பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 12, 2006

போட்டுத்தாக்கு

"பெரியார்' படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று இளையராஜா எடுத்திருக்கும் முடிவு நூற்றுக்கு நூறு சரியானது. கோவில் கும்பாபிஷேகம், திருப்பணி செய்து முழுமையான பக்தனாக இருப்பவரை, இந்தப் படத்திற்கு இசையமைக்க அப்ரோச் செய்வதற்கு முன்பு இயக்குனர் யோசித்திருக்கலாம். பணத்திற்காகவும், விருதுக்காகவும் இந்தப் படத்தில் இசையமைப்பார் என்று நினைத்திருக்கலாம். ஆனால் இசைஞானி அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பதை நிரூபித்து விட்டார்... - எஸ்.வி.சேகர் ( ஜோக்குகளுக்கு எப்போதும் பஞ்சம் இல்லை )

""திருக்குறள் "காலத்தால் அழியாத பொன் மொழி. கருணாநிதியின் எழுத்தோ காலத்துக்கு காலம் மாறும் ஒரு சந்தர்ப்பவாதியின் பொய் மொழி. உண்மையான "பொன் மொழி' இருக்க, "பொய் மொழி' எதற்கு?'' - ஜெயலலிதா ( டி.ராஜேந்தரிடம் டியூஷன் எடுத்திருப்பார் போல )

அ.தி.மு.க.,வோ -ம.தி.மு.க.,வோ, அவை தி.மு.க.,வைப் பொறுத் தவரை, மிகப் பெரிய போட்டி கட்சியுமல்ல; எதிர் கட்சியுமல்ல... தி.மு. க.,வுக்கு நாம் தான் இலக்கு; இவ் வளவு அராஜகத்தையும் தாண்டி, கடவுள் நமக்கு வெற்றியை கொடுத்திருக்கிறார். - விஜயகாந்த் ( அடிச்சார் பார் சிக்ஸர் )

தமிழ்நாட்டில் பஸ் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை - கலைஞர் ( உயர்த்துவதாக இருந்தால், ராமதாஸை கேட்டுவிட்டு செய்யவும் )

சேலத்தில் இருந்து சென்னை வரும் வழியில் ஓடும் ரயிலில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சூட்கேஸ் திருட்டுப் போனது. இதே பெட்டியில் பயணம் செய்த ரயில்வே அதிகாரியின் சூட்கேசும் திருட்டு போயுள்ளது. ( உள்ளே என்ன இருந்தது என்று நான் கேட்க மாட்டேன் )

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜீப்புக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
போலீஸ்காரர்கள் அலறியடித்து ஓட்டம் ( பாம்பென்றால் போலீஸ் படையும் நடுங்கும் )

2 Comments:

Karthikeyan Muthurajan said...

எப்போதுமே எஸ்.வி.சேகரை ஒரு நகைச்சுவையாளனாகவே பார்த்து வந்த நான், ஒரு டிவி பேட்டியில் வேணுமென்றே அவருடைய பூணூலை எடுத்து சட்டைகாலர் மேல் போட்டு பேசியதிலிருந்து ஒரு ஜாதிய வெறியறாகவே பார்க்கிறேன்.. ராமதாசும், திருமாவும் செய்வது தவறு என்றால் அதிமுகவில் இருந்து கொண்டே எஸ்.வி சேகர் செய்வதும் தவறே..

IdlyVadai said...

Karthikeyan Muthurajan - ஆமாம். அரசியல் என்றாலே ஜாதி தானே :-)