பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 15, 2006

2006 இட்லிவடை அவார்ட்ஸ் - 1

இன்று முதல் தொடங்கி ஒரு வாரத்திற்கு இட்லிவடை - 2006 சிறந்த சினிமா அவார்டுகள் தொடக்கம்.

2006 வருடம் தமிழ் படங்களில் வில்லன்களை விட வில்லிகளே அதிகம். யாரை நாமினேட் செய்வது என்று ஒரே மண்டை குடைச்சல். ஆண்,பெண் என்று வித்தியசம் பார்த்தால் சிலர் கோவிச்சிக்கிறாங்க அதனால் லேடீஸும் இதில் இடம் பெற்றிருக்கிறார்கள். லேடீஸ் சந்தோஷம் தானே ?. (ஆண்களுக்கு கஷ்டப்பட்டு 33% இடஒதிக்கீடு அளிக்கப்பட்டுள்ளது)

2006 - வில்லன்கள்/வில்லிகள் நாமினேஷன்'ஸ்:

திமிரு - சிரேயா ரெட்டி
பெயருக்கு ஏற்றபடி பலரும் "திமிரு" பிடித்து அலைந்த படம். ஈஸ்வரியாக வில்லன்களின் தங்கையாக வரும் ஷ்ரேயா ரெட்டி. அடேங்கப்பா எவ்வளவு திமிருடன் அலைந்து... அப்ப்ப்ப்பா.. வருகிற அரை மணி நேரத்தில் நம்மை அதிர வைத்து விட்டுப் போய் விடுகிறார். நடிப்பில் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார்.

எம்-மகன் - நாசர்
`மெட்டி ஒலி' மெகா சீரியல் இயக்குநர் திருமுருகன் இயக்க பரத், நாசர், கோபிகா, சரண்யா, வடிவேல், கஜாலா நடித்திருக்கிறார்கள. உழைத்து முன்னேறி இருக்கும் கண்டிப்பான அப்பா நாசர். சிக்கனம், கண்டிப்பு மளிகைக் கடை வேலை.. இப்படியான அப்பா பிள்ளைகளுக்கிடையான உறவு, உரசல், பாசம் என்று அருமையால நடித்திருந்தார்.


ஈ- ஆஷிஸ் வித்யார்த்தி
இயற்கை தந்த ஜனநாதனின் அடுத்த படம். முதல் படத்தில் புதிய களம், யதார்த்தமான கதை என்று ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். மருத்துவ துறையில் சில டாக்டர்கள் பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்பது தெரியும். ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கேடு விளைவிக்கக்கூடிய ஒரு செய்கையை மக்களுக்கு தெரியாமல் எப்படிச் செய்கிறார்கள் என்பதை ஆஷிஸ் வித்யார்த்தி பசுத்தோல் போர்த்தின புலியாக அழகாக செய்து காண்பித்துள்ளார்.

கலாபக் காதலன் - அக்ஷயா
நெல்லை பெண்ணை மணக்கிற சென்னை இளைஞன் ஆர்யா. புதுமண தம்பதிகளின் ரகசிய ரொமான்ஸ்கள்! திடீரென்று வருகிற சூறாவளி போல் வந்து சேர்கிறார் அக்ஷயா. ஆர்யாவின் ஆசை மனைவி ரேணுகா மேனனின் தங்கை! கொழுந்தியாளாக இருந்தாலும் கொஞ்சம் தள்ளியே இரு என்கிற லாஜிக் தெரியாத ஆர்யா, அக்ஷயாவோடு நெருங்கி பழக, அவரோ நான் உன்னை காதலிக்கிறேன் என்கிறார் ஆர்யாவிடம். மனைவியை கூட கொஞ்ச விடாமல் குறுக்கே நுழைகிறது அக்ஷயாவின் அடாவடிதான் அதிகம் ஸ்கோர் பண்ணியிருப்பது. பார்க்க குயிலாக இருந்தாலும், நடிப்பில் ஒயிலாக இருக்கிறார். தன்னை ஊஞ்சலில் வைத்து ஆட்டாத ஆர்யாவிடம் கோபித்துக் கொண்டு ஊஞ்சலையே கழற்றி வைப்பதும், தன் பெற்றோர்களுக்கும், ஆர்யா பெற்றோர்களுக்கும் சண்டை மூட்டிவிட்டு அவர்களை சென்னையை விட்டு விரட்டுவதும், இந்த ஒல்லிக்கார வில்லியின் அட்டகாச அசத்தல்!



தலைநகரம் - ஜூடோ ரத்னம்
மிகுந்த தன்னம்பிக்கையுடன் நடித்த சுந்தர் சி படம். பல படங்களுக்கு ஸ்டண்ட்மாஸ்டராக பணிபுரிந்துள்ள ஜூடோ ரத்னம் முதன்முறையாக இப்படத்தில் காசிம்பாய் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார்.

வழக்கம் போல் சைடில இருக்கும் வாக்குபெட்டியில் உங்கள் ஓட்டை போடுங்கள்.

7 Comments:

Anonymous said...

கொழுந்தனுக்கு ஆசைப்படும் அண்ணி சங்கீதாவை விட்டுவிட்டீர்களே?

IdlyVadai said...

அவர் ஹிரோயின் பிரிவில் தேர்வாகியிருக்கிறார். உங்கள் கருத்துக்கு நன்றி.

Anonymous said...

ஒரு தமிழ்ப்படத்தில் கட்டாயம் வில்லன் அல்லது வில்லி இருந்தே ஆகவேண்டுமென்ற மனப்பான்மையை விட்டு நீங்கள் வெளிவரவில்லைப்போல.
எம்டன் மகனில் நாசரை வில்லன் என்று சொல்லலாமா?

IdlyVadai said...

//எம்டன் மகனில் நாசரை வில்லன் என்று சொல்லலாமா?//
சொல்லலாம்.

சிறில் அலெக்ஸ் said...

சூப்பர் சர்வே.. கலக்குங்க இட்லிவடை..

Boston Bala said...

ஷண்முகராஜன், பிரகாஷ்ராஜ் போன்ற நல்ல நடிகர்களைத் தவறவிட்டுவிட்டீர்களே!?

IdlyVadai said...

பாபா - ரீமா சென் ( வள்ளவன் )னை விட்டுவிட்டீர்களே !