பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 11, 2006

Condom - Condemn

இந்த பதிவு கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் தான்.


மினி உலகக்கோப்பை ஒளிபரப்பான போது நடுநடுவில் மந்திராபேடி "Time for a small commerial break" என்று சொன்ன போது, அடுத்த சேனல் மாற்றாதவர்களுக்கு DKT’s “XXX” நறுமண (ஸ்ட்ராபெரி, சாக்லேட், வாழைப்பழம் நறுமணங்களில்) காண்டோம் விளம்பரத்தை “What is your flavor of the night?” என்ற வாசகத்துடன் வந்ததை பார்த்திருக்கலாம் (பார்க்காதவர்கள் பார்த்தவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளவும் ).

இந்திய சென்சார் இந்த விளம்பரத்திற்கு கடும் அட்சேபம் தெரிவித்திரிக்கிறது. இந்திய சென்சார் போர்ட் சேர்மேன்(சேர் உமென்?) ஷர்மிலா டாகூர் "இந்த விளம்பரம் பதிமூன்று வயதுக்காரர்களை கவர்வதற்காக எடுத்திருக்கலாம் ஆனால் நிச்சயம் குழந்தைகளுக்கு ஏற்ற விளம்பரம் இல்லை" என்று கூறியிருக்கிறார். மேலும் நிச்சயம் இந்த விளம்பரத்தை ராத்திரி பதினோரு மணிக்கு பிறகு 'A' சான்றிதழுடன் போட வேண்டும் என்று வற்புறுத்தியும் இருக்கிறார். ஷர்மிலா டாகூர்.

ஆனால் DKT நிறுவனத்தின் மூத்த அதிகாரி "the flavored condoms were not meant to promote oral sex, but to encourage couples who do not like the smell of latex" என்று சொல்கிறார்.

6 மாதத்திற்கு முன்பு பத்திரிக்கையாளர் ஞாநி 'தீம்தரிகிட'வில் இவ்வாறு எழுதியிருந்தார்.

ஆண் பெண் உறவை சமத்துவத்தோடும் ஆரோக்கியமாகவும் பார்ப்பதற்கான மன முதிர்ச்சியைத் தரக்கூடிய சூழலை வீட்டுக்குள்ளும் பாடப் புத்தகங்களிலும் ஏற்படுத்தும் வேலைகளை முடுக்கி விடுவதை ஒரு புறமும், உடனடியான தேவைகளை பாதுகாப்பாக சந்திப்பதற்கான அறிவுரையையும் வசதிகளையும் தருவதை மறுபுறமும் மேற்கொள்வதே அடுத்த தலைமுறையின் எதிர்கால ஆரோக்கியத்துக்கு தேவைப்படுகிறது. ‘அய்யோ. என் குழந்தை பள்ளிக்குப் போகும்போது காண்டோம் எடுத்துச் செல்ல மறக்காதே என்று சொல்லி அனுப்பவா?’ என்று கலாச்சார சாமியாடிகளாக புலம்புவது அபத்தமானது. சொல்லி அனுப்பினால் ஒன்றும் பாவமில்லை. குழந்தைக்கு குண்டி கழுவக் கற்றுக் கொடுத்ததைப் போலத்தான் இதுவும். எத்தனை வயதானாலும் என் குழந்தைக்கு நான்தான் குண்டி கழுவிவிடுவேன் என்பது போன்ற அபத்தமே, (இளைஞர்களாகிவிட்ட தங்கள்) ‘குழந்தைகளின்‘ யோனிக்கும் லிங்கத்துக்கும் கவசமாகக் காலத்துக்கும் இருக்கப் பார்ப்பதுமாகும்.


சரி வெளிநாட்டில் வந்த நறுமண காண்டோம்(சுவிங்கம்:-) விளம்பரம் இங்கே: http://youtube.com/watch?v=Z0DINml2_5I

[ This ad has been done by a specialist, do not try it at your home ]

இது தொடர்பான செய்திகள்:

Times of India http://timesofindia.indiatimes.com/articleshow/299605.cms
IBNLive : http://www.ibnlive.com/news/censor-bitter-over-flavoured-condom-ad/25944-3.html

6 Comments:

மங்கை said...

நல்ல பதிவு...

நம்ம ஆளுக நம்மள சுத்தி நடக்கிற விசயத்த என்னிக்கு ஒத்திட்டுருக்காங்க

மித்ரா said...

எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு கேட்கலாமா ?

Hariharan # 26491540 said...

காதோடு ரகசியமாக பேசப்பட்ட விஷயம் விஷ்ப்பர் அல்ட் ரா என்று கேர் ஃப்ரீ யாக மணிக்கு மூணுதரம் வருவதை இன்று ஆரோக்கியம் சார் விஷயமாகப் பார்க்கவில்லையா? இல்லை இதற்கு கூக்குரல் யாரும் எழுப்புவது இல்லியே இன்னிக்கு.

ஞாநி இந்த விஷயத்தில் சரியாத்தான் சொல்லியிருக்கார். ஆரம்பத்தில் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். பின் பழகி, பழகியதால் புரிந்து கொள்ள முயல்வோம்!

G.Ragavan said...

சில விஷயங்களைப் பேசாமல் இருப்பது புனிதம் என்ற தவறான எண்ணம் இருப்பதும் தவறுதான். மூடமூடத்தான் ரோகம்.

Anonymous said...

இன்றைய நவநாகரிகத்ததில் நாம் தான் பிதற்றிக்கொண்டு இருக்கிறோம்.
சேனல்கள் நம்மை நம் வாழ்க்கையை கெடுப்பதை கை தட்டி வரவேற்றுக்கொண்டிருக்கின்றோம்

xxx flavoured condoms india said...

visit http://xxx-flavoured-condoms.blogspot.com to buy XXX grape, chocolate, strawberry flavoured condoms india.... this condoms are not available at local chemists... so visit us and buy them just Rs. 20/-