட போவதாக பேசிக்கொள்கிறார்கள். அப்படியா ?
4. ஜில்லுனு ஒரு காதல் - சில்லுனு ஒரு காதல் - ரொம்ப சிம்பிளாக பெயர் மாற்றம் செய்த படம் எது என்றால் இது தான். ஜி எடுத்துவிட்டு சி என்று மாற்றினார்கள். சிவாஜியில் உள்ள 'ஜி'யை என்ன செய்ய போகிறார்கள்? என்னை கேட்டால் நான் என்ன 'The Bossசா?
5. by2 - இருவர் மட்டும். கடைசியாக பெயர் மாற்றம் செய்த படம் இது என்று நினைக்கிறேன். by2 என்பதை மாற்றியதால் வரிவிலக்கு பாதியாக குறையவில்லை, முழுசாக குறைந்தது.
சரி இந்த வருடம் வந்த இந்த படங்களில் எந்த பெயர் மாற்றம் சூப்பர் ? - நீங்களே ஓட்டு போடுங்க ( வழக்கம் போல சைடில .. )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, December 16, 2006
2006 இட்லிவடை அவார்ட்ஸ் - 2
Posted by IdlyVadai at 12/16/2006 08:00:00 PM
Labels: வாக்கெடுப்பு
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










5 Comments:
>> ஜெயில் கைதிகளுக்கு சிக்கன் சலுகை மாதிரி......முகமது பின் துக்ளக் செய்யும் காமெடியை 2006ல் மிஞ்சியது
ஜெயில் கைதிகள் என்றவுடன், அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று நினைப்பது இயல்புதான். ஆனால் அவர்களுள் பலர் விசாரனை கைதிகளாக இருக்கிறார்கள். அவர்கள் குற்றவாளியா நிரபராதியா என்று நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வருவதற்குள் பல வருடங்கள் ஆகிவிடுகின்றன. இவர்கள் நிரபராதியாக விடிவிக்கப்படும் பட்சத்தில் சட்டமும் நீதிமன்றமும் அவர்களுக்கு தரும் நஷ்ட ஈடு என்ன? நிரபராதியான அவர்கள் வருடக்கணக்கில் துர்நாற்றம் வீசும் குப்பை உணவை விழுங்கிதான் உயிர் வளர்க்க வேண்டுமா? சிறைச்சாலை குற்றவாளிகளை சீர்திருத்தும் இடமாக இருக்க வேண்டும்.. அது அவர்களை தண்டித்தவர்களை பழிவாங்க தூண்டும் இடமாக இருக்கக் கூடாது. குற்றவாளிகளுக்கு சில சிறப்பு சலுகைகள் அளிப்பதன் மூலம் அவர்களுக்கு தரப்பட்ட தண்டனையை அவர்கள் தண்டனையாகவே உணராமல் போய்விடலாம். ஆனால் சுகாதாரமான, சத்தான உணவை பெருவது ஒரு சலுகையல்ல.. மனிதவுரிமை! ஒரு சிறு குறிப்பு: சிக்கன் போடுவதால் ஒருவருக்கு ஒரு வாரத்திற்கு ஆகும் செலவு வழக்கத்தைவிட ஐந்து ரூபாய் தான் அதிகரிக்கிறது. இவர்கள் தின்பது தண்டச்சோறும் அல்ல.. கல் உடைத்துதான் தின்கிறார்கள்!
இப்படிக்கு,
அரசு செலவில் முதுமலைக்கு உல்லாச பயணம் செய்த..
கோவில் யானை.
>> பிலிம் போர்டு சான்றிதழில் மட்டும் தமிழ்ப் பெயரை வைப்பதால், தமிழுக்கு அப்படி என்னதான் நல்லது நடக்கப் போகிறதோ, தெரியவில்லை.
போஸ்டர், விளம்பரங்கள், சான்றிதழ் என்று எல்லாவற்றிலும் தமிழிலேயே பெயர் இருந்தால் மட்டும் தமிழுக்கு என்ன நன்மை?.. காட்டும் இரண்டரை மணி நேரமும் வெறும் குப்பை! இந்த திரைபடங்களை பார்த்துதான் தமிழ் வளர வேண்டுமா என்ன?
இவைகள்தாம் வரிவிலக்குக்கு காரணம் :
1) கடந்த தேர்தலில் கோடம்பாக்கத்தின் மொத்த காக்காய் கூட்டமும் அதிமுகவில் சங்கமம் ஆனது. மக்கள் பிரச்சனைகளுக்காக அயராது போராடிய பபித்தா, கோவை சரளா, தமிழ் குலவிளக்கு சிம்ரன், சீறிய சிந்தனையாளர் செந்தில் போன்றோர் ஆதிமுகவின் முன்னனி பேச்சாளர்களாக இருந்தனர். இவர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு சக்தி அளவுக்கு செல்வாக்கு இல்லாதாதல் தேர்தலில் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. இப்படியே விட்டால் நாளை எதாவது பெரிய நடிகர் (குறிப்பாக, அந்த லட்சுமி இந்த லட்சுமி என்று முகஸ்துதி பாடியவர்) அதிமுகவில் சேர்ந்தால், திமுகவின் நிலை பெரும்பாடு ஆகிவிடும். வரி விலக்கு, படபிடிப்பு கட்டன குறைப்பு என்று இப்படி எதாவது செய்து தான் இந்த ஜால்ரா கூட்டத்தை திமுக பக்கம் இழுக்க முடியும்.
2) முன்பு ஜெயா டிவிக்கு மட்டும் புதுப்பட பாடல்களின் ஒளிபரப்பு உரிமயை பிரதியோகமாக அளித்து மற்ற டிவிகளுக்கு அந்த உரிமயை மறுக்க திரைபட தயாரிப்பாளர் சங்கத்தை மிரட்டி சாதித்து கொண்டனர் சிலர். இதன் மூலம் சன் டிவியின் ஆதிக்கத்தை குறைத்துவிடலாம் என்பது அவர்களுடைய என்னம். ஆட்சி மாற்றம் முடிந்த பின்னர், திமுக சார்புடையவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பை ஏற்றார்கள். அதன் மூலம், புதுப்பட பாடல்களின் ஒளிபரப்பு உரிமயை அனைத்து டிவிகளுக்கும் கிடைக்குமாறு மாற்றினார்கள். இருந்தாலும், வரிவிலக்கு அளிப்பதின் மூலம், பிற்காலத்தில் இது போன்று மறுபடியும் சன் டிவிக்கு உரிமயை மறுக்க முற்பட்டால், எல்லா தயாரிப்பாளர்களும் அதற்கு ஒத்து ஊதமாட்டார்கள் என்ற ஒரு கணிப்பு.
3) தன்னுடைய சமஸ்கிரத பெயரையே தமிழில் மாற்றிக் கொள்ளாத 'வெட்டி' தலைவர் (இவர் பேத்திகளுக்கு கூட உச்சரிக்கவே கடிணமான சமஸ்கிரத பெயர்கள் ) திரைபடங்களுக்கு தமிழிலேயே பெயர் சூட்டவேண்டும் என்று தினமும் உளரிக் கொண்டிருந்தார். இதனால் சில தமிழ் அமைப்புகள் இவருக்கு அதிகமாக முக்கியத்துவம் அளித்தன. இவரை இப்படியே வளரவிட்டால், கலைஞருக்கு இருக்கும் தமிழ் அமைப்புகளின் ஆதரவு குறைந்துவிடும். எனவே 'வெட்டி' தலைவர் உளரியதை, செயலில் காட்டி தான் அவரை விட பல படிகள் மேல் என்று காட்டவேண்டிய நிர்பந்தம் கலைஞருக்கு.
well said சாம்பார்..
KD?
DK ?
Post a Comment